TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


பெண்களைப் பாதிக்கும் HPV - வைரஸ் என்பது என்ன? அதிலிருந்து பாதுகாப்பது எப்படி?

2 posters

Go down

பெண்களைப் பாதிக்கும் HPV - வைரஸ் என்பது என்ன? அதிலிருந்து பாதுகாப்பது எப்படி? Empty பெண்களைப் பாதிக்கும் HPV - வைரஸ் என்பது என்ன? அதிலிருந்து பாதுகாப்பது எப்படி?

Post by sakthy Thu Sep 05, 2013 8:07 pm

பெண்களைப் பாதிக்கும் HPV - வைரஸ் என்பது என்ன? அதிலிருந்து பாதுகாப்பது எப்படி?

Human Papillomavirus – HPV (Georgios Papanikolaou என்ற கிரேக்க மருத்துவரின் பெயரால் அழைக்கப்படும்) என்ற பாலுறவினால் ஏற்படும் (sexually transmitted diseases -STDs) நோய் பற்றி சிறிது தெரிந்து கொள்வது நல்லது எனக் கருதுகிறேன்.ஆண்களுக்கும் பெண்களுக்கும் பாதுகாப்பற்ற, சுகாதார முறையற்ற உடலுறவினால் 40 ற்கு மேற்பட்ட HPV தொற்று,(அவற்றில் சில தானாகவே மறைந்து விடுவதும் உண்டு)தொடக்கத்தில் அறிகுறிகளைக் காட்டாது,முக்கியமாக தோல்,வாய், மலவாய், பிறப்புறுப்புகளைப் (skin,mouth,anal,genital areas ) பாதித்து, புற்று நோய் (throat cancer,Cervical cancer ..) மற்றும் பல நோய்களைக் தருகிறது.

முக்கியமாக பெண்களுக்கு வரும் புற்று நோய்களில் உயிரைப் பறிக்கும் இரண்டாவது இடத்தில் உள்ள, Cervical cancer ற்கு, முக்கிய காரணமாக இருப்பது இந்த HPV ஆகும்..அதனால் பெண்கள் 21 வயதில் இருந்து PAP-Test ஒன்று முதல் இரண்டு வருடத்திற்கு ஒரு முறையாவது செய்து கொள்வது பாதுகாப்பானது.( Pap test அல்லது Pap smear என்பது cervix உள்ள cells களின்,(microscopic examination of cells) மாற்றத்தைக் கண்டறிவதாகும்.இது ஒரு சில வினாடிகளில் முடிந்து விடும்.)

இந்தத் தொற்று HIV பொல் இரத்தத்தின் ஊடாக தொற்றாது போனாலும், தோல்(சருமம்) ஊடாகவும் ( skin-to-skin ), பாலியலுறவு வைத்துக் கொள்ளாத போதிலும் கூட, தொற்றக் கூடியதாகும். இன்று பாலியலுறவு இயற்கைக்கு மாறாக பல வழிகளில் அதிகரித்துள்ள நிலையில், (ஓரினச்சேர்க்கை,வாய்வழி(throat cancer ஐ ஏற்படுத்தும்),மலவாசல் வழி(anal cancer ஐ ஏற்படுத்தும்) என பெருகி வருவதால்) பாதுகாப்பு, சுகாதாரம் மிக முக்கியமாக கவனிக்க வேண்டியது அவசியமாகும்.   தொண்டை, மலவாசல் புற்று வேறு சில காரணங்களாலும் வந்தாலும் கூட,ஆண்களை விட  பெண்கள், HPV மூலம், cervical cancer ஆல் அதிகமாக பாதிக்கப்படுவதாலும்,முக்கியமாக பெண்கள் இதுபற்றி அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகிறது.

இதற்கு இரண்டு விதமாக தடுப்பு ஊசி மருந்துக்கள் ( vaccines) அதிக பாதிப்பைத் தரும் HPV க்காக பயன்படுத்தப்படுகின்றன.

இந்தத் தடுப்பு முறை,ஆண்களுக்கு 9 -26 வயது வரையும், பெண்களுக்கு 9 வயது முதல் 26 வயது வரையும்,இன்னொன்று 10-45 வயது வரையும் கொடுக்கப்படுகின்றது. முதல் ஊசி கொடுத்த, injections (shots),1-2 மாதத்தின் பின் இரண்டாவதும், ஆறாவது மாதத்தில் மூன்றாவதுமாக, மூன்று முறை,(dose) கொடுக்கப்படுகிறது.  இந்தத் தடுப்பு முறை, நோய் வராமல் தடுக்கும் பாதுகாப்பே தவிர,  cervical cancer ஐக் குணப்படுத்த அல்ல என்பதை கவனிக்க வேண்டும்.

இதை விட பலருக்கு அவர்களின் சுகாதாரக் குறைவும்,பல ஆண்களுடன் இருக்கும் தொடர்பும், சிறுவயதுத் திருமணம் போன்றவையும் காரணமாகி விடுகிறது.(முன்னர் ஒருவனுக்கு ஒருத்தி என்று இருந்த நிலை மாறி,இன்று விவாக இரத்துக்களினால் ஏற்படும் மறு திருமணங்களால், பல ஆண்களுடனான தொடர்பு ஏற்படவே செய்கிறது)  அது தவிர குளியல் அறைக்குள் குழிக்கும் நகரப்புற பெண்கள் மட்டுமல்ல, திறந்த வெளியில் ஆற்றிலோ கிணற்றிலோ குழிக்கும் புறநகர்,கிராம பெண்களும் மறைக்கப்பட்ட உள் உறுப்புக்களை நன்கு கழுவி சுத்தமாக வைத்திருக்க வேண்டியது அவசியம்.இது பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் பொருந்தும். நம் வேலை முடிந்து விட்டது என்று உடலுறவிற்குப் பின், மறு பக்கம் திரும்பி குறட்டை விட்டு தூங்கி விடாது, நன்கு கழுவி சுத்தம் செய்து விட்டு தூங்கலாமே.இந்த உடற் சுகாதாரம் இன்றைய நாகரீக உலகில் மிக மிக அவசியமாகிறது.

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். ஆனாலும் அந்த நோய்களை, பல சமயங்களில் நாமே தெரிந்தே தேடிக் கொள்கிறோம் என்பது என்னவோ உண்மைதான்.
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

பெண்களைப் பாதிக்கும் HPV - வைரஸ் என்பது என்ன? அதிலிருந்து பாதுகாப்பது எப்படி? Empty Re: பெண்களைப் பாதிக்கும் HPV - வைரஸ் என்பது என்ன? அதிலிருந்து பாதுகாப்பது எப்படி?

Post by mmani Thu Sep 05, 2013 9:11 pm

நன்றி சக்தி .......பயன்தரும் தகவல்
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum