TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


மாட்டு இனத்தை அழிக்கவே ஜல்லிக்கட்டுக்கு தடை: பகீர் ரிப்போர்ட்!

Go down

மாட்டு இனத்தை அழிக்கவே ஜல்லிக்கட்டுக்கு தடை: பகீர் ரிப்போர்ட்! Empty மாட்டு இனத்தை அழிக்கவே ஜல்லிக்கட்டுக்கு தடை: பகீர் ரிப்போர்ட்!

Post by மாலதி Wed Jan 14, 2015 7:14 pm

மிழர்களின் பாரம்பரியம், கலாசாரம் வேரோடு அழிக்கப்பட்டு வருகிறது. மேற்கத்திய கலாசார மோக சிறைக்குள் மக்கள் பிடிப்பட்டு கிடக்கிறார்கள். வீரவிளையாட்டாக திகழ்ந்த ஜல்லிக்கட்டு இந்த ஆண்டு பொங்கல் திருநாளையொட்டி நடத்தப்படுமா என்பது இன்னமும் விடைதெரியாத புதிராகவே இருந்து வருகிறது. ஜல்லிக்கட்டு நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். அதன்தொடர்ச்சியாக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் விஜயகுமார், ஆபிரகாம், அயூப்கான் ஆகியோர் டெல்லியில் முகாமிட்டு மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை கூடுதல் செயலாளர் உள்ளிட்ட அலுவலர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
 
மாட்டு இனத்தை அழிக்கவே ஜல்லிக்கட்டுக்கு தடை: பகீர் ரிப்போர்ட்! Jallikattu%20new%201 
இதற்கிடையில் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், வனவிலங்குகள் பாதுகாப்பு பட்டியலிலிருந்து காளைகள் நீக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இதனால் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதையொட்டி ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்று போராட்டத்தில் குதித்தவர்கள் அதை கைவிட்டுள்ளனர். அதோடு ஜல்லிக்கட்டுக்கான தடை உத்தரவு எப்போது நீக்கப்படும் அறிவிப்பை ஆவலுடன் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

மாட்டு இனத்தை அழிக்கவே ஜல்லிக்கட்டுக்கு தடை: பகீர் ரிப்போர்ட்! Nagarajஇந்த சூழ்நிலையில் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் தொடக்கக் காலத்திலிருந்து ஈடுப்பட்டு வந்த சமத்துவ மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் கூறுகையில், "வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டத்தில் காளைகள் சேர்க்கப்பட்டது 2011 ஜூலை 11ஆம் தேதி. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் செய்த இந்த தவறை நீக்க போராடி வருகிறோம். நிச்சயம் தமிழக மக்களின் உணர்வுகளை மத்திய அரசு புரிந்து கொள்ளும். அதன்தொடக்கமாக மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டத்திலிருந்து காளைகள் சேர்க்கப்பட்ட அரசாணையில் மாற்றம் கொண்டு வர நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளது. இந்த சட்டத்திலிருந்து காளைகள் நீக்கப்பட்டால் நிச்சயம் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட வாய்ப்புள்ளது. அதற்கான உத்தரவை எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.

ஜல்லிக்கட்டுக்கு தடை பெறப்பட்ட பின்னணியில் சில வெளிநாட்டு நிறுவனங்களும், இந்த விளையாட்டு குறித்து விவரம் தெரியாதவர்கள் உள்ளனர். ஜல்லிக்கட்டு காளைகளை வளர்ப்பது தமிழகத்தில் பெருமையாக உள்ளது. இந்த ஜல்லிக்கட்டு விழாவை பார்ப்பதற்கு கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை. ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் சித்ரவதை செய்யப்படுவதாக வனவிலங்கு ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். அப்படிப்பார்த்தால் இறைச்சிக்காக தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு மாடுகள் கடத்தப்படுகின்றன. இந்த மாடுகள் கொடூரமாகவும் கொல்லப்படுகின்றன. அவற்றை ஏன் இந்த ஆர்வலர்கள் தடுக்க முன்வரவில்லை. தமிழகத்தில் உள்ள பாரம்பரிய காளை இனங்களை அழிக்க சிலர் செய்யும் சதியே ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடை. விரைவில் இந்த தடை நீங்கி இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்தப்படும்" என்றார்.
மாட்டு இனத்தை அழிக்கவே ஜல்லிக்கட்டுக்கு தடை: பகீர் ரிப்போர்ட்! Jallikattu%20new
தமிழ்நாடு கோ கிராம் சேவா சமதி என்ற அமைப்பின் மாநில செயற்குழு தலைவர் ஜயப்பன் கூறுகையில், "ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடை காரணமாக அநியாய விலைக்கு காளைகள் விற்கப்பட்டு விட்டன. இப்போது தடை நீக்கப்பட்டாலும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுகளின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கும். ஜல்லிக்கட்டை நடத்தினால் காளைகளை காப்பாற்றலாம். இப்போது கிராமங்களில் காங்கேயம் காளைகளின் எண்ணிக்கை 2 சதவீதம் மட்டுமே உள்ளன. எனவே, ஜல்லிக்கட்டு தொடர்ந்து நடத்தப்பட வேண்டும்" என்றார்.

மாட்டு இனத்தை அழிக்கவே ஜல்லிக்கட்டுக்கு தடை: பகீர் ரிப்போர்ட்! Siva%20senaapathyசேனாதிபதி காங்கேயம் கால்நடை ஆராய்ச்சி மையத்தின் நிர்வாக இயக்குனர் காத்திக்கேயா சிவசேனாதிபதி கூறுகையில், "தமிழகத்தில் 6 வகையான மாட்டு இனங்கள் உள்ளன. கொங்கு மண்டலத்தில் காங்கேயம், ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியில் பர்கூர் மலைமாடு என்ற இனமும், தஞ்சாவூர், திருவாரூர், நாகை மாவட்டங்களில் உம்மபலச்சேரி என்ற இனமும், மதுரை மாவட்டத்தில் புளியகுளம் என்ற இனமும், தேனி மாவட்டத்தில் மலைமாடு என்ற இனமும், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர் போன்ற இடங்களில் ஆலாம்பாடி என்ற இனமும் இருந்தன. இதில் ஆலாம்பாடி என்ற இனம் அழிந்து விடடது. இன்றைய நிலவரப்படி ஒரு லட்சம் காங்கேயம் மாடுகளும், 22 ஆயிரம் பர்கூர் மலைமாடுகளும், 30 ஆயிரம் புளியகுளம் மாடுகளும், 30 ஆயிரம் மலைமாடுகளும் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இதில் காங்கேயம் மாடுகள் கடந்த 1990ல் 11 லட்சத்து 94 ஆயிரம் மாடுகள் இருந்ததாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் உள்ள மாட்டு இனங்களை அழிப்பதற்காகவே பீட்டா உள்ளிட்ட சில வனவிலங்கின அமைப்புகள் ஜல்லிக்கட்டுக்கு தடை வாங்குகிறார்கள். இவர்களுக்கு எருமைக்கும் மாடுக்கும் வித்தியாசம் தெரியாது.

வெள்ளைக்காரன் நம் நாட்டை ஆண்டை போது கூட மாடுகளுக்கு இந்தளவுக்கு ஆபத்துக்கள் வந்தது இல்லை. கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டின் போது தமிழகத்தில் உள்ள 10 மாவட்டங்களில் ஒன்றரை லட்சம் காளைகள் பங்கேற்றன. தடை விதித்ததால் சுமார் 70 ஆயிரம் ஜல்லிக்கட்டு காளைகள் விற்கப்பட்டுள்ளன. இதனால் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டாலும் 50 ஆயிரம் காளைகள் மட்டுமே பங்கேற்கும் நிலை உள்ளது. தொடர்ந்து தடை நீடிக்கப்பட்டால் இந்த காளைகளும் விற்கப்பட்டு விடும். இதில் மறைந்திருக்கும் உண்மை என்றால் ஜல்லிக்கட்டில் கிராமங்கள் சார்பில் நிறுத்தப்படும் காளைகள் அதிகம். இந்த காளைகள் ஜல்லிக்கட்டுக்கு மட்டுமல்லாமல் அந்த கிராமங்களில் உள்ள மாடுகளின் இனப்பெருக்கத்துக்கு முக்கிய காரணமாக இருக்கின்றன. ஜல்லிக்கட்டு காளைகள் அழிக்கப்பட்டால் தமிழகத்தில் மாட்டு இனமே அழியும் ஆபத்து ஏற்படும். எனவே இதுபோன்ற விபரீதங்கள் நிகழாமல் தடுப்பது ஆட்சியாளர்களின் கடமை. ஜல்லிக்கட்டு, ரேக்ளா போன்ற விளையாட்டுக்கள் நடத்தப்படும் போது மாடு வளர்க்கும் ஆர்வம் நிச்சயம் மக்கள் மத்தியில் ஏற்படும்" என்றார்.

மாட்டு இனத்தை அழிக்கவே ஜல்லிக்கட்டுக்கு தடை: பகீர் ரிப்போர்ட்! Arun%281%29பீப்பிள் பார் கேட்டில் இந்தியா என்ற அமைப்பின் நிறுவனர் அருண் பிரசன்னாவிடம் பேசுகையில், "வனவிலங்கின மீது ஆர்வலர்கள் அக்கறை செலுத்துவது நல்ல விஷயம் தான். அதே நேரத்தில் தமிழக மாட்டுச் சந்தைகளில் அடிமாட்டு விலைக்கு மாடுகளை வாங்கி கேரளாவுக்கு கடத்தும் கும்பலை குறித்து யாரும் கண்டுக்கொள்வதில்லை. ஜல்லிக்கட்டுவை விட இந்த கும்பல்தான் மாடுகளை அதிகளவில் கொடுமைப்படுத்துகிறது. குறிப்பாக மாடுகளின் கண்களில் மிளகாய் வைத்து கொடூரமாக கொல்கின்றனர். இதை தடுக்க வனவிலங்கின ஆர்வலர்கள் அக்கறை செலுத்த வேண்டும்" என்றார்.

தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவையின் தலைவர் ராஜசேகர் கூறுகையில், "2007ல் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து வழக்குத் தொடர்ந்து அதன்பிறகு ஜல்லிக்கட்டுவை நடத்தினோம். இப்போது மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையையும் நீக்க அனைத்து நடவடிக்கைகளை தமிழக அரசு செய்து வருகிறது. தடை நீக்கப்பட்டதற்கான உத்தரவை எதிர்பார்த்து காத்திருக்கிறோம். ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான ஏற்பாடுகளும் நடந்து வருகிறது. அதற்காக காளைகளும் தயார் நிலையில் உள்ளன" என்றார்.

ஜல்லிக்கட்டு விளையாட்டுக்குப் பின்னணியில் இவ்வளவு விஷயமா!

- எஸ்.மகேஷ்


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» யாருக்கும் மெஜாரிட்டி இல்லை... ஜூ வி பகீர்... தி முக ,அதிமுக திகில்... பரபரப்பு சர்வே ரிப்போர்ட்...
» சரப்ஜித் சிங் உடலில் இதயம், கிட்னி போன்றவை மிஸ்ஸிங் : -போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் ‘பகீர்’
» சிக்னல் கொடுத்து இனத்தை காக்கும் வண்ணத்து பூச்சிகள்!
» தமிழ் இனத்தை விற்று பிளைக்கிறார் டக்ளஸ்; மாவை. எம்.பி. சாடல்
» உலகிலேயே முதல்முறையாக அழிந்துப்போன புலிகள் இனத்தை மீண்டும் உருவாக்கி சாதனை புரிந்துள்ளனர் விஞ்ஞானிகள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum