Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)by வாகரைமைந்தன் Today at 1:16 am
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:15 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Oct 01, 2024 10:52 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Oct 01, 2024 7:38 pm
» Simon Daniel
by வாகரைமைந்தன் Fri Sep 27, 2024 10:02 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
திருமணத்தில் ‘ஹனிமூன்’.. கர்ப்பத்தில் ‘பேபிமூன்’ இளம் தம்பதிகளிடையே பரவும் புதிய கலாசாரம்!!!
3 posters
TamilYes :: நல்வரவு :: அறிவிப்புகள்
Page 1 of 1
திருமணத்தில் ‘ஹனிமூன்’.. கர்ப்பத்தில் ‘பேபிமூன்’ இளம் தம்பதிகளிடையே பரவும் புதிய கலாசாரம்!!!
திருமணமான ஜோடிகள் ‘ஹனிமூன்’ செல்வார்கள். தித்திக்கும் அந்த தேன்நிலவு பயணத்தில் அவர்கள் இல்லற வாழ்க்கையின் இனிமைகளை அனுபவிப்பார்கள்.
தேனிலவு போல் இப்போது இளம் தம்பதிகள் கொண்டாடும் பயணம் ‘பேபிமூன்’! இது கர்ப்பகாலத்தில் கணவரோடு சேர்ந்து மனைவி செல்லும் இன்ப சுற்றுலாவாகும்.
இங்கிலாந்து இளவரசர் வில்லியம், கர்ப்பிணியான மனைவி கேத் மிடில்டனுடன் கடந்த ஆண்டு கரீபியன் தீவுக்கு இன்பசுற்றுலா சென்றார். அந்த சுற்றுலா பேபிமூன் என்று வர்ணிக்கப்பட்டு, உலகம் முழுக்க பரவிவிட்டது. அதை தொடர்ந்து இந்தியாவிலும் பேபிமூன் சுற்றுலா தொடங்கிவிட்டது. அது ஜாலியான பயணம்தான், ஆனால் வயிற்றுக்குள் இருக்கும் இன்னொரு உயிரும் சம்பந்தப்பட்டது என்பதால் மிகுந்த கவனமும் அவசியமாகிறது.
முன்காலத்தில் ‘கர்ப்பிணிகள் பயணத்தை தவிர்க்கவேண்டும்’ என்று சொல்லப்பட்டு வந்தது. இப்போது பயணம் ஊக்குவிக்கப்படுகிறது. அதற்கு என்ன காரணம்?
* கணவன், மனைவி என்ற அவர்களது இருவர் உலகத்தில் மூன்றாவது உயிர் வருவது, கர்ப்பத்தின் மூலம் உறுதியாகிறது. கர்ப்பகாலம் எப்படியாயினும் பெண்ணுக்கு மனஅழுத்தத்தை உருவாக்கிவிடத்தான் செய்கிறது. மனஅழுத்தம் போக்கப்பட்டு, தாய்க்கு மனமகிழ்ச்சி கிடைத்தால் பிரசவத்திற்கு மனதளவில் தயாராகிவிடுவார். கர்ப்பகாலத்தில் பெரும்பாலும் பெண்களை பெற்றோர், உறவினர்கள் சூழ்ந்துகொள்கிறார்கள். அவ்வப்போது டாக்டர்களும் வந்து ஆலோசனைகளை தந்துகொண்டிருப்பார்கள். அப்படிப்பட்ட நேரத்தில் கணவரோடு கிடைக்கும் தனிமை பெரும்பாலும் பெண்களுக்கு குறைந்து விடுகிறது. அது சிலருக்கு ஏக்கத்தைகூட உருவாக்கலாம். அந்த ஏக்கத்தைபோக்க, ‘பேபி மூனை’ பயன்படுத்திக்கொள்கிறார் கள்.
* கர்ப்பகாலத்தில் உடல் மற்றும் ‘உறவு’ ரீதியாக பெண்களுக்கு பல்வேறு சந்தேகங்கள் எழும். அந்த சந்தேகங்களுக்கு விடை தேடி ‘உறவை’ தொடர விரும்பாத பெண்கள், கணவரை மாதகணக்கில் ஒதுக்கிவைத்துவிடுகிறார்கள். ‘அப்படி கணவரிடம் இருந்து ஒதுங்கவேண்டியதில்லை. எப்போதும் கணவரின் அருகாமை மனதுக்கு மகிழ்ச்சியையும், தன்னம்பிக்கையையும் தரும்’ என்பது பேபி மூன் மூலம் உணரப்படுகிறது.
* அன்னியோன்யமான, அதிக நெருக்கம் கொண்ட தம்பதிகளாக இருக்கும் பல குடும்பங்களில் பிரவசம் நடந்த பிறகு பெண்ணின் வாழ்க்கை தலைகீழாக மாறிப்போய்விடுகிறது. தாய் எந்நேரமும் குழந்தையின் மீதே கவனமாக இருக்கவேண்டியதிருக்கிறது. மனதும்,உடலும் குழந்தையின் தேவைக்காக மாறிக்கொள்கிறது. சரியாக தாயால் தூங்க முடியாது. இதனால் கணவர், மனைவியால் கண்டுங்காணாத நிலைக்கு தள்ளப்படுகிறார். இந்த பிரசவ கால பிரிவுக்கு முன்னால், இருவரும் ஒருவருக்கொருவர் தங்களை தாங்களே பகிர்ந்துகொள்ள, புரிந்துகொள்ள ‘பேபி மூன்’ பயன்படுகிறது.
* பிறக்கப்போகும் குழந்தையை வரவேற்க பெற்றோர் தயாராகிக்கொள்ளவும் பேபிமூன் துணைபுரியும்.
* ஆழமாக பார்த்தால், பேபிமூன் பயணம் தம்பதிகளுக்கு அதிக மகிழ்ச்சியை தருமா? வயிற்று குழந்தைக்கு அதிக மகிழ்ச்சியை தருமா? என்ற கோணத்தில் சிந்தித்தால், வயிற்றுக் குழந்தைக்கும் அது அவசியம் என்பதை புரிந்துகொள்ள முடியும். ஏன்என்றால் கர்ப்பகாலத்தில் தாய் மகிழ்ச்சியாக இருப்பது குழந்தையின் உடல்வளர்ச்சிக்கும், மனோ வளர்ச்சிக்கும் அவசியம். அந்த மகிழ்ச்சியை பேபிமூன் தாய்க்கும், வயிற்று குழந்தைக் கும் வழங்குகிறது.
* பேபிமூன் அனுபவிக்கும் அந்த சில நாட்களில் கணவன், மனைவி மட்டுமே பொழுதை கழிப்பார்கள். அப்போது கணவரின் அருகாமை மனைவிக்கு மட்டுமல்ல, பிறக்கப்போகும் குழந்தைக்கும் முழுமையாக கிடைக்கும். அதன் மூலம் தந்தைக்கும்– குழந்தைக்குமான ஆத்மபந்தமும் அதிகரிக்கும்.
* கர்ப்பிணி மனைவியை புரிந்துகொள்ளாமல் பொறுப்பே இல்லாமல் இருக்கும் சில கணவர்கள்கூட இந்த பேபிமூன் காலகட்டத்தில் மனைவியின் உடல்நிலையையும், மனநிலையையும் புரிந்துகொண்டு அதற்கு ஏற்ப பொறுப்போடு நடந்துகொள்ள முன்வருவார்கள்.
பேபிமூன் பயணத்திற்கு ஏற்ற கர்ப்ப காலம் எது?
– 18 முதல் 24 வது வாரத்திற்குள் பேபிமூன் மேற்கொள்ளவேண்டும்.
பேபிமூன் பயணத்திற்கான முன்னேற்பாடுகள்:
* உங்களுக்கு பிடித்தமான காலநிலை நிலவும் இடத்திற்கு செல்லுங்கள். அங்கு நீங்கள் தங்கும் இடத்தை மிக கவனமாக தேர்ந்தெடுங்கள். மிக அருகில் நவீன வசதிகளைகொண்ட மருத்துவமனை இருக்கவேண்டும்.
* நிறைய இடங்களை பார்க்கவும், தொடர்ந்து பயணத்திலே இருக்கவும் விரும்பாதீர்கள். பயணத்தைவிட, சவுகரியமாக தனிமையை அனுபவிப்பதே உங்கள் நோக்கமாக இருக்கவேண்டும்.
* சிறிய தூரத்திற்கு கார், அதிக தூரத்திற்கு ரெயிலை பயன்படுத்துங்கள். தொடர்ந்து ஒரே நிலையில் உட்கார்ந்து பயணம் செய்யாமல், சிறிது நேரம் வாகனத்தை விட்டு இறங்கி ரிலாக்ஸ் செய்துவிட்டு மீண்டும் தொடரவேண்டும். கார் பயணத்தில் அடிவயிற்றுக்கு தக்கபடி சீட் பெல்ட் பயன்படுத்தவேண்டும்.
* வெளிநாடுகளுக்கு செல்ல விமான பயணமே ஏற்றது. 32 முதல் 36 வாரங்கள் வரை பயணம் செய்யலாம் என்று விமான நிறுவனங்கள் குறிப்பிடுகின்றன. அதை உறுதி செய்துவிட்டு பயண ஏற்பாடுகளை மேற்கொள்ளுங்கள். சிலருக்கு விமானம் தரை இறங்கும்போது அசவுகரியம் தோன்றும். அவர்கள் பேபிமூன் காலத்தில் விமானபயணத்தை தவிர்க்கவேண்டும். கப்பல் பயணம் கர்ப்பிணிகள் மேற்கொள்ளக்கூடாது.
* குளிர் பிரதேசம் என்றால் அதற்கு தகுந்த உடை அவசியம். பொதுவாக பேபிமூனுக்கு பருத்தி ஆடையே ஏற்றது. அதிக லக்கேஜ் எடுத்து செல்லக்கூடாது.
* பயணத்தில் சிறுநீரை அடக்கிவைப்பது கர்ப்பிணிகளுக்கு பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். தாகம் இல்லாவிட்டாலும் அடிக்கடி தண்ணீர் பருகி, சிறுநீர் கழிக்கவேண்டும்.
* புதிய உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். எளிதாக ஜீரணம் ஆகும் உணவுகளே சிறந்தது. குளிர்பானங்கள் கூடாது.
* பேபி மூன் மேற்கொள்வதற்கு முன்பு டாக்டரின் முழுமையான ஆலோசனையை பெறுங்கள். முறையான பரிசோதனைகளை மேற்கொண்டு, டாக்டர் குறிப்பிடும் அத்தியாவசிய மருந்துகளையும் உடன்கொண்டு செல்லுங்கள்.
* எல்லா கர்ப்பிணிகளுக்கும் பேபிமூன் ஏற்றதல்ல. ‘ஹை ரிஸ்க் பிரக்னன்சி’ கொண்டவர்கள் தவிர்க்க வேண்டும். ஐ.வி.எப். மூலம் கர்ப்பமானவர்களும், ஒன்றுக்கு மேற்பட்ட சிசுக்களை கர்ப்பத்தில் தாங்குகிறவர்களும் பயணத்தை தவிர்ப்பது நல்லது.
உங்கள் டாக்டர் ‘பேபிமூன்’ செல்லவேண்டாம் என்றாலோ, பொருளாதார நிலை கைகொடுக்காவிட்டாலோ கவலைப்படாதீர்கள்! கர்ப்பிணிகள் தாங்கள் இருக்கும் இடத்திலே மகிழ்ச்சியாக பேபிமூனை கொண்டாடலாம். குறிப்பிட்ட நாட்களை ஒதுக்கி, உங்களுக்கு பிடித்ததுபோல் கணவரோடு மகிழ்ச்சியாக வீட்டிலே பொழுதை கழியுங்கள். அருகில் உள்ள பூங்கா, கடற்கரை, தியேட்டர், பொழுதுபோக்கு இடங்களுக்கு சென்று கர்ப்பகாலத்தை, மறக்கமுடியாத பொற்காலமாக மாற்றுங்கள்.
கட்டுரை : டாக்டர் கே.ஜே. நிவேதிதா, (மகப்பேறு துறை மருத்துவர்) சென்னை–26.
பேபி மூனை தவிர்க்கவேண்டியவர்கள் யார்?
* சிலருக்கு கர்ப்பகாலத்தில் பயணம் என்றாலே பயமாகவும், அலர்ஜியாகவும் இருக்கும். அவர்கள் தவிர்த்திடவேண்டும்.
* பயணிக்கவேண்டாம் என்று டாக்டர் கூறியிருந்தால் தவிர்த்திடுங்கள்.
* கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்கள் பயணம் தேவையில்லை.
* மிகுந்த முரண்பாடுகளைகொண்ட தட்பவெப்ப சூழ்நிலை நிலவும் இடங்களுக்கும், செங்குத்தான மலைப் பகுதிகளுக்கும் பயணம் செல்லவேண்டாம்.
prabhu123- பண்பாளர்
- Posts : 110
Join date : 14/08/2014
Location : erode
Re: திருமணத்தில் ‘ஹனிமூன்’.. கர்ப்பத்தில் ‘பேபிமூன்’ இளம் தம்பதிகளிடையே பரவும் புதிய கலாசாரம்!!!
பேபி மூன்...!!!
மிகச் சமீபத்தில் பிரபலமான ஒன்று..
இதைப் பற்றி அருமையான விளக்கத்தை அளித்திருந்த மருத்துவர் நிவேதிதா அவர்களின் கட்டுரையை நமக்கெல்லாம் பதித்துத் தந்த நண்பர் பிரபு123 அவர்களுக்கு என் பாராட்டுக்கள்.
மிகச் சமீபத்தில் பிரபலமான ஒன்று..
இதைப் பற்றி அருமையான விளக்கத்தை அளித்திருந்த மருத்துவர் நிவேதிதா அவர்களின் கட்டுரையை நமக்கெல்லாம் பதித்துத் தந்த நண்பர் பிரபு123 அவர்களுக்கு என் பாராட்டுக்கள்.
கோவி.பாண்டியன்- உதய நிலா
- Posts : 2
Join date : 11/10/2014
Re: திருமணத்தில் ‘ஹனிமூன்’.. கர்ப்பத்தில் ‘பேபிமூன்’ இளம் தம்பதிகளிடையே பரவும் புதிய கலாசாரம்!!!
கோவி.பாண்டியன் wrote:பேபி மூன்...!!!
மிகச் சமீபத்தில் பிரபலமான ஒன்று..
இதைப் பற்றி அருமையான விளக்கத்தை அளித்திருந்த மருத்துவர் நிவேதிதா அவர்களின் கட்டுரையை நமக்கெல்லாம் பதித்துத் தந்த நண்பர் பிரபு123 அவர்களுக்கு என் பாராட்டுக்கள்.
Similar topics
» அமெரிக்காவில் பெண்னைக் கடித்து இரத்தம் குடிக்க முயன்ற இளைஞன் கைது: வளர்ந்துவரும் புதிய கலாசாரம்
» கர்ப்பத்தில் இருக்கும் சிசு டேஸ்ட் பார்ப்பதில் கில்லாடி
» இறந்தவர்களை மணி மணியாக உருட்டி வைக்கும் கலாசாரம்!
» திருமணத்தில் மார்பகத்திலிருந்து செல்போனை எடுக்கும் மணப்பெண்!
» மதுரை என்றால் "வீச்சரிவாள் கலாசாரம்' : ஐகோர்ட் நீதிபதி வேதனை
» கர்ப்பத்தில் இருக்கும் சிசு டேஸ்ட் பார்ப்பதில் கில்லாடி
» இறந்தவர்களை மணி மணியாக உருட்டி வைக்கும் கலாசாரம்!
» திருமணத்தில் மார்பகத்திலிருந்து செல்போனை எடுக்கும் மணப்பெண்!
» மதுரை என்றால் "வீச்சரிவாள் கலாசாரம்' : ஐகோர்ட் நீதிபதி வேதனை
TamilYes :: நல்வரவு :: அறிவிப்புகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|