Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)by வாகரைமைந்தன் Today at 6:21 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
12 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தப்பட்டு வரும் விண்டோஸ் Xp யை இனியும் பயன்படுத்தலாமா?
2 posters
Page 1 of 1
12 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தப்பட்டு வரும் விண்டோஸ் Xp யை இனியும் பயன்படுத்தலாமா?
கடந்த ஏப்ரல் மாதத்துடன் விண்டோஸ் எக்ஸ்பி ஒப்பரேட்டிங் சிஸ்டத்திற்கான மேம்படுத்தல்கள் மற்றும் உதவிகளை மைக்ரோசொப்ட் நிறுவனம் நிறுத்திவிட்டது. சுமார் 12 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தப்பட்டு வரும் விண்டோஸ் எக்ஸ்பிதான் மைக்ரோசொப்ட் நிறுவன வரலாற்றில் அதிக நாட்கள் பயன்படுத்தப்பட்ட ஒப்பரேட்டிங் சிஸ்டமாகும். இடையில் விண்டோஸ் விஸ்டா, விண்டோஸ் 7 தற்போது விண்டோஸ் 8 என புதிய தொழில்நுட்பங்களோடு ஒப்பரேட்டிங் சிஸ்டம் மென்பொருட்கள் வந்திருந்தாலும் அவை எதுவுமே விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்தை போல பயனருக்கு எளிதானதாக அமையவில்லை.
இன்றும் பெரும்பாலானோர் எக்ஸ்பி சிஸ்டத்தை விட்டு மாறுவதற்கு விருப்பமின்றியே இருக்கின்றனர். மைக்ரோசாப்ட் நிறுவனம் உதவிகள் வழங்குவதை நிறுத்திவிட்டதால் பிற மென்பொருள் நிறுவனங்களும் படிப்படியாக எக்ஸ்பிக்கான மென்பொருள் தயாரிப்புகளிலிருந்து வெளியேறிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதே பல நிறுவனங்கள் தங்களது புதிய பதிப்பு மென்பொருட்களை எக்ஸ்பி நிறுவிய கணினிகளில் பயன்படுத்த முடியாது என்று அறிவித்துள்ளன. இந்நிலை தொடர்ந்தால் பழைய பதிப்பு மென்பொருட்களைக் கொண்டு மட்டுமே விண்டோஸ் எக்ஸ்பியைத் தொடரலாம்.
இதுவும் கூட ஓரிரு ஆண்டுகளுக்கு மட்டுமே சாத்தியமாகும். அதன் பிறகு கண்டிப்பாக மாறவேண்டிய சூழல் தானாகவே உருவாகிவிடும்.தற்போது விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் மெட்ரோ இடைமுகப்பு எதிர்பார்த்த அளவு மக்களைக் கவரவில்லை. இதன் காரணமாக வடிவமைப்பை மாற்றி விண்டோஸ் 9 என்ற புதிய ஒப்பரேட்டிங் சிஸ்டத்தைக் கொண்டுவர மைக்ரோசாப்ட் முயற்சிப்பதாகவும் தகவல்கள் உலா வருகின்றன. எது எப்படியாயினும் விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்துபவர்கள் தற்போதுள்ள நிலையில் மேசைக் கணினி பயன்படுத்துபவராக இருந்தால் விண்டோஸ் 7 அல்லது 8க்கு மாறுவதற்கு மென்பொருளை வாங்கும் செலவுடன் கணினியில் ரம், நினைவகம், பிரவுசர், மதர் போர்ட் போன்ற ஒன்றிரண்டு வன்பொருட்களையாவது மாற்றவேண்டிய தேவை ஏற்படலாம்.
நீங்கள் பயன்படுத்துவது ஐந்து ஆண்டுகளுக்கு முந்தைய கணினியாக இருந்தால் முற்றிலும் புதிய கணினிக்கு மாறுவதைத் தவிர வேறு வழியில்லை. செலவு அதிகமாகும் என்பதாலேயே பலரும் எக்ஸ்பியிலிருந்து மாறும் நாளைத் தள்ளிப்போட்டு வருகின்றனர். நீங்கள் தொடர்ந்து எக்ஸ்பியைப் பயன்படுத்த விரும்பினாலும் தற்போதுள்ள பாதுகாப்பின்மையைப் பயன்படுத்தி ஹேக்கர்கள் மற்றும் வைரஸ்களின் தாக்குதல் அதிகரிக்கலாம் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக இணையத்தை பயன்படுத்துபவர்களுக்குத்தான் பிரச்சினை அதிகமாக ஏற்பட வாய்ப்புள்ளதெனவும், அவர்கள் கீழ்க்கண்ட வழிமுறைகளைப் பயன்படுத்தி இரண்டு ஆண்டுகளுக்கு தாக்குப்பிடிக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
உங்கள் கணினியில் விண்டோஸ் எக்ஸ்பியின் சேர்விஸ் பக் 3 (இதுதான் கடைசியாக வந்தது) கடைசியாக வந்த மேம்படுத்தல்களுடன் இருக்கவேண்டும். இன்டெர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரைப் பயன்படுத்தவேண்டாம். மால்வேர் தாக்குதலுக்கு அடிக்கடி அந்த பிரவுசர் உள்ளாவதால், அதற்கு பதிலாக ஃபயர்பாக்ஸ் அல்லது குரோம் பிரவுசரைப் பயன்படுத்தவும்.
ஜாவா மற்றும் அடோப் ஃபிளாஸ் மென்பொருட்களை அப்டேட் செய்து வைத்துக் கொள்ளவும். தரமான ஆண்ட்டி வைரஸ் மென்பொருளை வாங்கி நிறுவிக்கொள்ளவும். அதனையும் எப்போதும் அப்டேட்டாக இருக்கும்படி வைத்துக் கொள்ளவும். வாரம் ஒருமுறை முழுமையாக கணினியை ஸ்கான் செய்து பார்த்துக் கொள்ளவும். குரோம், ஃபயர் பாக்ஸ் போன்ற பிரவுசர்களைப் பயன்படுத்துவதாயினும் அவ்வப்போது அல்லது வாரம் ஒருமுறையாவது தற்காலிகமாக பதியப்படும் ரெம்பிரரி இண்டெர்நெட் ஃபைல்ஸை நீக்கிவிடவும். இதற்கு சி கிளீனர் போன்ற தரமான மென்பொருட்களைக் கணினியில் பதிந்து பயன்படுத்தலாம்.
விண்டோஸ் எக்ஸ்பியில் பதிந்து தரப்பட்டுள்ள விண்டோஸ் மூவி பிளேயர், பிக்சர் வியூவர், மைக்ரோசாப்ட் ஆபிஸ் போன்ற மைக்ரோசாப்ட் நிறுவன மென்பொருட்களைப் பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது. அதற்கு பதிலாக லிப்ரே ஆபிஸ், இர்பான் வியூ, விஎல்சி மீடியா பிளேயர் ஆகியவற்றைப் பயன்படுத்தலாம். இந்திய அரசு நிறுவனங்களில் உள்ள கணினிகளை விண்டோஸ் 8க்கு மாற்றவதற்கு ரூ.1190 கோடி ரூபாய் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. தற்போது ஒரு கணினிக்கு 75 டொலர் செலவாவது விண்டோஸ் 8க்கு மாறினால் 300 டொலராக செலவு உயரும். சீன அரசு விண்டோஸ் எக்ஸ்பியையே தொடர்ந்து பயன்படுத்த இருப்பதாக அறிவித்துள்ளது.
இதன் காரணமாக விண்டோஸ் 8-ஐ அரசு அலுவலகங்களில் பயன்படுத்த தடை விதித்துள்ளது. விண்டோஸ் எக்ஸ்பிக்கு தொடர்ந்து பயன்படுத்துவதற்கு ஏதுவாக பாதுகாப்பு மென்பொருள்களை உருவாக்கவும் அந்நாட்டு அரசு வல்லுனர்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. சீன அரசு அலுவலகக் கணினிகள் 44 சதவீதம் விண்டோஸ் எக்ஸ்பியையே பயன்படுத்துகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி :
Re: 12 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தப்பட்டு வரும் விண்டோஸ் Xp யை இனியும் பயன்படுத்தலாமா?
விண்டோஸ் XP க்கு 2019 ஏப்ரல் வரை பாதுகாப்பு வசதி உண்டு.
தவிர மூன்றாம் தரப்பு Firewall இணைக்கலாம்.
மென்பொருட்களை compatible முறையில் இணைக்கலாம்.
தவிர மூன்றாம் தரப்பு Firewall இணைக்கலாம்.
மென்பொருட்களை compatible முறையில் இணைக்கலாம்.
sakthy- நிர்வாக குழுவினர்
- Posts : 1938
Join date : 26/09/2010
Similar topics
» விண்டோஸ் 8 இயங்குதளத்துடன் வரும் நோக்கியா டேப்லெட்!
» சென்னை: தமிழகத்தில் ஆளும் தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் எவை என்ற பட்டியல் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. வரும் ஏப்ரல் மாதம் நடக்கவிருக்கும் 13 ம் தேதி தமிழக சட்டசபை தேர்தலுக்கான மனுத்தாக்கல் வரும் வரும் 19
» இறந்தவரின் ஏடிஎம் கார்டை பயன்படுத்தலாமா?
» விண்டோஸ் 7 லேப்டாப் tips
» விண்டோஸ் 8 இல் உள்ள முகப்புப் பக்கத்தை விண்டோஸ் 7 போல் மாற்ற.
» சென்னை: தமிழகத்தில் ஆளும் தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் எவை என்ற பட்டியல் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. வரும் ஏப்ரல் மாதம் நடக்கவிருக்கும் 13 ம் தேதி தமிழக சட்டசபை தேர்தலுக்கான மனுத்தாக்கல் வரும் வரும் 19
» இறந்தவரின் ஏடிஎம் கார்டை பயன்படுத்தலாமா?
» விண்டோஸ் 7 லேப்டாப் tips
» விண்டோஸ் 8 இல் உள்ள முகப்புப் பக்கத்தை விண்டோஸ் 7 போல் மாற்ற.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum