Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
எம்.பி.,க்கள் தொகுதி நிதி இனி ரூ.5 கோடி :ரூ.2,370 கோடி செலவுக்கு ஆரவார வரவேற்பு
Page 1 of 1
எம்.பி.,க்கள் தொகுதி நிதி இனி ரூ.5 கோடி :ரூ.2,370 கோடி செலவுக்கு ஆரவார வரவேற்பு
புதுடில்லி : ஒவ்வொரு எம்.பி.,க்கும் வழங்கப்பட்டு தொகுதி நல
மேம்பாட்டு நிதியானது இரண்டு கோடி ரூபாயிலிருந்து, ஐந்து கோடி ரூபாயாக
உயர்த்தப்பட்டுள்ளது. இதை பார்லிமென்டில் நிதியமைச்சர் அறிவித்த போது
கட்சி வேறுபாடின்றி அனைத்து எம்.பி.,க்களும் மேஜையை தட்டி, ஆரவாரம் செய்து
வரவேற்றனர். இந்நிதியை பொறுப்புடன் கையாளும்படி அறிவுரை வழங்கிய
நிதியமைச்சர், தற்போது சட்டசபை தேர்தல்கள் நடைபெறும் மாநிலங்களுக்கு இந்த
அறிவிப்பானது மே மாதம் இறுதி வரை பொருந்தாது என்றும் அறிவித்தார்.
பட்ஜெட் குறித்த விவாதங்களுக்கு நேற்று பார்லிமென்டில் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி பதிலளித்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:நாடு முழுவதும் உள்ள சுயஉதவிக்
குழுக்களுக்கு நிதியுதவி செய்யும் நோக்கில் ஐந்து கோடி ரூபாய் வரை
வழங்குவதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த நிதியானது ரிசர்வ்
வங்கியின் நபார்டு வங்கி மூலமாக வழங்கப்படும். தென்மாநிலங்களில் சுயஉதவிக்
குழுக்கள் சிறப்பாக இயங்கி வருவதால், இந்த நிதியானது பெரும் உதவியாக
இருக்கும்.மீனவர்களுக்கு 7 சதவீத வட்டியில் கடன் வழங்கப்படும். இதனால், 20
லட்சம் மீனவர்கள் பயன் பெறுவர். மருத்துவமனைகளில் செய்யப்படும் முதலீடுகள்
இனிமேல் உள்கட்டமைப்பு செலவுகளாக எடுத்து கொள்ள அரசு முடிவு
செய்துள்ளது.ஒவ்வொரு எம்.பி.,க்களுக்கும் இரண்டு கோடி ரூபாய் வரை தொகுதி
மேம்பாட்டு நிதி என்ற பெயரில் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. அந்த
தொகுதிகளில் வளர்ச்சி திட்ட பணிகளுக்காக வழங்கப்படும் நிதியை
உயர்த்தியளிக்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது.இதையேற்று இனிமேல்
தொகுதி மேம்பாட்டு நிதியாக ஒவ்வாரு எம்.பி.,க்கும் ஐந்து கோடி ரூபாய் வரை
வழங்கப்படும். ஆனாலும், இந்த நிதியானது மிகவும் கவனமாக செலவிட வேண்டும்.
ஏற்கனவே, மத்திய தணிக்கை ஆணையம் இந்த விஷயத்தில் அளித்துள்ள பரிந்துரைகள்,
யோசனைகள் ஆகிவற்றையும் கருத்தில் கொண்டு இதை அமல்படுத்த
முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதனால் அரசுக்கு 2,370 கோடி ரூபாய் செலவாகும்.
இந்த அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்னால், தேர்தல் கமிஷனை தொடர்பு
கொண்டு அனுமதி கேட்டு வாங்கினேன். அதன்படி தற்போது சட்டசபை தேர்தல்கள்
நடைபெறும் மாநிலங்களுக்கு மட்டும் இந்த அறிவிப்பு மே மாத இறுதி வரை
பொருந்தாது. அதற்கு பின் அமலாகும்.கறுப்பு பண மீட்பை பொறுத்தவரை இருவேறு
கருத்துக்கள் உள்ளன. பா.ஜ., அளித்த கருத்தின்படி, 5,000 கோடி டாலரில்
இருந்து 14 ஆயிரம் கோடி டாலர் வரை கறுப்பு பணம் இருப்பதாக கூறப்படுகிறது.
இரு தகவல்களிலும் உள்ள இடைவெளி அதிகம்.
இன்னொரு தகவலின்படி, கடந்த 1948ம் ஆண்டில் இருந்து 2010ம் ஆண்டு வரை
மொத்த கறுப்பு பணம் என்பது 46 ஆயிரத்து 200 கோடி அமெரிக்க டாலர் என்று
கூறப்படுகிறது. கறுப்பு பணம் மொத்தம் எவ்வளவு என்பது முதலில் தெளிவாக
வேண்டும்.அதற்காக அரசு தரப்பில் ஒரு குழு அமைக்கப்பட்டு, உரிய முறையில்
விவரங்களை சேகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்து உட்பட 65
நாடுகளுடன் வரி ஏய்ப்பு தடுப்பு ஒப்பந்தம் போட்டிருக்கிறோம். வரும் ஏப்ரல்
1ம் தேதி முதல் விவரங்கள் கிடைப்பது ஆரம்பமாகும். நாட்டின் பணவீக்கம் 20.2
சதவீதமாக இருந்தது. இதை 9.8 சதவீமாக குறைத்துள்ளோம். இது திருப்தியளிக்க
கூடியதல்ல என்பது உண்மை தான். பணவீக்கத்தை மேலும் கட்டுப்படுத்த நடவடிக்கை
மேற்கொள்ளப்படும்.
பொது வினியோக திட்டம் சிறப்பாக இயங்குவதற்கு ஆலோசனை கூற குஜராத்
முதல்வர் நரேந்திர மோடி தலைமையில் குழு அமைக்கப்பட்டு அதன் அறிக்கை
பெறப்பட்டுள்ளது. முன்பு பா.ஜ., தலைமையிலான ஆட்சியில், நாட்டின் வளர்ச்சி
வீதம் 5.8 ஆக இருந்தது. தற்போது 8.5 ஆக உள்ளது. பொருளாதார வளர்ச்சியால்
கிடைக்கும் வருமானத்தை வைத்து தான் மக்கள் நல திட்டங்களை செயல்படுத்த
முடிகிறது. மத்திய அரசின் முக்கிய திட்டங்கள் பலவற்றுக்கும் இந்த நிதி
பகிர்ந்து அளிக்கப்படுகிறது.விவசாயிகளுக்கு பா.ஜ., ஆட்சியில் அளித்த கடன்
தொகை என்பது 86 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே. அதுவும் 7 சதவீத வட்டியில்
அளிக்கப்பட்டது. ஆனால், ஐ.மு., கூட்டணி ஆட்சியில் நான்கு லட்சத்து 75
ஆயிரம் கோடி ரூபாய் வரை 4 சதவீத வட்டியில் கடன் அளித்துள்ளோம். இது
போதாது. விவசாயிகளுக்காக இன்னமும் இந்த அரசு நிறைய செய்யும். நாட்டின்
வளர்ச்சிக்கு முக்கிய தேவை மின்சாரம். கடந்தாண்டு மட்டும் 42 ஆயிரம்
மெகாவாட் மின்சார உற்பத்தி செய்யப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது.இவ்வாறு
பிரணாப் முகர்ஜி பேசினார்.
ஐந்து மாநிலங்களில் தேர்தல் நடப்பதால், பார்லிமென்ட் பட்ஜெட்
கூட்டத்தொடர் வரும் 25ம் தேதியுடன் முடிவடைகிறது. எம்.பி.,க்கள் தொகுதி
நிதி உயர்வை பா.ஜ.,வின் மூத்த தலைவர் முரளிமனோகர் ஜோஷி, மத்திய தகவல்
தொடர்பு அமைச்சர் கபில் சிபல் உள்ளிட்ட பலர் வரவேற்றனர். முறையாக
செலவழித்தால் இது பாமரர்களுக்கு பயன்படும் என்றனர்.
மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» எம்.பி.,க்கள் அமளியால் ஒரே வாரத்தில் ரூ.40 கோடி காலி
» பிரணாப்பிற்கு ஆதரவு: பீகாருக்கு ரூ.20,000 கோடி சிறப்பு நிதி தர மத்திய அரசு சம்மதம்?
» 'மாஜி'க்கள் ரூ.1 கோடி வாடகை பாக்கி
» குர்பாணி தோல்களை விற்று தீவிரவாதத்திற்கு ரூ.78 கோடி நிதி திரட்டிய பாகிஸ்தான் அமைப்புகள்
» ஏர் இந்திய நிறுவனத்துக்கு மத்திய அரசு ரூ.1732 கோடி நிதி உதவி
» பிரணாப்பிற்கு ஆதரவு: பீகாருக்கு ரூ.20,000 கோடி சிறப்பு நிதி தர மத்திய அரசு சம்மதம்?
» 'மாஜி'க்கள் ரூ.1 கோடி வாடகை பாக்கி
» குர்பாணி தோல்களை விற்று தீவிரவாதத்திற்கு ரூ.78 கோடி நிதி திரட்டிய பாகிஸ்தான் அமைப்புகள்
» ஏர் இந்திய நிறுவனத்துக்கு மத்திய அரசு ரூ.1732 கோடி நிதி உதவி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum