Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: வலுவான நிலையில் இந்திய அணி...
Page 1 of 1

ஜோகன்னஸ்பர்க், டிச.21-
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் புஜாரா, கோலியின் பொறுப்பான ஆட்டத்தால் இந்திய அணி வலுவான நிலையை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது.
இந்தியா-தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஜோகன்னஸ்பர்க் நகரில் நடந்து வருகிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 280 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய தென்ஆப்பிரிக்கா 2-வது நாள் முடிவில் 6 விக்கெட்டுக்கு 213 ரன்கள் எடுத்திருந்தது. பிலாண்டர் 48 ரன்களுடனும், பாப் டு பிளிஸ்சிஸ் 17 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இந்த நிலையில் 3-வது நாள் ஆட்டம் நேற்று நடந்தது. வேகக் கூட்டணி ஜாகீர்கானும், இஷாந்த் ஷர்மாவும் இணைந்து தென்ஆப்பிரிக்காவின் எஞ்சிய 4 விக்கெட்டுகளை வெறும் 45 நிமிடங்களுக்குள் கழற்றினர்.
இஷாந்த் ஷர்மா வீசிய முதல் பந்தை பவுண்டரிக்கு திருப்பி, பிலாண்டர் அரைசதத்தை கடந்தார். அதே ஓவரில் மேலும் ஒரு பவுண்டரியும் விரட்டினார். அவர் 59 ரன்களில் (86 பந்து, 7 பவுண்டரி), ஜாகீர்கானின் பந்து வீச்சில் முதலாவது ஸ்லிப்பில் நின்ற அஸ்வினிடம் கேட்ச் ஆனார். பிளிஸ்சிஸ்சும் (20 ரன்) ஜாகீர்கானுக்கு இரையானார்.
இதன் பின்னர் ஸ்டெயினை (10 ரன்) இஷாந்த் ஷர்மா வெளியேற்ற, மோர்கலை (ரன்) ஜாகீர்கான் வீழ்த்தி இன்னிங்சை முடிவுக்கு கொண்டு வந்தார். தென்ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 244 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதனால் இந்திய அணி 36 ரன்கள் முன்னிலை பெற்றது. இந்திய தரப்பில் ஜாகீர்கான், இஷாந்த் ஷர்மா தலா 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர்.
அடுத்து 36 ரன்கள் முன்னிலையுடன் இந்தியாவின் இன்னிங்சை முரளிவிஜயும், ஷிகர் தவானும் ஆரம்பித்தனர். மீண்டும் சொதப்பிய தவான் 15 ரன்களில் நடையை கட்டினார். அடுத்து விஜயுடன் புஜாரா இணைந்தார். இருவரும் நிதானமாக விளையாடி ஸ்கோரை படிப்படியாக உயர்த்தினர். அணி வலுவடைய உதவிய விஜய் 94 பந்துகளை சந்தித்து 39 ரன்கள் சேகரித்த நிலையில், காலிசின் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் டிவில்லியர்சிடம் கேட்ச் ஆனார்.
இதைத் தொடர்ந்து புஜாராவும், விராட் கோலியும் 3-வது விக்கெட்டுக்கு கைகோர்த்தனர். இவர்கள் தென்ஆப்பிரிக்காவின் பந்து வீச்சை சாதுர்யமாக எதிர்கொண்டனர். புஜாரா 9 ரன்களில் இருந்தபோது ரன்-அவுட்டில் இருந்து தப்பினார். இதே போல் 51 ரன்களில் ஆடிக் கொண்டிருந்த போது அவர் கொடுத்த அருமையான கேட்ச் வாய்ப்பை பந்து வீசிய இம்ரான் தார் வீணடித்தார். இந்த வாய்ப்பை புஜாரா கெட்டியாக பிடித்துக் கொண்டார்.
இதன் பின்னர் புஜாரா-கோலி ரன் குவிப்பில் வேகம் காட்டினர். மோர்னே மோர்கலின் காயமும், பிரதான சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாரின் சாதாரண பந்து வீச்சும் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக அமைந்தது. இந்த ஜோடியை பிரிக்க தென்ஆப்பிரிக்க கேப்டன் சுமித் பல்வேறு யுக்திகளை கையாண்டும் பலன் கிடைக்கவில்லை. ‘உலகின் நம்பர் ஒன்’ அபாயகரமான பந்து வீச்சாளர் ஸ்டெயினாலும் இவர்களை அசைக்க முடியவில்லை.
ஏதுவான பந்துகளை நாலாபுறமும் விரட்டியடித்து இந்திய ரசிகர்களை குஷிப்படுத்திய புஜாரா பவுண்டரி விளாசி தனது 6-வது சதத்தை பூர்த்தி செய்தார். தனது முதல் 50 ரன்களை 127 பந்துகளில் கொண்டு வந்த புஜாரா அடுத்த 50 ரன்களை வெறும் 41 பந்துகளில் திரட்டிவிட்டார். வெளிநாட்டு மண்ணில் இது அவரது முதல் சதமாகும். தென்ஆப்பிரிக்க மண்ணில் சதம் அடித்த 9-வது இந்தியர் புஜாரா ஆவார். இதற்கிடையே கோலி அரைசதத்தை கடந்தார்.
3-வது நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 2-வது இன்னிங்சில் 2 விக்கெட் இழப்புக்கு 284 ரன்கள் சேர்த்துள்ளது. புஜாரா 135 ரன்களுடனும் (221 பந்து, 18 பவுண்டரி), விராட் கோலி 77 ரன்களுடனும் (132 பந்து, 8 பவுண்டரி) ஆட்டம் இழக்காமல் இருக்கிறார்கள். இந்த இணை 3-வது விக்கெட்டுக்கு 191 ரன்கள் குவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
கைவசம் 8 விக்கெட் உள்ள நிலையில் இந்திய அணி இதுவரை 320 ரன்கள் முன்னிலை பெற்று ஓரளவு வலுவான நிலையை அடைந்துள்ளது. ஒரு நாள் தொடரில் ஆடிய விதத்தை பார்த்து இந்திய அணி டெஸ்டில் 3 நாட்களுக்குள் பெட்டி பாம்பாய் அடங்கிவிடும் என்று கணக்கு போட்டவர்களின் முகத்தில் நமது பேட்ஸ்மேன்களும், பந்து வீச்சாளர்களும் கரியை பூசி விட்டனர்.
4-வது நாள் ஆட்டம் இன்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி நடைபெறும்.

மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» இந்திய பந்துவீச்சும் அம்போ! * மைக்கேல் கிளார்க் இரட்டை சதம் * வலுவான நிலையில் ஆஸி.,
» இந்திய அணிக்கு கடின இலக்கு * இயான் பெல் அபார சதம்* வலுவான நிலையில் இங்கிலாந்து
» வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர்: இந்திய அணி அறிவிப்பு
» இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்: சதம் அடித்து இந்திய அணியை காப்பாற்றினார், ரஹானே
» முதலாவது கிரிக்கெட் டெஸ்ட்: தென்னாப்பிரிக்கா இன்னிங்ஸ் வெற்றி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum