TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:18 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:07 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


இலங்கை உள்நாட்டுப்போரின்போது 17 நிவாரண ஊழியர்களை முழங்கால் போட வைத்து சுட்டுக்கொன்ற கொடூரம் அம்பலம்

Go down

இலங்கை உள்நாட்டுப்போரின்போது 17 நிவாரண ஊழியர்களை முழங்கால் போட வைத்து சுட்டுக்கொன்ற கொடூரம் அம்பலம் Empty இலங்கை உள்நாட்டுப்போரின்போது 17 நிவாரண ஊழியர்களை முழங்கால் போட வைத்து சுட்டுக்கொன்ற கொடூரம் அம்பலம்

Post by மாலதி Wed Dec 04, 2013 7:52 am

பாரீஸ், டிச.4-
இலங்கை உள்நாட்டுப்போரின்போது 17 நிவாரண ஊழியர்களை முழங்கால் போட வைத்து சுட்டுக்கொன்ற கொடூரம் அம்பலம் A4382290-f001-4c74-8967-28117aadec58_S_secvpf
இலங்கையில் சிங்கள ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே சுமார் 30 ஆண்டுகளாக உள்நாட்டுப்போர் நடந்தது. அந்தப் போர் உச்சக்கட்டம் அடைந்தபோது, லட்சத்துக்கும் மேற்பட்ட அப்பாவி தமிழ் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர். 

அப்போது நடந்த போர்க்குற்றங்கள் குறித்து சிங்கள அரசின்மீது சர்வதேச அளவில் விசாரணை நடத்த வேண்டும் என்று குரல்கள் எழுந்துள்ளன. இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் இதில் தீவிரமாக உள்ளார்.

இந்தப் போரின்போது நிவாரணப்பணிக்காக சென்றிருந்த பிரான்ஸ் நாட்டின் 'ஏ.சி.எப்.' என்னும் தொண்டு அமைப்பின் (பட்டினிக்கு எதிரான நடவடிக்கை அமைப்பு) ஊழியர்கள் 17 பேரை சிங்கள ராணுவம் மிகக்கொடூரமான முறையில் கொன்று குவித்து இருப்பது இப்போது அம்பலத்துக்கு வந்துள்ளது.

இதுகுறித்து 'ஏ.சி.எப்.' அமைப்பு, '17 மனித நேய உதவி பணியாளர்கள் இலங்கையில் படுகொலை செய்யப்பட்டதின் உண்மை வெளிப்பாடுகள்' என்ற தலைப்பில் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

மூதூரில் 2006-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 4-ந்தேதி சிங்கள ராணுவம், கடற்படை, போலீசார் மனிதப்படுகொலைகளை அரங்கேற்றினர். அதற்கான ஆதாரம் எங்களிடம் உள்ளது. 

இதுவரை எங்கும் நேர்ந்திராத அளவுக்கு நடந்த மனித உரிமை மீறல் குற்றங்களில் ஒன்றாக, 17 நிவாரணப் பணியாளர்கள் படுகொலையை சொல்ல வேண்டும். அவர்கள் வரிசையாக நிற்க வைக்கப்பட்டு, பின்னர் முழங்கால் போட வைக்கப்பட்டுள்ளனர். அதன் பின்னர் ஒவ்வொருவரையும் தலையில் சுட்டு கொன்றனர். 

சுட்டுக்கொல்லப்பட்டவர்களில் 16 பேர் தமிழர்கள், ஒருவர் முஸ்லிம். இவர்களை கொன்றது சிங்கள அரசின் படைகள்தான்.

இலங்கை அரசின் அதிகாரப்பூர்வ விசாரணை முடிவுக்காக காத்திருந்தோம். ஆனால் கடைசியில், போர்க்குற்றம் புரிந்தவர்களை இலங்கை அரசு நீதியின் முன் நிறுத்தும் என்ற நம்பிக்கையை நாங்கள் இழந்து விட்டோம். 

சர்வதேச அளவில் சுதந்திரமான விசாரணை நடத்தித்தான், இலங்கை மனித உரிமை மீறல் குற்றவாளிகளை குற்றவாளிக்கூண்டில் நிறுத்த முடியும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

'ஏ.சி.எப்.' செயல் இயக்குனர் மைக் பென்ரோஸ் இது தொடர்பாக கூறுகையில், "ஒவ்வொரு நாளும், நாங்களும் எங்களைப் போன்ற மனிதநேய அமைப்புகளும் போர்ப் பிரதேசங்களில் பணியாற்றினோம். மனிதநேய உதவிகளை செய்த பணியாளர்களை மதிக்காதவர்களை நீதியின் முன் கொண்டு வந்து நிறுத்த வேண்டும். இந்தக் குற்றங்களை செய்தவர்களை தண்டிக்காமல் விடக்கூடாது" என்றார்.

மனித நேயப்பணியாளர்களையும் விட்டு வைக்காமல் சிங்கள ராணுவம் சுட்டுக்கொன்றதாக இப்போது வெளியாகியுள்ள இந்த தகவல், சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

இலங்கை உள்நாட்டுப்போரின்போது 17 நிவாரண ஊழியர்களை முழங்கால் போட வைத்து சுட்டுக்கொன்ற கொடூரம் அம்பலம் Empty Re: இலங்கை உள்நாட்டுப்போரின்போது 17 நிவாரண ஊழியர்களை முழங்கால் போட வைத்து சுட்டுக்கொன்ற கொடூரம் அம்பலம்

Post by மாலதி Wed Dec 04, 2013 8:13 am

இலங்கை உள்நாட்டுப்போரின்போது 17 நிவாரண ஊழியர்களை முழங்கால் போட வைத்து சுட்டுக்கொன்ற கொடூரம் அம்பலம் 603524_438190126220989_559545088_n



எமது தொண்டர்களைக் கொலை செய்தது சிறீலங்கா படையினரே - பட்டினிக்கு எதிரான அமைப்பு 03 12 2013 பிரெஞ்சு தொண்டு நிறுவனமான, பட்டினிக்கு எதிரான அமைப்பின் இலங்கையின் உள்ளூர் தொண்டர்கள் 17 பேரை 2006ல் சிறீலங்கா படையினர்தான் கொன்றார்கள் என்று அத்தொண்டு நிறுவனம் குற்றம் சாட்டியிருக்கிறது. தனது தொண்டர்கள், முழங்காலிட வைக்கப்பட்டு, சுட்டுக் கொல்லப்பட்டனர் என்றும், இவர்களைக் கொன்ற கொலையாளிகளை சிறீலங்கா அரசு இது வரை பாதுகாத்து வருகிறது என்றும் கூறுகிறது. இந்தத் தகவல் நேரில் கண்டவர்களிடமிருந்தும், ரகசிய ஆவணங்களிலிருந்தும், அரசு வட்டாரங்களிலிருந்தும் தனக்குக் கிடைத்துள்ளதாக அது கூறுகிறது. இந்தத் தகவலை இது வரை இந்த நிறுவனம் வெளியிடாமல் வைத்திருந்ததன் உள்நோக்கங்களை சிறீலங்கா இராணுவத்துக்காகப் பேசவல்ல அதிகாரி ஒருவர் கேள்விக்குள்ளாக்கியிருக்கிறார்.http://www.actioncontrelafaim.org/fr/content/17-humanitaires-assassines-au-sri-lanka-le-rapport-qui-denonce............................................................... அமைதி, நல்லிணக்கம், நீதி தேவையென்றால், விசாரணைகள் வெளிப்படையானதாக இருக்க வேண்டும்: - அக்சன் பாம் நிறுவன சட்ட ஆலோசகர் கருத்து 04 04 2013 இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் நம்பகமான அனைத்துலக விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டியது அவசியம் என அங்கு கடமையாற்றிய அக்சன் பாம் நிறுவனத்தின் மனிதாபிமான சட்ட ஆலோசகர் போலின் செற்கியூற்றி வலியுறுத்தி கூறியுள்ளார். இலங்கையில் அரச இராணுவமே பற்பல மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ள நிலையில், அந்நாட்டு அரசையே சொந்தமாக விசாரணை நடத்தும்படி கோருவது நகைப்பிற்குரியது. மூதூர் நடைபெற்ற படுகொலைகள் குறித்து இலங்கையின் மூன்று நீதி விசாரணைகளை நெருக்கமாக அவதானித்தோம். ஆனால் அரசியல் தலையீடுகள் மற்றும் தவறுகளால் விசாரணைகள் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக இழுபறியாக உள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கையில் இடம்பெற்ற போரின் போது தமது 17 பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்டதற்குப் பொறுப்பானவர்களை அரசாங்கம் கண்டறிந்து அதற்குப் பொறுப்பானவர்கள் தண்டிக்கப்பட வேண்டியது முக்கியமானது. இலங்கையில் எமக்கு உண்மையான அமைதி, நல்லிணக்கம், நீதி தேவையென்றால், எந்தவொரு விசாரணைகளும் வெளிப்படையானதாக இருக்க வேண்டும். ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அக்சன் பாம் வரவேற்கிறது. ஆனால் இத்துடன் இது முடிந்து விடாது. ஏனென்றால் தீர்மானத்தின் வாசகங்கள் கடுமையானவை அல்ல என அவர் சுட்டிக்காட்டியதுடன், இலங்கைக்கு உறுதியான அழுத்தம் எதனையும் கொடுக்கவில்லை எனவும் போர்க்குற்றங்கள் குறித்து நம்பகமான அனைத்துலக விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர் மேலும் கோரிக்கை விடுத்துள்ளார். நன்றி தமிழ் இணையங்கள் ......................................... மூதூர் படுகொலை: தொண்டர் நிறுவன ஊழியர்களின் குடும்பங்களுக்கு நஸ்டஈடு வழங்குமாறு பிரான்ஸ் அழுத்தம் 04 07 12 மூதூரில் கடந்த 2006ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட தொண்டர் நிறுவன ஊழியர்கள் 17 பேரின் குடும்பங்களுக்கும் நஷ்டஈடு வழங்கப்பட வேண்டியதன் அவசியத்தை இலங்கை அரசாங்கத்திற்கு கொழும்பிலுள்ள பிரான்ஸ் தூதரகம் வலியுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸின் “பட்டினிக்கு எதிரான அமைப்பு” (action faim) என்ற அரசசார்பற்ற நிறுவனத்தில் பணியாற்றிவந்த இந்த 17 பேரும் மூதூரில் படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையிலான யுத்தத்தின்போது கொலை செய்யப்பட்டிருந்தனர். 2012ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் கூட்டத்தொடரின்போது, அரசாங்க தூதுக்குழுவினர், இப்படுகொலை தொடர்பான வழக்குகளை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக உறுதியளித்திருந்தனர். இச்சம்பவம் தொடர்பான வழக்கை மீண்டும் விசாரணை செய்யுமாறு பொலிஸாருக்கு சட்ட மா அதிபர் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. பொலிஸார் மீள் விசாரணையை ஏற்கெனவே மேற்கொண்டுள்ளனர். இதேவேளை, இந்த வழக்கு தொடர்பாக இராஜதந்திர முயற்சிகளை முன்னெடுத்த கொழும்பிலுள்ள பிரெஞ்சு தூதரகம், இவ்வழக்குகளின் விசாரணையின் முன்னேற்றத்தை சட்ட மா அதிபர் திணைக்களத்திடம் விசாரணை செய்தது. இதன்படி கொலை செய்யப்பட்ட தொண்டர் நிறுவனப் பணியாளர்கள் 17 பேரின் குடும்பங்களுக்கு நஷ்டஈடு வழங்கப்பட வேண்டியதன் அவசியத்தை சட்ட மா அதிபர் திணைக்கள அதிகாரிகளுடனான சந்திப்பின்போது பிரெஞ்சு தூதுவர் கிறிஸ்ரின் ரிபிச்சொன் சுட்டிக்காட்டியுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவும் பரிந்துரைத்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நஷ்டஈடு வழங்குவதன் மூலம் இலங்கைக்கு எதிரான சர்வதேச அழுத்தத்தை தவிர்த்துக்கொள்ள முடியுமென சட்டமா அதிபரின் திணைக்கள அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். இப்படுகொலைச் சம்பவம் தொடர்பாக அனைத்துலக மனித உரிமைகள் கண்காணிப்பகம் மற்றும் சர்வதேச பொதுமன்னிப்புச்சபை ஆகியன நீதியான விசாரணை செய்யுமாறு அழுத்தம் கொடுக்கின்றமை குறிப்பிடத்தக்கது.


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» போரின்போது 17 தொண்டு நிறுவன ஊழியர்களை சுட்டுக்கொன்ற இலங்கை ராணுவம்: பிரான்ஸ் அம்பலம்
» தலித் சிறுமி உயிருடன் தீ வைத்து எரிக்கப்பட்ட கொடூரம்
» சென்னையை குண்டு வைத்து தகர்க்க திட்டமிட்டது அம்பலம்: தீவிரவாதி போலீஸ் பக்ருதீன் வாக்குமூலம்
» முருகன் சாந்தன் பேரறிவாளன் ஆகியோரை சிறையில் வைத்து கொலைசெய்ய முயற்சி! பயங்கரச் சதி அம்பலம்!! சிறிலங்கா உளவுத்துறை சம்பந்தப்பட்டிருப்பதாக தகவல்!!!
» அடித்து சித்திரவதை! விடியும் வரை முட்டிக்கால்! இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்களுக்கு நடந்த கொடூரம்!!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum