Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:57 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:06 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 11:16 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 04, 2024 10:21 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
டார்கெட் சத்தியமங்கலம்! மிரட்டும் மாவோயிஸ்ட்கள்
Page 1 of 1

கூடலூர் அருகே கேரள எல்லையில் தனியார் சொகுசு ஓய்வு விடுதிகள் மீது கடந்த நவம்பர் மாத இறுதியில் மாவோயிஸ்ட்கள் தாக்குதல் நடத்தினர். டிசம்பர் முதல் வாரத்தில் வயநாடு வனத்தில், சோதனைக்குச் சென்ற போலீசார் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இது போலீசாருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தச் சூழலில் கடந்த டிசம்பர் 22-ம் தேதி தமிழக கேரளா எல்லைப் பகுதியான முக்காலியில் உள்ள சைலன்ட் வேலி வனச்சரக அலுவலகத்தை தீவைத்து கொளுத்தினார்கள். பாலக்காடு, வயநாடு மாவட்டங்களில் செக்போஸ்ட், பன்னாட்டு உணவு விடுதிகள் போன்றவை மீது மாவோயிஸ்ட்கள் அடுத்தடுத்து தாக்குதலில் ஈடுபட்டனர்.
'நள்ளிரவு 1.30 மணி இருக்கும். திடீரென பயங்கர சத்தம் கேட்டது. வீட்டை விட்டு வெளியே வந்து பார்த்தோம். அப்போது, துப்பாக்கி ஏந்திய கும்பல் ஒன்று வனத்துறை அலுவலகம் மீது தாக்குதல் நடத்திக்கொண்டிருந்தது. நாங்கள் வெளியே வந்ததை பார்த்ததும், அந்தக் கும்பலில் இருந்த ஒருவர் எங்களைப் பார்த்து, 'ஒன்றும் பயப்பட வேண்டாம். உங்களை ஒன்றும் செய்ய மாட்டோம். உள்ளே போங்கள்’ என்று சொன்னார். தொடர்ந்து அலுவலகத்தின் கதவை உடைத்து உள்ளே நுழைந்து ஆவணங்களையும், பொருட்களையும் சூறையாடினர். வெளியே நிறுத்தப்பட்டிருந்த வனத்துறை ஜீப்புக்கும் தீவைத்தனர். அப்போது அதிகாரிகள் சிலரும் வந்துவிட்டனர். ஆனால் அவர்கள் ஆயுதமேந்தி இருந்ததால், அதிகாரிகள் அவர்களை நெருங்கவில்லை' என்றனர் அந்தப் பகுதி மக்கள்.
மன்னார்காடு எம்.எல்.ஏ சம்சுதீனிடம் பேசினோம். 'மாவோயிஸ்ட்கள் இங்கு தளம் அமைத்துள்ளதை ஏற்கெனவே போஸ்டர்கள் ஒட்டி உறுதிப்படுத்தினர். ஆனால், வனத்துறையினரும் போலீசாரும் இதை சீரியசாக எடுத்துக்கொள்ளவில்லை. அதுதான் தற்போது நடந்துள்ள சம்பவங்களுக்குக் காரணம். இந்தத் தாக்குதல் சுற்றுலாப் பயணிகளிடமும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக முதல்வரிடம் பேச உள்ளேன்' என்று சொன்னார்.
பாலக்காட்டில் வெளிநாட்டு உணவகங்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில் அருண், காந்த் ஆகிய இருவரை பாலக்காடு போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர். பாலக்காடு எஸ்.பி. மஞ்சுநாத், 'பிடிபட்ட இருவரும் மாவோயிஸ்ட் ஆதரவாளர்கள். மாவோயிஸ்ட் இதழியல் பிரிவில் வேலை பார்த்த இவர்கள் இருவரும், துண்டுப் பிரசுரங்களை தயார்செய்து வீசியுள்ளனர்' என்கிறார்.
'தாக்குதல் நடத்தியது ஏன்?’ என்பதை விளக்கும் வகையில் மாவோயிட்டுகள் துண்டுப் பிரசுரங்களை வீசிவிட்டு சென்றனர். அதில், 'ஆதிவாசி மக்கள் இங்கு பல நூறு ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றனர். இங்குள்ள தேயிலைத் தோட்டங்கள், ரப்பர் தோட்டங்கள் போன்ற விவசாய பூமிகளை உருவாக்கியவர்கள் அவர்கள்தான். ஆனால், அவர்களுக்கான இடத்துக்கு பட்டா கொடுக்காமல் அரசு ஏமாற்றி வருகிறது. கஷ்டப்படும் ஆதிவாசி மக்களிடம் இருந்து வனத்துறையினர் பணம் பறிக்கும் செயல்களில் ஈடுபடுகின்றனர்.
ஆதிவாசிகளுக்கு சொந்தமான இடத்தில் எல்லாம் சொகுசு விடுதிகள் அமைக்க அரசு அனுமதிக்கிறது. ஆதிவாசிகளை அழித்து, பணம் படைத்தவர்கள் உல்லாசமாய் இருக்க அரசு பலவிதமான ஏற்பாடுகளை செய்து வருகிறது. ஆனால் ஆதிவாசி மக்களுக்கு இங்கு கழிப்பிடம் போன்ற அடிப்படை வசதிகளைக்கூட செய்து தரவில்லை. ஆதிவாசிகளின் குழந்தைகள் ஏராளமானோர் சத்துக்குறைபாடு காரணமாக இறந்துபோனார்கள். அதெல்லாம் இந்த அரசு கண்டுகொள்ளவே இல்லை. அரசு பயங்கரவாதம் இந்தப் பகுதியில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள நிலையில், அதற்குப் பதிலடியாக இத்தகைய போராட்டங்கள் மேலும் மூர்க்கமாகத் தொடரவே செய்யும்' என்று அதில் கூறப்பட்டு இருந்தது.
இன்னொரு கடிதத்தில், 'கேரளாவில் மட்டுமின்றி தமிழகம், கர்நாடகத்திலும் நாங்கள் இருக்கிறோம். அங்கும் எங்கள் போராட்டத்தைத் தீவிரப்படுத்துவோம். தண்ணீர், மண், காடு இவற்றுக்கான அதிகாரம் அங்குள்ள மனிதனுக்குத்தான். அதனை நோக்கிப் போராடுவோம்' என்றும் தெரிவித்துள்ளனர். இதையடுத்து கேரளா விரைந்துள்ள க்யூ பிரிவு உள்ளிட்ட சிறப்புப் பிரிவு போலீஸ் அதிகாரிகள், இதுதொடர்பாக விசாரித்து வருகின்றனர். தமிழகத்திலும் தேடுதல் வேட்டை தீவிரமடைந்துள்ளது.
இரண்டு மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம் வனப்பகுதியில் மாவோயிஸ்ட் கும்பல் பதுங்கி இருக்கக்கூடும் என்றும் அவர்களின் அடுத்த தாக்குதல் சத்தியமங்கலத்தை ஒட்டியப் பகுதியில் உள்ள மலை கிராமங்களில் இருக்கலாம் எனவும் முதற்கட்ட விசாரணையில் உறுதிப்படுத்தியுள்ள தமிழக போலீசார், அங்கு சோதனைகளை தீவிரப்படுத்தியுள்ளனர். பழங்குடியின மக்களின் நலனை காப்பதுதான், மாவோயிஸ்ட்களை ஒடுக்குவதற்கு சரியான வழி. அதை உணர்ந்து அரசு செயல்படட்டும்.

Similar topics
» "டார்கெட்' விஜயகாந்த்: தொடர்ந்து குறிவைக்கும் தி.மு.க., பிரசாரம்
» அரசை கண்டித்து நேபாள மாவோயிஸ்ட்கள் 10 நாள் ஸ்டிரைக் அறிவிப்பு
» பீகார்: போலீஸ் நிலையம் மீது மாவோயிஸ்ட்கள் வெடிகுண்டு தாக்குதல்
» சத்தியமங்கலம் வனப்பகுதியில், கல்லுடைக்கும் பணி தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தின் சென்னை அமர்வு, இன்று குவாரிப் பணிகளுக்கு தடை விதித்து உத்தரவிட்டது.
» மாவோயிஸ்ட்கள் விடுதலைக்கு எதிர்ப்பு: வேலை செய்ய மாட்டோம் ஒடிசா மாநில போலீசார்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum