TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 7:37 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Apr 30, 2024 11:10 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Apr 27, 2024 3:03 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


ஹாங்காங்கில் ஸ்னோடன் வெளியிட்ட அடுத்த அதிரடி ரகசியம்! சிக்கியது பிரிட்டிஷ் உளவுத்துறை!!

2 posters

Go down

ஹாங்காங்கில் ஸ்னோடன் வெளியிட்ட அடுத்த அதிரடி ரகசியம்! சிக்கியது பிரிட்டிஷ் உளவுத்துறை!! Empty ஹாங்காங்கில் ஸ்னோடன் வெளியிட்ட அடுத்த அதிரடி ரகசியம்! சிக்கியது பிரிட்டிஷ் உளவுத்துறை!!

Post by vetriaqua Mon Jun 17, 2013 3:18 pm

அமெரிக்க உளவுத்துறை NSA பற்றிய ரகசியங்களை ஹாங்காங்கில் வைத்து வெளியிட்ட எட்வர்ட் ஸ்னோடன், வேறு பல அதிர வைக்கும் ரகசியங்களையும் தமக்கு தெரியப்படுத்தியுள்ளார். அவை ஒவ்வொன்றாக உரிய நேரத்தில் வெளியிடப்படும் என்று தெரிவித்திருந்தது கார்டியன் பத்திரிகை.
இதோ, மற்றொரு அதிர வைக்கும் ரகசியம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் NSA உளவுத்துறைக்கு சமமான, அதே டைப்பான பிரிட்டிஷ் உளவுப் பிரிவின் பெயர், GCHQ (Government Communications Headquarters). இந்த துறைதான் பிரிட்டனில் தொலைத்தொடர்பு சிக்னல்களை உளவு பார்க்கும் ஆட்கள். இவ்வகை உளவு பார்த்தலை சிக்இன்ட் (SIGINT) என்று உளவு வட்டாரங்களில் குறிப்பிடுவார்கள். Signals Intelligence என்பதன் சுருக்கமே அது.
எட்வர்ட் ஸ்னோடன் வெளியிட்ட அடுத்த அதிர வைக்கும் ரகசியம், இந்த பிரிட்டிஷ் உளவுத்துறை GCHQ, 2009-ல் லண்டனில் நடைபெற்ற G20 மாநாட்டின்போது, வெளிநாட்டு பிரதிநிதிகளை (அநேகமாக அந்தந்த நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள்) உளவு பார்த்த விவகாரம்.
வெளிநாட்டு பிரதிநிதிகளின் கம்ப்யூட்டர்கள் ரகசியமாக உளவு பார்க்கப்பட்டன, அவர்களது போன்கள் ஒட்டுக் கேட்கப்பட்டன, இவை எல்லாவற்றையும்விட சுவாரசியமாக, வெளிநாட்டு பிரதிநிதிகள் நடமாடக்கூடிய இடங்களில் எல்லாம், போலி இன்டர்நெட் மையங்களை (internet cafes) பிரிட்டிஷ் உளவுத்துறையே செட்டப் செய்திருந்தது.
பிரிட்டிஷ் உளவுத்துறைக்கு இந்த விவகாரத்தில் அமெரிக்க உளவுத்துறை NSA சில விதங்களில் உதவியது. அதனால், இந்த ஆபரேஷன் பற்றிய விபரங்கள் அமெரிக்க உளவுத்துறையின் கம்ப்யூட்டரிலும் இருக்க, அதை அடித்துக்கொண்டு ஹாங்காங் வந்துவிட்டார் எட்வார்ட்.
சரி. ரகசியங்கள் உரிய நேரத்தில் வெளியிடப்படும் என கார்டியன் பத்திரிகை சொன்னதன் அர்த்தம் என்ன? சூப்பரான் அர்த்தம் ஒன்று உள்ளது!
39-வது G8 மாநாடு இன்று லண்டனில் தொடங்குகிறது. 2009-ல் லண்டனில் நடைபெற்ற G20 மாநாட்டில் கலந்துகொண்ட வெளிநாட்டு வெளியுறவு அமைச்சர்கள் அநேகமாக இதிலும் கலந்து கொள்கிறார்கள். அத்துடன் G20 குரூப்பில் உள்ள நாடுகளில் சில G8 குரூப்பில் உறுப்பினராக இல்லாத போதிலும், பார்வையாளர் அந்தஸ்து கொடுக்கப்பட்டுள்ளது. உதாரணம், தென்னாபிரிக்கா.
இப்போது, லண்டனில் உள்ள இந்த வெளிநாட்டுப் பிரதிநிதிகள் தாம் உளவு பார்க்கப்பட்ட விஷயத்தை அறிந்து அதிர்ந்து போயுள்ளார்கள். அநேக நாடுகள் பிரிட்டனிடம் விளக்கம் கேட்கப் போகின்றன.
இதுதான், ரகசியங்கள் வெளியிடப்பட்ட உரிய நேரம்!
சரி எட்வார்ட் வைத்துள்ள ஆவணங்களில் என்ன விபரங்கள் உள்ளன?
2009-ம் ஆண்டு முதலில் ஏப்ரல் மாதத்திலும், பின் செப்டெம்பரிலும் லண்டனில் நடைபெற்ற G20 மாநாடுகளில் உளவு பார்க்கப்பட்டுள்ளது. (அதன் அர்த்தம், இன்றைய மாநாட்டில் கலந்து கொள்ள லண்டன் வந்துள்ள வெளிநாட்டு பிரதிநிதிகளையும் உளவு பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும். இப்போது அவசர கதியில் அவற்றை மறைக்க வேண்டும்!)
பிரிட்டனின் நீண்ட நாள் கூட்டாளிகளான நாடுகளின் பிரதிநிதிகளையும் உளவு பார்த்திருக்கிறது பிரிட்டிஷ் உளவுத்துறை.
இப்படியான மாநாடுகளில் கலந்துகொள்ள வரும் சில நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் உஷார் பேர்வழிகள். தாம் தங்கியிருக்கும் ஹோட்டலில் உள்ள கம்ப்யூட்டர்கள், அல்லது தமது சொந்த கம்ப்யூட்டர்கள் மானிட்டர் பண்ணப்படலாம் என்ற சந்தேகத்தில், அவர்கள் வெளியே போய், இன்டர்நெட் மையங்களில் கம்ப்யூட்டர்களை பயன்படுத்துவார்கள்.
இது உளவுத்துறைக்கும் தெரியும்.
எனவே, G20 மாநாடு நடைபெற்ற இடத்துக்கு வெளியேயும், அநேக வெளிநாட்டு பிரதிநிதிகள் தங்கியிருந்த ஹோட்டல்கள் உள்ள பகுதிகளிலும், உளவுத்துறையே இன்டர்நெட் மையங்களை போலியாக திறந்து, பெரிய போர்ட்டும் மாட்டி வைத்தது. அங்குள்ள அனைத்து கம்ப்யூட்டர்களிலும், இமெயில் இடைமறிக்கும் சாஃப்ட்வேர் மற்றும், key-logging software போடப்பட்டிருந்தன.

அனைத்துப் பிரதிநிதிகளின் பிளாக்பெரிகளும் இடைமறிக்கப்பட்டு இமெயில்கள் மற்றும் போன்கால்கள் ஒட்டுக் கேட்கப்பட்டன.
பிரிட்டிஷ் உளவுத்துறையின் 45 ஏஜென்ட்டுகள், 24 மணிநேரமும் ஒரு ஆபரேஷனில் ஈடுபடுத்தப்பட்டனர். வெளிநாட்டு பிரதிநிதிகளில் யார் யாருக்கு போன்பண்ணுகிறார்கள் என்று மானிட்டர் பண்ணுவதே இவர்களது பணி.
துருக்கி நாட்டு பிரதிநிதியாக வந்த அந்த நாட்டின் நிதியமைச்சரும், அவருடன் வந்த 15 பேரும் மிக நுணுக்கமாக உளவு பார்க்கப்பட்டனர். (அந்த மாநாட்டில் துருக்கி ஏதோ ஒரு மூவ் எடுக்கப்போகிறது என்ற தகவல் கிடைத்திருக்கலாம்)
ரஷ்ய தலைவர் திமித்ரி மெத்வெடெவ் மாஸ்கோவில் உள்ள அலுவலகத்துடன் தொடர்பை, ரஷ்ய சாட்டலைட் ஒன்றின் ஊடாக வைத்திருந்தார். அது அவர்களது பிரத்தியேக சாட்டலைட் என்பதால், பிரிட்டிஷ் உளவுத்துறையால் எதுவும் செய்ய முடிந்திருக்கவில்லை.
ஆனால், அந்த மாஸ்கோ தொடர்பை அமெரிக்க உளவுத்துறை NSA, வேறு விதமாக டப் செய்து கொண்டிருக்கிறது என்ற விஷயம், பிரிட்டிஷ் உளவுத்துறைக்கு தெரியும்.
இதையடுத்து, தமது ஆபரேஷனை அமெரிக்கர்களுக்கு தெரிவித்த பிரிட்டிஷ் உளவுத்துறை, ரஷ்ய தலைவரின் உரையாடல் விபரங்களை பெற்றது. (இதனால்தான் கதை அமெரிக்க உளவுத்துறை NSAவின் கம்ப்யூட்டருக்கு போய், எட்வார்ட் மூலமாக ஹாங்காங்கில் லீக் ஆனது)
ஆவணங்களில் உள்ள மற்றொரு விஷயம், பிரிட்டிஷ் உளவுத்துறையின் இந்த அதி ரகசிய ஆபரேஷனுக்கான அனுமதி, பிரிட்டிஷ் அரசு உயர் மட்ட அளவில் கொடுக்கப்பட்டுள்ளது. (அப்போது கோர்டன் பிரவுண் பிரிட்டிஷ் பிரதமராக இருந்தார்)
மேலிட அனுமதி பெறப்பட்டபின், பிரிட்டிஷ் உளவுத்துறை GCHQ தலைவர் சர் இயாயின் லொபான் தனது துறை மேலதிகாரிகளுக்கு, இந்த ஆபரேஷனை எப்படி செய்ய வேண்டும் என்று எழுதிய அறிவுறுத்தல் கடிதமும் (2009-ம் ஆண்டு ஜனவரி 20-ம் தேதி எழுதப்பட்டுள்ளது) ஹாங்காங்கில் எட்வார்ட்டிடம் உள்ளது!
வேறு என்னவெல்லாம் அவரிடம் உள்ளனவோ!
சரி. இப்போது இதை யோசித்துப் பாருங்கள்.

ஹாங்காங்கில் உள்ள எட்வார்ட் ஸ்னோடனுக்கு அரசியல் தஞ்சம் கொடுக்க தயார் என்று 4 தினங்களுக்கு முன் ரஷ்யா அறிவித்ததற்கும், எட்வார்ட் ஸ்னோடனை பிரிட்டனுக்கு வரும் விமானத்தில் ஏற்ற வேண்டாம் என, விமான நிறுவனங்களுக்கு பிரிட்டிஷ் அரசு கடிதம் அனுப்பியதற்கும் என்ன அர்த்தம் என்று இப்போது புரிகிறதா?
vetriaqua
vetriaqua
உதய நிலா
உதய நிலா

Posts : 19
Join date : 23/02/2013

Back to top Go down

ஹாங்காங்கில் ஸ்னோடன் வெளியிட்ட அடுத்த அதிரடி ரகசியம்! சிக்கியது பிரிட்டிஷ் உளவுத்துறை!! Empty Re: ஹாங்காங்கில் ஸ்னோடன் வெளியிட்ட அடுத்த அதிரடி ரகசியம்! சிக்கியது பிரிட்டிஷ் உளவுத்துறை!!

Post by vetriaqua Mon Jun 17, 2013 3:21 pm

ஹாங்காங்கில் ஸ்னோடன் வெளியிட்ட அடுத்த அதிரடி ரகசியம்! சிக்கியது பிரிட்டிஷ் உளவுத்துறை!!
vetriaqua
vetriaqua
உதய நிலா
உதய நிலா

Posts : 19
Join date : 23/02/2013

Back to top Go down

ஹாங்காங்கில் ஸ்னோடன் வெளியிட்ட அடுத்த அதிரடி ரகசியம்! சிக்கியது பிரிட்டிஷ் உளவுத்துறை!! Empty Re: ஹாங்காங்கில் ஸ்னோடன் வெளியிட்ட அடுத்த அதிரடி ரகசியம்! சிக்கியது பிரிட்டிஷ் உளவுத்துறை!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» அமெரிக்க உளவுத்துறை ஏன் ஆளை ‘தூக்க’ முடியவில்லை? ஹாங்காங்கில் ‘சிக்கல்’
» ஆதீன எதிர்ப்பாளர்கள்: நித்யானந்தா வெளியிட்ட ரகசியம்
» ஜெயலலிதா வழக்கில் சிக்கும் பாஜக புள்ளிகள்: உளவுத்துறை அதிரடி
» நில அபகரிப்பில் கைதானலாட்டரி அதிபர் மார்ட்டின் வீட்டில் அதிரடி சோதனை: முக்கிய ஆவணங்கள் சிக்கியது
» அ.தி.மு.க.,வில் அடுத்த அதிரடி : மாநில நிர்வாகிகளுக்கு கல்தா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum