Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
வரலாறு கரும்புலி மேஜர் காந்தரூபன்
Page 1 of 1
வரலாறு கரும்புலி மேஜர் காந்தரூபன்
” காந்தரூபன் அறிவிச் சோலைக்கு ” வித்திட்ட கரும்புலி மேஜர் காந்தரூபன்.
1987 இன் ஆரம்பம். அப்போது காந்தரூபன் தொண்டைமானாறு சிங்களப் படைமுகாமைச் சுற்றியிருந்த காவலரணில் கடமையில் இருந்தான். ஒரு நாள் முகாமிலிருந்து சிங்களப் படையினர் வெளியேறியபோது சண்டை தொடங்கியது. அச்சண்டையின் ஒரு சர்ந்தப்பத்தில் , எதிரியின் கையில் உயிருடன் பிடிபட்டுவிடக்கூடிய சூழ்நிலை உருவாகியபொழுது , காந்தரூபன் குப்பியைக் கடித்துவிட்டான். ஆனால் , அதிஸ்ரவசமாக சக தோழர்களால் மீட்க்கப்பட்டு காப்பாற்றப்பட்டான்.
இருந்தபோதும் – சயனைட் விஷம் காந்தரூபனின் உடலில் ஒரு உட்பாதிப்பை உண்டாக்கியிருந்தது. இந்த உட்பாதிப்பிற்க்கான பராமரிப்பு முறைகளில் அத்தியாவசியமானதாக நிறை உணவு அருந்த வேண்டுமென , மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டிருந்தது.
1988ம் – 1989ம் ஆண்டு காலம். இப்போது காந்தரூபன் தலைவர் அவர்களுக்குப் பக்கத்தில் மணலாற்றுக் காட்டில் நின்றான்.
காந்தரூபனிற்கு இப்போதும் நிறை உணவு தேவைப்பட்டது. ஒரு பசுமாடு இருந்தால் காந்தரூபனிற்கும் – சுகவீனம் அடைகின்ற போராளிகளுக்கும் பால் கொடுக்க முடியும் எனக் கருதிய தலைவர் , வெளியிலிருந்து பால்தரக்கூடிய நல்ல இனப் பசு ஒன்றை , காட்டுக்குள் இருந்த தளத்திற்கு கொண்டு வருமாறு சொன்னார். பசு வந்து சேர்ந்தது.
தலைவரின் துணைவியார் , ஒரு தாயைப்போல இருந்து பால் காய்ச்சிக் கொடுத்தார்.
அந்தப் பொழுதுகளிலெல்லாம் காந்தரூபன் நெஞ்சு நெகிழ்ந்து நிர்ப்பான். தான் ஒரு கதியற்றவன் என்ற கவலையே அற்றுப்போகும்.
ஒரு நாள் அன்பு கலந்த மரியாதையோடு , காந்தரூபன் தலைவருக்குப் பக்கத்தில் வந்தான். பாசத்தோடு அவனை அழைத்து அருகில் இருத்திக் கதைத்தார் தலைவர்.
” அண்ணை…. என்னை கரும்புலிகளில் சேர்த்துக் கொள்ளுங்கோ… “ என்றான். அதோடு தனது உள்ளத்துக்குள் உறைந்து கிடந்த இன்னொரு விருப்பத்தையும் அவன் தலைவரிடம் சொன்னான். தயவு செய்து நீங்கள் அதைச் செய்ய வேணும் …. “ அவனுக்கருகில் இருந்து அவன் சொல்வதைக் கவனமாகக் கேட்டுக்கொண்டிருந்தார் தலைவர். “ என்னைப் போல எத்தனையோ பெடியள் இந்த நாட்டில அநாதைகளாக வாழுறாங்கள் … அப்பா , அம்மா இல்லாம , சொந்தக்காரரின் ஆதரவில்லாம அலைஞ்சு திரியிறாங்கள். வாழ இடமில்லாம , படிக்க வசதி இல்லாமல் , எவ்வளவோ ஏக்கங்களோடையும் – துன்பங்களோடையும் அவங்கள் இருப்பாங்கள் எண்டிறதை , நான் அனுபவித்ததில கண்டனான் அண்ணை…. “ ” நீங்கள் என்னை அன்போட கவனிச்சுப் பார்த்ததைப் போல அவங்களையும் கவனிக்க வேணும். அவங்கள் எந்தக் குறையுமில்லாமல் வளரவும் நன்றாகப் படிக்கவும் வசதி செய்து கொடுங்கோ. அவர்களுக்கென்று ஒரு இடத்தை அமைத்து , அங்குவைத்து அவர்களையெல்லாம் வளர்த்தெடுத்து – அவர்களுக்கு ஒரு ஒளிமயமான எதிர்காலத்தைக் கொடுத்து விடுங்கள் அண்ணை …. “ தலைவரின் இதயத்தை இது தொட்டது. அப்படியான ஒன்றின் தேவை பற்றி எண்ணியிருந்த தலைவருக்கு காந்தரூபனின் வேண்டுகோள் மகிழ்ட்சியைக் கொடுத்தது. அவ்வாறான இல்ல மொன்றை ஆரம்பித்து – காந்தரூபனின் நினைவாக , அதனை ” காந்தரூபன் அறிவுச்சோலை ” என்ற பெயரிலேயே இன்று செயற்ப்பட அவருடைய கண்கள் கலங்க்கிபோயிருந்தன. தனது சால்வையால் கண்களை ஒற்றிக் கொண்டார். அருகிலேயே நின்ற அம்மா சொன்னார் – ” அன்றைக்கு முழுவதும் இவர் ஒரு மாதிரியா இருந்தார். நான் ஒன்றுமே கேட்கவில்லை. பின்னேரம் , கடலில் பொடியள் கரும்புலியாய் போய் கப்பலடிக்கப் போறாங்களாம். எண்டு , பாத்திட்டு வாறனெண்டு போனார். காந்தரூபனும் போகப் போறான் எண்டு இவர் சொல்லவில்லலை. இரவானதும் எனக்கு நித்திரை வரமறுக்குது. சத்தத்தையாவது கேப்பமென்று வீட்டு வாசலில் இருந்தன். கொஞ்ச நேரத்தில் கடலதிரச் சத்தங்கேட்டது. நான் வாசலிலேயே இருந்தன். சாமம் ஒரு மணியளவில் இவர் ஒரு மாதிரியாக , சோர்ந்துபோய் வந்தார”
“ வீட்டுக்குள்ள வந்தவர் – ‘ எங்கட காந்தரூபனும் கரும்புலியாய்ப் போனவன் ‘ என்று சொல்லிப் போட்டு அழுதார். யோகராசா அண்ணரும் , மனைவியும் பிற்காலத்தில் மூன்று குழந்தைகளைப் பெற்றார்கள். அவர்கள் தங்களுக்கு நான்கு குழந்தைகள் என்று சொல்கின்றார்கள். தங்களுடைய முதல் மகன் கோணேஸ்வரன் ( காந்தர்ரூபன் ) என்கிறார்கள். அவர்களுடைய மூத்த மகன் கரும்புலியாகிக் கடலிலே காவியமாகியபின் , அவர்களுடைய நான்காவது மகன் பிறந்தான். இப்போது கைக்குழந்தையான அவனைத் தூக்கித் தோளில் சாய்த்தபடி அந்தத் தாய் சொல்கிறாள் …. ” காந்தரூபனா நினைத்துத்தான் இவனை நான் வளர்க்கிறன். “ இந்தத் தாயுடன் கூடவே அவரது தமக்கையாரும் இருந்தார். அதே உணர்வு , சின்ன வயது முதல் காந்தரூபன் மீது அன்பு செலுத்திய இந்த பெரியம்மாவும் சேர்ந்து , கடந்த காலத்தை நினைவு கூர்ந்தார். ” சின்ன வயதில காந்தரூபன் என்ர பிள்ளைகளோட சேர்ந்துதான் விளையாடித்திரிவான். படிக்கிரதென்றால் அவனுக்கு சரியான கள்ளம். என்ர மகள் அவனைக் கூட்டிக்கொண்டு வந்து இருத்தி , எழுதக் கற்றுக் கொடுப்பாள் . ‘ அ ‘ எழுதி , ‘ ஆ ‘ எழுதி ‘ இ ‘ எழுதும் போது , ” இதென்ன கனக்க சுழிபோட வேண்டியிருக்கு…. எழுதப்படுதில்லை ” என்று சொல்லிக் கொப்பியைத் தூக்கி எறிஞ்சுபோட்டு ஓடிவிடுவான். ” அப்படிப்பட்டவன் , பிறகு இயக்கத்திற்குப் போய் கோக்ஞ்சக்காலத்தில திரும்பி வரேக்க பெரிய அறிவாளியாக இருந்தான். பெரிய அரசியல் மேதைகளைப் போல எங்களுக்கெல்லாம் விளக்கம் தருவான். அந்தளவுக்கு அவனை இயக்கம் தான் வளர்த்து விட்டது. “ பெரியம்மா தொடர்ந்து சொன்னார்.
” கப்பலடிக்கிறதுக்குப் போறத்துக்கு இரண்டு நாளைக்கு முன்னர் சரியான வெயிலுக்கை வீட்டுக்கு வந்தான். “ ‘ தலையிடியாக் கிடக்கு பனடோல் தாங்கோ ‘ என்றான். கொடுத்தேன். வாங்கிக் குடித்தான்.
‘ நான் ஒரு முக்கியமான வேலையாக வேற ஒரு இடத்துக்குப் போறேன் பெரியம்மா ‘ என்றான். வருத்தம் என்று சொல்லுறாயேடா தம்பி ….. தலைவரிட்ட சொல்லிப் போட்டு நில்லன். இன்னொருதரம் போகலாம் தானே ?…. என்று ஆலோசனை சொன்னேன். ‘ …. இல்லை பெரியம்மா. அந்த வேலைக்குப் போகப்போறன் என்று நானாத்தான் அவரிட்டைக் கேட்டனான்…. கட்டாயம் நான் தான் அந்த வேலைக்குப் போகோணும்… ‘ என்றான் .
” சரி தம்பி ….. சுகமாய் போய் சுகமாய் திரும்பி வா ” என்று நான் சொல்ல – அவன் திரும்பிச் சொன்னான் -
‘ சுகமாய் போவேன் பெரியம்மா ….. அதில பிரசினையில்ல ….. ஆனா ….. திரும்பி வாறதென்கிறது தான் ….. சரிபார்ப்பம் …. என்றான்.
அதற்க்கு மேல் பெரியம்மாவால் பேசமுடியவில்லை. மறுபக்கம் திரும்பி கண்களை துடைத்துக் கொண்டார்.
மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Re: வரலாறு கரும்புலி மேஜர் காந்தரூபன்
” அடுத்தநாள் தான் தம்பி தெரிஞ்சது. அதில நான் பெத்த குஞ்சுவும் ஒண்டெண்டு ” : கடற்கரும்புலி கப்டன் வினோத்தின் அப்பா.
அண்டைக்கு ஊரெல்லாம் ஒரே பரபரப்பாய் இருந்தது. அண்ணைமார் கடற்கரைக்கு வாறதும் போறதுமாய் இருந்தினம்.
” இன்றைக்குப் பெடியள் கரும்புலியாய்ப் போய் நேவிக் கப்பலை அடிக்கப்போறாங்களாம். “ என்று , ஜனங்கள் பரவலாய்க் கதைக்கினம்.
” அப்படியெண்டா நாளைக்குக் காலமை நேவி அடிப்பான் “ என்று கொஞ்சச்சனம் ஊரை விட்டுக் கிளம்பி விட்டினம். நல்லாய் இருண்டதுக்குப் பிறகு ஊர்ச்சனங்கள் கொஞ்சம் கப்பல் அடிக்கிறதைப் பார்ப்பதென்று கடற்கரைக்குப் போனார்கள் , நாங்களும் போனம். கடலில் இருந்து கூப்பிடு தூரம்தான் எங்கள் வீடு. ” முகபாவத்தில் கவலையும் மகிழ்வும் மாறி மாறி வெளிப்பட , அந்த அக்கா சொல்லிக்கொண்டிருந்தா.
” அம்மாவும் அப்பாவும் கரைக்கு வரேல்லை , அவை வீட்டு வாசலிலேயே நின்றுகொண்டிருந்தனர். கரையில் நாங்கள் போய் பார்த்துக் கொண்டு நின்றம். படகுகள் வெளிக்கிட்டுப் போனது. நாங்கள் கொஞ்சம் தூரத்தில் நிண்டனாங்கள் – இருள் வேறு. ஆட்களை அடையாளம் தெரியேலை… படகுகள் வெளிக்கிட்டன. கொஞ்ச நேரத்தில் இருளுக்குள் மறந்து போய்விட்டது. இருளைப் போலவே மெளனமும் நிலவியது.
நாங்கள் இருளுக்கால கடலைப் பார்த்துக் கொண்டு நின்றம்.
தீடிரென பெரிய வெளிட்சமாய் நெருப்புச்சுவாலை கடலுக்குள் எரிய , நிலம் நடுங்கிற மாதிரி ஒரு வெடிச்சத்தம் கடலுக்குள் இருந்து வந்தது. எங்களை அறியாமலேயே கண்ணால கண்ணீர் வந்தது. மெதுவான குரலில் அம்மா… ஐயோ… என்ற சத்தங்கள் எல்லோர் வாயிலிருந்தும் உதிர்த்தன.
‘ யாரார் பொடியள் போச்சுதுகளோ ‘ என்று நாங்கள் சொல்லி கவலைப்பட்டோம்.
ஒரு கனம் நிறுத்தி அக்கா தொடர்ந்து சொன்னாள்.
” அடுத்த நாள் நேவி அடிப்பானென்று சனம் எல்லாம் வெளிக்கிட்டதால் நாங்களும் கொஞ்சம் தூரத்தில இருக்கிற சொந்தக்காரற்ற வீட்டுக்குப் போயிற்று , இரண்டு நாள்ள நிலைமையைப் பார்த்திட்டுத் திரும்புவம் என்று இரவிரவாய்ப் போனம். போறவழியில ” காம்ப் “ ஒன்றுக்கு முன்னால , எங்கட தம்பி ஓடித் திரிகிற மோட்டார் சைக்கிள் நின்றது.
அம்மா சொன்னா , ” உங்க தம்பி நிற்பான் போல கிடக்கு… ஒருக்கா கேட்டுப்பார் “ என்று. தொடர்ந்து அம்மா கதைக்கத் தொடங்கினாள்….
நாங்கள் கூப்பிடக் கூப்பிட ஆள்மாறி ஆள்மாறி வந்து எட்டிப் பார்த்திட்டுப் போறினமே தவிர வெளியால ஒருத்தருமே வரேல்லை.
” வினோத்தின்ர அம்மாவடா…. வினோத்தின்ர அம்மாவடா…. “ என்று மாறி மாறிச் சொல்லிக் கேட்கிறது…. இருளுக்குள் ஒன்றும் தெரியவுமில்லை. ஏன் இவர்கள் ஒளியிறார்கள் என்று எனக்குள்ள நினைத்தேன். கொஞ்சநேரத்துக்குப் பிறகு , ஒருத்தர் பதுங்கிப் பதுங்கி வெளியில் வந்தார்…..
” வினோத் நிற்கிறானா தம்பி…? ”
” இல்லை…. அம்மா…. நீங்கள் எங்க நிற்பீர்கள் என்று சொல்லுங்கோ… நாங்கள் அவரை வரச் சொல்லிவிடுறம்… ”
” அந்தா அவரின்ற மோட்டார் சைக்கிள் நிக்கிறது… பொய் சொள்ளதேங்க்கடா , எங்க போட்டான்..? ”
” அது சரியாச் சொல்லேலாதம்மா… நீங்கள் நிற்கிற இடத்தைச் சொல்லிப் போட்டுப் போங்கோ , காலையில் அனுப்பிவிடுறம்… ”
‘ என்னடா இவன் , கேட்கிரதுக்கெல்லாம் ஒரு மாதிரியா மறுமொழி சொல்லுறான்…? என்ன கேட்டாலும் நாங்கள் நிக்கிற வீடு எது என்று கேட்கிறான் ? ‘ என்று எனக்குள்ள நினைத்துக்கொண்டு , நாங்கள் போற வீட்டுப் பாதையைச் சொல்லிப் போட்டுப் போனோம்.
சற்று நிறுத்தி பெருமூச்சொன்றை எறிந்துவிட்டு அம்மா ஆறுதலாகத் தொடர்ந்தாள்.
” அடுத்த நாள்தான் மோனை தெரிஞ்சிது , எங்கட பொடியும் போட்டானேன்று. நிக்கிற வீடு எதென்று அந்தப் பெடியன் திரும்பத் திரும்பக் கேட்டது ஏன் என்று , அப்பத்தான் விளங்கியது. ”
வினோத்தின் அப்பா சொன்னார்….
” குண்டுச்சத்தம் கடலுக்குள் பெரிதாகக் கேட்க்கக் கேட்க்க , வீட்டு வாசலில நான் குந்தியிருந்தனான் …. யாரார் பெற்ற பிள்ளைகளோ என்று எனக்குள்ள நினைத்தேன் ; ஆனால் அடுத்த நாள்த்தான் தம்பி தெரிஞ்சது , அதில நான் பெற்ற குஞ்சுவும் ஒன்று என்று . ”
- உயிராயுதத்திலிருந்து….
மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» கரும்புலி மேஜர் டாம்போ
» கரும்புலி கப்டன் மில்லர் வரலாறு
» கடற்கரும்புலிகள் மேஜர் கண்ணாளன் – மேஜர் நகுலன்
» கரும்புலி கப்டன் மில்லர்"
» ஜூலை - 5 கரும்புலி நாள் .
» கரும்புலி கப்டன் மில்லர் வரலாறு
» கடற்கரும்புலிகள் மேஜர் கண்ணாளன் – மேஜர் நகுலன்
» கரும்புலி கப்டன் மில்லர்"
» ஜூலை - 5 கரும்புலி நாள் .
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum