TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 3:35 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 12, 2024 4:59 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 12, 2024 2:10 am

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


சுண்டூர் படுகொலைகளும் - வன்கொடுமைத் தடுப்புச் சட்டமும்:

Go down

சுண்டூர் படுகொலைகளும் - வன்கொடுமைத் தடுப்புச் சட்டமும்: Empty சுண்டூர் படுகொலைகளும் - வன்கொடுமைத் தடுப்புச் சட்டமும்:

Post by அருள் Fri Aug 01, 2014 7:51 am

சுண்டூர் படுகொலைகளும் - வன்கொடுமைத் தடுப்புச் சட்டமும்:
[You must be registered and logged in to see this image.]
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள சுண்டூர் கிராமத்தில் 1991 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6 அன்று 300க்கும் மேற்பட்ட ரெட்டி சாதி வெறிக் கும்பல் சேரிக்குள் புகுந்தது. டிராக்டர்களிலும் வண்டிகளிலும் துரத்தி துரத்தி 8 தலித்துகளை கொன்றனர். அந்த கிராமத்தை ஒட்டி ஓடிய துங்கபத்ரா ஆற்றின் கால்வாயில் உடல்களை வீசினார். அடுத்த மூன்று நாட்கள் இடைவெளியில் உடல்கள் ஒவ்வொன்றாக கரை ஒதுங்கின.வன்முறை நடக்கக் கூடும் என்று முன்னதாகவே அந்த கிராமத்தில் போலீஸ் சாவடி ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. இந்த படுகொலைகள் அந்த சாவடியில் இருந்து அரை கிலோமீட்டர் தூரத்திலேயே நடைபெற்றன. தலித்துகள் நீதிக்கான குழு அமைக்கப்பட்டு போராட்டங்கள் வெடித்தது.

13 ஆண்டுகள் கழித்து 2004ல் இந்த வழக்கை விசாரிக்க நாட்டிலேயே முதன்முறையாக வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் 1989 கீழ் சிறப்பு நீதிமன்றம் ஒன்று அமைக்கப்பட்டது. மாவட்ட நீதிமன்றத்தின் நோட்டீசுகளை ஏற்காமல் பாதிக்கப்பட்ட தலித்துகள் தொடர்ந்து போராடியதால் அவர்களின் கோரிக்கையை ஏற்று சுண்டூர் கிராமத்தில் உள்ள பள்ளி வளாகத்திலேயே சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டது.

2004 டிசம்பரில் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கி 2007 ஆகஸ்டில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் குற்றம் சாட்டப்பட்ட 212 பேரில் 33 பேர் வழக்கு நடக்கும் போதே இறந்துவிட்டனர், 56 பேர் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டனர், இதில் 21 பேருக்கு ஆயுள் தண்டனையும், 35 பேருக்கு ஓராண்டு சிறை தண்டனையும், அனைவருக்கும் 2000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. மற்ற 123 பேர் போதிய சாட்சிகள் இல்லாததால் விடுவிக்கப்பட்டனர். சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தண்டனை பெற்றவர்கள் ஆந்திர உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

கடந்த ஏப்ரல் 21 அன்று, நீதிபதி நரசிம்ம ரெட்டி தலைமையிலான பென்ச் மேல்முறையீடு வழக்கில் தீர்ப்பு வழங்கியது. அவர்கள் சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்து, தண்டனை பெற்ற 56 பேரையும் விடுவித்து தீர்பபளிததனர். அதற்கு அவர்கள் கூறிய காரணம் சம்பவம் நடந்த ஆகஸ்ட் 6- 1991 அன்று படுகொலைகள் குறித்து எந்த புகாரும் காவல் துறையினருக்கு வரவில்லை. மூன்று நாட்கள் கழித்தே புகார் கொடுக்கப்பட்டுள்ளது. குற்றத்தை இவர்கள் தான் செய்தார்கள் என்பதற்கோ இந்த நேரத்தில் இடத்தில் நடந்தது என்பதற்கோ ஆர்சு போதிய ஆதாரங்களை வைக்கவில்லை என்பதே. மேலும் அந்த தீர்ப்பில் இனி 3 மாத காலத்திற்கு சுண்டூர் கிராமத்தில் வெற்றிக் கொண்டாட்டத்த்திற்கோ அல்லது எதிர்ப்பு போராட்டங்கள் நடத்துவதற்கோ போலீஸ் அனுமதி தரக் கூடாது. பல ஆண்டு காலமாக தலித்துகளுக்கும் மற்ற சமூகத்தினருக்கும் இதையே உள்ள பகையை மறக்கவும் ஒன்றிணையவும் இரு சமூகத்து பெரியவர்கள் முயற்சி எடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

