TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


மறைக்கப்படும் போர்க் குற்றங்கள்

Go down

மறைக்கப்படும் போர்க் குற்றங்கள் Empty மறைக்கப்படும் போர்க் குற்றங்கள்

Post by mmani Wed Nov 13, 2013 7:22 am

மறைக்கப்படும் போர்க் குற்றங்கள்
மறைக்கப்படும் போர்க் குற்றங்கள் 996964_495322597233095_1157186899_n
சனல் 4 தொலைக்காட்சி அண்மையில் வெளியிட்ட இசைப்பிரியா குறித்த வீடியோ, இலங்கைக்கு மட்டுமன்றி இந்தியாவுக்கும் சவாலானதாகி விட்டது.
கொமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்பது தொடர்பான இந்தியாவின் முடிவையே, ஆட்டம் காண வைக்கும் அளவுக்கு அது சக்தி வாய்ந்ததாக இருந்தது.

அதாவது, இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கை முடிவுகளின் மீது தாக்கத்தைச் செலுத்தும் அளவுக்கு அது வீரியம் பெற்றிருந்தது.

அதேவேளை, இந்த வீடியோவை இலங்கை அரசாங்கம் பெரிதாகக் கண்டு கொள்ளவில்லை என்றே கூறலாம்.

இதுபற்றிக் கருத்து வெளியிட்ட அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல, இதை அரசாங்கம் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை என்று அலட்சியமாகப் பதிலளித்திருந்தார்.

இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய, இந்த வீடியோ போலியானது, நாடகம் என்று வர்ணித்திருந்தார்.

இலங்கைக்கு சர்வதேச அரங்கில் நெருக்கடிகளை ஏற்படுத்தும் வகையில், சனல் 4 தொலைக்காட்சி அவ்வப்போது இதுபோன்ற வீடியோக்களையும், ஒளிப்படங்களையும் வெளியிட்டுப் பரபரப்பை ஏற்படுத்தி வருவது உண்மை.

குறிப்பாக, ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானங்கள் முன்வைக்கப்பட்ட போதும், இப்போது கொழும்பில் கொமன்வெல்த் மாநாடு நடக்கவுள்ள சூழலிலும் சனல் 4 இத்தகைய ஆதாரங்களை அம்பலப்படுத்தியுள்ளது.

போரின் இறுதிக்கட்டத்தில், நிகழ்ந்த எத்தனையோ மீறல்களின் மிகச் சிறிய பகுதிதான் இதுவரை அம்பலத்துக்கு வந்துள்ளது.

இன்னும் இதுபோன்ற எத்தனையோ ஆதாரங்கள் வெளிவரலாம். வெளிவராமலே புதைந்தும் போகலாம்.

இன்னும் ஆதாரங்களே இல்லாமல் எத்தனையோ மீறல்கள் நடந்திருக்கலாம்.

ஏனென்றால், போரின் இறுதிக்கட்டம் என்பது மிகவும் கொடூரமானது.

இதனை போருக்குள் அகப்பட்டிருந்து, அந்த இறுதிக்கட்டத்தை தாண்டி வெளியே தப்பி வந்தவர்கள் கூறியிருந்தார்கள்.

ஆனால், அவ்வாறு தப்பி வரமுடியாத ஆயிரக்கணக்கானவர்களின் கதைகள் வெளியில் வரவில்லை.

கொல்லப்பட்டவர்கள், காணாமற்போனவர்கள், சரணடைந்தவர்கள், இப்படிப் பல வகைக்குள் இருந்தாலும், போருக்குப் பின்னர் திரும்பி வராத இந்த வகையினர் அனைவரினதும் கதி என்னவென்பது இதுவரை கேள்வியாகவே இருந்து வருகிறது.

போருக்குப் பின்னர் தப்பி வராத பலருக்கு நடந்த கொடுமைகள், வீடியோக்களாகவும், ஒளிப்படங்களாகவும் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

இவையனைத்துமே, உலகளவில் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பினும், இலங்கை அரசாங்கம் மட்டும் அதனைக் கருத்தில் எடுத்திருக்கவில்லை.

எப்போதெல்லாம், இத்தகைய போர்க்குற்ற ஆதாரங்கள் வெளியாகின்றனவோ, அப்போதெல்லாம் அவற்றைப் போலி என்றும், புலிகளின் பணத்துக்காக செய்யப்படுகின்ற பிரசாரங்கள் என்றும் நிராகரிக்கும் வழக்கத்தை அரசாங்கம் கொண்டுள்ளது.

அதுபோலத் தான், இந்த முறையும் இசைப்பிரியா உயிருடன் பிடிக்கப்பட்டு கொண்டு செல்லப்படும் வீடியோவையும் அரசாங்கம் நாடகம் என்று நிராகரித்துள்ளது.

முன்னரெல்லாம், போரின் போது எந்த மீறல்களும் இடம்பெறவில்லை என்று அரசாங்கம் மறுத்து வந்தது நினைவிருக்கலாம்.

பின்னர், நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை, ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை என்பனவற்றில் மீறல்கள் இடம்பெற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்த போது, ஒரு கட்டத்தில் அரசாங்கம் தனது நிலையை மாற்றிக் கொள்ள வேண்டிய நிலை உருவானது.

அதாவது, போர்க்குற்றங்களோ மனித உரிமை மீறல்களோ நடக்கவில்லை என்ற வரட்டுப் பிடிவாத நிலைப்பாட்டில் இருந்து அரசாங்கம் கொஞ்சம் விலகியது.

போரின் போது, அங்கொன்றும் இங்கொன்றுமாக எங்கேனும் தனிப்பட்ட ரீதியாக மீறல்கள் நிகழ்ந்திருக்க்கலாம், திட்மிட்ட போர்க்குற்றங்கள் எதுவும் நிகழவில்லை என்று அரசாங்கம் கூறியது.

சுமார் 5 ஆயிரம் வரையான பொதுமக்கள் இறுதிக்கட்டப் போரில் கொல்லப்பட்டிருக்கலாம் என்று பாதுகாப்புச் செயலர் ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.

இவையெல்லாம், போர்க்குற்றங்கள் எதுவும் நிகழவில்லை என்று முரண்டுபிடிக்க முடியாத அளவுக்கு ஆதாரங்கள் பல வெளியானதன் வெளிப்பாடாகவே நடந்தன.

பின்னர், ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானங்கள் முன்வைக்கப்பட்ட போது, இன்னும் இறுக்கமான நிலையை அரசாங்கம் எதிர்கொள்ள நேரிட்டது.

போர்க்குற்றங்கள், மீறல்கள் குறித்து விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று சர்வதேச அழுத்தங்கள் கொடுக்கப்பட்ட போது, எவரேனும் அதற்கான ஆதாரங்களை முன்வைத்தால் அதுபற்றி விசாரணைகள் நடத்த முடியும் என்ற புதிய நிலைப்பாட்டை எடுத்தது அரசாங்கம்.

ஆனால், இதுவரை வெளியான எந்தப் போர்க்குற்ற ஆதாரத்தையும் அடிப்படையாக வைத்து, அரசாங்கம் எந்த விசாரணைகளையும் முன்னெடுக்கவில்லை.

2012ம் ஆண்டு மார்ச் மாதம் இலங்கைக்கு எதிராக ஜெனீவா தீர்மானம் முன்னெடுக்கப்படுவது உறுதியானதும், போரின் இறுதிக்கட்டத்தில் மீறல்கள் இடம்பெற்றதா என்பதை விசாரிக்க இராணுவ விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டது.

மேஜர் ஜெனரல் கிரிசாந்த டி சில்வா தலைமையில் நியமிக்கப்பட்ட அந்த இராணுவ விசாரணைக் குழுவின் முதற்கட்ட அறிக்கை கடந்த பெப்ரவரி மாதம் சமர்ப்பிக்கப்பட்டது.

ஐ.நா. மனிதஉரிமைகள் பேரவையில் இரண்டாவது தீர்மானம் கொண்டு வரப்படுவதற்கு சில வாரங்கள் முன்னதாக வெளியிடப்பட்ட அந்த அறிக்கையின் சுருக்கத்தில், போர்க்குற்றங்கள் ஏதும் நிகழவில்லை என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

சனல் 4 வெளியிட்ட வீடியோ தொடர்பாக விசாரணைகள் நடத்தப்படுவதாகவும், அது தொடர்பான அறிக்கை பின்னர் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், இன்றுவரை அந்த அறிக்கையை இராணுவ நீதிமன்றம் சமர்ப்பிக்கவில்லை.

இதுபோலத் தான், இதுவரை வெளியான எல்லா வீடியோ, ஒளிப்பட ஆதாரங்களையும் அரசாங்கம் ஒரு நீதி விசாரணைக்கான ஆதாரங்களாக எடுத்துக் கொள்ளவில்லை.

ஆனால், அவ்வப்போது மீறல்கள் குறித்து விசாரிக்க வலியுறுத்தப்படுகின்ற போதெல்லாம், ஆதாரம் கேட்பதை அரசாங்கம் வழக்கமாக்கிக் கொண்டுள்ளது.

இசைப்பிரியா தொடர்பான வீடியோவில், படையினர் பலரின் முகங்களை அடையாளம் காணக்கூடிய நிலை கூட உள்ளது.

மேலும் இந்த வீடியோ ஆதாரத்தை படைச்சிப்பாய் ஒருவரே தனக்குத் தந்ததாக, சனல் 4 இயக்குனர் கெலும் மக்ரே தெரிவித்துள்ளார்.

பல போர்க்குற்ற ஆதாரங்கள் படையினரின் கைத்தொலைபேசிகளின் மூலம் தான் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.

இன்னும் பல வெளிவராத ஆதாரங்கள் கூட இருக்கலாம்.

சுயாதீனத் தரப்புகளிடம் இருக்கின்ற ஆதாரங்களை விட, அமெரிக்கா போன்ற நாடுகளிடம் இன்னும் அதிகளவு ஆதாரங்கள் கிடைத்திருக்கலாம்.

அத்தகைய ஆதாரங்கள் தான், இலங்கை மீது அமெரிக்கா காட்டுகின்ற கடும் போக்கிற்கு காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது,

அவையெல்லாம் மூடி மறைக்கப்பட்டு விட்டதாக, அரசாங்கம் நினைத்தால், அது முட்டாள்தனம்.

ஏனென்றால், எந்தக் கட்டத்தில், மேற்குலகம் இலங்கையில் ஆட்சி மாற்றத்தை உருவாக்க எண்ணுகிறதோ, அந்தக் கட்டத்தில் இதுபோன்ற ஏராளமான ஆதாரங்கள் வெளிச்சத்துக்கு வரும் என்று உறுதியாக நம்பலாம்.

நம்பகமான விசாரணை ஒன்றின் மூலம், போரின் இறுதிக்கட்டத்தின் நிகழ்ந்த மீறல்களுக்குப் பொறுப்புக்கூற அரசாங்கம் தவறுகின்ற நிலையில், இத்தகையதொரு நிலை உருவாவதைத் தடுக்க முடியாது.
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» சிறிலங்காவின் போர்க் குற்றங்கள்: 11 நீதிபதிகள் கொண்ட சிறப்பு மக்கள் நீதிமன்றம்
» இலங்கைக்கு எதிரான மேலும் போர்க் குற்றங்கள் ஐ நாவில்!
» சனல் 4வின் அடுத்த முயற்சி! “தண்டிக்கப்படாத போர்க் குற்றங்கள்” ஆவணம் தயாரிப்பு!!
» ஈழத்தில் ராஜீவ் நிகழ்த்திய போர்க் குற்றங்கள் (1) – புரட்சிப்பெரியார் முழக்கம்
»  முள்ளிவாய்க்கால் படுகொலை மற்றும் போர்க் குற்றங்கள்: கொழும்பினை விடவும் புதுடில்லியே அஞ்சுகின்றது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum