Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
நாட் ரீச்சபிள் நோக்கியா! கார்ப்பரேட் கலவரங்களின் நிஜம்
Page 1 of 1

கார்ப்பரேட் கலவரங்களின் நிஜம்
பாரதி தம்பி, ஓவியம்: ஹாசிப்கான்
25 வயதில் வேலை தேடுவார்கள்; வி.ஆர்.எஸ் வாங்குவார்களா? அந்தக் கொடுமையைக் காண சென்னை, நோக்கியா நிறுவனத்துக்கு வர வேண்டும். அங்கு ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கட்டாய 'வி.ஆர்.எஸ்’ கொடுத்து வீட்டுக்கு அனுப்பப்படுகின்றனர். ஒரு காலத்தில் தமிழ்நாட்டின் பெருமைமிகு அடையாளமாக முன்னிறுத்தப்பட்ட நோக்கியா, இன்று ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை நடுரோட்டில் நிறுத்தியிருக்கிறது. வெளிநாட்டு முதலீடுகளை கடவுளாகவும், பன்னாட்டு நிறுவனங்களை கடவுள் தந்த வரங்களாகவும் பலர் கருதும் நிலையில், அந்தக் கடவுளால் கைவிடப்பட்ட பக்தர்களின் நிலை என்ன என்பதையும் தெரிந்துகொள்ள வேண்டும்!
ஸ்ரீபெரும்புதூர் அருகே 2005-ம் ஆண்டு தொடங்கப்பட்டது, நோக்கியா டெலிகாம் சிறப்புப் பொருளாதார மண்டலம். புகழின் உச்சியில் இருந்த நோக்கியா, தமிழ்நாட்டுக்கு வந்ததைப் பெருமிதமாகக் கருதினார்கள் ஆட்சியாளர்கள். மக்களும் அவ்வாறே நினைத்தனர். 'ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு’ என்பது அப்போது கொடுக்கப்பட்ட பரபரப்பான வாக்குறுதி. சொன்னதுபோலவே சுமார் 8,000 பேர் வேலைவாய்ப்பைப் பெற்றனர். நோக்கியாவுக்கான உதிரி பாக விநியோக நிறுவனங்களில் சுமார் 14 ஆயிரம் பேர் பணிபுரிந்தனர். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை... என, சுற்றியுள்ள மாவட்டங்களில் இருந்து கொத்துக் கொத்தாக நோக்கியாவை நோக்கிப் படை எடுத்தனர். நான்கு திசைகளில் இருந்தும் நோக்கியாவின் பேருந்துகள், தொழிலாளர்களைச் சுமந்தபடி இரவும் பகலும் இழைந்தன.
ஆனால், நோக்கியாவில் இருந்தவை, அதிகபட்சம் உடல் உழைப்புப் பணிகளே. 8 மணி நேரம் நின்றுகொண்டோ அல்லது ஒரே உடல் அசைவைத் தொடர்ந்து செய்துகொண்டோ இருக்க வேண்டும். உடலை ஓர் இயந்திரம் போல மாற்றிவிடும் இந்த வேலைகள், கடும் உடல் அசதியைத் தரக்கூடியவை. சம்பளம் மிகக் குறைவு. எனினும் மக்கள் எப்படியாவது நோக்கியாவில் சேர்ந்துவிடத் துடித்தனர். 70 கி.மீ. தாண்டி உள்ள கிராமங்களில் இருந்துகூட வேலைக்கு வந்து சென்றனர்.
நோக்கியா தொழிலாளர்களைப் பொறுத்தவரை, பெரும்பாலானோர் அடிமட்டக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். தங்கள் தலைமுறையில் முதல்முறையாக ஒரு தொழிற்சாலை வேலைக்கு வந்தவர்கள். முறையான வேலை, 8 மணி நேர உழைப்பு, பணியிடத்தில் அனைவரும் சமமாக மதிக்கப்படும் சூழல், பேருந்தில் அழைத்துச் சென்று வருதல் போன்றவை அவர்களை ஈர்த்தது. இவை அனைத்தும் 2014-ம் ஆண்டின் தொடக்கம் வரைதான். அதன் பிறகு மெள்ள, மெள்ளக் காட்சிகள் மாறத் தொடங்கின.
2013-ம் ஆண்டு இறுதியில் 48 ஆயிரம் கோடி ரூபாய்க்கு (7.2 பில்லியன் டாலர்) நோக்கியாவை, மைக்ரோசாஃப்ட் நிறுவனம் வாங்கியது. சென்னை தொழிற்சாலையில் மட்டும் சிக்கல். மத்திய, மாநில அரசுகளுக்கு நோக்கியா செலுத்தவேண்டிய வரி பாக்கி மட்டும் சுமார் 23 ஆயிரத்து 500 கோடி ரூபாய் (பார்க்க: பெட்டி செய்தி). இதற்காக இந்திய, தமிழக அரசுகள் தொடர்ந்த வரி ஏய்ப்பு வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த நிலையில், சென்னை - நோக்கியாவை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் கையகப்படுத்த மறுத்தது. நிறுவனத்தில் எழுந்த புயல், தொழிலாளர்களையும் காவு வாங்கத் தொடங்கியது. 2014-ம் ஆண்டு பிப்ரவரியில் 1,500 ஒப்பந்தத் தொழிலாளர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். பிறகு, 'ஆர்டர் குறைந்துவிட்டது’ என மூன்று ஷிஃப்ட்கள் இரண்டாகக் குறைக்கப்பட்டன. அதில் சுமார் 1,500 பயிற்சித் தொழிலாளர்கள் வேலை இழந்தனர். இறுதியாக, ஏப்ரல் மாதத்தில் வி.ஆர்.எஸ் எனப்படும் 'விருப்ப ஓய்வுத் திட்டத்தை’ அறிவித்தது நோக்கியா. அதிகபட்ச தொழிலாளர்களுக்கு வி.ஆர்.எஸ்-ஸில் செல்ல விருப்பம் இல்லை. ஆனால், நிர்வாகமோ ஊழியர்களை வி.ஆர்.எஸ்-ஸுக்கு மூளைச் சலவை செய்தது.
[size]
ஊழியர்களில் 60 சதவிகிதத்துக்கும் அதிகமானோர் பெண்கள். பெரும்பாலும் திருமண வயதில் இருக்கும் மணம் ஆகாதவர்கள். அவர்களிடம், 'வி.ஆர்.எஸ் வாங்கினால், மொத்தமாக ஒரு தொகை கிடைக்கும். அதை வைத்து கல்யாணம் செய்து வாழ்க்கையில் செட்டில் ஆகலாம். வேலைதான் பார்ப்பேன் என்று அடம்பிடித்தால் கிடைப்பதும் கிடைக்காமல் போய்விடும்’ என்று அச்சம் கலந்த ஆசையை விதைத்தனர். கண் முன்னே இருண்ட எதிர்காலம் அச்சமூட்டிய நிலையில், அவர்களின் விருப்பம் வேறாக இருப்பினும், விருப்ப ஓய்வைத் தேர்வு செய்வது மட்டுமே அவர்கள் முன் இருந்த ஒரே தெரிவாக இருந்தது.
மொத்தம் மூன்று வகையான செட்டில்மென்ட்கள் நடந்தன. பயிற்சித் தொழிலாளர்களுக்கு 2 லட்சம் ரூபாய். ஐந்து ஆண்டுகளுக்குள் அனுபவம் உள்ளவர்களுக்கு 4.5 லட்சம் ரூபாய். அதற்கு மேல் அனுபவம் உள்ளவர்களுக்கு 5.5 லட்சம் ரூபாய். ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கானோர் வி.ஆர்.எஸ் கொடுத்து அனுப்பப்பட்டனர். சுமார் 8,000 பேர் வேலை செய்த நோக்கியாவில் இன்று இருப்பது, சுமார் 900 பேர் மட்டுமே.
நோக்கியாவுக்கு உதிரிபாகங்கள் விநியோகிக்கும் நிறுவனங்களான ஃபாக்ஸ்கான், ஃப்ளெக்ஸ்ட்ரானிக்ஸ், லைட்-ஆன் மொபைல், பி.ஒய்.டி., சால்காம்ப், ஆர்.ஆர்.டானெல்லி போன்றவற்றிலும் இந்த ஆட்குறைப்பு தொடர்கின்றன. நோக்கியா உள்ளிட்ட இந்த அனைத்து நிறுவனங்களிலும் சேர்த்து சுமார் 22 ஆயிரம் பேர் பணிபுரிந்த இடத்தில், இப்போது 8,500 பேர் இருந்தாலே அதிகம். அதாவது, கடந்த சில மாதங்களில் மட்டும் சுமார் 14 ஆயிரம் பேர் வேலையைவிட்டு அனுப்பப்பட்டுள்ளனர். இது மிகப் பிரமாண்ட எண்ணிக்கை. இத்தனை பேர், இவ்வளவு குறுகிய காலத்தில் வேலையில் இருந்து வெளியேற்றப்படுவது பெரிய பிரச்னையாகப் பேசப்பட்டிருக்க வேண்டும். மாறாக நோக்கியா, மைக்ரோசாஃப்ட் என்ற பிராண்டுகளின் புகழ் ஒளியில் அனைத்தும் மறைக்கப்பட்டுவிட்டன.
கடந்த சில ஆண்டுகளாக, திருவிழாக் கூட்டத்தைப் போல தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்த இடம், இன்று கைவிடப்பட்ட வனாந்தரம் போல் காட்சியளிக்கிறது. வேலை இழந்தவர்கள், திரிசங்கு சொர்க்க நிலையில் தவிக்கின்றனர். வேலையில் சேரும்போது அவர்களுக்கு 18, 19 வயது. பலர், நோக்கியா என்ற பெயர் மோகத்தில் படிப்பைப் பாதியில் விட்டுவிட்டு வந்தார்கள். ஆறு, ஏழு ஆண்டுகள் பணிபுரிந்த நிலையில், இன்று அவர்களுக்கு 25, 28 வயது.
''நோக்கியா அனுபவத்தை வைச்சு வேற எங்கேயும் வேலை தேட முடியாது. இனிமேல் என்ன வேலையா இருந்தாலும், நாங்க அங்கே புதுசுதான். நோக்கியாவுல 3,000-த்துல இருந்து 9,000 சம்பளத்துக்கு வர்றதுக்கே ஆறு வருஷமாச்சு. இப்போ மறுபடியும் 4,000, 5,000-த்துல ஆரம்பிக்கணும்'' என்று சொல்லும்போதே பூந்தமல்லி காயத்ரியின் கண்களில் எதிர்காலம் இருட்டிக்கொண்டு வருகிறது.
ஒரு சில லட்சம் செட்டில்மென்ட் தொகையை வைத்து, வாங்கிய கடனை அடைக்கலாம். எதிர்காலத்துக்கு என்ன செய்வது?
''இது வி.ஆர்.எஸ் வாங்குற வயசா சொல்லுங்க. எனக்கு 26 வயசுதான் ஆகுது. தஞ்சாவூர் வடபாதிமங்களம் கிராமத்துல இருந்து இங்கே வந்து வேலை செய்றேன். செல்போன் மதர்போர்டு தயாரிக்கிற பிரிவில் எனக்கு வேலை. 2007-ம் ஆண்டு வேலைக்கு சேரும்போது என் சம்பளம் 2,750 ரூபாய். அதில் 182 ரூபாய் சாப்பாட்டுக்காகப் பிடிச்சுக்குவாங்க. கன்ஃபார்ம் பண்ணின பிறகு 6,000 ரூபாய் சம்பளம். படிப்படியா உயர்ந்து இப்போ வி.ஆர்.எஸ்-க்கு முன்னாடி 11 ஆயிரம் ரூபாய். செட்டில்மென்ட்டா கையில் கிடைச்சது 2 லட்சம். இந்தப் பணம் எந்த மூலைக்கு?'' என்கிறார் விஜயகுமார்.
எல்லோரிடமும், மனம் கனக்கும் கதை ஒன்று உள்ளது. நொடித்துப்போன நெசவு, பொய்த்துப்போன விவசாயம்... எனச் சொந்த ஊரின் நினைவுகள் கசப்புகளாக மட்டுமே அவர்களின் மனத்தில் பதிந்துள்ளன.
''இவர்கள் எல்லோரும் பேச்சுலர்களாக அறை எடுத்தோ, குடும்பத்துடனோ தங்கியிருந்தனர். குறிப்பாக, ஸ்ரீபெரும்புதூர் பகுதியின் குறைந்த வாடகை வீடுகளை நிரப்பியிருந்தது இவர்கள்தான். இப்போது வேலை பறிபோய்விட்டது என்ற நிலையில் பலர் வீடுகளைக் காலி செய்து வருகின்றனர்'' என்கிறார் சி.ஐ.டி.யூ காஞ்சிபுரம் மாவட்டத் தலைவர் கண்ணன்.
பன்னாட்டுத் தொழிற்சாலைகள் நிரம்பிய ஸ்ரீபெரும்புதூர் நகரத்தை, அந்தக் காரணத்தை வைத்தே சந்தைப்படுத்தினார்கள். ரியல் எஸ்டேட் உயர்வு இதை முன்னிட்டே நடந்தது. இப்போது அந்தப் பிம்பம் சீட்டுக்கட்டு மாளிகையைப் போல சரிந்து வீழ்கிறது.
தற்போது நம் முன்னே எஞ்சி யிருக்கும் கேள்வி இது, 'நோக்கியா’வுடன் முடிந்துவிடக் கூடியதா? ஹூண்டாய், செயின்ட் கோபெய்ன், நிஸான், ஃபோர்டு... என மற்ற கம்பெனிகளிலும் தொடருமா என்பதுதான்.
''2008-ம் ஆண்டு அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதாரப் பெருமந்தம், ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரத்தைக் கணிசமாகக் காவு வாங்கியது. 'அதில் இந்தியா தப்பித்துவிட்டது’ என்று பெருமை பேசினார்கள். ஆனால், அந்தச் சுழல் மெள்ள நகர்ந்து இப்போது நம்மைத் தாக்கிக்கொண்டிருக்கிறது. இந்த ஆட்குறைப்பு, நோக்கியாவுடன் முடியப்போவது இல்லை. ஏனெனில், பன்னாட்டு நிறுவனங்கள் நம் நாட்டு அரசுகளிடம் இருந்து ஏராளமான சலுகைகளைப் பெற்றுத் தொழில் நடத்துகின்றன. அவற்றின் மூலம் லாபம் அனுபவித்து முடித்ததும், மூலதனத்தைப் பெயர்த்து எடுத்துக்கொண்டு இந்தியாவைவிட அதிகம் சலுகைகள் தருகிற, இதைவிட குறைந்த கூலிக்கு தொழிலாளர்கள் கிடைக்கிற வேறு நாடு களுக்குப் பறந்துவிடுகின்றன'' என்கிறார் கண்ணன்.
நோக்கியா போல சென்னையில் உள்ள மற்ற தொழிற்சாலைகளிலும், ஆட்குறைப்பு நடக்கும் என்று சொல்வதற்கு வெளிப்படையான ஆதாரங்கள் எதுவும் இல்லை. ஆனால், பொதுவாக இந்திய வேலைவாய்ப்பு சந்தை பலவீனம் அடைந்துவருவது உண்மை. கடந்த 2013-14ம் ஆண்டில் இந்தியாவின் பல்வேறு துறைகளிலும் சேர்த்து சுமார் ஐந்து லட்சம் பேர் வேலை இழந்திருப்பதாக நிபுணர்கள் கணிக்கின்றனர்.
'2005-ம் ஆண்டு இருந்து 2010-ம் ஆண்டு வரையிலான ஐந்து ஆண்டுகளில், இந்தியா 27 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளைப் பெற்றிருக்கிறது. ஆனால், இதே காலகட்டத்தில் 50 லட்சம் வேலைவாய்ப்புகளை இழந்திருக்கிறது’ என்கிறது இந்திய திட்டக் கமிஷனின் அதிகாரபூர்வ அறிக்கை.
இந்தத் தள்ளாட்டம், ஆட்டோமொபைல் துறையில் வெளிப்படையாகத் தெரிகிறது. 2013-ம் ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் மட்டும் இந்தியாவின் முக்கியமான அனைத்து வாகன உற்பத்தி நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களைக் கொத்துக்கொத்தாக வீட்டுக்கு அனுப்பின. பெரும்பாலும் இந்த ஆட்குறைப்புக்கு முதல் இலக்கானவர்கள், ஒப்பந்தத் தொழிலாளர்களே.
[/size][size]
இதில் உள்ள நகைமுரண் என்னவெனில், இந்த வெளிநாட்டு நிறுவனங்கள் நம் ஊருக்குத் தொழில் தொடங்க வரும்போது சொல்லப்படும் முதல் கவர்ச்சிகர முழக்கம், 'வேலைவாய்ப்பு கிடைக்கும்’ என்பதுதான். அந்த வேலைவாய்ப்பின் உண்மை நிலையைத்தான் மேலே பார்த்தோம். எனினும், எந்த அரசு வந்தாலும் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதைப் போட்டிப் போட்டுக்கொண்டு செய்கின்றன. கடந்த வாரம் நாடாளுமன்றக் கூட்டுக்கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, ''அனைத்துத் துறைகளிலும் அந்நிய முதலீடுகள் ஈர்க்கப்படும். இதன் மூலம் வேலை வாய்ப்புகள் பெருகும்'' என்று கூறி யிருக்கிறார். ஆக, புதிய வெளி நாட்டு கம்பெனிகளின் வருகை இனி அதிகரிக்கும் என்று தெரிகிறது.
'இதை எப்படிக் குற்றம் சொல்ல முடியும்? நிறுவனம் வருகிறது. வேலை இருக்கும்போது தருகிறது. வேலை இல்லை என்றால் என்ன செய்ய முடியும்?’ என்று நிறுவனத்தின் மூளையில் இருந்து இதைச் சிந்திப்பதைக் காட்டிலும், தொழிலாளர்களின் கோணத்தில் இருந்து பார்க்க வேண்டும். திடீரென, 'வேலை கிடையாது; வீட்டுக்குப் போ’ என்றால், எப்படி வாழ முடியும்? குடும்பச் செலவுகளைச் சமாளிப்பது எப்படி? வெளிநாட்டு நிறுவன முதலீடுகளின்போது செய்யப்படும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில், நிறுவனங்களின் லாபத்தை உத்தரவாதப்படுத்தும் ஒவ்வோர் அம்சமும் எழுத்துபூர்வமாகக் குறிப்பிடப் படுகிறது. ஆனால், தொழிலாளர்களின் வேலை உத்தரவாதம், சம்பளம் போன்ற எதுவும் அதில் இருப்பது இல்லை. எனில், அரசுகள் யாருக்கு சேவகம் செய்கின்றன?
பின்குறிப்பு: இந்தப் பிரச்னை தொடர்பாக நோக்கியா தரப்பின் விளக்கம் பெற, அதன் மனிதவளப் பிரிவு அதிகாரிகளைத் தொடர்பு கொண்டோம். ஆனால், உரிய பதில் பெற முடியவில்லை. அவர்கள் விளக்கம் அளித்தால் பிரசுரிக்கத் தயாராக உள்ளோம்.
[/size]
[size]
முதலீட்டைவிட 10 மடங்கு அதிக சலுகைகள்!
2005-ல் அ.தி.மு.க ஆட்சியில் நோக்கியா தொழிற்சாலை அமைக்க ஒப்பந்தம் கையெழுத்தானது. பிறகு வந்த தி.மு.க ஆட்சியும் நோக்கியாவை ஆதரித்து வரிச் சலுகைகளை வாரி வழங்கியது.
சிப்காட்டுக்குச் சொந்தமான 210 ஏக்கர் நிலம், ஒரு ஏக்கர் 4.5 லட்சம் என்ற கணக்கில் 99 வருட குத்தகைக்கு நோக்கியாவுக்கு வழங்கப்பட்டது. இதில் சிப்காட்டுக்கு ஏற்பட்ட இழப்பு 7.4 கோடி ரூபாய். பத்திரப் பதிவுக் கட்டணம் கிடையாது. நோக்கியா நிறுவனம், தன் தேவைக்குப் போக மீதமுள்ள இடத்தை பிற நிறுவனங்களுக்குக் குத்தகைக்கு விட்டுக்கொள்ளலாம். மாநிலமே மின்வெட்டில் புழுங்கினாலும் நோக்கியாவுக்குத் தடையில்லா மின்சாரம் உறுதி. தொழிற்சாலைக்குத் தேவையான மின்சார விநியோகத்துக்காக, ஆலையின் உள்ளே அரசு செலவில் ஒரு துணை மின் நிலையம் அமைத்துத் தரப்பட்டது. நோக்கியா, தன் சொந்த செலவில் மற்றொரு துணை மின் நிலையத்தை அமைத்துக்கொண்டது. அதன் செலவில் 50 சதவிகிதத்தை அரசே தந்தது. அதில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை நோக்கியா விற்பனை செய்துகொள்ளலாம். அதன் மீது வரி கிடையாது. நோக்கியா சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் இருந்து, தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் சாலை வசதி, அரசு செலவில் செய்து தரப்பட்டது.
வாட் வரியாகவும், விற்பனை வரியாகவும் மத்திய, மாநில அரசுகளுக்கு ஆண்டுதோறும் நோக்கியா எவ்வளவு செலுத்துகிறதோ, அந்தத் தொகையை மாநில அரசு திருப்பித் தந்துவிடும். இந்த வகையில் 2005 தொடங்கி 2011-ம் ஆண்டு வரை நோக்கியாவுக்கு, தமிழக அரசு கொடுத்த தொகை சுமார் 850 கோடி ரூபாய். நோக்கியா ஒரு சிறப்புப் பொருளாதார மண்டலம் என்பதால், சுங்க வரி, உற்பத்தி வரி ஆகியவை கிடையாது. இந்த வகையில் 2005-06 மற்றும் 2006-07 ஆகிய இரு ஆண்டுகளில் மட்டும் நோக்கியா பெற்ற வரிச் சலுகை 681 கோடி ரூபாய். நோக்கியாவுக்கு 20 சதவிகித வருமான வரியும் கிடையாது. இதனால் ஆண்டுதோறும் மத்திய அரசுக்கு ஏற்படும் இழப்பு சுமார் 700 கோடி ரூபாய். எட்டு ஆண்டுகளுக்குக் கணக்கிட்டால் இந்தத் தொகை மட்டும் 5,600 கோடி ரூபாய். இப்படியாக நோக்கியா பெற்றுள்ள மொத்த வரிச் சலுகையின் மதிப்பு, எப்படியும் 10 ஆயிரம் கோடி ரூபாய் வரும். ஆனால், நோக்கியாவின் முதலீடு வெறும் 1,125 கோடி ரூபாய் மட்டுமே. முதலீட்டைவிட 10 மடங்குத் தொகையை வரிச் சலுகைகளாக மட்டுமே பெற்றுள்ளது நோக்கியா. முக்கியமாக, இந்த அனைத்து வரிச் சலுகைகளும், நோக்கியாவுக்கான உதிரி பாகங்களை தயாரித்து வழங்கும் அதன் துணை நிறுவனங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன.
தனது உற்பத்தியின் மூலம் நோக்கியா ஈட்டிய லாபம், தனிக் கணக்கு. ஒரு மாதத்துக்கு 1.3 கோடி செல்போன்கள் வீதம் தயாரித்து, 75 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது நோக்கியா. இதன் மூலம் 2006-2013 காலகட்டத்தில் ஈட்டிய மொத்த வருமானம் சுமார் 1.5 லட்சம் கோடி ரூபாய். இதில் 20 சதவிகிதம் லாபம் எனக்கொண்டால், 30 ஆயிரம் கோடி ரூபாய் வருகிறது. இப்படி... வரிச் சலுகையாகவும் லாபமாகவும் பல்லாயிரம் கோடியை அள்ளிக்கொண்ட நோக்கியா, தன் தொழிலாளர்களுக்கு வழங்கிய ஊதியம் சொற்பத்திலும் சொற்பம்!
எப்படி ஏமாற்றியது நோக்கியா?
பின்லாந்து நாட்டைச் சேர்ந்த நோக்கியா நிறுவனம், தன் செல்போன்களில் பயன்படுத்தும் மென்பொருளுக்கான ராயல்ட்டி தொகையை, தன் தாய் நிறுவனத்துக்கு செலுத்தி வருகிறது. அந்த வகையில் நோக்கியாவின் இந்தியத் தொழிற்சாலையில் பயன்படுத்தப்பட்ட மென்பொருளுக்கான ராயல்ட்டி தொகையாக, 2005-ம் ஆண்டில் இருந்து இதுவரை சுமார் 20,000 கோடி ரூபாய் பின்லாந்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்தப் பணத்துக்கு டீ.டி.எஸ் பிடித்தம் செய்து, இந்திய வருமான வரித் துறைக்குச் செலுத்த வேண்டும். அதை நோக்கியா செலுத்தவில்லை. அந்தத் தொகை அபராதம், வட்டி என அதிகரித்து 21,153 கோடியாக உயர்ந்துள்ளது. நோட்டீஸ் அனுப்பியும் கட்டவில்லை என்பதால், டெல்லி உயர் நீதிமன்றத்தில் வருமான வரித் துறை வழக்குத் தொடர்ந்தது. அதைத் தொடர்ந்து நோக்கியாவின் சொத்துக்கள் முடக்கப்பட்டன. இது மத்திய அரசுடன் உள்ள வழக்கு.
தமிழக அரசுடன் மற்றொரு வழக்கு உள்ளது. புரிந்துணர்வு ஒப்பந்தப்படி, சென்னை நோக்கியாவில் உற்பத்திச் செய்யப்படும் செல்போன்களில் 50 சதவிகிதத்தை ஏற்றுமதி செய்ய வேண்டும். அப்படி ஏற்றுமதி செய்வதாகச் சொல்லித்தான் வரிச் சலுகைகளைப் பெற்றுவந்தது நோக்கியா. ஆனால், 80 சதவிகித செல்போன்கள் உள்நாட்டிலேயே விற்கப்பட்டிருப்பதாக சொன்ன தமிழக அரசு, இந்த வகையில் மாநில அரசுக்கு 2,400 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. நீதிமன்றம், 'மொத்த வரியின் 10 சதவிகிதமான 240 கோடியை வைப்பு நிதியாகச் செலுத்த வேண்டும்’ என இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. இந்தத் தொகையையும் செலுத்த முடியாது என இப்போது நோக்கியா தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
நோக்கியா மட்டுமல்ல... இந்திய அரசு பெருமைப்பட்டுக்கொள்ளும் பெரும்பாலான வெளிநாட்டு நிறுவனங்கள், கடைசியில் கடும் வரி ஏய்ப்பில்தான் ஈடுபடுகின்றன. வோடஃபோன் நிறுவனத்தின் 11,000 கோடி வரி ஏய்ப்பு பிரச்னை, நாடு தழுவிய அளவில் பேசப்பட்டது. ஷெல், கூகுள் ஆகியவை மீதும் வரி மோசடி சர்ச்சைகள் உள்ளன. 2005-06வது நிதி ஆண்டில் இந்தியாவில் செயல்பட்ட 1,915 பன்னாட்டு நிறுவனங்களில் 411 நிறுவனங்கள் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக நாடாளுமன்றத்திலேயே அறிவித்தார் அப்போதைய நிதித் துறை இணை அமைச்சர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம்.[/size]

krishnaamma- பண்பாளர்
- Posts : 955
Join date : 14/01/2014
Similar topics
» ராஜீவ் படுகொலை: தூக்குக் கயிற்றில் நிஜம்-ஜூனியர் விகடன்
» கார்ப்பரேட் சதுரங்க வேட்டை… சுற்றுலா கிளப்களின் பகீர் மோசடிகள்!
» இது ஏப்ரல் பூல்...அல்ல..! நிஜம்..! மொபைல்போன் ரீசார்ஜ் ஏறாததால்
» வனத்தில் இரவைப் பகலாக்கும் பகலவனின் மந்திரம்: சோலார் சிஸ்டத்தில் பூர்த்தியாகும் நிஜம்
» மரபணு மாற்றுப் பயிருக்கு அனுமதி அளித்து விவசாயத்துறையை கார்ப்பரேட் மயமாக்கும் பட்ஜெட்; வைகோ

Permissions in this forum:
You cannot reply to topics in this forum