உயர்நீதிமன்றத்தின் விசாரணை போக்கு ஆதிக்க சக்திகளுக்கு ஆதரவாகவும் தலித்துகளுக்கு எதிராகவும் செயல்பட்டதை உணர்ந்து சுண்டூர் போராட்டக் குழுவும், இந்த வழக்கில் அரசின் சிறப்பு கூடுதல் வழக்கறிஞராக செயல்பட்டுவந்த, மனித உரிமைகள் தளத்தில் பெரிதும் மதிககப்ப்ப்டும் போஜ்ஜா தாராகம் அவர்கள் வழக்கை வேறு பெஞ்சுக்கு மாற்ற கோரினார். ஆனால் நீதிமன்றமோ 'இது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல், எனவே போஜ்ஜா தாராகம் மீது வழக்கு பதிவு செய்ய முடிவெடுத்தது, இதனால் அவரை மனுவை திரும்ப பெற அழுத்தம் கொடுக்கப்பட்டு திரும்ப பெறப்பட்டது. சுண்டூர் வழக்கு விசாரணையின் போது சிறப்பு நீதிமன்ற நீதிபதியாக தலித் ஒருவர் இருந்ததால் குற்றம் சாட்டப்பட்ட ரெட்டி கும்பல் 'தலித் நீதிபதியாக இருந்தால் அவர் தலித்துகளுக்கு ஆதரவாக செயல்படுவார் என்று மனு செய்து அவரை மாற்றினார். இன்று ரெட்டி நீதிபதி ஒருவர் அப்பட்டமாக சாதி வெறியுடன் செயல்பட்டு அநீதியை வழங்கியுள்ளார்.

இந்த தீர்ப்பு கடும் எதிர்ப்பை சந்தித்துள்ளது. சுண்டூர் தலித்துகளுக்கான போராட்ட குழு பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தது. வெளிப்படையாக நீதிபதிகள் நரசிம்ம ரெட்டி மற்றும் ஜேஸ்வாலுக்கு எதிராக போராட்டங்கள் வெடித்தன. உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஆந்திர அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இந்த வழக்கில் நேற்று ஒரு தீர்ப்பு வெளியாகியுள்ளது. அனைவரையும் விடுவித்து உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை நிறுத்தி வைத்து, குற்றவாளிகளை கைது செய்யவும், விளக்கம் கேட்டு அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் 1989 தவராக பயன்படுகிறது என்று சாதிவெறி கூட்டம் பேசியும் அதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், இந்த சட்டம் சாதி ஆதிக்க சக்திகள் நிறைந்த அரசு நிர்வாகம், நீதித்துறை மற்றும் ஆட்சியாளர்களின் கையில் எப்படி பலவீனமாக்கப்ப்ட்டுள்ளது என்பதை வெளிப்படுத்தியுள்ளது. இந்த சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட நீதிமன்றம் தந்த தீர்ப்பை, நாட்டையே உலுக்கிய இந்த படுகொலைகள் தொடர்பாக "நரசிம்ம ரெட்டி" என்னும் நீதிபதி சர்வ சாதாரண்மாக குற்றவாளிகளை விடுவிக்க முடிகிறது. இது போல இன்னும் ஏராளமான வழக்குகளை நாம் ஆதாரமாக காட்ட முடியும்.

பீஹாரில் உயர் சாதி நிலக்கிழார்களால் உருவாக்கபப்ட்ட ரன்வீர் சேனா என்னும் ஆயுதம் ஏந்திய கூலிப் படை நிகழ்த்திய படுகொலைகள் பல. 1996-சூலை 11 அன்று பீஹார்ன் ஜோத்பூர் மாவட்டத்தில் உள்ள பத்தானி தோலா என்னும் தலித் பகுதிக்குள் புகுந்த ரன்வீர் சேனா கூலிப் படை அங்கிருந்த பெண்கள் குழந்தைகள் என்று 23 பேரை துப்பாக்கியால் சுட்டும் ஆயுதங்களால் வெட்டியும் கொன்றது. கொல்லப்பட்டவர்களில் 10 மாத குழந்தையும் 10 வயது பெண் பிள்ளையும் அடங்கும். தலித் கூலித் தொழிலாளர்களின் போராட்டத்தை நசுக்கவே இந்த படுகொலை நிகழ்த்தப்பட்டது. மாவட்ட நீதிமன்றம் 3 பெருக்கு தூக்கும், 20 பேருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கியது. மேல்முறையீட்டில் தண்டனை பெற்ற 23 பேரையும் பாட்னா உயர் நீதிமன்றம் போதிய ஆதார்நாகள் இல்லை என்று சொல்லி விடுவித்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது.

இதே ரன்வீர் சேனா, 1997- டிசம்பர் 1 அன்று பீஹாரின் அருவாள் மாவட்டத்தில் உள்ள லக்ஷ்மன்பூர் பாத்தே என்னும் இடத்தில் 58 தலித்துகளை கொன்று குவித்தது. இதில் 27 பெண்களும் 16 குழந்தைகளும் அடங்குவர், ஒரு குழந்தைக்கு 1 வயது. 2007 அக்டோபர் 7 அன்று மாவட்ட நீதிமன்றம் 16 பேருக்கு தூக்கும் 10 பேருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கியது. மேல்முறையீட்டில் 2013 அக்டோபர் 9 அன்று பாட்னா உயர் நீதிமன்றம் தண்டனை பெற்ற 26 பேரையும் போதிய சாதிகள் இல்லை என்று சொல்லி விடுவித்தது.

அவ்வளவு தூரம் ஏன் போகவேண்டும் ? அரசியல் உரிமைகளை கோரி போராடி, ஊராட்சி மன்ற தலைவராக வந்த காரணத்திற்காக தமிழ்நாட்டில் மேலவளவு முருகேசன் தலை துண்டித்தும் அவருடன் 7 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் என்ன நீதி கிடைத்து விட்டது ?

தர்மபுரிக்கும் அதை தொடர்ந்து கொளுத்தப்பட்ட சேரிகளுக்கும் எப்போது என்ன நீதி கிடைக்கும் ?

கீழ்வெண்மணியில் 44 தலித் கூலிகள் கொல்லப்பட்ட வழக்கில் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட கோபால கிரிஷ்ண நாயுடுவுக்கு மக்கள் மன்றம் தான் தீர்ப்பு வழங்கியது. அதே போல ரன்வீர் சேனாவின் தலைவன் பிரம்மேஷ்வர் சிங் முக்கியா 2012 ஜூன் 1 அன்று சுட்டு கொல்லப்பட்டு நீதி வழங்கப்பட்டது.

இடஒதுக்கீடு மற்றும் சட்டங்களை எதிர்க்கும் ஆதிக்க சக்திகளும் அதற்கு துணை நிற்கும் அரசும் நீதி நிர்வாகமும் ஒன்றை புரிந்துக் கொள்ள வேண்டும், இந்த சட்டங்கள் எங்களை காக்க அல்ல எங்கள் மக்களின் கோபத்திலிருந்து உங்களை பாதுகாப்பதற்கே. நிச்சயம் ஒரு நாள் எங்கள் மக்கள் நீதிமன்றங்கள் நீதியை வழங்கியே தீரும்.

கடந்த காங்கிரஸ் ஆட்சியில் கடசி நேரத்தில் அவசர சட்டமாக திருத்தப்பட்ட வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது. புதிதாக வந்த மோடி அரசோ குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய அந்த சட்டத்தை பாராளுமன்ற நிலைக் குழுவுக்கு அனுப்பியுள்ளது. பல ஆண்டுகள் களப் பணியாளர்கள் , இயக்கங்கள், அறிவுஜீவிகள் கட்சிகள் போராடி கொண்டு வந்த திருத்த சட்டத்தை கிடப்பில் போட்டுள்ளது மோடி அரசு. இதற்கான எதிர்ப்பு குரல் எங்கும் எழவில்லை தலித்துகள் பழங்குடிகளை தவிர்த்து. சனநாயக சக்திகள் எப்பொழுது வாயைத் திறப்பார்கள்? இந்த பின்னணியில் தான் சேரிகளை கொளுத்தும் கும்பல் சட்டத்தை எதிர்த்து வழக்கு தொடர்கிறது அதை நீதிமன்றமும் அனுமதிக்கிறது.

படம்: படுகொலை வழக்கிலிருந்து ஜாமீனில் வெளியிலிருந்த ரன்வீர் சேனா தலைவன் பிணமாக (கொல்லப்பட்ட எம் மக்களின் படங்களை விட அவர்களை கொன்றவன் எப்படி கொல்லப்பட்டான் என்பதை விளக்கும் இந்த படம் நான் சொல்ல முயற்சித்துள்ள செய்திக்கு மிகவும் பொருந்துகிறது)
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» சட்டமும் தர்க்கமும் - குறும்புக் கதை
» 13வது திருத்தச் சட்டமும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளின் பித்தலாட்டமும்
» குண்டர் தடுப்புச் சட்டம்: ஆலோசனைக் குழு முன் ஆஜரானார் வீரபாண்டி ஆறுமுகம்
» திருக்குறளும் இந்தியத் தண்டனைத் தொகுப்புச் சட்டமும் - படித்ததில் பிடித்தது.
» ரெயில்வே பாலத்தில் தடுப்புச் சுவரை இடித்து அந்தரத்தில் தொங்கிய தீயணைப்பு வண்டி; 4 வீரர்கள் உயிர் தப்பினர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum