TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 7:01 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Today at 6:57 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 5:06 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:03 pm

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» தினம் ஒரு திருக்குறள்- படியுங்கள்
by வாகரைமைந்தன் Sun Aug 07, 2022 3:08 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Tue Aug 02, 2022 12:07 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Sat Jul 16, 2022 1:01 pm

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm

» கண்ணகி என்னும் வில்லுப்பாட்டு நிகழ்ச்சி
by veelratna Wed Oct 20, 2021 12:51 pm

» கொரோனா பாடல் அண்மையில் வெளியாகிய
by veelratna Mon Oct 18, 2021 12:44 pm

» மாவிடடபுரம் கந்தசுவாமி கோவிலில் இடம் பெற்ற தேர்த்திருவிழாவின் பழைய காணொளி ஒன்று
by veelratna Mon Oct 18, 2021 11:54 am

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில்.
by veelratna Fri Oct 15, 2021 1:48 pm

» தலைமுறை இடைவெளி
by veelratna Fri Oct 15, 2021 1:44 pm

» தமிழால் பூசை நடக்கும் ஒரேகோவில்
by veelratna Tue Oct 12, 2021 10:58 am

» அண்ணை ரெயிட் கே எஸ் பாலச்சந்தர்
by veelratna Tue Oct 12, 2021 10:52 am

» ஓடலிராசையா KS Balachandran
by veelratna Mon Oct 11, 2021 10:21 am

» சுகுமாரி கதை தேடி நான் உயிரை கொடுத்ததோ
by veelratna Sun Oct 10, 2021 8:43 pm

» கலாவிநோதன் சின்னமணிஅவர்களின் பகுதி ;1
by veelratna Fri Oct 08, 2021 9:26 am

» தேசிய தலைவர் பிரபாகரன் ...................
by வாகரைமைந்தன் Fri Oct 01, 2021 11:53 am


புதுசு புதுசா உணவில் இப்படியும் கலப்படம்

Go down

HOT புதுசு புதுசா உணவில் இப்படியும் கலப்படம்

Post by logu Thu May 06, 2010 7:25 am

மே 06,2010,00:00 IST








புதுசு புதுசா உணவில் இப்படியும் கலப்படம் Tblfpnnews_4645937682







மதுரை
:உணவில் எப்படியெல்லாம் கலப்படம் செய்யலாம் என மதுரையில் சிலர் 'ரூம்
போட்டு யோசிப்பார்கள்' போல் இருக்கிறது. விலைவாசி உயர்வால், செலவைக்
குறைப்பதற்காக விதம் வித மாய் கலப்பட உத்திகளை மதுரையில்
கண்டுபிடித்துள்ளனர். முன்பெல்லாம் அரிசியில் கல்லை கலப்பது, பாலில்
தண்ணீரை கலப்பது, ஆட்டிறைச்சியில் மாட்டிறைச்சியை கலப்பது தான் அதிகபட்ச
கலப்படமாக இருந்தது. இப்போது நினைத்து பார்க்க முடியாத வகையில்
கலப்படங்கள் நடக்கின்றன.

அவற்றின் பட்டியல் இதோ:
* பாலில் ஜவ்வரிசியை துணியில் கட்டி போட்டு விடுவர். இப்போது கெட்டியான பால் ரெடி.
* டீத்தூளில் முந்திரி தோல், புளியங்கொட்டை தோல், மஞ்சணத்தி இலைகளை கலக்கின்றனர். திடமான டீ தயார்.
*
பழைய சோற்றை துணியில் கட்டி, வடித்துவிட்டு, மிக்சியில் போட்டு அடித்து,
அதை வெண்ணெயுடன் கலக்கின்றனர். பார்க்க வித்தியாசம் தெரியாது. உருக்கினால்
நெய் வராத வெண்ணெய் இது. பட்டர் பன் தயாரிக்க இது பயன்படுகிறது.
*நெய்யில் வனஸ்பதியை கலந்து, 'சுத்தமான பசு நெய்' என்று கூறி, விற்றுவிடுவர்.
*
புதிதாக தயாரித்த புரோட்டாவுடன் பழைய புரோட்டாவை கலந்து விடுவர். 'கொத்து
புரோட்டா' கேட்டால், பழைய புரோட்டாவில் குருமா, முட்டையை ஊற்றி,
வெங்காயம், தக்காளியை வதக்கி, 'மணக்க, மணக்க' தந்துவிடுவர். நாக்கை
சப்புக்கொட்டியபடி, நாம் சாப்பிட வேண்டியது தான்.
* மீன்
மார்க்கெட்டுகளில் ஓரமாக சேரும் கழிவு மீன்களை, குறைந்த விலைக்கு வாங்கி
வந்து, மாலையில் கடை போட்டு, 'செக்கச் செவேல்' என மசாலா தடவி, 'சுடச்சுட
பொறித்த மீன்' என்று கூறி, வாசம் மூக்கைத் துளைக்க, ஊரைக் கூட்டி விற்று
விடுவர். பெரும்பாலும் 'டாஸ்மாக்' கடைகளுக்கு அருகில் இவர்கள் கடை
விரிக்கின்றனர்.
* ரோட்டோரத்தில் மலிவு விலையில், அண்டாக்களில் ஆவி
பறக்க, 'கம, கம' மணத்தையும் பரப்பியபடி, பார்ப்பவர்களின் பசியை தூண்டும்
பிரியாணியில், நெய் அல்லது ரீபைண்ட் ஆயிலுக்குப் பதில் மாட்டு கொழுப்பு
எண் ணெய்யை கலக்கின்றனர். இதைத் தொடர்ந்து சாப்பிட் டால், இதய நோயை நாமே
வலிய இழுத்து வருவதற்குச் சமம்.
* கோடை காலத்தில், கலர் கலராய், ஜூஸ்
என்ற பெயரில் குளிர்ச்சியாக விற்கப்படும் திரவங்களில் சர்க்கரைக்குப்
பதில், 'சாக்கரின்' கலக்கின்றனர். இதனால் வயிற்று வலி, வயிற்றுப் போக்கு
உறுதி. பெரும்பாலும் வைகை கரையோரங்களில் இக்கடைகளை காணலாம்.
*
கறிக்கோழியின் கழிவு, நோயால் இறந்த கோழி... இவற்றை'ஓசி'யில் வாங்கி வந்து,
கவர்ச்சியான கலரில் மசால் தடவி, 'சிக்கன் 65' என்ற பெயரில், 100 கிராம் 12
ரூபாய்க்கு விற்கின்றனர். இதில் நோயை பரப்பும் அனைத்து கிருமிகளும் 'ஆஜர்'
ஆகியிருக்கும்.
* இட்லி மாவில் பழைய சோற்றை ஆட்டி கலந்து, விற்கின்றனர். மல்லிகைப்பூ இட்லிக்கு சூப்பர் மாவு ரோட்டோரம் ரெடி.
*
சில ஓட்டல்களில் அரிசி உலை வைக்கும்போதே சுண்ணாம்பை துணியில் கட்டி,
அரிசியுடன் சேர்த்து கொதிக்க வைப்பர். இதில் வெந்த சோறு, 'விரைப்பாக'
இருக்கும். அதிகம் சாப்பிட முடியாது. ஓட்டல்காரர்களுக்கு அரிசி செலவு
குறையும்.இப்படி நம்மூரில் புதுப்புது உருவில் புதுப்புது கலப்படம்
நடக்கிறது.பொதுமக்களே உஷார்: நமக்கு தெரிந்தவை இவை. தெரியாமல் இன்னமும்
நிறைய கலப்படங்கள் நடக்கின்றன. இனியும் புதிய உத்திகள்
கண்டுபிடிக்கப்படலாம். எனவே, 'அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை' என்று
குறை கூறிக்கொண்டு இருக்காமல், பொதுமக்களும் கவனமாக இருக்க வேண்டும்.
எங்கும் சாப்பிடும் முன், அந்த கடையின் சுகாதாரம் பற்றி கொஞ்சம் தெரிந்து
கொள்வது நல்லது.

கலப்படத்தை கண்டறிய : மதுரை
கீழமாசி வீதியில் உள்ள தமிழ்நாடு உணவுப் பொருள் வியாபாரிகள் சங்கத்தில்,
1978 முதல் உணவுப் பொருட்கள் தர பரிசோதனை மையம் செயல்படுகிறது. இங்கு
அனைத்து வகை உணவுப் பொருட்களையும் ஆய்வு செய்து சான்றிதழ் அளிக்கின்றனர்.
மத்திய சிறை மற்றும் ரயில்வே கேட்டரிங்கிற்கு கொள்முதல் செய்யப்படும்
உணவுப் பொருட்களை இங்கு ஆய்வு செய்கின்றனர். யார் வேண்டுமானாலும் உணவுப்
பொருட்களை ஆய்வுக்கு கொடுக்கலாம். ஆய்வு முடிவுகள் 24 முதல் 48 மணி
நேரத்திற்குள் வழங்கப்படும். குறைந்த அளவாக 50 முதல் 250 ரூபாய் கட்டணம்
வசூலிக்கப்படுகிறது என இதன் சங்க கவுரவச் செயலாளர் சுபாஷ் சந்திரபோஸ்
தெரிவித்தார். விபரங்களுக்கு 0452-232 2188ல் தொடர்பு கொள்ளலாம்.
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

Back to top

- Similar topics
» ஆட்கொல்லி வைரஸ் கலப்படம்! சீன ஆராய்ச்சியாளர் மீது கண்டனம்!
» மின்னல் வேக Firefox 4.0b1 புதுசு கண்ணா புதுசு!
» செய்தி என்னடா, சேதி என்னடா? செய்தியும் அதன் தாக்கமும்.இந்த நவீன உலகில் இப்படியும் நடக்கலாம். இப்படியும் பேசலாம்.யார் கண்டார்கள்..நாங்களும் எழுதுவோமில்லே.
» ஜப்பானில் புதுசா ஒரு ரோபோட் விட்டுருக்காங்க ... அதோட பெயர் "Tomatan"
» எச்சரிக்கை! வலி நிவாரணி மாத்திரைகளில் கலப்படம்!!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum