TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


டீன் ஏஜ் பெண் குழந்தைகளை சமாளிப்பது எப்படி?

2 posters

Go down

டீன் ஏஜ் பெண் குழந்தைகளை சமாளிப்பது எப்படி? Empty டீன் ஏஜ் பெண் குழந்தைகளை சமாளிப்பது எப்படி?

Post by mmani Thu Dec 26, 2013 8:00 am

டீன் ஏஜ் பெண் குழந்தைகளை சமாளிப்பது எப்படி? 56788b07-9f8a-4db1-9149-4c8f29147261_S_secvpf



‘‘என் பொண்ணு டீன் ஏஜ்ல அடியெடுத்து வச்சாலும் வச்சா... ஒவ்வொரு நாளும் எனக்கு அவ சிபிஐ விசாரணை நடத்துற மாதிரி இருக்கு. அவ கேட்கற கேள்விகளும், அவளோட நடவடிக்கைகளும், ‘நான் நல்ல அம்மாதானா’ன்னு என் மேலேயே எனக்கு சந்தேதகத்தை உண்டாக்குது’’ எனப் புலம்புகிறார் இந்த கால அம்மாக்கள். 

டீன் ஏஜ் மகள் வைத்திருக்கிற பெரும்பாலான அம்மாக்களின் நிலை இதுதான். எப்போதும் எதற்கெடுத்தாலும் மகளுடன் மல்லுக்கட்டிக் கொண்டு நிற்கிற அம்மாக்கள் ஏராளம். உங்கள் மகள், சிறு வயதில் எல்லாவற்றையும் உங்களுடன் பகிர்ந்திருப்பாள். 

அவள் வயதுப் பிள்ளைகளுடன் சண்டை போட்டுக் கொண்டு உடனே உங்களுடன் வந்து அதைப் பற்றி அழுது புலம்பித் தீர்த்திருப்பாள். ஆனால், வளர்ந்த பின், எல்லாமே ரகசியம்தான்! “வெளியே போயிட்டு வீட்டுக்கு வந்ததும் நேரா அவ ரூமுக்கு போய் கதவை மூடிக்கிறா. 

நான் எதைக் கேட்டாலும், ‘எப்போ பாத்தாலும் ஏதாவது கேள்வி கேட்டுட்டே இருப்பியா’ன்னு கத்திட்டு போறா. எப்போதும் ‘உம்’முன்னு மூஞ்சியைத் தூக்கி வச்சுக்கிறா’’ என்று புலம்பினார் இன்னொரு தாய். அம்மாக்களுக்கும் ‘டீன் ஏஜ்’ பெண்களுக்கும் இடையே உண்டாகும் இந்த விரிசலுக்கு பல காரணங்கள் உண்டு. 

அந்தக் காரணங்களைப் புரிந்து கொண்டு, அவர்களைக் கைப்பிடித்து சரியான பாதையைக் காட்ட வேண்டிய பொறுப்பு உங்களுடையதே! டீன் ஏஜில் அந்த வயதுக்கே உரிய குழப்பங்கள், நம்பிக்கைகள், ‘சரியா? தவறா’ என்கிற கேள்விகள், தயக்கங்கள் என மன அழுத்தத்தை உண்டாக்கும் மனநிலையில் இருப்பார்கள் பெண் குழந்தைகள். 

ஆனால், பல அம்மாக்கள் அதைப் புரிந்து கொள்வதில்லை. எப்போதும் புத்தகமும் கையுமாக, படிப்பையும் எதிர்காலத்தையும் பற்றிய சிந்தனையில் இருக்கும் பெண் பிள்ளைகளுக்கு மட்டும்தான் ஸ்ட்ரெஸ் வரும் என்றில்லை. 

எல்லா பெண் குழந்தைகளுக்கும் சுரப்பிகள் சுரக்கும் ரசாயனங்களின் தாக்கத்தினாலும், அவர்களின் சுற்றுச்சூழலினால் விளையும் பயங்களினாலும் சாதாரண விஷயங்கள் கூட அச்சுறுத்தலை உண்டாக்கி அவர்களுடைய எண்ணங்களிலும் நடவடிக்கைகளிலும் மாற்றத்தை உண்டாக்கும். 

இத்தருணத்தில் முக்கியமாக பள்ளியிலிருந்தும் பெற்றோர்களிடமிருந்தும் வரும் எதிர்பார்ப்புகளும், வற்புறுத்தல்களும் அவர்களை அழுத்தும்போது அவர்களால் தாக்குப் பிடிக்க முடிவதில்லை. பள்ளிக்குச் செல்லும் பெண் குழந்தைகளுக்கு பல சவால்கள் இன்று உண்டு. புதிய புதிய தேவைகள்... 

புதுப்புது சவால்கள் என பள்ளி இறுதியை நோக்கி நகரும் பிள்ளைகளின் உலகத்தில் தினம் ஒரு அனுபவம். பெற்றோர்களின் எதிர்பார்ப்புகள், பள்ளியின் தேவைகள், நண்பர்களின் தாக்கம், எதிர்கால சிந்தனை என பல நிலைகளில் இவர்கள் சிக்கித் தவிக்கிறார்கள். 

இந்த அழுத்த நிலையின் காரணமாக இப்பெண்கள் ‘மூடி’யாக, எரிச்சலுடன், கோபமாக, யாரிடமும் பேசாத அமைதியாக, அதீத களைப்பாக, வலிகளை உணர்வதாக, உடன் பிறந்தவர்களுடன் சண்டை போட்டுக் கொண்டு, செல்போனும் கையுமாக, ஹோம்ஒர்க் செய்வதிலிருந்து தப்பித்தவாறு, ஒதுங்கியவாறு நடந்து கொள்ளலாம். 

பதின்ம வயதுப் பெண்கள் உடலளவில் வளர்ந்து விட்டாலும் மனதளவில் குழந்தைகள்தான். இந்த குழப்பமான பருவத்தில் உங்கள் ஆதரவு மிக அதிகமாக அவர்களுக்குத் தேவை. தன்னுடைய மன அழுத்தத்திலிருந்து விடுபட அவள் தன் நண்பர்களுடன் அதிக நேரம் உரையாடலில் செலவழிக்கலாம். 

இது பெற்றோரால் அலட்சியம், திமிர், அன்பற்ற நிலை என பலவிதமாக தப்பர்த்தம் செய்து கொள்ளப்படுகிறது. தங்கள் மேல் அன்பு குறைந்து விட்டது போன்றும், தங்களை விட்டு நண்பர்களே கதியென குழந்தை பிரிந்து போய் விட்டது போன்றும் உணர்வார்கள். 

இதனால் அம்மாக்கள் பிள்ளையை நச்சரிப்பார்கள். பிள்ளைகளும் இதற்கு பதிலடி கொடுக்க... அங்கே ஒரு நச்சு வட்டம் உருவாகி விடுகிறது. நம்பிக்கையும், நல்ல பேச்சு வார்த்தையும்தான் இந்தச் சூழ்நிலையில் உங்கள் மகளைத் தேற்றக்கூடிய விஷயங்கள்.

மகளின் ஒவ்வொரு கட்ட வளர்ச்சியையும் நடவடிக்கையையும் குறுக்கு விசாரணை செய்கிற வக்கீல் மாதிரிப் பார்க்காமல், பாசிட்டிவாக பார்க்கப் பழகுங்கள். அவளின் குழப்பங்களையும் கஷ்டங்களையும் புரிந்து, உணர்ந்து அவளுக்கு ஆறுதலும் நம்பிக்கையும் தருகிற வகையில் நடந்து கொள்ளுங்கள். 

இந்த சில வருடங்களை நீங்கள் சரியாகக் கையாண்டு விட்டால், பிறகு உங்கள் அம்மா-மகள் உறவில் சிக்கல்களே வராது! ‘எல்லாமே போச்சு’, ‘என் பொண்ணு கைக்கு அகப்படாமே போயிட்டா’ என்றெல்லாம் புலம்புவதை நிறுத்தி விட்டு அவள் என்ன செய்தாலும் அவளை அன்புடன் அரவணையுங்கள். 

என்ன நடந்தாலும் நீங்கள் அவளுக்கு உறுதுணையாக இருப்பீர்கள் என உணர்த்துங்கள். உங்கள் மகளின் உலகத்தில் நீங்கள் ஒரு பாகமாக ஒன்றி விட்டால்தான், அவள் தவறு செய்யும்போது அவளை நீங்கள் கண்டித்தால் உங்களை மதித்து அவள் புரிந்து செயல்படுவாள். 

குழப்பமான சூழ்நிலையில் தன்னம்பிக்கை தளரும் போது ‘நான் அம்மாகிட்டே பேசலாம்’ என்ற நம்பிக்கையை வளர்க்கும் விதத்தில் நீங்கள் அவளைக் கையாண்டால் அவள் எப்பொழுதும் உங்கள் கைகளிலிருந்து நழுவ மாட்டாள்.
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

டீன் ஏஜ் பெண் குழந்தைகளை சமாளிப்பது எப்படி? Empty Re: டீன் ஏஜ் பெண் குழந்தைகளை சமாளிப்பது எப்படி?

Post by Tamil Thu Dec 26, 2013 8:12 pm

நல்ல பயனுள்ள தகவல்
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum