Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
தாதுமணல் கொள்ளையில் அடுத்தடுத்து கிளம்பும் பூதங்கள்? அணு ஆயுத தயாரிப்பிற்குப் பயன்படும் மோனோசைட் கடத்தல்?
Page 1 of 1

தாதுமணல் கொள்ளையில் அடுத்தடுத்து கிளம்பும் பூதங்கள்?=============================================
அணு ஆயுத தயாரிப்பிற்குப் பயன்படும்
மோனோசைட் கடத்தல்?
============================================
தாதுமணல் கொள்ளையில் அடுத்தடுத்து கிளம்பும் பூதங்கள்
மணலைத் தோண்ட தோண்ட தண்ணீர் வரும் என்பார்கள். ஆனால் இப்போதோ கடற்கரை மணலைத் தோண்டினால் முறைகேடுகள் தொடர்பான தகவல்கள் தான் வந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் தாது மணல் அள்ள முதல்வர் விதித்துள்ள தற்காலிகத் தடை சமூக ஆர்வலர்கள் மத்தியில் அரசின் மீது நம்பிக்கை வெளிச்சத்தை பாய்ச்சியுள்ளது.
தூத்துக்குடியில் கனிம மணல் சுரங்கங்களில் நடந்துள்ள முறைகேடுகள் குறித்து ஆய்வு நடத்திய ககன்தீப் சிங் பேடி, தனது ஆய்வு அறிக்கையை செவ்வாயன்று (16-ம் தேதி) முதல்வர் ஜெயலலிதாவிடம் சமர்ப்பித்தார். இதனைப் பெற்றுக் கொண்ட முதல்வர், தமிழகத்தில் நெல்லை, குமரி திருச்சி மற்றும் மதுரை மாவட்டங்களில் தனியாருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள 71 பெருங்கனிம குவாரிகளை ஆய்வு செய்து உண்மை நிலையை அரசுக்கு சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டார். வருவாய்த் துறைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் இந்தச் சிறப்புக் குழு செயல்படப் போகிறது.. இதர மாவட்டங்களில் உள்ள பெருங்கனிமக் குவாரிகள் குறித்த ஆய்வறிக்கை கிடைக்கப் பெற்றவுடன், அதன் அடிப்படையில் பெருங்கனிமக் குவாரிகள் குறித்து ஒரு கொள்கை முடிவு எடுக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். மேலும், மேற்படிஆய்வு முடியும் வரை கார்னட், இல்மனைட் மற்றும் ரூட்டைல் பெருங்கனிம குவாரிகளின் செயல்பாடுகளை நிறுத்தி வைக்கவும், இது தொடர்பான போக்குவரத்து உரிமச் சீட்டு வழங்குவதை நிறுத்தி வைக்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
தாதுமணல் அள்ளுவதற்கு தூத்துக்குடி மீனவர்கள் தரப்பிலிருந்து தொடர்ந்து எதிர்ப்பு வலுத்து வந்ததும், 14.08.2013 அன்று தேசிய பசுமைத்தீர்ப்பாயம் O.A. 171/2013 என்ற வழக்கில் தூத்துக்குடி மாவட்டம் வைப்பாறு பகுதியைக் குறிப்பிட்டு நாடு முழுவதும் கடலோரப் பகுதிகளில் மணல் அள்ளத் தடை விதித்ததும் தான் முதல்வரின் இந்த முடிவுக்குக் காரணம் என்கிறார்கள்.
தாதுமணல் அள்ளுவதற்கு எதிராக மீனவர்கள் தங்கள் எதிர்ப்பை தொடர்ந்து பல்வேறு வடிவங்களில் வெளிப்படுத்தி வருகிறார்கள். மீனவர் விடுதலை இயக்கத்தின் சார்பில் உவரியில் சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொள்ளப்பட்டு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் உடல்நலன் பாதிக்கப்பட்டதால் போராட்டம் முடிவுக்கு வந்தது. இந்த போராட்டத்துக்கு பந்தல் அமைக்க வந்தவர்கள் மிரட்டப்பட்டார்கள். உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட கூத்தங்குழி ஒன்றிய கவுன்சிலர் போஸ்கோ வீடு தாக்கப்பட்டது.
இதெல்லாம் ஒருபுறம் நடந்துகொண்டிருக்க, தாதுமணல் கொள்ளை தொடர்பான ஆய்வுகளை சில சமூக அமைப்புகள் தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கின்றன. அந்த வரிசையில் தாதுமணல் கொள்ளைத் தொடர்பான உண்மை நிலையைக் கண்டறிய மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் சார்பிலான குழுவும் களமிறங்கியது.
இக்குழு சென்ற மாதம் (ஆகஸ்ட்) 14, 16. 17. 18.மற்றும் 21 ஆகிய தேதிகளில் தூத்துக் குடி மாவட்டம், விளாத்திகுளம் தாலுகா முத்தையாபுரம், பெரியசாமிபுரம் மேல்மாந்தை, கீழவைப்பாறு கடற்கரை பகுதிகள், வடக்கு ஆத்தூர், நெல்லை மாவட்டம் பெரியதாழை, நவ்லடி, உவரி, பஞ்சல் கடற்கரை பகுதிகள், கன்னியாகுமரி மாவட்டம் லீபுரம் கடற்கரை ஆகிய இடங்களைப் பார்வையிட்டதோடு அப்பகுதிகளில் மக்களை நேரடியாகச் சந்தித்தது.
இம்மாதம் முதல் வாரத்தில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர், மாவட்டவன அதிகாரி, கனிம வளத்துறை துணை இயக்குநர் ஆயோரைச் சந்தித்தும் விபரங்களைச் சேகரித்தது.
இது குறித்து உண்மை அறியும் குழுவில் இடம் பெற்ற
மதுரை உயர்நீதிமன்ற கிளை வழக்கறிஞர் வாஞ்சிநாதனிடம் பேசினோம்..
இருக்கன்துறை கிராமத்தில் 100 ஏக்கர் அரசு நிலம் ஆண்டுக்கு 16 ரூபாய்க்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளது.
தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்ட தென் தமிழக கடற்கரையில் பல லட்சம் ஆண்டுகளாய் இயற்கை சேர்த்து வைத்திருந்த அரியவகைக் கனிமங்கள் உள்ளடங்கிய மணல் தாதுவை அள்ளி தொழிற்சாலைகள் மூலம் கார்னெட், இல்மனேட், ரூடைல், சிர்கான், மோனோசைட் ஆகிய கனிமங்களாகப் பிரித்து தூத்துக்குடி துறைமுகம் மூலம் கொரியா, UAE, ஜெர்மனி, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறார்கள்.
இதில் தாதுமணல் ஏற்றுமதி நிறுவனங்கள் தூத்துக்குடி முதல் கன்னியாகுமரி வரை 15 கி.மீ நீள கடற்கரையை 40 ஆண்டுகள் குத்தகைக்கு அரசிடமிருந்து பெற்றுள்ளதோடு, 2300 ஏக்கர் பட்டா நிலங்களையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இந்த நிலங்களையும் மிகக்குறைந்த குத்தகைக்குப் பெற்றுள்ளார்கள். உதாரணத்திற்கு இருக்கன்துறை கிராமத்தில் 100 ஏக்கர் அரசு நிலம் ஆண்டுக்கு 16 ரூபாய்க்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. இதுபோக கடற்கரை ஓரமுள்ள ஏராளமான புறம்போக்கு நிலங்களையும் ஆக்கிரமித்துள்ளனர்.
தூத்துக்குடி கன்னியாகுமரி கிழக்கு கடற்கரை சாலையில் பல்வேறு இடங்களில் கார்னெட் மணல் கம்பெனியினர் கடலை ஒட்டி தொழிற்சாலைகள் அமைத்துள்ளனர். ஒவ்வொரு தொழிற்சாலையிலும் நூற்றுக்கணக்கானோர் பணிபுரிகின்றனர். தொழிற்சாலையின் முன்பக்கம் சுவர் கட்டப்பட்டு செக்யூரிட்டிகள் உள்ளனர். பின்புறம் மலைபோல் மண்ணைக் கொட்டி மேடாக்கியுள்ளனர். இதனால் தொழிற்சாலைக்குள் நடப்பது எதுவும் வெளியில் தெரிவதில்லை. தொழிற்சாலையின் அருகில் வசிப்பவர்களுக்குக் கூட விபரங்கள் தெரியவில்லை.
சேரன்மகாதேவி துணை ஆட்சியர் பஞ்சல் கடற்கரைப் பகுதியில் தாதுமணல் நிறுவனத்திற்கு மணல் எடுக்கத் தடைவிதித்துள்ளார்.
கார்னெட் மணல் கொள்ளைக்கு எதிராக சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நெல்லை மாவட்ட கடலோர மக்கள் போராடி வந்துள்ளனர். பத்திரிகையில் வந்த சில செய்திகளின் படி 30.06.1996-ல் நெல்லை மாவட்டம், பெருமணலில் பங்குத்தந்தை புரூனோ தலைமையில் மறியல், 4.10.1996-ல் ராதாபுரம் பேருந்து நிலையம் அருகில் மணல் எதிர்ப்பு போராட்டக்குழு சார்பில் பட்டினிப் போராட்டம், 20.03.1997 -ல் பாளை மார்க்கெட் ஜவஹர் திடலில், பா.ம.க மற்றும் கார்னெட் மணல் எடுப்பு எதிர்ப்பு இயக்கம் சார்பில் உண்ணாவிரதம் உள்ளிட்ட ஏராளமான போராட்டங்கள் நடந்துள்ளன.
30.06.1996 அன்று பெருமணலில் நடந்த சாலைமறியல் போராட்டத்தின் போது, சட்டம்- ஒழுங்கு பிரச்சனை காரணமாகசேரன்மகாதேவி துணை ஆட்சியர் பஞ்சல் கடற்கரைப் பகுதியில் தாது மணல் நிறுவனத்திற்கு மணல் எடுக்கத் தடைவிதித்துள்ளார்.
இப்போராட்டத்தின் தொடர்ச்சியாக 15.12.1996-ல் பெருமணல் கிராமத்தில் 4 அரசுப் பேருந்துகள் மக்களால் சிறை பிடிக்கப்பட்ட சூழலில், அன்றைய நெல்லை மாவட்ட எஸ்.பி ஜாங்கிட் தலைமையிலான போலீசார் கிராம மக்களை கொடூரமாகத் தாக்கி 200 பேர் மீது பொய்வழக்குப் போட்டுள்ளனர். தாக்குதலில் உவரி அந்தோணியார் ஆலய உதவி பங்குத்தந்தை புஷ்பராயன் உள்ளிட்ட, பொதுமக்கள் பலரும் காயம் அடைந்துள்ளனர். பி.யு.சி.எல். சார்பில் உண்மை அறியும் குழு வந்து இச்சம்பத்தை விசாரித்து, போலீசாருக்குக் கண்டனம் தெரிவித்த தோடு மணல் கொள்ளைக்கு அரசு தடைவிதிக்கக் கோரியுள்ளது. தடியடியைக் கண்டித்து மீனவ ர் கள் வேலை நிறுத்தம், திருச்சியில் உண்ணாவிரதமும் நடந்துள்ளது. மக்கள் இயக்கங்களின் தேசிய கூட்டமைப்பின் சார்பில் நாடு முழுவதிலுமிருந்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பங்கேற்ற கண்டனக் கூட்டமும் நடந்திருக்கிறது. அன்றைய மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன், முதல்வர் கருணாநிதி ஆகியோரிடம் மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக அனைத்து நாளிதழ்களிலும் செய்திகள் வெளிவந்துள்ளன. மொத்தத்தில் மணல் கம்பெனிகளுக்கெதிராக போராடிய கடற்கரை மக்கள் அரசு வன்முறையால் ஒடுக்கப்பட்டு பொய்வழக்குகளால் பயமுறுத்தப்பட்டு போராட்டத்தை கைவிட நிர்பந்திக்கப்பட்டனர் என்பதே உண்மை.
மணல்கம்பெனிகளுக் கெதிராக போராடிய கடற்கரை மக்கள் அரசு வன்முறையால் ஒடுக்கப்பட்டு பொய்வழக்குகளால் பயமுறுத்தப்பட்டு போராட்டத்தை கைவிட நிர்பந்திக்கப்பட்டனர் என்பதே உண்மை.
தற்போது நாங்கள் சென்று பார்த்த தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம், பெரியசாமிபுரம், மற்றும் மேல்மாந்தை கடற்பகுதிகள் மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பக பகுதிக்குள் வருகின்றன. அரிய பவளப்பாறைகள், கடல் அட்டைகள், கடல் ஆமைகள், கடல் பசுக்கள் மற்றும் அரிய கடல்வாழ் தாவரங்கள், உயிரினங்கள் உள்ள பகுதி இது. இக்கடற்கரைப் பகுதிகளில் கடற்கரையே கருகருவென கனிமங்கள் நிறைந்து காட்சியளிக்கிறது.பச்சையாபுரம் எல்லைக்கல்லுக்கு முன்புவரை பல கிலோ மீட்டர்களுக்கு கடற்கரையை வெட்டி எடுத்துள்ளனர். கடலின் உள்ளேயும் மணல் அள்ளியுள்ளனர். பெரும்பாலும் இரவில் தான் மணல் அள்ளியுள்ளனர். மணல் அள்ளுவதற்காக தனிச் சாலை அமைத் துள்ளனர். கடற்கரையில் சுமார் 3 முதல் 6 அடிவரை மணல் எடுக்கப்பட்டுள்ளது. சவுக்குத் தோப்புக்கு பின்புறம் பெரியஏரிபோல் மணல் எடுக்கப்பட்டுள்ளது.
சவுக்கு, பனை மரங்கள் அழிக்கப்பட்டுள்ளன. தாதுமணல் நிறுவனத்தால் இப்பகுதிக் கடற்கரையே சிதைக்கப்பட்டுள்ளது.
நாங்கள் கீழவைப்பாறு பகுதியில் உள்ள தாதுமணல் நிறுவனத்தின் மணல் சுத்திகரிப்பு தொழிற்சாலைக்குச் சென்ற போது, அங்கிருந்தவர்கள், “நாங்கள் வேலைக்கு புதியவர்கள். எங்களுக்கு ஒன்றும் தெரியாது” என்றார்கள். அத்தோடு எங்களது பெயர், விபரங்களைக் கேட்டும், நாங்கள் சென்ற வாகனங்களின் எண்களையும் குறித்துக் கொண்டனர், உடனே செல்போன் மூலம் யாருடனோ பேசினார்கள். நாங்கள் திரும்பி வரும்போது பைக்கில் வேகமாக வந்த மூன்று பேர் எங்களை மறித்து
பெரியதாழை பகுதிக்கு எமது ஆய்வுக்குழு சென்றபோது நாசப்படுத்தப்பட்ட பகுதிகளை கழிவு மண்ணால் இயந்திரம் மூலம் முடிக் கொண்டிருந்தனர். எங்களைப் பார்த்தவுடன் வேலை செய்தவர்கள் ஓடி விட்டனர். கடலில் கழிவு மண்ணை பல ஏக்கருக்குக் கொட்டியுள்ளனர். கழிவுமண் விடப்பட்ட பகுதியில் நடந்தால் புதைகுழிபோல் கால்கள் உள்ளே இறங்குகிறது. தூண்டில் வளைவுப்பாலம் முழுமையாக நாசப்படுத்தப்பட்டுள்ளது. இதைப் பார்த்து முடித்த சிறிது நேரத்தில் கம்பெனி ஆட்கள் சுமார் நூறு பேர் எங்களைச் சூழ்ந்து கொண்டு, கடற்கரையே தங்கள் பட்டா இடம் என்று சொல்லி அவர்களைத் தாண்டிச் செல்ல விடாமல் தடுத்தனர். சூழ்ந்து நின்று கொண்டு, “பிரச்சனை வேண்டாம், போய்விடுங்கள்” என எச்சரித்து, படகில் ஏறும் வரை பின்புறமாக வந்து அனுப்பி விட்டனர். எங்களை போட்டோ எடுத்துக் கொண்டனர். இப்படி நாங்கள் சென்ற ஒவ்வொரு கிராமத்திலும் அனுமதியின்றி மணல் சூறையாடப் பட்டதைக் காணமுடிந்தது. ஏதாவது ஒருவகையில் நாங்களும் மிரட்டப்பட்டோம்.
நாங்கள் அந்தப் பகுதியில் சந்தித்த மக்கள் வேதனையைக் கொட்டித்தீர்த்தனர். குறிப்பாக கீழவைப்பாறு கிராமத்தைச் சேர்ந்த அந்தோணி சாமி. சார்லஸ். தாமஸ், அம்புரோஸ், ரவீந்திரன், அன்டன் உள்ளிட்ட பலர் எங்களிடம், “பல வருடங்களாக எங்கள் ஊருக்கு அருகிலுள்ள கடற்கரையில் மணல் அள்ளி வருவதால் கடலின் போக்கே மாறிவிட்டது. கழிவு மணலை கடலில் விடுவதால் மீன் பாடு சரியாக இல்லை. கலைஞானபுரத்தைச் சார்ந்த கடல் தொழிலில் சம்மந்தம் இல்லாதவர்களுக்கு மணல் கம்பெனிக்காரர்கள் வீட்டுக்கு ஒரு டிராக்டர் வாங்கிக் கொடுத்து தங்கள்ஆட்களாக பயன்படுத்திக் கொள்கின்றனர். தொடர்ந்து மணல் அள்ளி. கடல் மாசுபட்டுள்ளது. இதனால் கடந்த சில வருடங்களில் எங்கள் ஊரில் புற்றுநோய், கல் அடைப்பு, கிட்னி பிரச்சனை பலருக்கும் வந்துள்ளது. இதுவரை இந்நோய்களால் சுமார் 50 பேர் இறந்துள்ளனர். மீனவர்களின் வாழ்வாதாரம் காக்கப்படவேண்டும் என்றனர்.
கடலில் கழிவு மண்ணை பல ஏக்கருக்குக்
கொட்டியுள்ளனர். கழிவுமண் விடப்பட்ட
பகுதியில் நடந்தால் புதைகுழிபோல் கால்கள்
உள்ளே இறங்குகிறது. தூண்டில் வளைவுப்
பாலம் முழுமையாக நாசப்படுத்தப்பட்டுள்ளது.
“ திருநெல்வேலி மாவட்டம், உவரி முன்னாள் பஞ்சாயத்து தலைவர் அந்தோணி கூறுகையில்,
“மணல் எடுப்பது 25, 30 ஆண்டுகளுக்கு முன்பு முதலில் துவங்கியது எங்கள் ஊரில் தான். தாதுமணல் நிறுவனம் மணல் எடுப்பதால் எங்கள் ஊரில் கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது. கடல்வளம் கெட்டு, மணல் திட்டுக்கள் அரிக்கப்பட்டுள்ளது. கடல்நீர் உள்ளே வருகிறது. நிலத்தடிநீர் பாதிக்கப்படுகிறது. மணல் கம்பெனி தூசியால் மக்களின் உடல்நிலை, இயல்புவாழ்க்கை பாதிக்கப்படுகிறது. கடல் சிவப்பாக மாறிவிட்டது. கூடங்குளம் போராட்டக்குழு இப்பகுதி கடல்நீரை சோதனை செய்ததில் ட்ரேசஸ் ஆப் சயனைடு உள்ளதாகக் கண்டறிந்துள்ளனர் என்றார்.
திருநெல்வேலி மாவட்ட கடலோர கிராம கமிட்டிகளின் கூட்டமைப்பு தலைவர் ஜோசப் கூறுகையில்
“சின்ன வயதில் செருப்பில்லாமல் ஊரில் நடப்போம். இன்று நடந்தால் கால் த்துவிடும். இயற்கையான மணலை சூடுபடுத்தினால் குறிப்பிட்ட வெப்பநிலைக்கு மேல் போகாது. இன்று மணலின் இயற்கைத் தன்மை மாற்றப்பட்டதால், கதிரியக்கத் தன்மை உருவாகி மணலின் வெப்பம் பல மடங்கு அதிகரிக்கிறது. இன்று கடற்கரையே மணல் கம்பெனிக்குச் சொந்தமாகிவிட்டது”என்றார்.
முன்னாள் அரசு செயலாளர் ஐ.ஏ.எஸ் அதிகாரியான
சுந்தரத்தை சந்தித்தபோது
“மூன்று வருடங்களுக்கு முன்பு தாதுமணல் நிறுவனங்கள் சட்டழ்ரோதமாக கனிம வளங்கள் உடைய கடற்கரை மண்ணினை வெட்டியெடுத்து வியாபாரம் செய்வதாக எனக்குத் தகவல் கிடைத்தது. போதுமான விவரங்களையும், ஆவணங்களையும் திரட்டினேன். பின் எனது நண்பரும், மண்வள நிபுணருமான டாக்டர்.விக்டர் ராஜமாணிக்கம் தலைமையில் ஒரு குழுவினை அனுப்பி தூத்துக்குடி – திருநெல்வேலி – கன்னியாகுமரி கடற்கரை பகுதிகள் முழுக்க ஆய்வு செய்தோம். அதன் பின்னர் நானே நேரடியாக சென்று பார்த்ததில் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள அரிய கனிமங்கள் கொண்ட கடற்கரை மணல் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதை உறுதி செய்து கொண்டேன். கூடுதல் விபரங்கள் திரட்ட தகவல் பெறும் உரிமை சட்டத்தின் மூலம் ஆவணங்களை பெற்றேன். மூன்று மாவட்டங்களிலும் நடைபெற்று வந்த கடற்கரை மணற்கொள்ளை குறித்து அனைத்து துறை அதிகாரிகளுக்கும் 1500-க்கும் மேற்பட்ட புகார்கள் மற்றும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ்மனுக்கள் அளித்துள்ளேன். ஒருவர் கூட பதிலளிக்கவுமில்லை, நடவடிக்கையும் இல்லை. கடந்த 07.01.2013 அன்று கூட தமிழக அரசின் தலைமைச்செயலர் ஷீலா பாலகிருஷ்ணன். தொழிற்துறை செயலர் பழனியப்பனுக்கும் புகார்கள் அளித்துள்ளேன். பதில் இல்லை.என்றார்.
மணல் கம்பெனி பிரச்சனையால் உள்ளுரில் பிரச்சனை வர வாய்ப்புள்ளது. கூத்தன்குழியில் ஐம்பது பேர் மணல் கம்பெனிக்கு வேலைக்கு சென்றார்கள். ஊருக்கு மொத்த பாதிப்பு என்பதால் வேலைக்கு செல்லக்கூடாதென சமுதாய கட்டுப்பாடு போட்டார்கள். இதை ஒரு தரப்பு ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்களுக்கு பணம் கொடுத்து ஊருக்குள் ஏராளமான நாட்டு வெடிகுண்டுகளை வீசி, மணல் கம்பெனியை எதிர்ப்பவர்களை ஊரைவிட்டு விரட்டி விட்டார்கள். தற்போது அவர்கள் இடிந்தகரையில் தஞ்சமடைந்துள்ளனர் என்ற ழ்கவலையும் அறிந்தோம்.
1500-க்கும் மேற்பட்ட புகார்கள் மற்றும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் மனுக்கள் அளித்துள்ளேன். ஒருவர் கூட பதிலளிக்கவும் இல்லை, நடவடிக்கையும் இல்லை.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ரவிக்குமாரை 2-ம் தேதி அவரது அலுவலகத்தில் சந்தித்து கார்னெட் மணல் கொள்ளை தொடர்பான நடவடிக்கைகள் குறித்துக் கேட்டபோது
நான் 06.08.2013-ல் தான் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டேன். அதற்கு முன்பு என்ன நடந்ததென்று எனக்குத் தெரியாது. நீங்கள் ஏ.டீ.மைன்ஸ் (உதவி இயக்குநர். கனிம வளத்துறை) ஐப் பாருங்கள், இது சம்மந்தமாக அவருக்குத்தான் தெரியும் என்றார். மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைத்து கனிமவளக் கொள்ளையைத் தடுக்க வேண்டும் என அரசாணை உள்ளதே எனக் கேட்டதற்கு ”அப்படி ஏதும் குழு அமைக்கப்பட்டதாகத் தெரியவில்லை, ஆற்று மணல் அள்ளுவதை கண்காணிக்கத்தான் குழு அமைத்துள்ளோம் என்றவரிடம், குளத்தூர் காவல்நிலையத்தில் முன்பிருந்த ஆட்சியர் உத்தரவின் பேரில் வி.ஏ.ஓ கொடுத்த புகாருக்கு முதல் தகவல் அறிக்கை கூட பதியப்படவில்லையே என்றதற்கு ஆம் பதியப்படவில்லை, நீங்கள் ஏ.டீ. மைன்ஸ்யிடம் கேளுங்கள் என்று சொல்லி, அடுத்தடுத்த கேள்விகளைத் தடுத்துவிட்டார்.
மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் துரையை 3-ம் தேதி சந்தித்து ”அரசாணை எண்.135 நாள் 13.11.2009 -ன் கீழான கனிமத் திருட்டு தடுப்புக் குழுவில் எஸ்.பி.யும் ஒரு உறுப்பினர் என்ற அடிப்படையில் கார்னெட் மணல் கொள்ளையைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள் எனக் கேட்டதற்கு
“குழு அமைக்கச் சொல்லி அரசாணை ஏதும் இல்லை. ஆற்று மணல் அள்ளுவது தொடர்பான விபரங்கள் உள்ளது. பீச் மணல் அள்ளியது சம்மந்தமாக நான் எதுவும் சொல்ல முடியாது என்றவரிடம் குளத்தூர் காவல்நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகார் குறித்துக் கேட்க, மிகவும் கோபப்பட்டு, அதான் புகார் கொடுத்ததற்கு ரசீது போட்டுமுடித்துவிட்டோம். என்னுடைய நேரத்தை வீணாக்காதீர்கள் என்று சொல்லிப் பேச மறுத்துவிட்டார்.
“ மாவட்ட வன அலுவலர். செண்பகமூர்த்தியை சந்தித்து,
“தூத்துக்குடி மாவட்ட கடற்கரைகளில் சவுக்கு மரங்கள் அழிக்கப்பட்டுள்ளதே என்றதற்கு “
கனிமவளத்துறை துணை இயக்குநர் செல்வசேகரை 7-ம் தேதி செல்பேசியில்(9842280969) தொடர்பு கொண்டு பேசியபோது
கனிம திருட்டைத் தடுக்க அரசாணையின்படி ஆய்வுக்குழு உள்ளது. மாதாந்திர கூட்டங்கள்ன் நடைபெறும், அதில் மணல் பிரச்சனைசம் மந்தமாகப் பேசியுள்ளோம் . க்ரைம் மீட்டிங்கிலும் பேசியுள்ளோம். தாதுமணல் நிறுவனங்களுக்கு எதிரான புகார்கள் எல்லாம் தொழில் போட்டியில் வந்ததுதான். இப்பிரச்சனை தொடர்பான ஆவணங்களை ககன்தீப்சிங்பேடி தலைமையிலான ஆய்வுக்குழுவிடம் கொடுத்துவிட்டோம் என்றார்.
அரசாணை எண்.135 நாள் 13.11.2009ன் கீழான கனிமத் திருட்டு தடுப்புக் குழு மாவட்ட வாரியாக அமைக்க வேண்டும் என்ற சட்டப்படியான கடப்பாடு உள்ள நிலையில் இவ்வளவு நடந்த பின்னரும் தூத்துக்குடி மாவட்ட உயர் அதிகாரிகள் முன்னுக்குப்பின் முரணாகப் பேசுவது வேதனையாகவும் அதிர்ச்சியாகவும் உள்ளது. என்றார் வாஞ்சிநாதன்.
தங்கள் உண்மை கண்டறியும் குழு சார்பில் முன்வைக்கும் பரிந்துரைகளில் சில..
தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்ட கடலோர கிராமங்களில் தங்களது பணபலத்தின் மூலம் கைக்கூலிகளை உருவாக்கி, ஒவ்வொரு கிராமத்தையும் இரண்டாகப் பிளந்து, மோதலை ஏற்படுத்தி பொதுஅமைதியை சீர்குலைத்து வெடிகுண்டு கலாச்சாரத்தைப் புகுத்தியது கார்னெட் மணல் நிறுவனங்கள் தான். இந்த கார்னெட் நிறுவன உரிமையாளர்களையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். அனைத்து கடலோர கிராமங்களிலும் சமாதானக் கூட்டங்கள் (Peace meeting) நடத்தி அமைதியை ஏற்படுத்த வேண்டும்.
சட்டவிரோதமாகச் செயல்படும் மணல் நிறுவனங்களின் உரிமங்களை ரத்து செய்ய வேண்டும். ஸ்பெக்ட்ரம் ஊழல் போல, அரசு இத்தொழிலை நடத்தி சந்தை விலைக்கு கனிமங்கள் விற்கப்பட்டிருந்தால் இவ்வளவு தொகை கிடைத்திருக்கும் என்ற முறையில் இழப்பீடு கணக்கிடப்பட வேண்டும். உச்சநீதிமன்றமே நேர்மையான அதிகாரிகள் கொண்ட விசாரணைக்குழுவை அமைத்து தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் விசாரணை நடத்தி இழப்பீடு மதிப்பிடப்பட வேண்டும்.
அணுஉலை மற்றும் அணுஆயுத தயாரிப்பிற்குப் பயன்படும் தோரியத்தின் மூலப்பொருளான மோனோசைட் சட்ட விரோதமாக எடுக்கப்பட்டு ள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் 2 மில்லியன் டன் மோனோசைட் எடுக்கப்பட்டதில் 1,95,300 டன் தோரியம் எடுக்கப்பட்டுள்ளது . இதன் சர்வதேச சந்தை மதிப்பு அளவிட முடியாதது. கூடங்குளம் போராட்டத்தை தேசநலனுக்கு விரோத மானது என்று ஒடுக்கும் அணுசக்தித் துறை இக்கடத் தலைக் கண்டுகொள்ளவில்லை. கார் னெட் மணல் நிறுவனங்கள் மோனோ சைட்டைக் கடத்தியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுகிறது. ஆகவே இதுவரை பிரித்தெடுக்கபட்ட மோனாசைட் குறித்து அணுவிஞ்ஞானிகள் அடங்கிய குழு விசாரணை நடத்த வேண்டும்.
தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமாரி மாவட்டக் கடலோரங்களில் சுற்றுச்சூழல் சீர்குலைவிற்கு மணல் நிறுவனங்களே நேரடி பொறுப்பு. சுற்றுச்சூழல் சீர்கேட்டிற்கு தனியாக விசாரணை நடத்தப்பட்டு இழப்பீடு வசூலிக்கப்பட வேண்டும். கார்னெட் மணல் நிறுவனங்களின் சட்டவிரோதமணல் கொள்ளையால் மீனவர்களுக்கு புற்றுநோய், சிறுநீரக நோய், தோல்நோய், எலும்பு முறிவுகள் ஏற்பட்டுள்ளன. இது தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவதுடன், பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உரிய சிகிச்சையும் , இழப்பீடும் வழங்க வேண்டும்.
கார்னெட் மணல் சூறையாடலுக்கு கடந்த 25 ஆண்டுகளாக அரசின் அனைத்துப் பிரிவு அதிகாரிகளும் உடந்தையாக இருந்துள்ளனர் இந்த மாபெரும் ஊழலில் சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகள் மீதும் முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டு கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். சட்டவிரோதமாக சேர்க்கப்பட்ட கார்னெட் மணல் நிறுவனங் களின் சொத்துக்கள் அரசால் பறிமுதல் செய்யப்படவேண்டும். அப்பணத் திலிருந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்றார் .
மோனோசைட் என்றால் என்ன? செம்மண் நிறத்தில் பாஸ்பேட் கலந்த அரிய வகை தாது மோனோசைட். இதில் மோனோசைட், சிஇ, மோனோசைட், எல்.ஏ, மோனோசைட், என்.டி, மோனோசைட் , எஸ்.எம் ஆகிய பிரிவுகள் உள்ளன. தோரியத்துக்கான முக்கிய மூலக்கூறாக மோனோசைட் விளங்குகிறது. தோரியத்தை பகுப்பதன் மூலம் கதிர்வீச்சு எரிபொருள் உற்பத்தியாகிறது. அணுமின் நிலைங்களில் தோரிய பயன்பாடு மிகவும் அதிகம். அணுக்களை பிளக்க தோரியம் பயன்படுத்தப்படுகிறது. இது மோனோசைட்டை பல்வேறு நிலைகளுக்கு உட்படுத்தி பிரிக்கப்படுகிறது. இந்த தோரியம் கலந்த மோனோசைட் தாது தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி கடலோர மாவட்ட தாது மணலில் அதிகம் கலந்துள்ளது. தோரியம் கதிர்வீச்சு அபாயம் உள்ளது.)
முதல்வரின் அறிக்கை வரவேற்கத்தக்கது. இதுவரை நடந்த தாதுமணல் கொள்ளையில் ஈடுபட்டவர் கள் தொடர்பானவர்கள் மீது முதல்வர் நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை மக்களுக்கு இருக்கிறது. தவறு செய்த அதிகாரிகளிலிருந்து அதிகாரிகளையே ஆட்டிப்படைத்த தனி நபர்கள் வரை தண்டனையிலிருந்து தப்பமாட்டார்கள் என்று மக்கள் திடமாக நம்புகிறார்கள்.. இந்த மண்ணின் வளம் காக்கவும் மீனவர் நலன் காக்கவும் முதல்வர் துணிந்து நடவடிக்கை மேற்கொள்ளும் நாள் தான் தூத்துக்குடி, குமரி, நெல்லை மாவட்ட கடலோர மீனவர்களுக்கு உண்மையான திருநாளாக இருக்கும்.
-ப.திருமலை

மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» செக்ஸ் டாக்டர் குறித்து கிளம்பும் புதுப்புது பூதங்கள்!
» புலிகள் ஆயுத கடத்தல் கடல் புலி தளபதியை நாடு கடத்த முடியாது – கனடா அதிரடி அறிவிப்பு
» குண்டு வெடிப்பில் இறந்த ராணுவ வீரர் வங்கி கொள்ளையில் ஈடுபட முயற்சி!!
» பெண்களிடம் ஹெல்மட் கொள்ளையர்கள் அடுத்தடுத்து நகை திருட்டு
» அடுத்தடுத்து அரசின் நெருக்கடியால் ஹசாரே கோபம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum