Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 10:18 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:07 am
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
தேனி மாவட்டம்: ஓர் வரலாற்றுப் பார்வை
Page 1 of 1
தேனி மாவட்டம்: ஓர் வரலாற்றுப் பார்வை
தேனி மாவட்டத்தில் கற்புக்கரசி கண்ணகி கால் பதித்து நடந்து வந்த பகுதி கம்பம் பள்ளத்தாக்கு ஆகும்.
சோழ மன்னன் எழுப்பிய மங்கள தேவி கண்ணகி கோயில், முல்லைப் பெரியாறு அணை கட்டிய பென்னிகுக் கால்பதித்த இடம், மாவீரர் கான்சாஹிப் சாலை அமைத்த கம்பம் சாலை, கான்சாஹிப் இறப்பிற்கு பின்னர் பெரியகுளம் பகுதியில் கால் அடக்கம் செய்யப்பட்ட நவாப் பள்ளிவாசல் என பல உண்டு.
சோழ மன்னர்கள், பாண்டிய மன்னர்கள், மதுரை சுல்தான்கள், நாயக்க மன்னர்கள், மதுரை சுல்தான்கள், ஆற்காட்டு நவாப் போன்ற பலர் இப்பகுதியில் ஆட்சி புரிந்தனர். இவை தவிர வருஷநாட்டு ஜமீன், கோம்பை ஜமீன், பெரியகுளம் ஜமீன் அரண்மனைகள் இன்றும் வரலாற்றோடு வரலாறாக உள்ளது. பல போர்கள் நடந்ததாக வரலாற்று குறிப்புகளும் உள்ளது.
கம்பம் பள்ளத்தாக்கும் முஸ்லீம்களும்
பந்தல ராஜாவின் ஞானகுரு, வாவேர் என்னும் முஸ்லிம் சூபி கொள்கையை உடையவர் ஆவார். இவர் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் தான் இஸ்லாமிய பிரச்சாரம் செய்து வந்தார். கம்பத்தில் இவர் பெயரில் வாவேர் பள்ளிவாசல் என்ற பள்ளிவாசல் உள்ளது. கி.பி.1885ஆம் ஆண்டு கோயமுத்தூரில் இருந்த செட்டில் மண்டல அலுவலகத்தில் உள்ள பழைய ஆவணங்களின் அடிப்படையில் பந்தல ராஜாவால் வழங்கப்பட்ட 7 ஏக்கர் நிலம் வாவேர் பள்ளிக்கு இனாம் மானியச் சொத்தாக பட்டயம் எழுதி வழங்கப்பட்டுள்ளது. பந்தல ராஜாவின் ஞானகுருவான வாவேர் சூபிகளின் பெயரை நினைவூட்டும் வகையில் வாவேர் ராவுத்தர், வாவேர் அம்மா, வாவேர் மீரான் என்று பல பெயர்கள் இப்பகுதியில் பிறக்கும் குழந்தைகளுக்குச் சூட்டப்படுகின்றன.
18ஆம் நூற்றாண்டில் பாட்டினால் ஆன்மிகத்தை போதித்து இஸ்லாமிய பிரச்சாரம் செய்த இடங்களில் சிறிய பள்ளிவாசல் எழுப்பி விடுவது வழக்கம். உத்தமபாளையம் தாலுகாவில் உள்ள தேவாரத்தில் பீர் முகமது அப்பா தங்கி இஸ்லாமிய பிரச்சாரம் செய்த இடத்தில் பள்ளிவாசல் ஒன்று உள்ளது.

கி.பி.1311 ஆம் ஆண்டு மாலிக்கபூர் தமிழ்நாட்டை நோக்கி படையெடுத்த கடைசி பகுதி கம்பம் ஆகும். மாலிக்கபூரின் படைத்தலைவர்கள் முகமது மீரான் மற்றும் சஞ்சய்கான் இருவரும் கம்பத்தில் பதினைந்து ஆண்டுகள் கோட்டை கட்டி ஆட்சி புரிந்தனர். இவர்கள் ஆட்சிக் காலத்தில் தான் சஞ்சய்கான் கிணறும், கெஞ்சினன் குளம் என்று தற்போது அழைக்கப்படும் சஞ்சய்கான் குளமும், முகமது மீரான் கட்டிய மொட்டை வீரன் கிணறுகள் பதிமூன்றும் கம்பத்தில் கோட்டைக்குள் வாட்ச் டவர் என்னும் கண்காணிப்பு கோபுரமும் தற்போது மொட்டை வீர்ன் கோயில் என்ற பெயரில் இன்றும் காட்சிப்பொருளாக சாட்சியாக உள்ளது. சிவன்கோயில், கம்பராயப்பெருமாள் கேயிலுக்கு வெளியே இருக்கும் கோட்டை மைதானம் என்ற பெயரில் இன்றும் முஸ்லிம் மன்னர்கள் ஆண்ட கோட்டையை நினைவுபடுத்துகிறது.
கி.பி.1311 ஆம் ஆண்டு மாலிக்கபூர் தமிழ்நாட்டின் மீது படையெடுத்து கம்பம் பகுதிக்கு வந்த போது, படையினருக்கு வைத்தியம் செய்யவும், தலைமையேற்று தொழகை நடத்துவதற்கும், இஸ்லாமிய பிரச்சாரம் செய்வதற்கும் பல ஞானிகள், சூபிகள் உடன் வந்தனர். அவர்களில் பலர் யுனானி வைத்தியம் அறிந்தவர்களாக இருந்ததாக வரலாறு தெரிவிக்கிறது. கம்பம் வாவேர் பள்ளியின் பின்புறம் பன்னீர் மரத்தடியில் இரட்டை கல்லறைகள் இன்றும் காட்சி அளித்துக் கொண்டிருக்கின்றன.
தர்காக்களின் தாக்கம்
கம்பம் பகுதியில் ஏற்பட்ட போரில் தோல்வியுற்று, படுகாயம் அடைந்த முஸ்லிம் படையினரில் பல பெரியோர்களும் சூபிகளும் இருந்தனர். போரில் ஏற்பட்ட காயங்களினால் வழியில் ஆங்காங்கே பலர் இறந்தனர். மரணமடைந்த அவர்களுக்கு மாலிக்கபூரின் படையினர் ஆங்காங்கே கல்லறைகளாக சமாதிகளை எழுப்பிச் சென்றனர். அத்தகைய சமாதிகள் தேவதானப்பட்டி அரிசிக்கடைப் பகுதியில் உள்ள தர்ஹா, தேவதானப்பட்டி காந்தி மைதானத்தில் உள்ள தர்ஹா, பதினெட்டாம்படி கோயில் அருகே உள்ள மட்டமலை தர்ஹா, துலுக்கபட்டி என்ற பொம்மி நாயக்கன்பட்டியில் உள்ள தர்ஹா, தேவதானப்பட்டி-பெரியகுளம் சாலையில் உள்ள நாலாங்கல் தர்ஹா, அன்னஞ்சியில் உள்ள தர்ஹா, சின்னமனூர்-உத்தமபாளையம் செல்லும் வழியில் உள்ள தர்ஹா (சாலை விரிவாக்கத்தின் போது இத்தர்ஹா அழிக்கப்பட்டது) , அனுமந்தன்பட்டிக்கு வடதுபுறம் மேற்கு பகுதியில் ஒன்றும், கம்பம் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்திற்கு எதிர்புறம் ஒன்றும், கூடலூர் நுழைவு வாயிலில் உள்ள ஒரு தர்ஹாவும் உள்ளது. இவை எல்லாம் மாலிக்கபூரின் கம்பம் படையெடுப்பில் மரணமடைந்த போர் தளபதிகள், இமாம்களின் கல்லறைகள் ஆகும்.

சமணமும்-இஸ்லாமும்
கி.பி. 8ஆம் நூற்றாண்டில் சமணர்கள் அதிக அளவில் ;இங்கு இருந்துள்ளனர். மேலூர், யானைமலை ஒத்தக்கடை, மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் அருக ஏராளமான சமண படுகைகள் உள்ளன. உத்தமபாளையம் கருத்தராவுத்தர் கல்லூரிக்கு மேற்கே சாயபுமலை எனப்படும் சமணமலை இன்றும் உள்ளது. சமணர்களின் கற்படுகைகள், நீர்நிலைகள், குகைகள், மருந்துகள் தயாரித்த கற்கள் என பல இன்றளவும் உள்ளன. கி.பி. 8-9 ஆம் நூற்றாண்டில் சமண-சைவ மதப்போரில் சமணர்கள் 8,000 பேர்கள் சைவர்களால் கழுமரத்தில் ஏற்றிக் கொல்லப்பட்டனர். அவ்வாறு கழுமரத்தில் சாவதை விரும்பாத பல சமணர்கள் முஸ்லீம்களாக மாறிவிட்டதாக வரலாறு மூலம் அறிய முடிகிறது.
சமணர்கள் மொட்டை அடித்து இருப்பார்கள். முஸ்லிம்களாகி மாறிய பின் மொட்டை தலை அடையாள மாற்றத்திற்கு உதவியது. ர.பி.சேதுபிள்ளை மற்றும் எ.கே.ரிபாயி போன்றவர்கள் ஆய்வுக்கட்டுரைகளில் இஸ்லாமியர்களுக்கிடைய சமண சொற்கள் பல பயன்படுத்தப்படுவதை இதற்கு ஆதாரமாக காட்டுகிறார்கள். இவை தவிர கூன் பாண்டிய மன்னரின் அதிதீவிர சைவமத ஈடுபாட்டிற்கு பயந்து பல சமணர்கள் முஸ்லிம்கள் மாறிவிட்டதாலும் உத்தமபாளையம், கம்பம், கோம்பை பகுதிகளில் அதிக அளவில் முஸ்லீம்கள் இருக்க காரணம் என வரலாறு கூறுகிறது.
ஆவணங்கள்
தமிழகத்தில் இதுவரை 50 இடங்களுக்கு மேல் பாறை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சென்னை பல்கலைக்கழகத் தொல்லியல் துறையினரின் முயற்சியால் முதன் முறையாக மல்லப்பாடி என்று இடத்தில் தான் தமிழகத்தின் முதல் பாறை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. மதுரை மாவட்டத்தில் முத்துப்பட்டி என்ற இடத்தில் சிறிய மலையில் சில குகைகள் அமைந்துள்ளன. அவற்றில் ஒன்று சமணக்குகையாகும். சமணர்களின் படுக்கைகள் இங்கு அமைக்;கப்பட்டுள்ளன. இக்குகையில் பல வண்ண ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன.
தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி அருகே அமைந்துள்ள ஊர் அணைப்பட்டியாகும். இவ்வூரின் அருகே அமைந்துள்ள மலை சித்தர் மலை ஆகும். இங்கு சமணக் குகை ஒன்றும் உள்ளது. இக்குகையின் கிழக்குப் பக்கத்தில் ஒரு ஓவியம் தீட்டப்பட்டுள்ளது. அவ் ஓவியம் குதிரையைச் செலுத்துவது போன்று செந்நிறத்தில் வரையப்பட்டுள்ளது. குதிரை மீது ஒரு மனிதன் அமர்ந்திருக்க குதிரையானது செல்வது போன்று காணப்படுகிறது.
காமயகவுண்டன்பட்டியிலுள்ள பல குகை ஓவியங்களில் படகு வடிவம் இடம் பெறுகின்றது. இது கட்டுமரம் போன்ற வடிவமைப்பைக் கொண்டு திகழ்கின்றது. அவற்றுள் துடுப்புடன் பயணம் செய்யும் காட்சி சிறப்புடைய ஒன்று. காமயகவுண்டன்பட்டியில் படகின் வடிவங்கள் இடம் பெற்றுள்ளன.
தேனிமாவட்டத்தில் சமணர்கள் முஸ்லீம்களாக மாறியுள்ளதையும், பாறை ஓவியங்கள், சமணக்குகைளில் படகு, குதிரையின் மீது தொப்பி அணிந்துள்ள மனிதன் போன்றவற்றை பார்க்கும் போது தேனி மாவட்டத்தில் கம்பம் போன்ற பகுதிகளில் சமணர்கள் முதலில் இஸ்லாத்தை தழுவியிருக்கலாம் என அறியப்படுகிறது.
ஆதார நூல்கள்:
1.தமிழகப் பாறை ஓவியங்கள்-பக்கம் 234-டாக்டர் ராவு பவுன்துரை
2.தமிழகப் பாறை ஓவியங்கள்-பக்கம் 72-டாக்டர் ராவு பவுன்துரை
3.மாலைமலர்-சுற்றுலா தகவல் களஞ்சியம்-பக்கம் 34,திண்டுக்கல் பதிப்பு
4.மறைக்கப்பட்ட வரலாறும்-மறைக்கப்படும் உண்மைகளும், அனிஸ்தீன், சென்னை
2.தமிழகப் பாறை ஓவியங்கள்-பக்கம் 72-டாக்டர் ராவு பவுன்துரை
3.மாலைமலர்-சுற்றுலா தகவல் களஞ்சியம்-பக்கம் 34,திண்டுக்கல் பதிப்பு
4.மறைக்கப்பட்ட வரலாறும்-மறைக்கப்படும் உண்மைகளும், அனிஸ்தீன், சென்னை
கட்டுரையாளர் : வைகை அனிஷ் (கைபேசி: 9715-795795)
Similar topics
» "போலி சுதந்திரம் இதற்கென்ன கொன்டாட்டம்" -தேனி மாவட்டம் போடி பகுதியில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டி...
» லெப்.கேணல் தேவன் தமிழ் கண்ணின் ஒரு வரலாற்றுப் பார்வை
» துவேஷம் விதைக்கும் வரலாற்றுப் பாடங்கள்…!
» பிடல் காஸ்ட்ரோ பற்றிய முக்கிய வரலாற்றுப் பதிவுகள்
» தினம் ஒரு தகவல் (தொடர்)
» லெப்.கேணல் தேவன் தமிழ் கண்ணின் ஒரு வரலாற்றுப் பார்வை
» துவேஷம் விதைக்கும் வரலாற்றுப் பாடங்கள்…!
» பிடல் காஸ்ட்ரோ பற்றிய முக்கிய வரலாற்றுப் பதிவுகள்
» தினம் ஒரு தகவல் (தொடர்)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum