Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)by வாகரைமைந்தன் Wed Apr 24, 2024 2:31 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Apr 23, 2024 12:00 am
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 22, 2024 9:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Apr 19, 2024 9:02 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm
நிதி ஆதாரத்தை பெருக்க தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனத்துக்கு கூடுதலாக ரூ.16 கோடி: ஜெயலலிதா
TamilYes :: செய்திக் களம் :: வினோதம்
Page 1 of 1

படித்த இளைஞர்களை முதல் தலைமுறை தொழில் முனைவோராக மாற்ற உதவும் நோக்குடன் “புதிய தொழில் முனைவோர், தொழில் நிறுவன வளர்ச்சித் திட்டம்” என்ற புதிய திட்டத்தை 2012–13 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா ஏற்கெனவே உத்தர விட்டுள்ளார்.
இதன்படி, படித்த இளைஞர்களுக்கு தொழில் முனைவோர் பயிற்சி அளிக்கப்பட்டு, தொழில் தொடங்க திட்டங்கள் தயாரிக்கப்பட்டு, நிதி நிறுவனங்களில் நிதியுதவி பெற உதவுவதுடன், பெரும் தொழில் நிறுவனங்களுடன் அவர்களுக்கு வணிகத் தொடர்பும் அமைத்துத் தர நடவடிக்கை எடுத்தல்; வங்கிகள், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் ஆகியவற்றின் மூலம் 25 லட்சம் ரூபாய்க்கு மிகாத 25 விழுக்காடு முதலீட்டு மானியமும், மூன்று விழுக்காடு வட்டி குறைப்புடன் கூடிய கடனுதவி அளித்தல்; மின்வெட்டிலிருந்து தொழிற் உற்பத்தி பாதிக்கா வண்ணம், 320 கே.வி.ஏ. வரை திறன் கொண்ட மின்னாக்கிகளை நிறுவுவதற்கு மானிய உச்சவரம்பினை 5 லட்சம் ரூபாயாக உயர்த்துதல்;
குறு மற்றும் சிறு தொழில் நிறுவனங்களின் உற்பத்தி மற்றும் போட்டித் திறனை அதிகரிக்கும் வண்ணம், மத்திய அரசின் பங்களிப்புடன் செயல்பட்டு வரும் சிறு தொழில் நிறுவனங்கள் குழும மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்துதல்; சிறுதொழில் முனைவோர்களுக்கு வளர்ந்து வரும் தொழில் நுட்ப வளர்ச்சிக்கேற்ப பயிற்சி அளிக்கப்பட வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு, தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனத்தில் பயிற்சி வளாகம் ஒன்றை அமைத்திடல் போன்ற எண்ணற்ற திட்டங்களை சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் வளர்ச்சிக்காக முதல்–அமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது.
தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி நிறுவனம் தமிழ் நாட்டில் உள்ள குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் வளர்ச்சியை முக்கிய நோக்கமாக கொண்டு பல்வேறு இடங்களில் தொழிற் பேட்டைகளை உருவாக்கி வருகின்றது.
தற்பொழுது தமிழ்நாட்டில் மொத்தம் 94 தொழிற்பேட்டைகள் இந்நிறுவனத்தால் பராமரிக்கப்பட்டு வருகின்றன. மேலும் இந்த நிறுவனம் 26 கோடியே 68 லட்சம் ரூபாய் செலவில் நான்கு புதிய தொழிற்பேட்டைகளை உருவாக்கவும், தற்பொழுதுள்ள இரண்டு தொழிற் பேட்டைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை 6 கோடியே 32 லட்சம் ரூபாய் செலவில் உயர்த்தவும் முதல்–அமைச்சர் ஜெயலலிதா ஏற்கெனவே ஒப்புதல் அளித்துள்ளார்.
இப்பணிகளை நிறைவேற்றுவதற்கு ஏற்ற வகையில் தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் நிதி ஆதாரத்தை பெருக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். உறுதியான பங்கு மூலதன அடித்தளம் இருந்தால்தான், இந்நிறுவனம், வங்கிகள் மற்றும் நிதிநிறுவனங்களை அணுகி கடன் வசதி பெற இயலும்.
எனவே தமிழ்நாடு சிறு தொழில் நிறுவனத்தின் நிதி ஆதாரத்தை மேலும் பலப்படுத்தி, சிறு தொழில்களின் வளர்ச்சிகளை ஊக்குவிக்கும் வகையில் அந்நிறுவனத்திற்கு கூடுதலாக 16 கோடி ரூபாய் அரசின் பங்கு மூலதனமாக வழங்க முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தர விட்டுள்ளார். இதன் மூலம் ஏற்கெனவே 8 கோடியே 70 லட்சம் ரூபாய் என இருந்த இந்த நிறுவனத்தின் பங்கு மூலதனம் 24 கோடியே 70 லட்சம் ரூபாயாக உயரும்.
தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, சேலம் மற்றும் தூத்துக்குடி ஆகிய 5 இடங்களில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு உதவிடும் வகையில், ரசாயனம், உலோகவியல், மற்றும் இதர மூலப்பொருட்களை பரிசோதனை செய்ய நவீன உபகரணங்களுடன் கூடிய பரிசோதனைக் கூடங்கள் இயங்கி வருகின்றன.
இந்த இடங்களில் உள்ள ஆய்வுக் கூடங்கள் 40 வருடங்களுக்கு முன்னர் கட்டடப்பட்ட பழமையான கட்டடங்களில் இயங்கி வருகின்றன. பழமையான இக் கட்டடங்களை புனரமைக்கவும், பரிசோதனைக் கூடங்களில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காகவும் 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
அரசின் இந்த நடவடிக்கைகள், சிறு குறு மற்றும் நடுத்தரத் தொழில்களின் வளர்ச்சிக்கு பெரும் உதவிகரமாக அமையும்.

Similar topics
» ஏர் இந்திய நிறுவனத்துக்கு மத்திய அரசு ரூ.1732 கோடி நிதி உதவி
» மின் உற்பத்தியை பெருக்க ரூ. 6,455 கோடி ஒதுக்கீடு
» எம்.பி.,க்கள் தொகுதி நிதி இனி ரூ.5 கோடி :ரூ.2,370 கோடி செலவுக்கு ஆரவார வரவேற்பு
» ரோமிங் விதிகளை மீறியதால் ஏர்டெல் நிறுவனத்துக்கு ரூ.650 கோடி அபராதம்..!
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
» மின் உற்பத்தியை பெருக்க ரூ. 6,455 கோடி ஒதுக்கீடு
» எம்.பி.,க்கள் தொகுதி நிதி இனி ரூ.5 கோடி :ரூ.2,370 கோடி செலவுக்கு ஆரவார வரவேற்பு
» ரோமிங் விதிகளை மீறியதால் ஏர்டெல் நிறுவனத்துக்கு ரூ.650 கோடி அபராதம்..!
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
TamilYes :: செய்திக் களம் :: வினோதம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|