TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


மெட்ராஸ் கஃபே இந்தி திரைப்படத்தில் பாஸ்கரன் என்ற பெயரில் பிரபாகரன் பாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Go down

மெட்ராஸ் கஃபே இந்தி திரைப்படத்தில் பாஸ்கரன் என்ற பெயரில் பிரபாகரன் பாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். Empty மெட்ராஸ் கஃபே இந்தி திரைப்படத்தில் பாஸ்கரன் என்ற பெயரில் பிரபாகரன் பாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Post by அருள் Mon Aug 19, 2013 2:41 pm

மெட்ராஸ் கஃபே இந்தி திரைப்படத்தில் பாஸ்கரன் என்ற பெயரில் பிரபாகரன் பாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

மெட்ராஸ் கஃபே இந்தி திரைப்படத்தில் பாஸ்கரன் என்ற பெயரில் பிரபாகரன் பாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். 581789_561875000559051_18361422_n’’தமிழ் இனத்துக்கு மிகவும் துன்பமான காலம் நம்மைக் கடந்து செல்லும் நாள்கள். ஒன்றன்பின் ஒன்றாக, தமிழர் நெஞ்சில் சூட்டுக் கோலைத் திணிக்கும் நிகழ்வுகள் தொடர்கின்றன.

நினைத்தாலே மனதை நடுங்கச் செய்யும் படுகொலைகளை, குறிப்பாக இலட்சக்கணக்கான யூதர்களை, கொடூரமாக அழித்த மாபாதகச் செயலை, ஜெர்மானிய ஹிட்லர் நாஜிப்படைகளைக் கொண்டு நடத்தியதற்குப் பின்னர், மனிதப் பேரழிவுகளுள் ஒன்றாக, ஈழத்தமிழர் படுகொலையை, ராஜபக்ஷ அரசு செய்தது.

பிஞ்சுக்குழந்தைகள், சின்னஞ்சிறுவர், சிறுமியர், தாய்மார்கள், முதிர்ந்த வயதினர் உள்ளிட்ட, எண்ணற்ற ஈழத்தமிழர்களை, துடிக்கத் துடிக்கக் கொன்று அழித்த, கொலைகார ராஜபக்ஷ கூட்டத்தை, அனைத்து உலக நீதிமன்றத்தின் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தித் தண்டிக்கும் நாள் என்று வரும்? எப்பொழுது தமிழனுக்கு உலகில் நீதி கிடைக்கும்? என்று, நாம் தவிக்கும் நிலையில், ஈழத்தின் விடுதலைக்காக ஈடு சொல்ல முடியாத வீரச்சமர் புரிந்து, உன்னதமான உயிர்த்தியாகம் செய்த தமிழ் ஈழ விடுதலைப்புலிகளை இழிவுபடுத்தி, அபாண்டமான பழி சுமத்தி, நீதியை நிரந்தரமாகக் குழி தோண்டிப் புதைக்க, சிங்கள அரசு பல முனைகளிலும் தனது அக்கிரமச் செயலை முடுக்கி விட்டு உள்ளது.

எண்பதுகளின் பிற்பகுதியில் இருந்தே ஈழத்தமிழருக்கு வஞ்சகமும், துரோகமும் செய்த இந்தியாவின் காங்கிரஸ் தலைமை, 2004 ஆம் ஆண்டில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசைத் தன் தலைமையில் அமைத்த நாளில் இருந்து, விடுதலைப்புலிகளை அழிக்க, சிங்கள அரசோடு இணைந்து செயல்பட்டது. முப்படைத் தளவாடங்களையும் தந்தது; யுத்தத்தை முழுக்க முழுக்க இயக்கியது. அந்த முயற்சியில் இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்களையும் கொன்று குவித்தனர். ஈழத்தமிழர் இனப்படுகொலையின் கூட்டுக் குற்றவாளிதான் இந்திய அரசு.

அதனால்தான் உலகத்தின் கண்களில் மண்ணைத் தூவவும், சிங்கள அரசைப் பாதுகாக்கவும் திட்டமிட்டு, தற்போது காமன்வெல்த் மாநாட்டை கொழும்பில் நடத்த ஏற்பாடு செய்து இருக்கிறது. இதயங்களில் இரத்தத்தைக் கொட்டச் செய்யும், தமிழ் இனக்கொலைக் காட்சிகளை, சேனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டபோதுதான் நடந்த கொடூரம் உலகுக்குத் தெரிந்தது. குறிப்பாக, எட்டு ஈழத் தமிழ் இளைஞர்கள் அம்மணமாக, கண்கள் கைகள் கட்டப்பட்ட நிலையில் சுட்டுக் கொல்லப்பட்ட காட்சியும், இசைப்பிரியா மிகக் கொடூரமாக இராணுவத்தால் கொல்லப்பட்ட காட்சியும், மனித மனங்களை உலுக்கின.

ஈழத்தில் நடத்திய படுகொலைகளை மறைப்பதற்காக சிங்கள அரசும், செய்த துரோகத்தைத் தொடர்ந்து கொண்டு இருக்கும் இந்திய அரசும், திட்டமிட்டு, இந்தியாவில் உள்ள ஒரு திரைப்பட நிறுவனத்தைப் பயன்படுத்தித் தயாரித்த படம்தான் மெட்ராஸ் கஃபே எனும் திரைப்படம் ஆகும்.

இந்தப் படத்தின் தயாரிப்பாளரும், பிரதானப் பாத்திரத்தில் நடித்துள்ளவனுமான, கேரளத்தைச் சேர்ந்த ஜான் ஆபிரகாம், ரகசியமாக கொடியவன் மகிந்த ராஜபக்ஷயை, இருமுறை சந்தித்து உள்ளான். இலங்கையிலும் படப்பிடிப்பு நடத்திவிட்டு, தற்போது, இல்லை என்று மறுக்கவும் செய்கிறான். இந்தப் படத்தை, சூஜித் சர்கார் என்பவன் இயக்கி உள்ளான். 1987 இல், இந்திய அமைதிப்படை, இலங்கைக்குச் சென்றதைப் பின்புலமாகச் சித்தரித்து, இப்படத்தை எடுத்து உள்ளனர்.

தமிழ் ஈழ விடுதலைப்புலிகளைக் கொடூர மானவர்களாகவும், இந்திய இராணுவத்தினர் பலரை அவர்கள் கொன்றதாகவும், அமைதிப்படை இந்தியா திரும்பிய பின்னர், இந்தியாவின் உளவு நிறுவனமான ரா அமைப்பின் அதிகாரியாக, கேரளத்தைச் சேர்ந்தவனாக, இலங்கைக்கு படத்தின் கதாநாயகன் ஜான் ஆபிரகாம் சென்று, அங்கு உள்ள நிலைமையை அறிவதாகவும், பின்னர் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்படுவதாகவும், இப்படம் சித்தரிக்கிறது.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களை, பாஸ்கரன் என்ற பெயரில், படத்தில் ஒரு பாத்திரமாக்கி, ராஜீவ் படுகொலையில் துளி அளவு ஆதாரம் கூட இல்லாத, ஒரு அப்பட்டமான பொய்யைக் காட்சி ஆக்கி, கோடானுகோடித் தமிழர்கள் நெஞ்சார நேசித்து மதிக்கும் தலைவர் பிரபாகரன் அவர்களை, மோசமாகக் களங்கப்படுத்தி, காட்சிகள் அமைக்கப்பட்டு உள்ளன.

1987 இந்திய-இலங்கை ஒப்பந்தம் என்பதே, அன்றைய ராஜீவ் காந்தி அரசு, ஈழத்தமிழர்களுக்குச் செய்த மன்னிக்க முடியாத, துரோகம் ஆகும். நயவஞ்சகமாகப் பொய் சொல்லி, தலைவர் பிரபாகரன் அவர்களை இந்தியாவுக்கு அழைத்துக் கொண்டு வந்து, அவரது விருப்பத்துக்கு எதிராக, கட்டாயப்படுத்தித் திணித்த ஒப்பந்தம்தான் ராஜீவ்காந்தி-ஜெயவர்த்தனா ஒப்பந்தம் என்பதை, ஆகஸ்ட் 4 ஆம் நாள் சுதுமலையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், பிரபாகரன் திட்டவட்டமாகக் குறிப்பிட்டார்.

‘பிரபாகரன் தலைக்குப் பத்து இலட்சம் பரிசு’ என்று இந்திய இராணுவ அமைச்சர் கே.சி.பந்த் அருகில் இருக்க, ஜெயவர்த்தனா அறிவித்தான். தியாக தீபம் திலீபன், துளி நீரும் பருகாமல் உயிர்ப்பலி ஆனதற்கும் இந்திய அரசே காரணம். குமரப்பா, புலேந்திரன் உள்ளிட்ட, 12 புலிப்படைத் தளபதிகள், நச்சுக்குப்பி கடித்து மடிவதற்கும், இந்திய அரசே காரணம்.

1987 அக்டோபரில், பிரபாகரனைக் கொலை செய்ய, இந்திய இராணுவ கமாண்டோக்களை ஏவினர். புலிகளின் செய்தித்தாள் அலுவலகங்கள், தொலைக்காட்சி அலுவலகத்தை, இந்திய இராணுவம் தாக்கி அழித்தது. எண்ணற்ற தமிழ்ப் பெண்களைக் கற்பழித்தனர். யாழ்ப்பபாண மருத்துவமனையின் மீது குண்டுகளை வீசினர். ஆயிரக்கணக்கான ஈழத்தமிழர்களைப் படுகொலை செய்தனர்.

‘தமிழர்களின் சடலங்கள், சாலை ஓரங்களில் கிடக்கின்றன; நாய் நரிகளும், காக்கை கழுகுகளும் தின்னுகின்றன’ என்று, லண்டனில் இருந்து வெளியாகின்ற கார்டியன் பத்திரிகை தெரிவித்தது.

லண்டன் டைம்ஸ் ஏட்டின் செய்தியாளர் டேவிட் ஹவுஸ்கோ, ‘வியட்நாமின் மைலாய் என்ற ஊரில் அமெரிக்கா நடத்திய படுகொலைகளை, இந்திய இராணுவம் வல்வெட்டித்துறையில் செய்தது’ என்று எழுதினார்.

இந்திய இராணுவத்தின் இக்கோரத் தாண்டவத்தைப் பற்றி, ஒரு வினாடி காட்சி கூட இத்திரைப்படத்தில் கிடையாது. இந்திய உளவுத்துறை நிறுவனமான றோ பிரபாகரனைக் கொலை செய்யப் பலமுறை திட்டமிட்டது. அதற்காக, மாத்தையா, கிருபன் போன்ற துரோகிகளைப் பயன்படுத்தியது.

போரை நிறுத்துமாறும், பேச்சுவார்த்தைக்குத் தான் தயார் என்றும், பிரபாகரன் அவர்கள், இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்திக்கு எழுதிய எட்டுக் கடிதங்கள் எழுதியும், அவற்றை ராஜீவ் காந்தி குப்பைத் தொட்டியில் போட்டார். இந்திய உளவு நிறுவனம் றோ விடுதலைப்புலிகளின் முன்னாள் யாழ் தளபதி ஜானியை, சென்னையில் இருந்து உலங்கு ஊர்தியில் கொண்டு போய், வன்னிக்காடுகளுக்கு அருகில் சேர்த்து, பிரபாகரனைச் சந்தித்து வருமாறு அனுப்பி வைத்தது. அவர் திரும்பி வருகையில், இந்திய இராணுவமே அவரைச் சுட்டுக் கொன்றது. இப்படி ஒரு துரோகத்தை உலகில் எந்த நாடும் செய்தது இல்லை. 1992 யாழ்ப்பாணத் தளபதி கிட்டுவை, இந்தியக் கடல் எல்லையில் இருந்து பலநூறு கிலோமீட்டர்களுக்கு அப்பால், பன்னாட்டுக் கடல் பரப்பில், இந்தியக் கடற்படை முற்றுகை இட்டுத் தாக்கிக் கொன்றது.

இந்திய இராணுவம் ஈழத்தில் இழைத்த கொடுமைகளை, மனதில் ஆறாத இரணமாகிப் போன ஈழத்தமிழர் துயரத்தை, இந்திய அரசின் துரோகத்தை, நான் அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தியின் முன்னிலையிலேயே, நாடாளுமன்றத்தில் குற்றச்சாட்டாகப் பதிவு செய்து இருக்கிறேன்.

2004 ஆம் ஆண்டுக்குப் பிறகு, சோனியா காந்தி இயக்குகின்ற காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு செய்த மன்னிக்க முடியாத பெருந்துரோகத்தால், இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இந்த துரோகத்தை மறைக்கவும், கொடியவன் சிங்கள அரசுக்குத் தொடர்ந்து உதவவும், இலங்கை-இந்திய அரசுகளின் திட்டமிட்ட ஏற்பாடுதான், ஜான் ஆபிரகாமின் மெட்ராஸ் கஃபே திரைப்படம் ஆகும்.

என்ன கொழுப்பு இருந்தால், நம்மை யார் என்ன கேட்க முடியும் என்ற திமிர் இருந்தால், படத்துக்கு ‘மெட்ராஸ் கஃபே’ என்று பெயர் சூட்டுவான்?

ஈழத்தமிழர்களுக்குப் பெருங்கேடு செய்த ஜே.என். தீட்சித், இந்திய அரசின் துரோகத்துக்குக் ஆலோசனைகள் கூறிய எம்.கே. நாராயணன், சிவசங்கர மேனன், கொடியவன் ராஜபக்ஷக்கு ஆலோசகரான சுதீஷ் நம்பியார் போல, கேரள மண்ணில் இருந்து மற்றொருவன் ஜான் ஆபிரகாம்.

மெட்ராஸ் கஃபே திரைப்படத்தைத் தயாரிப்பதற்கு, இந்திய அரசும், சிங்கள அரசும், பெருமளவுக்கு உதவி இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

1984 இல், டெல்லியில் நடைபெற்ற பிரதமர் இந்திரா படுகொலையைப் பின்புலமாகக் கொண்டு, சீக்கிய இன மக்களை இழிவுபடுத்தித் திரைப்படம் தயாரிக்கும் துணிச்சல், பாலிவுட் திரை உலகுக்கு உண்டா? அப்படி ஒரு படம் தயாரித்து, பஞ்சாபில் திரையிட முனைவானா? தமிழர்கள் சொரணை அற்றுப் போய் விட்டார்களா? சோற்றால் அடித்த பிண்டங்களா?

தமிழர்களின் தொப்புள் கொடி உறவுகள், இலட்சக்கணக்கில் கொல்லப்பட்டபோது, நெஞ்சு கொதித்த தால் தான், கொழுந்து விட்டு எரிந்த மரண நெருப்புக்கு, முத்துக்குமார் உள்ளிட்ட 18 தமிழர்கள், தங்கள் உயிர்களைப் பலியிட்டனர்.

ஆனையிறவு, ஓயாத அலைகள், அக்கினி அலைகள் சமர்களில், விடுதலைப்புலிகளிடம், தோற்று ஓடிய சிங்கள இராணுவத்துக்கு, உலகம் தடை செய்த ஆயுதங்களைக் கொடுத்து, சீனா-பாகிஸ்தான், ரஷ்யா, இஸ்ரேல், ஈரான் உள்ளிட்ட அணு ஆயுத வல்லரசுகளின் ஆயுத உதவியைப் பெற, கோடிகோடியாய்ப் பணத்தையும் அள்ளிக்கொடுத்த காங்கிரசின் இந்திய அரசு, மேலும் மேலும் துரோகத்தைத் தொடருகிறது.

தமிழனுக்கு நீதி கேட்டு நாம் போராடுகிறோம். நீதியை அழிக்க, வல்லாண்மை சக்திகள், வேகமாக வேலை செய்கின்றன. இந்தக் கூட்டுச் சதியை, தாய்த் தமிழகத்துத் தமிழர்களும், உலக நாடுகளில் வசிக்கின்ற தமிழர்களும் புரிந்து கொள்ள வேண்டும். உலகின் எந்தப் பகுதியில் இப்படம் திரையிடப்பட்டாலும், அங்கு உள்ள தமிழர்கள், தங்கள் கண்டனத்தையும், எதிர்ப்பையும் பதிவு செய்ய வேண்டும்.

ஆகஸ்ட் 23 ஆம் திகதி படம் திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்தத் திரைப்படத்தை இந்திய அரசு தடை செய்ய வேண்டும்.

இதனை மீறி படம் திரையிடப்பட்டால், மும்பை உள்ளிட்ட இந்திய நகரங்களில் உள்ள தமிழர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் தடுப்பதற்கு அறப்போர் நடத்திட வேண்டும்!

தமிழகத்தில் திரையிடுவதற்கு, தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது; திரை அரங்குகளின் உரிமையாளர்கள் திரையிடக் கூடாது என வேண்டுகிறேன். தமிழகத் திரை உலகத்தினர், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையிடுவதைத் தடுப்பதற்கு முன்வர வேண்டுகிறேன்.

இதற்கு மேலும் இப்படம் தமிழ்நாட்டில் திரையிடப்படுமானால், அதனைத் தடுப்பதற்கு, திரை அரங்குகளை முற்றுகை இடும் அறப்போரை நடத்துவோம்; கழகக் கண்மணிகளும், தமிழ் உணர்வாளர்களும், ஈழத்தமிழர் உரிமைக்குத் தொடர்ந்து போராடி வருகின்ற தோழர்களும், களமாடிய மாணவர்களும், பெருந்திரளாகப் பங்கு ஏற்குமாறு வேண்டுகிறேன்’’என்று தெரிவித்துள்ளார்.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» மத்தியப் பிரதேச மாநிலம் சாஞ்சிக்கு வரும் இலங்கை அதிபர் ராஜபட்சவுக்குக் கறுப்புக் கொடி காட்டுவதற்காக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் சென்னையில் இருந்து மதிமுகவினர் பஸ்ஸில் பயணம் செய்கின்றனர்.
» மெட்ராஸ் கஃபே படத்திற்கு எதிராக மும்பையில் திரையரங்கம் முற்றுகை: பதாகைகள் கிழிப்பு
» மெட்ராஸ் கஃபே, ஜான் ஆபிரகாம் இலங்கை தூதரகத்தில் சிக்கியது புகைப்பட ஆதாரம்!
» மானம் என்ற பெயரில்...
» ‘மெட்ராஸ் கஃபே’ திரைப்படம் ராஜபக்‌ஷே பணம் கொடுத்து, சோனியா காந்தி டைரக்ட் செய்து, இந்திய ரா உளவுத்துறை கதை, வசனம் !

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum