TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


மின்வெட்டு ஏற்படுத்திய ஆட்சியின்'பவரை' பறியுங்கள்: ஜெ., ஆவேசம்

2 posters

Go down

மின்வெட்டு ஏற்படுத்திய ஆட்சியின்'பவரை' பறியுங்கள்: ஜெ., ஆவேசம் Empty மின்வெட்டு ஏற்படுத்திய ஆட்சியின்'பவரை' பறியுங்கள்: ஜெ., ஆவேசம்

Post by piraba Mon Apr 19, 2010 9:05 am

மின்வெட்டு ஏற்படுத்திய ஆட்சியின்'பவரை' பறியுங்கள்: ஜெ., ஆவேசம் Tblfpnnews_65279352665







கடலூர் : 'மின்வெட்டு செய்து வரும் தி.மு.க., அரசின், 'பவரை' நீங்கள் பறிக்க வேண்டும்' என, ஜெயலலிதா ஆவேசமாக பேசினார்.

தமிழகத்தில் நிலவிவரும் மின்வெட்டைக்
கண்டித்து நெய்வேலியில் நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கி,
அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா பேசியதாவது:இங்கு திரண்டுள்ள மக்கள்
கூட்டத்தால் எனக்கு புது உற்சாகம் ஏற்பட்டுள்ளது. நெய்வேலியில்
அமைக்கப்பட்டுள்ள எம்.ஜி.ஆர்., சிலையை திறந்து வைத்துவிட்டு, கண்டன
ஆர்ப்பாட்டம் நடத்துவது சரியாக இருக்குமா என கேள்வி எழுப்பினர்.அதற்கு
நான், கருணாநிதி என்ற தீய சக்தியை அகற்ற அ.தி.மு.க.,வை துவங்கிய
எம்.ஜி.ஆரின் சிலையை திறந்து வைத்து விட்டு, அரசைக் கண்டித்து
ஆர்ப்பாட்டம் நடத்துவது சரியாக இருக்கும் எனக் கூறினேன்.கடந்த 2006ம்
ஆண்டு எனது ஆட்சியில் மின் மிகுதி மாநிலமாக இருந்த தமிழகம், தற்போது மின்
பற்றாக்குறை காரணமாக இருளில் மூழ்கடிக்கப்பட்டுள்ளது. தமிழக மின்
வாரியத்தில் மிகப் பெரிய அளவில் ஊழல் நடந்து வருகிறது.

மத்தியக் குழுமத்திலிருந்து தமிழகத்திற்கு
கிடைக்க வேண்டிய உரிய பங்கீட்டு மின்சாரம் வழங்கப்படவில்லை. எரிவாயு
ஒதுக்கீட்டையும் மத்திய அரசு குறைத்துள்ளது. பதவி சுகத்திற்காக இதை
தட்டிக் கேட்க இந்த அரசு தயங்குகிறது. இதை நான் சுட்டிக் காட்டினால்,
கடந்த (எனது) ஆட்சியில் மின் உற்பத்தியை பெருக்க நடவடிக்கை எடுக்கவில்லை
என, கருணாநிதி அறிக்கை விடுகிறார்.ஆட்சியாளர்களின் நிர்வாக திறமையின்மை
காரணமாக வடசென்னை, தூத்துக்குடி, மேட்டூர் அனல் மின் நிலையங்களில் கடந்த
2005-06ம் ஆண்டை காட்டிலும் தற்போது 1,164 மில்லியன் யூனிட் மின்சாரம்
உற்பத்தி குறைந்துள்ளது. இதனால், தனியாரிடம் ஒரு யூனிட் மின்சாரம் 11
ரூபாய்க்கு வாங்கப்படுகிறது.

இதிலும் பெரிய அளவில் ஊழல் நடக்கிறது.அனல்
மின் நிலையங்களுக்கு நிலக்கரி இறக்குமதி செய்வதில் ஆண்டிற்கு 200 கோடி
ரூபாயும், நிலக்கரியை கொண்டு செல்வதற்கான போக்குவரத்து வகையில் ஆண்டிற்கு
45 கோடி ரூபாய் இழப்பீடு ஏற்படுகிறது.அனல் மின் நிலையங்களுக்கு தேவையான
நிலக்கரி இந்தோனேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. அங்கிருந்து
மட்டும் இறக்குமதி செய்வதற்கு ஏதோ பின்னணி உள்ளது.சரியான பராமரிப்பின்மை,
ஆட்சியாளர்களின் நிர்வாக திறமையின்மை, திட்டமிட்ட ஊழல் காரணமாக மின்
வாரியத்திற்கு ஆண்டிற்கு 2,522 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது.
தமிழகத்தில் சென்னை தவிர்த்த பிற பகுதிகளில் ஆறு மணி நேரம் மின் நிறுத்தம்
செய்யப்படுகிறது. இதனால், அனைத்து தொழில்களும் பாதிக்கிறது. வேலையில்லா
திண்டாட்டம் அதிகரித்து வருகிறது. இரவில் மக்கள் நிம்மதியாக தூங்கக் கூட
முடியவில்லை.

இதைக் கேட்டால், மக்கள் மின்சாரத்தை குறைவாக
பயன்படுத்த பழகிக் கொள்ள வேண்டும் என அமைச்சர் அன்பழகன் கூறுகிறார்.
ஆட்சியாளர்கள், அதிகாரிகள் மற்றும் அன்னிய நாட்டு கம்பெனிகளுக்கு சீரான
மின்சாரம் வழங்குவதற்காக மண்ணின் மைந்தர்கள் இருளில்
மூழ்கடிக்கப்பட்டுள்ளனர்.'பவர்' கட் செய்து வரும் தி.மு.க., ஆட்சியின்
பவரை நீங்கள் பறிக்க வேண்டும். வரும் 2011ல் அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்த
மூன்று மாதத்தில் தடையின்றி மின்சாரம் வழங்கப்படும். அதற்கு நீங்கள் துணை
நிற்க வேண்டும்.இவ்வாறு ஜெயலலிதா பேசினார்.
piraba
piraba
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1302
Join date : 12/02/2010

Back to top Go down

மின்வெட்டு ஏற்படுத்திய ஆட்சியின்'பவரை' பறியுங்கள்: ஜெ., ஆவேசம் Empty Re: மின்வெட்டு ஏற்படுத்திய ஆட்சியின்'பவரை' பறியுங்கள்: ஜெ., ஆவேசம்

Post by மாலதி Mon Apr 19, 2010 3:13 pm

மின்வெட்டு ஏற்படுத்திய ஆட்சியின்'பவரை' பறியுங்கள்: ஜெ., ஆவேசம் 917304
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum