Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 10:18 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:07 am
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
தெரிந்து கொள்ளலாம் வாங்க இந்தியா அனுப்பிய பி.எஸ்.எல்.வி.ராக்கெட்.
4 posters
Page 1 of 1
தெரிந்து கொள்ளலாம் வாங்க இந்தியா அனுப்பிய பி.எஸ்.எல்.வி.ராக்கெட்.
PSLV ராக்கெட் மூலம் 5 செயற்கைக் கோள்கள் வான்வெளிக்கு அனுப்பட்டன. இவை அனைத்தும் வெளிநாடுகளைச் சேர்ந்தவை. ஏன் வெளிநாடுகள் தங்கள் நாட்டில் இருந்து செயற்கைக் கோள்களை அனுப்பாது,இந்தியாவின் சிறீகரிகோட்டாவை தெரிந்தெடுத்தார்கள்?
[You must be registered and logged in to see this image.]
சென்னைக்கு வடக்கே ஆந்திராவில் உள்ள,Indian Space Research Organisation (ISRO) வின், சிறீகரிகோட்டா(Sathish Dhawan Space Centre (SDSC) Sriharikota ) விண்வெளிக் கேந்திரத்திலிருந்து இந்தியாவின் செயற்கைக்கோள்களும், ஆளில்லா விண்கலங்களும், தற்போது வெளிநாட்டு செயற்கைக்கோள்களும் செலுத்தப்பட்டு வருகின்றன. இங்கு இரண்டு ராக்கெட் செலுத்து மேடைகள் உள்ளன. மூன்றாவது மேடை ஒன்று அமைக்கப்பட உள்ளது.இதற்கு தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரப்பட்டினத்தில் அமைக்க வேண்டும் என்று தமிழகத்தில் பல தரப்பினர் வற்புறுத்தி வந்தனர்

ஏன் இப்படி ராக்கெட் தளங்கள் மத்திய கோட்டிற்கு அருகே இருக்க வேண்டும்?
ராக்கெட்டுகளைச் செலுத்துவதற்கான இடம் பூமியின் நடுக்கோட்டின் (Equator) அருகேயும், கிழக்குக் கடற்கரை ஓரமாகவும் ஏன் இருக்க வேண்டும்?

செயற்கைக்கோள்களை தாங்கிச் செல்லும் ராக்கெட்டுகள், கிழக்குத் திசை நோக்கித் செலுத்தப்படுவதன் காரணம், தற்செயலாக பழுதடைந்து வெடித்து அல்லது கீழே விழுமானால்,அவற்றின் பாகங்கள் கடலில் விழுந்து உயிர் சேதத்தை ஏற்படுத்த மாட்டாது.மேலே செல்லாது திரும்பி, அனுப்பப்பட்ட இடத்திற்கே வருமானால், விஞ்ஞானிகள் நடுவெளியில் வரும் போது வெடிக்க வைத்து கடலில் விழ வைத்து விடுவார்கள்.2010 ஆம் ஆண்டு டிசம்பர் 25 ஆம் தேதி, ஜி.எஸ்.எல்.வி ராக்கெட் திசை மாறிய போது இப்படி அழிக்கப்பட்டது.

மத்திய ரேகைக் கோட்டிற்கு அருகே இருந்து அனுப்பப்படும் ராக்கெட், பூமிச் சுழற்சியினால் அதிக வேகத்தை, எரிபொருள் செலவின்றி பெற்றுக் கொள்ளும்.பூமியின் சுற்றளவான 40,075 கிலோ மீட்டரை,23,93 மணி நேரத்தில் சுற்றி முடிப்பதைக் கொண்டு,அதன் சுழற்சி வேகத்தைக் கணித்தால், மணிக்கு 1674 கிலோ மீட்டர் ஆகிறது.இந்த வேகம் நடுக் கோட்டை விட்டு விலக விலக குறைய ஆரம்பிக்கிறது. அதன்படி மத்திய கோட்டுக்கு அருகே இருப்பதை விட, விலகிச் செல்லும் போது பூமியின் சுழற்சி வேகம் குறைவடைவதால்,மத்திய கோட்டில் கிடைக்கும் அதே அளவு வேகத்தைப் பெற, அதிக எரிபொருளை இழக்க நேரிடும். .
அனேகமாக ரஸ்யா சீனா தவிர்ந்த, அனைத்து நாடுகளும் தங்கள் ராக்கெட் அனுப்பு தளங்களை மத்திய கோட்டை ஒட்டியே வைத்துள்ளன.

ஐரோப்பிய விண்வெளி அமைப்பின் ராக்கெட்தளம் பிரெஞ்சு குயானாவில் அட்லாண்டிக் கடலின் கிழக்குக் கரை ஓரமாக பூமியின் நடுக்கோட்டுக்கு மிக அருகில், 5 டிகிரி வடக்கு அட்சரேகையில் அமைந்துள்ளது. அங்கிருந்து ராக்கெட்டை ஏவினால் 1662 கிலோ மீட்டர் வேகம் கூடுதலாகக் கிடைக்கும். அமெரிக்காவின் கேப் கெனவரல் விண்வெளிக் கேந்திரம் மிகவும் தள்ளி 28 டிகிரி வடக்கு அட்சரேகையில் உள்ளது. அங்கிருந்து செலுத்தப்படும் ராக்கெட்டுகளுக்கு கிடைக்கும் இலவச வேகம் குறைவாகி,அதிக எரிபொருளை இழக்கிறது.
அதிக எடை கொண்ட செயற்கைக் கோள்களை அனுப்ப அதிக செலவு ஏற்படுகிற காரணத்தால்,சில நிறுவனங்கள் பசிபிக் கடலில் மிதக்கும் மேடையிலிருந்து ராக்கெட் மூலம் செயற்கைக்கோள்களை செலுத்தி வருகின்றன.
சிறீகரிகோட்டா 13 டிகிரி வடக்கு அட்சரேகையில் உள்ள நிலையில்,அதன் கூடுதல் வேகம் 1625 கிலோ மீட்டர் ஆகும். இன்னமும் சிறிது வேகத்தைக் கூட்ட வேண்டுமானால்,இன்னும் மத்திய கோட்டுக்குக் கிட்டே உள்ள ஒரு இடத்தில் ராக்கெட் தளத்தை நிறுவி எரிபொருள் செலவைக் குறைக்க வேண்டும்.

குலசேகரப்பட்டினத்தில்அமையும் பட்சத்தில், பி.எஸ்.எல்.வி ராக்கெட்டுகளை(polar satellite launch vehicle (PSLV)) வடக்கு-தெற்காக அனுப்பாமல்,நேரடியாக தெற்கு நோக்கிச் செலுத்த முடியும்.தற்போது இலங்கையை தவிர்க்க விரும்பி, சிறிது தூரம் கிழக்கு நோக்கிச் சென்று பின்னர் தெற்கு நோக்கி திருப்பிச் செல்ல வைக்கின்றனர். இதனால் சிறிது அதிக எரிபொருள் தேவைப்படுகிறது.
குலசேகரப்பட்டினத்திலிருந்து செய்ற்கைக்கோள்களைச் செலுத்தினால் இலங்கை மீது பறக்காமல், நேர் தெற்காகச் செலுத்துவதன் மூலம் எரிபொருளை மிச்சப்படுத்த முடியும்.
கூடிய எடை கொண்ட செயற்கைக்கோள்களை இந்தியா தயாரித்தாலும், அனேகமானவற்றை ஐரோப்பிய விண்வெளி அமைப்பின் கூரூ விண்வெளிக் கேந்திரத்திலிருந்து பிரெஞ்சு ஏரியான் ராக்கெட் மூலம் உயரே செலுத்தி வந்தன.இந்த முறை இப்போது மாறி, இந்தியாவே தங்கள் நிலையத்தில் இருந்து அனுப்பி வருகின்றது.
PSLV D1 முதன் முதலாக 1993 செப்டெம்பர் 20 இல் அனுப்பப்பட்டதாயினும்,மென்பொருளில் ஏற்பட்ட தவறினால் தோல்வி அடைந்தது.1997 செப்டெம்பர் 29 இல் அனுப்பப்பட்ட PSLV C1 உம் சிறிய தோல்வியைக் கண்டது.தற்போது 2014 சூன் 30 இல் PSLV C23, ஸ்பார்ட்-7-பிரான்ஸ், ஐசாட்-ஜெர்மனி, என்எல்எஸ்7.1 மற்றும் என்எல்எஸ்7.2 -கனடா, வெலாக்ஸ்-1 -சிங்கப்பூர் என ஐந்து செயற்கைக் கோள்களைக் காவிக் கொண்டு வெற்றிகரமாக வானில் செலுத்தப்பட்டது.
geosynchronous satellite launch vehicle (GSLV) D1-MK1 2001 ஏப்ரல் 18 இல் முதலில் அனுப்பப்பட்டது.
இதன் D6 -MK2 இன் அடுத்த பயணம் 2014 சூலை/ஆகத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
PSLV (Polar Satellite Launch Vehicle) உம் GSLV (Geosynchronous Satellite Launch Vehicle) உம் இரண்டு வேறுபட்ட ராக்கெட்டுகளாகும்.இதில் PSLV முந்தையதாகும்.PSLV ஐ விட இரண்டு மடங்கு (2,5 தொன் வரை)எடை கொண்ட செயற்கைக் கோள்களை GSLV எடுத்துச் செல்ல முடியும்.
PSLV நான்கு அடுக்குகளைக் கொண்டதும்,திட திரவ எரிபொருளைக் (solid , liquid fuels) கொண்டும் செயல்படுகிறது.அதே சமயம் GSLV மூன்று அடுக்குகளைக் கொண்டதும்,முதல் அடுக்கில் மட்டும் திட எரிபொருளைக் (solid fuel) கொண்டு செலுத்தப்படுகிறது.
PSLV நம்பிக்கையானதும் தனது 23 பயணத்தில் இரண்டு தோல்வியை மட்டுமே கண்டது. GSLV தனது எட்டு பயணத்தில் மூன்றை மட்டுமே வெற்றியாக்கிக் கொண்டது.
எரிபொருள் செலவைக் குறைத்து பணத்தை சேமிக்க வெளிநாடுகள், மத்திய கோட்டிற்குக் அருகே உள்ள ராக்கெட் அனுப்பு தளங்களை வைத்திருக்கும் நாடுகளை அணுகுவதால், இந்த நாடுகள் வெளி நாட்டுப் பணத்தை பெற்று இதை வியாபாரமாக செய்ய முடியும். இந்த நிலையில் இந்தியாவிற்கு இது சாதகமாக இருக்கிறது.இதனால் தான் வெளி நாடுகள் தங்கள் செயற்கைக் கோள்களை அனுப்ப இந்தியாவை நாடுகின்றன. இதனால் அந்த நாடுகளுக்கு ஆகும் எரிபொருள் செலவு மிகக் குறைவானதாக இருக்கிறது.
அத்துடன் இந்தியாவே செயற்கைக் கோள்களை தயாரிக்கும் பட்சத்தில் மேலும் பல கோடிக் கணக்கில் பணத்தை வருவாயாகப் பெற முடியும்.தனியார் நிறுவனங்களும் கூட இந்தியாவை நாடலாம்.இதற்கு குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் செலுத்தும் தளம் அமைந்தால் பெரிய வருவாயைப் பெற முடியும்.

sakthy- நிர்வாக குழுவினர்
- Posts : 1938
Join date : 26/09/2010
Re: தெரிந்து கொள்ளலாம் வாங்க இந்தியா அனுப்பிய பி.எஸ்.எல்.வி.ராக்கெட்.
ராக்கெட் அனுப்புவதில் இவ்வளவு விசியங்களா?
அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
Re: தெரிந்து கொள்ளலாம் வாங்க இந்தியா அனுப்பிய பி.எஸ்.எல்.வி.ராக்கெட்.
அறிந்திராத தகவல்கள்அருள் wrote:ராக்கெட் அனுப்புவதில் இவ்வளவு விசியங்களா?
krishnaamma- பண்பாளர்
- Posts : 955
Join date : 14/01/2014
Re: தெரிந்து கொள்ளலாம் வாங்க இந்தியா அனுப்பிய பி.எஸ்.எல்.வி.ராக்கெட்.
krishnaamma wrote:அறிந்திராத தகவல்கள்அருள் wrote:ராக்கெட் அனுப்புவதில் இவ்வளவு விசியங்களா?
mmani- பண்பாளர்
- Posts : 8037
Join date : 19/12/2010
Similar topics
» வாங்க சில நல்ல விஷயங்களை தெரிந்து கொள்ளலாம்..!
» தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும்-30
» தெரிந்து கொள்ளலாம் வாங்க.உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் -31
» தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் - 18
» தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் - 19

Permissions in this forum:
You cannot reply to topics in this forum