Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
நவராத்திரி விரதம் பிறந்த கதை.
3 posters
TamilYes :: சர்வ மதம் :: இந்து சமயம்
Page 1 of 1
நவராத்திரி விரதம் பிறந்த கதை.
நவராத்திரி விரதம் பிறந்த கதை.
***************************
நவராத்திரி விழா ஆண்டு தோறும் புதுப்புது மாற்றங்களுடன் கொண்டாடப்படும் விழாக்களுள் ஒன்று. நவம் என்ற சொல்லுக்கு ஒன்பது என்றும் புதியது என்றும் பொருள். மகிஷாசூரனை அழிப்பதற்காக அம்மன் ஒன்பது நாள் போர் செய்து பத்தாம் நாள் வெற்றி பெறுகிறாள். மகிஷம் என்றால் எருமை.
இது சோம்பல் மற்றும் அறியாமையின் சின்னமாகும். அறியாமையை அழித்த அம்பிகைக்கு புரட்டாசி மாதம் பிரதமை திதியிலிருந்து ஒன்பது நாள் விழா கொண் டாடப்படுகிறது. இந்த நாட்களில் நம்மை சூழ்ந்துள்ள அறியாமை என்னும் இருள் விலக அம்பிகையை இரவு நேரத்தில் பூஜை செய்கிறோம்.இருள் விலகி ஒளி பிறந்த பத்தாம் நாள் விஜயதசமி கொண்டாடுகிறோம்.
ஒரு நாளில் பகல் என்பது சிவனின் அம்சமாகவும் இரவு என்பது அம்பிகையின் அம்சமாகவும் கருதப்படுகிறது.பகலும் இரவும் இல்லாவிட்டால் நாள் என்பது கிடையாது. பகலில் உழைக்கும் உயிரினங்களை இரவில் அம்பாள் தன் மடியில் கிடத்தி தாலாட்டி உறங்க செய்கிறாள்.
இரவெல்லாம் விழித்திருந்து உலகை காக்கும் அம்பிகைக்காக ஒன்பது நாள் இரவு மட்டும் திருவிழா கொண்டாடப்படுகிறது என்பர். இதன் பின்னணியில் உள்ள கதை வருமாறு:-
சும்பன், நிசும்பன் என்ற அசுரர்கள் பிரம்மனின் அருளால் சாகாவரம்பெற்றனர். இருந்தாலும் தங்களுக்கு சமமான பெண்ணால் மட்டுமே எங்களுக்கு மரணம் ஏற்பட வேண்டும் என்ற வரத்தை பெற்றிருந்தனர். எனவே தேவர்களை ஜெயித்தும் அதர்மங்களை விளைவித்தும் வந்தனர்.
அவர்களது அழிவு காலத்தில் ஆதிபராசக்தியிடமிருந்து கவுசிகியும், காளிகா என்ற காலராத்திரியும் தோன்றினர்.காளிகாவுக்கு துணையாக முப்பெரும்தேவியின் வடிவான அஷ்டமாதர்களும் அஷ்ராத்திரிகளாக தோன்றினர்.
பிராம்மணி என்ற பிரம்ம சக்தி அன்ன வாகனத்தில் அட்சமாலை , கமண்டலத்துடனும் வைஷ்ணவி என்ற விஷ்ணுசக்தி கருட வாகனத்தில் சங்கு சக்கரம் கதை தாமரைப்பூவுடனும் மகேஸ்வரி என்ற சிவனின் சக்தி ரிஷப வாகனத்தில் திரிசூலம் மற்றும் வரமுத்திரையுடனும் கவுமாரி என்ற கார்த்திகேய சக்தி மïர வாகனத்தில் வேலாயுதத்துடனும் மாகேந்திரி என்ற இந்திரனின் சக்தி ஐராவதத்தில் வஜ்ராயதத்துவம் வாராஹி என்ற வாராஹிருடைய சக்தி எருமை வாகனத்தில் கலப்பையுடனும் சாமுண்டா என்ற பைரவரின் சக்தி எம வாகனத்தில் கத்தியை ஏந்தியவளாகவும் நரசிம்மஹி என்ற நரசிம்மரின் சக்தி கூரிய நகத்தை ஆயுதமாகவும் கொண்டு கமல பீடத்தில் தோன்றினார்கள்.
இவர்கள் காளிகா என்ற சண்டிகா தேவியுடன் ஒன்பது ராத்திரிகளாயினர் இந்த நவராத்திரி தேவதைகள் சும்ப நிசும்பர்களை ஒழித்தனர். அசுரர்களின் கொடுமையில் இருந்து விடுபட்ட தேவர்கள் கவுசிகியான அம்பிகையையும், நவராத்திரி தேவதைகளையும் போற்றி துதித்தனர். இந்த வைபவம் நவராத்திரிஎனப்படுகிறது. படைத்தல், காத்தல், அழித்தல் அனைத்திற்கும் மூலமாக இருப்பவள் தேவியே.
பரம சுகத்தையும், நீண்ட ஆயுளையும், சுபிட்சம் பெற வகை செய்யும் அனைத்துச் செல்வங்களையும் அருள் பவள் அவளே. முத்தொழில் புரியும் மும் மூர்த்திகளும் வணங்கும் பரம் பொருள் பராசக்தியே. தினமும் அம்பிகையை வணங்கினாலும் புரட்டாசியில் வரும் நவராத்திரியில் வணங்குவது மிகுந்த பலனை அளிக்கும். புரட்டாசி மாதப் பிரதமை முதல் நவமி வரை நவராத்திரி காலமாகும்.
அதில் முக்குணங் களுக்கும் மூலமான சர்வ லோக நாயகியை ஒன் பது நாள்களும் பூஜிக்கும் போது, முதல் மூன்று நாள்கள் துர்கா பரமேஸ்வரியையும் அடுத்த மூன்று நாள்கள் மகாலட்சுமியையுëம், கடைசி மூன்று நாள்கள் சரஸ்வதியையும் வணங்கவேëண்டும். வணங்குவதால் எதையும் பெறலாம்.
கல்வி,இசை,புகழ்செல்வம்தானியம்,வெற்றி, தண்ணீர் ஆகிய அனைத்தையும் சக்தியே தருகிறாள்.
ஆதிபராசக்தியை துர்க் கையாக நினைத்து வழிபட்டால் பயம் நீங்கும்.லட்சுமி வடிவில் தரிசித் தால் செல்வம் பெருகும். சரஸ்வதியாக எண்ணி வணங்கினால் கல்விச்செல்வம் சிறக்கும். பார்வதியாக வழிபட்டால் ஞானப்பெருக்கு உண்டாகும். எனவே தான் இந்நாட்களில் கொலுவும் வைக்கிறார்கள். தேவியை நடுவில் வைத்து, இந்த உலகப்பொருட்களை எல்லாம் சுற்றிலும் வைக்கிறார்கள்.
இதற்கு காரணம், தேவியால் தான் இந்த உலகம் இயங்குகிறது என்பதைக் காட்டுவதற்காக. பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளும் ருத்திரன், சதாசிவன் ஆகிய சிவனின் மற்ற வடிவங்களும் சரஸ்வதி,லட்சுமி, பார்வதி, மகேஸ்வரி, மனோன்மனி ஆகிய சக்திகளுக்குள் அடëக்கமாக உள்ளனர். எனவே சக்தியை வழிபட்டாலே அனைத்து தெய்வங்களையும் வழிபட்டதாக அர்த்தம்.*
நவராத்திரி விரதம்
பெண் கடவுள்களின் நவராத்திரி விரதம்பெண் தெய்வங்கள் 9 இரவுகள் கடுமையான விரதம் இருந்து அசுரர்களை வதம் செய்தனர்.அனைத்து பெண் தெய்வங்களும் இனைந்து வதம் செய்வதற்காக உருவாக்கபட்டவரே பரலக்ஷ்மி. இந்த பரலக்ஷ்மியைதான் ராதா என்று அழைக்கிறார்கள்.
பரலக்ஷ்மி என்பதில் பரா என்றால் சுப்பீரிம் என்று பொருள்படும். ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மற்றும் அக்டோம்பர் மாதங்களில் நமது தேவியர்களின் வம்சாவளியை போற்றும் விதமாக நவராத்திரிவிழா கொண்டாடபட்டு வருகிறது.இந்த 9 நாட்களிலும் இரவு நேரத்தில் துர்கையை வழிபடுகின்றனர்.
இந்த வழிபாட்டில் அலைமகள்,மலைமகள்,கலைமகள் ஆகிய மூவரின் முன்னிலையில் தான் 9 நாட்களிலும் விரதம் மேற்கொள்கின்றனர்.விரதம் மேற்கொள்ளும் போது மனிதர்களின் தீய குணங்களான வெறுப்பு,பொறாமை,அறியாமை,பேராசை,போன்ற அனைத்து குணங்களையும் மனதில் இருந்து நீக்கி விட வேண்டும்.
9ம் நாள் தான் அசுரர்களை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இது தெய்வங்களின் ஜோதிட முறைப்படி ஆண்டு தோறும் நடைபெறுகின்றது.நவராத்திரி பூஜை மாங்கல்யம் ஆனவர்களாள் கொண்டாடபடுகிறது.அதன் பின்பு நிலா வளம் வருகிறது.

Similar topics
» விரதம் யார் யாரெல்லாம் இருக்கக்கூடாது? - விரதம் பற்றிய முழுமையான தகவல்கள்!
» நலம் தரும் நவராத்திரி வழிபாடு!!
» பத்மநாபபுரம் அரண்மனையில் நடைபெற்ற நவராத்திரி விழா
» நவராத்திரி முதல் நாள்: வழிபடும் முறை!!
» நவராத்திரி கலைவிழா:தஞ்சை பெரியகோவிலில் 9 நாட்கள் நடக்கிறது!
» நலம் தரும் நவராத்திரி வழிபாடு!!
» பத்மநாபபுரம் அரண்மனையில் நடைபெற்ற நவராத்திரி விழா
» நவராத்திரி முதல் நாள்: வழிபடும் முறை!!
» நவராத்திரி கலைவிழா:தஞ்சை பெரியகோவிலில் 9 நாட்கள் நடக்கிறது!
TamilYes :: சர்வ மதம் :: இந்து சமயம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum