Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
ரூ.50 கட்டணத்தில் பத்திர பதிவை சி.டி.யில் வழங்கும் புதிய திட்டம்: ஜெயலலிதா தொடங்கி வைத்தார்..
Page 1 of 1

சென்னை, நவ. 8–
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:–
நில ஆவணங்கள் பதிவு செய்தல், வில்லங்கச் சான்று வழங்குதல், திருமணப் பதிவு போன்ற பணிகளுக்காக சார்பதிவாளர் அலுவலகங்களை பொதுமக்கள் அதிக எண்ணிக்கையில் நாடி வருகின்றனர். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த சார்பதிவாளர் அலுவலகங்கள் வாடகை கட்டடங்களில் இயங்கி வருவதோடு, பதிவு ஆவணங்களை பராமரிப்பதற்கும், பணியாளர்கள் பணியாற்றுவதற்கு போதிய இட வசதியின்றியும், சிறிய இடங்களுக்கு அதிக அளவில் வாடகை தர வேண்டிய நிலையையும் கருத்தில் கொண்டு, வாடகை கட்டடங்களில் இயங்கி வரும் சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு சொந்த கட்டடங்கள் கட்டித்தர முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி, நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் மற்றும் புதுச்சத்திரம்; வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை, வாலாஜா, ஆற்காடு மற்றும் கலவை; திருவண்ணாமலை மாவட்டம் தூசி மற்றும் கீழ்கொடுங்காலூர்; காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர், பெரிய காஞ்சிபுரம் (இணை சார் பதிவாளர்–II அலுவலகம்); தூத்துக்குடி மாவட்டம் புதூர் மற்றும் கடம்பூர்; ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி; கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி; கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை; திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை; இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி; கடலூர் மாவட்டம் கம்மாபுரம்; புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர்; திருப்பூர் மாவட்டம் பல்லடம் ஆகிய 20 இடங்களில் 9 கோடியே 83 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய சார்பதிவாளர் அலுவலகக் கட்டடங்கள்.
சென்னையில் 49 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பதிவுத்துறை பயிற்சி நிலையத்திற்கு தங்கும் விடுதி; என மொத்தம் 10 கோடியே 32 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான புதிய கட்டடங்களை முதல்–அமைச்சர் ஜெயலலிதா காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
இந்தப் புதிய சார்பதிவாளர் அலுவலகங்களில், அலுவலர்களுக்கான அறைகளுடன் கணினி அறை, பதிவுருக்கள் பாதுகாப்பு அறை, பொதுமக்களுக்கு கூடுதல் வசதிகளுடன் காத்திருப்போர் அறை, முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்துவதற்கான சாய் தளமேடை, அகலமான நடைபாதை, பாதுகாக்கப்பட்ட குடிநீர், நவீன கழிப்பறை போன்ற வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
பொதுமக்கள் கால விரையமின்றி ஆவணப் பதிவினை மேற்கொள்ளும் பொருட்டு, இணையதளம் மூலம் சார்பதிவாளருடன் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஆவணப் பதிவு செய்து கொள்ள முன் பதிவு செய்து கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்படும் என்றும், ஆவணப்பதிவு செய்வதற்கான குறிப்பிட்ட நேரத்தை பொதுமக்கள் இணையதளம் மூலம் முன்பதிவு செய்து கொண்டு, அந்த நேரத்தில் சார்பதிவாளர் அலுவலகம் சென்று தங்களது ஆவணப்பதிவு தொடர்பான பணிகளை விரைவாக நிறைவேற்றிக் கொள்ளலாம் என்றும் முதல்–அமைச்சர் ஜெயலலிதா 13.5.2013 அன்று சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார்.
இந்த அறிவிப்பிற்கிணங்க தேசிய தகவல் மையத்தால் தயாரிக்கப்பட்ட மென் பொருள் மூலம் பதிவுக்கு வரும் நபர் தமது பதிவு தொடர்பாக, அதாவது சொத்தை எழுதிக் கொடுப்பவர், அதனை பெறுபவர், சொத்துக்களின் விவரம் போன்ற அனைத்து விவரங்களையும் குறிப்பிட்டு இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு இணையதளத்தின் மூலம் முன்பதிவு செய்தவர்கள், அவர்கள் குறிப்பிட்ட நேரத்தில் சார்பதிவாளர் அலுவலகங்களுக்குச் சென்று தங்கள் பதிவு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.
பதிவுக்கு வரும் நபரால் இணையதளத்தில் பதிவு செய்யப்பட்ட விபரங்களை தொடர்புடைய சார்பதிவாளர் உறுதி செய்து அதன் பின் ஆவணப் பதிவினை மேற்கொள்வார். அதே நேரத்தில், முன்பதிவு செய்யாமல் ஆவணப் பதிவு செய்ய சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு வருபவர்களுக்கும் போதிய கால அவகாசம் இருப்பது உறுதி செய்யப்படும்.
சார்பதிவாளருடன் இணையதளம் மூலம் பொதுமக்கள் ஆவணப்பதிவிற்கு முன்பதிவு செய்து கொள்ளும் வகையில் இணையவழி பதிவு நேர ஒதுக்கீடு செய்யும் வசதியை முதல்–அமைச்சர் ஜெயலலிதா தலைமைச் செயலகத்தில் துவக்கி வைத்தார்.
இதன் மூலம் பதிவு நடை முறை செம்மைப்படுத்தப்படுவதுடன், பொதுமக்கள் சார்பதிவாளர் அலுவலகங்களில் காத்திருக்கும் நேரமும் வெகுவாக குறையும்.
பொதுமக்களுக்கு விரைவு மற்றும் வெளிப்படையான சேவைகள் அளித்திடவும், சார்பதிவாளர் அலுவலகங்களில் தரகர்களின் நடமாட்டத்தினை தடுத்திடவும், மோசடி பதிவு மற்றும் ஆள்மாறாட்டத்தினை தடுத்திடவும், தமிழ்நாட்டில் உள்ள 575 சார்பதிவாளர் அலுவலகங்களிலும் இணைய நெறிமுறை புகைப்படக்கருவிகள் நிறுவுதல் மற்றும் சார்பதிவகங்களில் அளிக்கப்படும் சேவைகளை 9 மண்டல அலுவலகங்களிலிருந்தும், பதிவுத்துறைத் தலைவர் அலுவலகத்திலிருந்தும் தொலைக் கண்காணிப்பு செய்யும் திட்டம் 3.5.2012 அன்று சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது.
இந்தத் திட்டத்திற்காக வன், மென்பொருட்கள் வாங்குதல் மற்றும் உரிய சாதனங்கள் நிறுவுதல் ஆகியவற்றிற்கான முதலீட்டு செலவினமாக 3 கோடியே 46 லட்சத்து 92 ஆயிரத்து 705 ரூபாயும், குறுந்தகடுகள் கொள்முதல் மற்றும் இத்திட்டப் பணியினை மேற்கொள்வதற்காக பணியமர்த்தப்படும் நபர்களுக்கான சம்பளத்தொகை உள்ளிட்ட தொடர் செலவினமாக 9 கோடியே 30 லட்சத்து 90 ஆயிரத்து 280 ரூபாயும் அரசால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், இத்திட்டத்தினை சுயசார்பு உடையதாகவும், வருவாய் ஈட்டுவதாகவும் அமைத்திட ஆவணப்பதிவு மற்றும் திருமணத்தின்போது எடுக்கப்பட்ட ஒளிப்பதிவு குறுந்தகடுகளை சம்பந்தப்பட்ட ஆவணதாரர்களுக்கு 50 ரூபாய்க்கு வழங்கிடவும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் மூலம் சார்பதிவகங்களில் நடைபெறும் ஆவணப்பதிவு மற்றும் திருமணப் பதிவுகளை ஒளி ஒலிப்பதிவு செய்யப்படுகிறது. அவ்வாறு பதிவு செய்யப்படும் ஒளிப்பதிவுகள் ஆவணப் பதிவு மற்றும் திருமணப்பதிவிற்கு நல்ல அத்தாட்சியாகும். ஆவணப் பதிவு, திருமணப்பதிவுகளின் போது எடுக்கப்படும் ஒளிப்பதிவுகள் துறைக்கு மட்டுமின்றி சம்பந்தப்பட்டவர்களுக்கும் நல்ல சான்றாக அமையும். இது தவிர, சார்பதிவாளர் அலுவலகங்களை மண்டல அலுவலகங்களிலிருந்தும் துறைத்தலைமை அலுவலகத்திலிருந்தும் தொலைக் கண்காணிப்பு செய்யப்படும்.
பதிவுகள் ஒளிப்பதிவு செய்யப்படுவதால் எதிர்காலத்தில் ஆள்மாறாட்டம், போலி ஆவணப்பதிவு ஆகியவை குறித்த விசாரணைக்கு சான்றாக அமையும். மேற்கண்ட சிறப்பம்சங்களைக் கொண்ட சுயசார்பு உடைய இந்தத் திட்டத்தினால் பொது மக்கள் பெரிதும் பயனடைவார்கள்.
பதிவுத் துறையில் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில் இணைய நெறிமுறை புகைப்படக் கருவிகள் நிறுவிடும் திட்டத்தினை முதல்–அமைச்சர் ஜெயலலிதா துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், தொழில் துறை அமைச்சர் பி. தங்கமணி, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.வி. ரமணா, தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், வணிகவரி மற்றும் பதிவுத்துறை முதன்மைச் செயலாளர் எஸ்.கே. பிரபாகர், பதிவுத் துறைத் தலைவர் தர்மேந்திர பிரதாப் யாதவ், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» தமிழ் வளர்ச்சித் துறைக்கு தனி வலைதளம்: ஜெயலலிதா தொடங்கி வைத்தார்
» எஸ்.எம்.எஸ்சில் மின் கட்டண விவரம்: தொடங்கி வைத்தார் ஜெயலலிதா!
» சென்னை அரசு ஆஸ்பத்திரியில் கைவிரல் வருகை பதிவேடு திட்டம்: அமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார்
» முதியோர் பென்சன் உயர்வு: திருமண உதவி தொகையுடன் தாலிக்கு 4 கிராம் தங்கம்; ஜெயலலிதா தொடங்கி வைத்தார்
» செங்கொடிமீடியா டாட் காம் புதிய இணைய தளம் கவிஞர் காசி ஆனந்தன் தொடங்கி வைத்தார்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum