TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:11 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Oct 16, 2024 7:35 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Oct 15, 2024 7:59 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Oct 12, 2024 12:03 am

» சினிமா
by வாகரைமைந்தன் Fri Sep 27, 2024 10:02 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


பால் சாப்பிடுவது அவசியம்தானா..?! ஓர் ஆரோக்கிய அலசல் பொன்.விமலா

Go down

பால் சாப்பிடுவது அவசியம்தானா..?! ஓர் ஆரோக்கிய அலசல் பொன்.விமலா Empty பால் சாப்பிடுவது அவசியம்தானா..?! ஓர் ஆரோக்கிய அலசல் பொன்.விமலா

Post by mmani Wed Nov 19, 2014 7:56 am

பால், தயிர், மோர், நெய், வெண்ணெய் என நம் அன்றாடத் தேவைகளில் பால் மற்றும் பால் பொருட்களின் பங்கு அதிகமே. ஆனால், பாலின் விலை தொடர்ந்து ஏறுமுகமாக இருப்பதன் காரணமாக நடுத்தர மக்கள் பலரும் தற்போது, பாலுக்கு மாற்று உணவு என்ன என் கிற கோணத்தில் யோசிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.
'நம் முன்னோர்கள் காலத்தில் காளைகள் உழவுக்காகவும், பசுக்கள் இனப்பெருக்கத்துக்காகவும்தான் பயன்படுத்தப்பட்டன. காலப்போக்கில் பசுவின் பாலை மனிதன் பயன்படுத்தத்  துவங்கினான். ஆனால், பசுவின் பால் நமக்குத் தேவையற்றது என்பதுதான் உண்மை. ஓர் உயிரை வருத்திப் பெறும் பால் அவசியமில்லாதது!’ என்கிறார்கள் இயற்கை ஆர்வலர்கள். அதேசமயம், 'பெரியவர்களுக்கு வேண்டுமானால் பால் தேவைப்படாமல் இருக்கலாம். ஆனால், குழந்தைகளை எப்படி பாலில் இருந்து விலக்கி வைக்க முடியும்?’ என்பது அம்மாக்கள் பலரின் கேள்வி.
[You must be registered and logged in to see this image.]
இந்தக் கேள்வியை சென்னையைச் சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவர் ஸ்ரீநிவாசனுக்கு மாற்றியபோது, ''குழந்தைகளைப் பொறுத்தவரை தாய்ப்பால்தான் முக்கியம். மாட்டுப்பால் தேவையே இல்லை. குழந்தை பிறந்த முதல் ஆறு மாதத்துக்குக் கட்டாயம் தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். ஒரு தாயின் மனநிலையே பால் சுரப்புக்குக் காரணம். சிறிய மார்பகம், சத்தில்லாத தேகம் என பால் தராததற்கு பொய்யான காரணங்களை பெண்கள் கண்டுபிடிப்பது முற்றிலும் தவறு. அதேபோல் பால் கொடுப்பதால் மார்பகங் களின் அழகு போய்விடும் என்பதும் வதந்தியே!'' என்ற டாக்டர், பால் சுரப்புக்கு கை கொடுக்கும் வழிமுறைகளைக் குறிப்பிட்டார்.
[You must be registered and logged in to see this image.]''பாலூட்ட, முதலில் ஒரு தாய் மனதளவில் தயாராக வேண்டும். தன் குழந்தைக்குத் தன்னால் பால் கொடுக்க முடியும், கொடுக்க வேண்டும் என அவள் நினைத்தாலே, கண்டிப்பாக பால் சுரக்கும்.  ’வில்லிங் மதர், சக்கிங் பேபி' (willing mother, sucking baby) என்பார்கள். தாய் விருப் பத்துடன் கொடுக்கும்போது, குழந்தையும் பால் குடிக்கும். இதற்காக தாயானவள் தின மும் சாப்பிடும் உணவோடு சற்று கூடுதல் சத்துக்களை சேர்த்துக்கொண்டாலே போதுமானது. அப்படியும் தாய்ப்பால் சுரக்கவில்லை என்றால், குழந்தையை மார்பகங்களில் சப்புவதற்கு நன்கு பழக்கப் படுத்த வேண்டும். ஒரு குழந்தை எவ்வளவுக்கு எவ்வளவு சப்ப ஆரம்பிக்கிறதோ அந்த அளவுக்கு பால் சுரப்பதும் அதிகமாகும். இந்த இரு வகைகளிலும் பால் சுரக்கவில்லை என்றால், தாய்க்கும் தாயின் குடும்பத்தினருக்கும் கவுன்சலிங் கொடுத்து காரணத்தைக் கண்டறிய வேண்டுமே ஒழிய, தாய்ப் பால் சுரக்கவில்லை என தானாக முடிவெடுத்து, பால் பவுடரையோ அல்லது பசும்பாலையோ நாடுவது முற்றிலும் தவறு'' என்ற டாக்டர், தாய்ப்பாலின் சிறப்பை நிரூபிக்கும் ஆய்வு முடிவுகளையும் தொட்டுக் காட்டினார்.
''அதிக நாட்கள் தாய்ப்பால் குடித்த குழந்தைகள், மற்ற குழந்தைகளைவிட மூளை வளர்ச்சியில் முன்னிலையில் இருப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன. ஆனால், 35 சதவிகித பெண்கள் மட்டுமே முதல் 6 மாதம் தாய்ப்பால் கொடுக்கிறார்கள் என்கின்றன ஆய்வு முடிவுகள். இது 100 சதவிகிதமாக உயர வேண்டும். 6 மாதத்துக்குப் பிறகு சத்துமாவுக் கஞ்சி, கிழங்கு வகைகள், பருப்பு, இட்லி முதலான திட உணவுகளைக் குழந்தைக்குப் பழக்கப்படுத்த வேண்டும். பாலில் உள்ள கால்சியம் சத்து இந்த உணவுகளின் மூலம் அவர்களுக்குக் கிடைக்கும்போது, பசும் பாலின் அவசியம் இல்லை. குழந்தையின் 2 வயதுப் பிறகு குழந்தை விரும்பும்பட்சத்தில் பசும்பாலை அறிமுகப்படுத்த லாம். அதுவரை குழந்தைக்கு பசும்பால் தேவையே இல்லை!'' என்றார் டாக்டர் ஸ்ரீநிவாசன் அழுத்தமாக!
[You must be registered and logged in to see this image.]        [You must be registered and logged in to see this image.]
குழந்தைகளுக்குத் தாய்ப் பால் போதும். பெரியவர்கள் பாலை ஒதுக்கிவிட்டால், அவர்களுக்கான மாற்று உணவு?
இதைப் பற்றி டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன் கூறுவதை கேட்போமா..?!
''பாலில் உள்ள கால்சியம் சத்து அவசியமான ஒன்றுதான். ஆனால், அதை பாலில் இருந்துதான் பெற வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. கால்சியம் சத்து, கேழ்வரகில் நிறையவே இருக்கிறது. அதனால் கேழ்வரகுக் கஞ்சி, கூழ் என உண்ணப் பழக்கலாம். டீ, காபிக்குப் பதிலாக க்ரீன் டீ, துளசி ஜூஸ், கஞ்சி மாதிரியான மாற்று ஆகாரங்களை எடுத்துக்கொள்ள லாம். அசைவம் சாப்பிடுகிறவர் கள், மீன், கருவாடு (இவற்றின் முள்ளில்கூட கால்சியம் இருப்பதால், எலும்பு போல இருக்கும் மீன் முள்களை மட்டும் மென்று சாப்பிடலாம்!) என்று எடுத்துக் கொள்ளலாம். கீரை, சுண்டல், கறிவேப்பிலை, புதினா, கொத்தமல்லித் தழை போன்ற  பச்சை  உணவுகளிலும்    பாலுக்கு நிகரான சத்து இருப்பதால், சைவம் சாப்பிடுபவர்கள் இவற்றை நாடலாம். புட்டரிசி தோசை, கேழ்வரகு அடை இதையெல்லாம் உணவில் சேர்ப்பது நல்லது. பசும்பாலை தவிர்க்கவே முடியாத வர்கள், நேரடியாகப் பசுவின் தரம் பார்த்து பாலை வாங்குவது நல்லது. இல்லையென்றால், பசுவிடம் ஏதேனும் நோய் இருந்து அது நமக்குப் பரவ வாய்ப்பிருக்கிறது'' என்று எச்சரித்து முடித்தார் ஷைனி.


[You must be registered and logged in to see this image.]ஆர்கானிக் பால்!
கும்மிடிபூண்டியில் உள்ள 'ஆஸ்ட்ரா டெய்ரி (Astra dairy)’ ஆர்கானிக் பால் பண்ணையின் இயக்குநர் ராகேஷ் ரவீந்திரன் கூறும்போது, ''எங்கள் பண்ணைப் பசுக்களுக்கு இயற்கையான முறையில் வளர்க்கப்படும் புற்களையும் தாவரங்களையுமே உணவாகக் கொடுக்கிறோம். தாவங்களின் மீது எந்த ரசாயன உரத்தையும் தெளிப்பது கிடையாது. பூச்சித்தாக்குதல் இருந்தால், இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட பூச்சிவிரட்டிகளையே பயன்படுத்துகிறோம். பசுக்களையும் இயற்கையான சூழலில்தான் வளர விடுகிறோம். பருத்திக்கொட்டை, புண்ணாக்கு போன்றவற்றை வெளியிடங்களில் வாங்கிக் கொடுப்பதும் இல்லை. இந்த மாடுகளுக்கு வெறும் பச்சைத் தாவரமும் தண்ணீரும்தான் உணவு. இதனால் மாடுகளின் உடம்பில் எந்த ரசாயனக் கலப்பும் இருக்காது. இப்படி இயற்கையான முறையில் வளரும் மாடுகளிடமிருந்து கறக்கும் பாலை, உடனுக்குடன் 1 லிட்டர் பாட்டில்களில் அடைப்போம். அதை அப்படியே நேரடியாக வாடிக்கையாளர் களுக்கு விநியோகிப்போம். இதனால் பாலில் எந்தக் கலப்பும் நடக்க வாய்ப்பில்லை.  இப்படி இயற்கையாக கிடைப்பதால், இந்தப் பாலின் விலையை லிட்டர் 60 ரூபாய் என்று நிர்ணயித்திருக்கிறோம்!'' என்றார்.
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum