Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Today at 12:07 am
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:26 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
இலங்கையில் நீதிக்கான தேடல் மிகுந்த அவசர அவசியமாக மாறியுள்ளது – கலம் மெக்ரே!!
Page 1 of 1
இலங்கையில் நீதிக்கான தேடல் மிகுந்த அவசர அவசியமாக மாறியுள்ளது – கலம் மெக்ரே!!
இலங்கையில் நீதிக்கான தேடல் மிகுந்த அவசர அவசியமாக மாறியுள்ளது – கலம் மெக்ரே!!
இலங்கையில் நீதிக்கான தேடல் மற்றும் குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் ஆகியன மிகுந்த அவசரமான அவசியமாக மாற்றமடைந்துள்ளது என செனல்4 ஊடகத்தின் பணிப்பாளர் கெலம் மெக்ரே தெரிவித்துள்ளார். பல வழிகளில் கடந்த சில வாரங்கள் ராஜபக்ஸ அரசாங்கத்திற்கு சர்வதேச அரங்களில் பாதகமான நிலைமை ஏற்பட்டுள்ளது. சர்வதேச விமர்சனங்களுக்கு நிராகரிப்பு மற்றும் உண்மையை மறைக்கும் கூற்றுக்கள், முடிவில்லா விசாலாமானதும் போலியானதுமான விசாரணைகள் மற்றும் வாக்குறுதிகள மூலம் இலங்கை அரசாங்கம் பதிலளித்து வருகின்றது.
மோசமான மனித உரிமை குறித்த சர்வதேச விமர்சனங்கள் தேசத்திற்கு எதிரான தாக்குதல்களாக அரசாங்கம் உள்நாட்டு ரீதியில் காண்பித்துக்கொள்கின்றது. சிங்கள பெரும்பான்மையினர் மீதான தாக்குதல்களாக வெளிக்காட்டி, அந்த சமூகத்தின் ஆதரவினை திரட்டும் முனைப்புக்களில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.
எனினும் தொடர்ச்சியாக வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் மீது, அரசாங்கம் அடக்குமுறைகளை பிரயோகித்துவருகின்றது. காணி அபகரிப்பு, சனத்தொகை பரம்பலில்மாற்றம், பாலியல் வன்முறை, சிங்கள குடும்பங்களை குடியேற்றல், மரபு ரீதியான தமிழ் சமூகத்தை ஒரங்கட்டுதல் போன்ற பல்வேறு வழிகளில் பிராந்தியத்தின் அடிப்படை அடையாளங்களை மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. காவி உடை தரித்த குண்டர் கூட்டமான பொதுபல சேனா இயக்கத்தை ஊக்கப்படுத்தி அவர்களின் ஊடாகவும் சிறுபான்மை சமூகங்கள் மீது அடக்குமுறைகள் பிரயோகிக்கப்படுகின்றன. குறிப்பாக முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ சமூகங்கள் மீது இந்த அமைப்பு கடுமையான அழுத்தங்களை பிரயோகிக்கின்றது.
இதுவே, உள்நாட்டு வெளிநாட்டு மனித உரிமை பாதுகாவலர்கள் மற்றும் சர்வதேச சமூகத்திற்கு உள்ள பிரதான பிரச்சினையாகும். கால நேரத்தை விரயமாக்கக் கூடிய சூழ்நிலை கிடையாது. கால நேரத்தை விரயமாக்குவதன் மூலம் தாங்கள் எதிர்பார்த்த இலக்குகளை வடக்கு கிழக்கில் அடைந்துகொள்ள முடியும் என ராஜபக்ஸக்கள் கருதுகின்றனர்.
அவர்களினால் இலக்கினை அடைய முடியுமா?
சிலர் முடியாது எனக் கருதுகின்றனர். உண்மையில் கடுமையான அழுத்தங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
கடந்த மாதம் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளின் போது இலங்கை தொடர்பான ஐக்கிய நாhடுகள் விசாரணைகளின் முன்னேற்றம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் வாய்மொழி மூல அறிக்கை சமர்ப்பித்திருந்தார். இந்த அறிக்கையில் இலங்கை மீது மிகவும் கடுமையான விமர்சனங்கள் வெளிடப்பட்டிருந்தன. சர்வதேச விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கக்கூடிய அல்லது விசாரணைகளில் பங்கேற்கக் கூடியவர்கள் எனக் கருதப்படும் மனித உரிமை ஆர்வலர்கள், சிவில் சமூக செயற்பாட்டாhகள் மீது கடந்த மார்ச் மாதம் முதல் கடுமையான அடக்குமுறைகள், அழுத்தங்கள், ஒடுக்குமுறைகள் பிரயோகிக்கப்பட்டு வருவதாகவும் இது பெரும்அதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதாகவும் அவர் குறப்பிட்டார். அரச மற்றும் அரச சாரா தரப்பினர் அழுத்தங்களை பிரயோகிக்கின்றனர் என தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் சர்வதேச விசாரணைகளில் சாட்சியமளிப்பவர்கள் நாட்டின் அரசியல் சாசனத்திற்கு புறம்பாக செயற்பட்டதாகக் கருதி அவ்வாறனவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஊடக அமைச்சர் விடுத்த அறிவிப்பை அவர் சுட்க்காட்டினார். சிவில் சமூகங்களின் கூட்டங்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதுடன் தமிழ் அமைப்புக்கள் தடைசெய்யப்பட்டமை ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என தெரிவித்தார்.
சாட்சியாளாகளை பாதுகாப்பது தொடர்பில் போதியளவு முன்னேற்றம் ஏற்படவில்லை. திருகோணமலை ஐந்து மாணவர் படுகொலை முதல் எங்களது செனல்4 ஊடக நிறுவனத்தின் ஆவணப்படம் வரையிலலான சகல விடங்கள் தொடர்பில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாகஅறிவிக்கப்பட்ட போதிலும் நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. காணி அபகரிப்பு மற்றும் இராணுவ மயமாக்கல் குறித்தும் குறிப்பிட்டிருந்தார். (இந்த சம்பவங்கள் தமிழர் பிரதேசங்களில் இடம்பெறுகின்றன என்பதனை அவர் தெளிவாக குறிப்பிடவில்லை.)
கடந்த இரண்டு தினங்களில் ஐக்கிய நடுகள் மனித உரிமைப் பேரவை கமிட்டி கூட்டத்தில் இலங்கை விவகாரம் குறித்து மீளாய்வு செய்யப்பட்டது. சர்வதேச சிவில் மற்றும் அரசியல் உரிமைகளை இலங்கை பாதுகாக்கின்றதா என்பது குறித்து மீளாய்வில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
எனினும், இந்த விமர்சனங்களைத் தாண்டி அரசாங்கம் தொடர்ச்சியாக மேற்குலக நாடுகளின் திட்டமிட்ட வேட்டையாக இலங்கை மாற்றமடைந்துள்ளதாக பிரச்சாரம் செய்துவருகின்றது.
அரசாங்கத்தின் இந்த கருத்தானது வெளிப்படையாகவே இரட்டை நிலைப்பாட்டை அம்பலப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. சில வேளைகளில் மேற்குலக நாடுகளின் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற கருத்தினை தங்களது தேவையான வகையில் பயன்படுத்திக்கொள்ளும் அரசாங்கம் மறுபுறத்தில் மேற்குலக அழுத்தம் என்பதனை வெளிக்காட்டிக்கொள்ள முனைகின்றமை அப்பட்டமாகியுள்ளது. எனினும் இந்த முயற்சிகளில் பல தோல்வியடைந்துள்ளன. அமெரிக்க நாடுகளின் மத்தியில் இலங்கை தொடர்பில் நன்மதிப்பை அதிகரிப்பதற்காக அரசாங்கம் பாரிய பொருட்செலவை செய்த போதிலும் மிகவும் குறுகியளவு நன்மைகளே கிட்டியுள்ளன.
மறுபுறத்தில் எகிப்து, இலங்கை உள்ளிட்ட 22 நாடுகள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் இலங்கை தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் சர்வதேச விசாரணைகள் அனாவசியமானவை என குறிப்பிட்டு அறிக்கை வெளியிட்டிருந்தன. இந்த அறிக்கைக்கு இலங்கை அரசாங்கம் அதிக முக்கியத்துவம் வழங்கியிருந்தது.
எவ்வாறெனினும் அறிக்கை தொடர்பிலான அரசாங்கத்தின் மகிழ்ச்சி நீண்ட காலத்திற்கு நீடிக்கவில்லை. அறிக்கை வெளியிடப்பட்டு இரண்டு நாட்களில் ஐக்கிய நாடுகளின் ஜெனிவாவிற்கான முன்னாள் இலங்கை நிரந்தரப் பிரதிநிதி தயான் ஜயதிலக்க, கடுமையான விமர்சனங்களுடன் அறிக்கை தொடர்பில் கருத்துவெளியிட்டிருந்தார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கான ஆதரவு வீழ்ச்சியடைந்து செல்வதாக தயான் ஜயதிலக்க சுட்டிக்காட்டியிருந்தார்.
யுத்த நிறைவின் பின்னர் உடனடியாக நடைபெற்ற ஐக்கிய நடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தோல்வியடைந்திருந்தது. இலங்கைக்கு ஆதரவாக 29 நாடுகள் வாக்களித்திருந்தன. இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இலங்கைக்கு எதிராக விசாரணை நடத்தப்படக் கூடாது 12 நாடுகள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் வாக்களித்திருந்தன. எனினும் தற்போது இலங்கைக்கு எதிரான விசாரணை அனாவசியமானது என குறிப்பிட்ட 22 நாடுகளில் 7 நாடுகள் மட்டுமே ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் வாக்களிக்கும் உரிமையை உடையவை. ஐக்கிய நாடுகள் உறுப்புரிமையுடைய நாடுகள் அதிகளில் குறித்தஅறிக்கையில் கையொப்பமிடாததனை விடவும், பல முக்கிய நாடுகள் அறிக்கையில் கையொப்பமிடாமையே அரசாங்கம் அடைந்த பாரிய பின்னடைவு என தயான் ஜயதிலக்க குறிப்பிட்டிருந்தார்.
‘மேற்குலக நாடுகள் பற்றி நான் பேசவில்லை. எனினும் கையொப்பமிடக்கூடிய உறுப்பு நாடுகள பல கையொப்பமிடவில்லை. உதாரணமாக வியட்நாம், இந்தியா, பிரேஸில், தென் ஆபிரிக்கா போன்ற நாடுகள் கையொப்பமிடமில்லை’ என அவர் குறிப்பிட்டிருந்தார்.
எனினும், இந்த விடயம் குறித்து இலங்கை மெய்யாக வே கரிசனை கொண்டுள்ளதா? அநேகமாக இல்லை. பிரச்சார யுத்தத்தை வென்றெடுக்க அரசாங்கம் முயற்சிக்கவில்லை. ஏனென்றால் பிரச்சார யுத்தத்தை வெல்ல முடியாது என்பது அரசாங்கத்திற்கு தெரியும். மாறாக அவர்கள் கால நேரத்தை விரயமாக்குவதற்கு முயற்சிக்கின்றனர். கடந்த காலங்களில் காலத்தை கடத்துவதில் இலங்கை அரசாங்கம் பாண்டியத்;தை வெளிப்படுத்தியிருந்தது.
காலத்தை கடத்துவதற்கு இலங்கை அரசாங்கம் சகல வழிகளையும் பயன்படுத்திக்கொள்ளும், சகல ஆயுதங்களையும் பயன்படுத்திக் கொள்ளும். சீனாவின் கடல் பட்டு வழி முதல் இந்தியாவின் மோசமான மனித உரிமை நிலைமைகள் உள்ளிட்ட சகல பலவீனங்களையும் இலங்கை பயன்படுத்திக்கொள்ளும்.
அரசாங்கத்தின் அரசியல் வெட்கம்கெட்டத்தன்மைக்கு அளவே கிடையாது. ஈராக்கிற்கு எதிரான சட்டவிரோத யுத்தம் பற்றி கூறி மேற்சுகுலக நாடுகளின் தவறுகளை சுட்டிக்காட்டும் இலங்கை அரசாங்கம் சந்தர்ப்பம் கிடைத்தால் , ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவும் அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமாவும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் பிரச்சாரத்திற்காக பயன்படுத்திக்கொள்ளும் இரட்டை நிலைப்பாட்டைக் கொண்டது.
பொதுபல சேனா கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது தாக்குதல் நடத்தினால் பல்லின மக்கள் வாழும் சமூகத்தில் இவ்வாறான சம்பவங்கள் இயற்கையானதே என தப்பித்துக்கொள்ளும் அரசாங்கம், மறுபுறத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, பாதுகாப்புச்செயலாளர் கோதபாய ராஜபக்ஸ ஆகியோர் பாப்பாண்டவருடன் புன்முறுவல் பூக்கும் புகைப்படங்களை பிரச்சார நோக்கத்திற்காக பயன்படுத்திக்கொள்வர்.
பிரச்சினைகள் விமர்சனங்களை உளறுவதன் மூலம் சமாளிக்க முடியும் என ராஜபக்ஸக்கள் கருதுவதே, இலங்கையில் இடம்பெற்ற வரலாற்று அநீதிகளான மனித உரிமை மீறல்கள் மற்றும் அரசியல் தீர்வுத் திட்டங்கள் வழங்கப்படாமை நியாயமற்றது எனக் கருதும் தரப்பினர் எதிர்நோக்கும் பிரதான சவாலாகும்.
சில நல்ல விடயங்கள் இடம்பெறுகின்றன. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் சர்வதேச விசாரணையானது இலங்கைப் பிரச்சினைக்கான சஞ்சீவ மருந்து அல்ல எனினும் அதுவும் ஓர் முக்கியமான நடவடிக்கையாகும். விசாரணைககள் விரயமாக்கப்படக் கூடாது. குற்றச்செயல்களுக்கு தண்டனை விதித்தல் தொடர்பிலான ஓர் செயன்மறை சாரா நடவடிக்கையாக மாற்றுவதற்கு எவருக:கும் இடமளிக்கக் கூடாது. கால நேரத்தை விரயமாக்குவதற்கு சந்தர்ப்பம் கிடையா. நீதி, உண்மை மற்றும் குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் இலங்கையின் மிகவும் அவசரமான முன்னுரிமை ஏதுவாக அமைந்துள்ளது.
mmani- பண்பாளர்
- Posts : 8037
Join date : 19/12/2010
Similar topics
» இலங்கையில் பெரும்பான்மை ஆட்சி பெரும்பான்மையின ஆட்சியாக மாறியுள்ளது : செய்தி ஆய்வு
» இலங்கையில் எத்தகைய தடைகள் வந்தாலும் செய்தி சேகரிப்பை கைவிடோம்! - சனல்4 பணிப்பாளர் கலம் மக்றே உறுதி.
» "சனல்- 4வுக்கு இலங்கையில் இருந்து யாரும் தகவல் வழங்கவில்லை: கெல்லம் மெக்ரே"
» 2ஜி உரிமம் பெற உடல் வலிமையே அவசியமாக இருந்தது: சிபிஐ
» புலிகளின் தலைவர் வாழ்கிறாரா..? அதிர்ச்சி தகவலுடன் கலம் மக்ரே.
» இலங்கையில் எத்தகைய தடைகள் வந்தாலும் செய்தி சேகரிப்பை கைவிடோம்! - சனல்4 பணிப்பாளர் கலம் மக்றே உறுதி.
» "சனல்- 4வுக்கு இலங்கையில் இருந்து யாரும் தகவல் வழங்கவில்லை: கெல்லம் மெக்ரே"
» 2ஜி உரிமம் பெற உடல் வலிமையே அவசியமாக இருந்தது: சிபிஐ
» புலிகளின் தலைவர் வாழ்கிறாரா..? அதிர்ச்சி தகவலுடன் கலம் மக்ரே.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum