TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:18 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:07 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


இயற்கையை சீரழிக்கும் டி.ஆர்.பாலுவின் எரிசாராய ஆலை. இவர்தான் தஞ்சை மாவட்ட வேட்பாளர்.

Go down

இயற்கையை சீரழிக்கும் டி.ஆர்.பாலுவின் எரிசாராய ஆலை. இவர்தான் தஞ்சை மாவட்ட வேட்பாளர்.  Empty இயற்கையை சீரழிக்கும் டி.ஆர்.பாலுவின் எரிசாராய ஆலை. இவர்தான் தஞ்சை மாவட்ட வேட்பாளர்.

Post by ஜனனி Tue Mar 11, 2014 7:05 am

 

இயற்கையை சீரழிக்கும் டி.ஆர்.பாலுவின் எரிசாராய ஆலை. இவர்தான் தஞ்சை மாவட்ட வேட்பாளர். 


[You must be registered and logged in to see this image.]

விளைநிலத்தில் எரிசாராய ஆலை? 


நழுவும் அதிகாரிகள்... வேதனை விவசாயிகள்
''ஆலைகளிலிருந்து வெளியாகும் சூழலுக்குக் கேடான வாயுக்களை குறைக்க வேண்டும். சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்கும் விஷயங்களுக்கு தடைபோட வேண்டும். ஏரி, குளம், ஆறு என்று பாசன நீர்நிலைகளை மாசுபடுத்துவோர் யாராக இருந்தாலும் சட்டம் பாயும்"

-ஏதாவது சுற்றுச்சூழல் சார்பான கூட்டமென்றால்... இப்படி வாய் கிழிய ஒரு முழக்கம்!
''எங்கள் ஆட்சியில்தான் தொழிற்புரட்சி நடத்தப்பட்டிருக்கிறது. இங்கே கார் தொழிற்சாலை, சாராயத் தொழிற்சாலை, கண்ணாடித் தொழிற்சாலை என்று அத்தனை தொழிற்சாலைகளையும் கொண்டு வந்தது நாங்கள்தான். இது பொற்கால ஆட்சி"
-ஏதாவது தொழிற்சாலை திறப்பு விழா என்றால், அங்கே இப்படியரு வாய்ஜம்பம்!
இப்படிப்பட்ட இரட்டை நாக்கு அரசியல்வாதிகள் மாறி மாறி ஆட்சிக்கு வந்து கொண்டேயிருக்க... காற்று, நீர், நிலம், ஆகாயம் என்று அத்தனையும் தொடர்ந்து மாசுபடுத்தப்பட... கிராமப்புற மக்களின் நிரந்தர வாழ்வாதாரமான விவசாயம் கேள்விக்கு உள்ளாக்கப்படுவது வாடிக்கையாகி விட்டது!
''அந்த வரிசையில் எங்க ஊரையும் சேர்க்கறதுக்கு அதிகாரிங்க... அரசியல்வாதிங்க எல்லாரும் கங்கணம் கட்டிக்கிட்டு நிக்கறாங்க..." என்று புலம்புகிறார்கள் தஞ்சாவூர் மாவட்டம், வடசேரி மற்றும் அதைச் சுற்றியுள்ள பல கிராமங்களைச் சேர்ந்த மண்ணின் மைந்தர்கள்.
பறிபோன அமைதி!

வேளாண்மைக்கு ஏற்ற வளமான பூமி ஊரைச் சுற்றி ஓடும் ஒன்றிரண்டு ஆறுகள்; அதன் காரணமாக பெருகி நிற்கும் நிலத்தடி நீர்; கடுமையான உழைப்பைக் கொடுக்கும் விவசாயிகள்; வஞ்சனை இல்லாமல் விளைந்து கிடக்கும் நெல், தென்னை, கடலை, உளுந்து, மரவள்ளி உள்ளிட்ட பல பயிர்கள் இதுதான் வடசேரி மற்றும் சுற்றுவட்டார பூமியின் அடையாளம். இதைத் தவிர, ஆன்மிக முயற்சிகள்... சுற்றுச்சூழலைக் காப்பாற்றும் முயற்சிகள் என உருப்படியான விஷயங்களில் மக்கள் கவனத்தைச் செலுத்தவே, 'அமைதிப் பூங்கா' என்பதாகவே இருந்தது வடசேரி. ஆனால், 'இங்கே எரிசாராயத் தொழிற்சாலை அமைக்கப் போகிறோம்' என்றொரு அறிவிப்பு வந்த நிமிடத்திலிருந்து போராட்ட பூமியாக மாறிவிட்டது.

வடசேரியில் ஏற்கெனவே அமைந்துள்ள 'கிங்க்ஸ் இந்தியா கெமிக்கல் கார்ப்பரேஷன்’ என்ற நிறுவனம், தற்போது புதிதாக எரிசாராய ஆலையைத் துவக்குவதற்கான ஆரம்பகட்ட வேலைகளில் இறங்கியிருக்கிறது.
இதையடுத்து, ''இந்த ஆலை, ஊருக்கே உலை வைத்துவிடும். தி.மு.க-வைச் சேர்ந்தவரான முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர். பாலுவின் குடும்ப உறுப்பினர்கள் இந்தத் தொழிற்சாலையில் பங்குதாரர்களாக இருப்பதாக கூறப்படுவதால், முறைப்படி ஆய்வுகள் எதையும் மேற்கொள்ளாமலே தடை இல்லாச் சான்று வழங்கிவிட்டார்கள் அதிகாரிகள்" என குற்றம்சாட்டுகிறார்கள் மக்கள்.

மண்ணு மலடாப்போச்சு..!

வடசேரியைச் சேர்ந்த ராஜேந்திரன், ''இப்ப புதுசா வரப்போற ஆலையை விடுங்க. ஏற்கெனவே அவங்க வெச்சுருக்கற கிங் கெமிக்கல்ஸ் ஆலையால ஏகப்பட்ட பிரச்னை. இதோ... இந்த ஃபோட்டோவைப் பாருங்க.. கடலை, மரவள்ளி எல்லாம் கருகிக்கிடக்குறத. இது எங்க நிலத்துல எடுத்த போட்டோதான். ஆலைக்கு பக்கத்துலதான் எங்க குடும்பத்துக்குச் சொந்தமான நிலம் இருந்துச்சு. ஆலைக்கழிவு எங்க நிலத்துல புகுந்ததால எதுவுமே விளையல. 3 ஏக்கர்ல கடுமையான பாதிப்பு. மாசுக்கட்டுப்பாடு வாரியத்துல பலமுறை புகார் தெரிவிச்சும், எந்த நடவடிக்கையுமே எடுக்கல. குட்டையை வெட்டி, அதுலதான் கழிவுநீரையெல்லாம் தேக்கி வச்சிருந்தாங்க. மழைக் காலத்துல குட்டையோட வரப்பு உடைஞ்சு, எங்க நிலத்துக்குள்ள கழிவுநீர் புகுந்துடுச்சு. இனிமே இந்த நிலத்தை வெச்சுக்கிட்டு நம்மளால காலம் தள்ள முடியாதுனு ஆலைக்காரங்ககிட்டயே வித்துட்டேன்" என்று வேதனைப் பட்டவர்,

''குடியிருப்புப் பகுதியிலிருந்து 300 அடி தூரத்துக்குள்ள தொழிற்சாலைக்கு அனுமதி கொடுக்கக் கூடாது. இதோ பாருங்க பக்கதுலேயே ஏகப்பட்ட வீடுகள் இருக்குறத" என்று சுட்டிக்காட்டிய இடத்தில வரிசையாக வீடுகள்.
பாலைவனமாக மாறும்...!

மக்கள் நலச்சங்கத்தின் தலைவர் சுவாமிநாதன் மற்றும் சக்திவேல், ''பழைய ஆலையோட பாதிப்பே ரொம்ப அதிகம். இதுல புதுசா எரிசாராய ஆலை வேற. ரெண்டு ரசாயன ஆலைகள் இயங்கினா என்னாகும்னு நினைச்சுப் பாக்கவே பயமா இருக்கு. அடுத்தாப்புல பாட்டிலிங் தொழிற்சாலை, நொதிப்பாலைனு தொடங்குவாங்க. இதையே காரணமா காட்டி, மத்தவங்களும் தொழிற்சாலை தொடங்குவாங்க. இந்தப் பகுதியே தொழிற்பேட்டையா மாறும். வடசேரி மட்டுமில்லாம சுத்தியுள்ள கிராமங்களும் படிப்படியா பாலைவனமா மாறிடும்’’ என்று அபாயமணி அடித்தார்.
நீராதாரம் நிச்சயம் பாதிக்கப்படும்!

வடசேரியைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் கவுதமன், ''தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் மிக அதிகமான பாதிப்புள்ள கழிவுகளை வெளிப்படுத்தும் தொழிற்சாலைகளுக்கு அதிசிவப்பு அடையாளம் கொடுத்திருக்கிறது. இந்தப் பட்டியலின் முதல் இடத்தில் எரிசாராய ஆலை என அழைக்கப்படும் 'டிஸ்டில்லரிஸ்' தொழிற்சாலை உள்ளது. மண், காற்று, நீர் ஆகியவற்றை அளவுக்கு அதிகமாக மாசுப்படுத்தக் கூடியவை இத்தகைய ஆலைகள். இதுபோன்ற ஆலைகள், முக்கிய நீர் ஆதாரங்கள் அமைந்துள்ள இடத்திலிருந்து 5 கிலோ மீட்டருக்கு உட்பட்ட பகுதியில் தொடங்கக் கூடாது என அரசாணையே உள்ளது.
ஆனால், இந்த ஆலையிலிருந்து அரை கிலோ மீட்டர் தூரத்துக்குள்ளேயே காலகம் வடிகால், ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் கண்ணன் ஆறு ஆகியவை ஓடுகின்றன. இதன் மூலம் வடசேரியைச் சுற்றியுள்ள இருபத்தைந்துக்கும் மேற்பட்ட கிராமங்களுக்குப் பாசன வசதி கிடைக்கிறது. எரிசாராய ஆலை தொடங்கப்பட்டால், இந்த நீர் ஆதாரத்துக்கு மிக கடுமையான பாதிப்புகள் ஏற்படும்.

ஒரு போர்வெல்லுக்கும் இன்னொரு போர்வெல்லுக்கும் குறைந்தபட்சம் 150 மீட்டர் தூரம் இருக்க வேண்டும் என்பது விதி. மண்ணின் தன்மையைப் பொறுத்து இந்த தூரம் இன்னும் அதிகமாகும் (150 முதல் 600 மீட்டர்). புதிதாக போர்வெல் போடும்போது இந்த விதிமுறையின் அடிப்படையில்தான் அனுமதி கொடுக்க வேண்டும். ஆனால், விவசாயிகள் போட்டுள்ள போர்வெல்களிலிருந்து 100 மீட்டர் தூரத்துக்குட்பட்ட இடத்தில்தான் ஆலைக்காக போர்வெல் போடப்பட்டுள்ளது.
தினமும் 18 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்க அனுமதி வாங்கியுள்ளதாகச் சொல்கிறார்கள். தினமும் இவ்வளவு தண்ணீரை ஆலை உறிஞ்சிவிட்டால், அக்கம் பக்கத்து விவசாயிகளுக்கு எப்படி நிலத்தடி நீர் கிடைக்கும்?’’ என்று கேள்விகளாக எழுப்பினார்.
மக்கள்தான் மாத்தி சொல்றாங்க...!
குற்றச்சாட்டுகள் குறித்து ஆலைத்தரப்பின் பதிலைத் தேடிச் சென்றபோது, அதன் நிர்வாக அதிகாரியான செல்வம் நம்மிடம், ''நிறுவன உரிமையாளர்கள் சார்பாதான் உங்ககிட்ட பேசுறேன். டி.ஆர். பாலுவுக்கும் இந்த நிறுவனத்துக்கும் எந்தச் சம்பந்தமும் இல்ல. ஆலை அமைக்கற விஷயத்துல எந்த அதிகார துஷ்பிரயோகமும் நடக்கல. ஊர் மக்களில் சிலர்தான் தேவையில்லாம வதந்தி பரப்புறாங்க. இதுல அரசியல்வாதிகளோட தூண்டுதலும் இருக்கு.
தினமும் 18 லட்சம் லிட்டர் தண்ணி எடுக்கறதுக்கு நீர்வளத் துறை அனுமதி கொடுத்திருக்கு. வெறும் நாலு போர்வெல்தான் இருக்கு. ஆனா, 7 போர்வெல்னு பொய் செய்தி பரப்பறாங்க. எரிசாரய ஆலையிலிருந்து வெளியாகப்போற கழிவை எரிச்சி, அப்படியே ஆவியாக்கிடுவோம். 'இன்சினரேஷன் டெக்னாலஜி' (Incineration Technology) என்ற நவீன சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப் போறோம். 60 மீட்டர் உயரத்துக்கு குழாய் அமைச்சி, ஆவியை வெளியேத்தப் போறோம். அதனால கழிவு வெளியாக வாய்ப்பே இல்லை’’ என்றார்.

ஆலையின் உதவி மேலாளர் என தன்னை அறிமுகம் செய்து கொண்ட அம்பிகாபதி ''அசிட்டிக் ஆசிட் தயாரிக்கத்தான் பழைய ஆலை துவங்கப்பட்டது. 92-ம் வருஷத்துல இருந்து, 96 வரைக்கும் தொடர்ச்சியா ஆலை இயங்குச்சு. அதுக்குப்பிறகு மூலப்பொருள் (எத்தில் ஆல்கஹால்) போதிய அளவு கிடைக்கல. விலையும் அதிகரிச்சதால கட்டுப்படியாகல. அதனால ஆலையை இயக்க முடியல. இப்ப நாங்களே எத்தில் ஆல்கஹால் உற்பத்தி செஞ்சு, பழைய ஆலையையும் தொடர்ந்து இயக்கப் போறோம்.

ஏற்கெனவே உள்ள இந்த ஆலைக்காக முன்னாடியே சுத்திகரிப்பு நிலையம் இருக்கு. கழிவுநீரை, மென்னீராக்கிதான் வெளியேத்துறோம்’’ என விளக்கமளித்தார்.
''தி.மு.க-வைச் சேர்ந்தவங்களும் எதிர்ப்புதான்"
''வடசேரி மக்களில் ஒரு தரப்பினர் மட்டும்தான் எரிசாராய ஆலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். மற்ற கிராமங்களில் எதிர்ப்பு இல்லை. எனவே, இதில் அரசியல் உள்நோக்கம் இருக்கிறது" என்ற ஆலை நிர்வாகத் தரப்பில் ஒரு குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டது. அதில் உள்ள உண்மையைத் தெரிந்து கொள்வதற்காக வடசேரியைச் சுற்றியுள்ள நெம்மேலி, கீழக்குறிச்சி, அண்டமி, பரவாக்கோட்டை, தளிக்கோட்டை, உள்ளிக்கோட்டை, மகாதேவப்பட்டிணம், மண்டலக் கோட்டை, மோகூர், சிராங்குடி உள்ளிட்ட பல கிராமங்களுக்கும் நேரடியாகச் சென்று மக்களைச் சந்தித்தோம். பெரும்பாலும் எரிசாராய ஆலைக்கு எதிரான அலையே வீசிக் கொண்டிருந்தது!
தளிக்கோட்டையைச் சேர்ந்த அன்பழகன் "நான் தி.மு.க-வோட முன்னாள் கிளைச்செயலாளர். கட்சி வேற... வாழ்க்கை வேற. எரிசாராய ஆலை வந்தா நாங்க கடுமையா பாதிக்கப்படுவோம். கிட்டத்தட்ட 20 ஆயிரம் ஏக்கர் விளைநிலம் பாதிக்கப்படும். அதனால், ஒட்டுமொத்த கிராமங்களைச் சேர்ந்த மக்களில் பெரும்பாலானவர்கள் போராட்டத்துக்கு ஆதரவாகத்தான் இருக்கோம். இந்தப் பகுதியில உள்ள எல்லா கிராமங்களுமே தி.மு.க. கோட்டைதான். ஆனா, கட்சிப் பாகுபாடு இல்லாம எல்லாருமே போராட்டக் களத்துலதான் இருக்கோம். கண்டிப்பா, தமிழக முதல்வர் எங்கள காப்பாத்துவார்’’ என நம்பிக்கையோடு சொன்னார்.

நம்பிக்கை வீண்போகாமல் இருந்தால் சரி!

அதிகாரிகள் சொல்வது என்ன?

விதிகளையெல்லாம் காற்றில் பறக்கவிட்டு, அதிகாரிகள் தரப்பு அலட்சியமாக நடந்துகொண்டிருப்பதாக மக்கள் குற்றம்சாட்டவே... அதிகாரிகளைச் சந்தித்தோம். ஒவ்வொருவரின் பதிலும் 'நச்' ரகம்தான். நீங்களே படித்துப் புரிந்துகொள்ளுங்கள்!
தஞ்சாவூர் மாவட்ட வேளாண் இணை இயக்குநர் சேகர் ‘‘வடசேரியில தோட்டக்கலைப் பயிர்கள்தான் இருக்கின்றன. அதனால் வேளாண் துறை ஆய்வு செய்ய முடியாது."
மாவட்ட தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் லோகநாதன் ‘‘தோட்டக்கலைப் பயிர்களே வடசேரியில இல்லை. அதனால் எங்களுக்கு சம்பந்தம் இல்லை."
நிலநீர் கோட்ட செயற்பொறியாளர் சண்முகம் "ஆலையில் இருந்து 175 மீட்டர் தூரம் வரை வேற எந்த ஒரு விவசாய போர்வெல்லும் இல்லை. அதனால்தான் அனுமதி கொடுத்தோம்."
மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர் மதிவாணன் "ஆலையில் இருந்து 300 அடி தூரம் வரை வீடுகள் இருக்கக் கூடாது என்பதுதான் விதி. எந்த வீடும் இல்லை என்பதால் தடைஇல்லா சான்று கொடுத்தோம்."
மாவட்ட ஆட்சியர் சண்முகம் "வடசேரி மக்கள் கொடுத்த மனுக்களை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு அனுப்பிவிட்டேன். பொதுமக்களின் கருத்துக்களை கேட்ட பிறகு, எரிசாராய ஆலைக்கு அனுமதி கொடுப்பார்கள்."

படம் : கிங் கெமிக்கல்ஸ் தொடர்பான கருத்துக் கேட்பு கூட்டத்தில் எதிர்த்துப் பேசியவரை தாக்கும் காவல்துறையினர்.

ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
»  நம் டெலடாவை பாலைவனமாக்க நமது பகுதியில் வேட்பாளராக நிற்கிறார்.தஞ்சை நாடாளுமன்ற வேட்பாளர் திரு T.R.பாலு அவர்களிம் அதிகாரபூர்வ பக்கத்தில்( Official Site)ல் இருந்து எடுக்கப்பட்டது.
»  இயற்கையை காப்போம் இயற்கையை ரசிப்போம்
» தஞ்சை : டாஸ்மாக் கடைகளில் பீர் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளதால், குடிமகன்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். தஞ்சை மாவட்டத்தில் 230 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இதில் தஞ்சை நகரில் மட்டும் 72 கடைகள் உள்ளன. கடந்த 10 நாட்களாக இக்கடைகளில் பீர் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது. இ
»  பாஜக வேட்பாளர் வாபஸ் வாங்கியதால் அதிமுக வேட்பாளர் போட்டியின்றி மேயராக தேர்வாகிறார்
» மதுரை மாவட்ட ஆட்சியர் திரு சகாயம் அவர்கள் மாவட்ட மக்களின் குறைகள், புகார்களை களையும்பொருட்டு தொடுவானம் என்ற திட்டத்தை உருவாக்கி செயல்படுத்தி வருகிறார்.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum