Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
மட்டக்களப்பில் பண்டைத் தமிழ் கல்வெட்டு கண்டெடுப்பு
Page 1 of 1

மட்டக்களப்பில் பண்டைத் தமிழ் கல்வெட்டு கண்டெடுப்பு.>
கிழக்கிலங்கையின் கோறளைப்பற்று தெற்கு பிரதேசசெயலகத்திற்கு உட்பட்ட பல பிரதேசங்கள் தொல்லியல் ஆதாரங்கள் நிரம்பப்
பெற்றவை. ஆயினும் அவை இன்னும் அடையாளப்படுத்தப்படாதவை. அடையாளப்படுத்தப்பட
வேண்டியவை. இங்கு குறிப்பாக குடும்பிமலை, பெரியமியன்கல்(பத்தாவெடி) போன்ற
பிரதேசங்கள் தொல்லியல் ஆதாரங்கள் நிரம்பப் பெற்றவை. இப்பகுதிகளில்
கல்வெட்டுக்கள் பலவற்றை எம்மால் அடையாளங் காணமுடிந்துள்ளது.
மட்டக்களப்புமாவட்டத்தின் கிரான் பிரதேசத்தின் சந்தியிலிருந்து
மேற்குநோக்கிச் செல்லும் பாதையில் 25கி.மீ பயணம் செய்தால் குடும்பிமலை
பிரதேசத்தைச் சென்றடைய முடியும். இப்பிரதேத்திலுள்ள தொல்லியல் ஆதாரங்களை
கண்டறியும் ஆய்வு முயற்சியொன்று அப்பிரதேசகிராமசேவையாளர் ச.குரு, அப்பிரதேச
கிராம அபிவிருத்திச்சங்க உறுப்பினர்களான ச.புனிதநாயகம், க.பொன்னுத்துரை,
கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களாகிய க.சந்திரமேகன், க.நிராஜ்மேனன்
ஆகியோரின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் அங்கு பல
தொல்லியலாதாரங்களை கண்டுகொள்ள முடிந்தமை மகிழ்ச்சிக்குரியது.
கி.மு மூன்றாம் நூற்றாண்டுமுதல் கி.பி நான்காம் நூற்றாண்டுவரை தென்னாசியத்
துணைக்கண்டத்தில் எழுதப்பட்டுள்ள ஆவணங்கள் எல்லாம் பிராமி எனும் வகைக்குரிய
வரிவடிவங்களில் எழுதப்பட்டுள்ளன. தமிழகத்தில் வழங்கிய இந்த எழுத்து
முறையில் தமிழுக்குச் சிறப்பான எழுத்துக்கள் அமைந்திருந்தமையால் அதுதமிழ்
பிராமி என்று அழைக்கப்பட்டது. இலங்கையில் 2000க்கு மேலான பிராமிசாசனங்கள்
உண்டு. இவை பெரும்பாலும் மலைகளிலும் பெருங்கற்பாறைகளிலும்
குகைத்தளங்களிலும் வெட்டப்பட்டுள்ளன.
இவற்றிலே காணப்படும்
சொற்களும் சொற்றொடர்களும் பெரும்பாலும் பொதுவானவை. இவற்றில் பெரும்பாலனவை
ஓரிருவரிகளில் துறவிகளுக்கு அக்காலச் சமூகத்தின் பலதரப்பட்டமக்கள் அளித்த
நிலம், கால்வாய், குகை, கற்படுக்கை, உணவு போன்ற தானங்கள் பற்றிக்
கூறுகின்றன. இவற்றில் பலவற்றில் தானமளித்தவர் பெயரோடுஅவரின் வம்சம்,
பட்டம், பதவி, தொழில், சமயம், இனம் போன்றவையும், அவர்கள் வாழ்ந்த இடம், ஊர்
போன்ற செய்திகளும் கூறப்படுகின்றன. இவை நாவலந்தீவின் பொதுவழக்கான
பிராகிருதமொழியில் அமைந்தவை. குடும்பிமலை, பத்தியாவெளி போன்ற இடங்களில்
சிலசாசனக் குறிப்புக்கள் உள்ளடங்கலாக தொல்லியல் தடயங்களும்
கிடைக்கப்பெற்றுள்ளன.
குடும்பிமலை பிரதேசத்தில் காணப்படும்
கல்வெட்டுச் சாசனமானது 5அடி நீளமும் 2அடி அகலமும் கொண்டது. (படம்-1) 5
வரிகளில் பொறிக்கப்பட்டுள்ள இதில் மேலுள்ள ஒருவரி நேர்த்தியில்லாதது.
மீதமாகவுள்ள நான்குவரிகளும் கட்டமைக்கப்பட்ட செவ்வகவடிவில் அமைந்த
பரப்பினுள் அமைந்தவை, நேர்த்தியானவை. இதில் 2,3ஆம் வரிகளின் இடைநடுவில்
சிலஎழுத்துக்கள் அழிந்துபோயுள்ளன. இவ்வெழுத்துக்களில்; வளர்ச்சியடைந்த
போக்கைக் காணமுடிகின்றது. கி.பி 2ஆம் நுற்றாண்டுகாலப்பகுதிக்குரியவையாகக் கருதமுடிகின்றது. பிராகிருதமொழிவழக்கானவை.
இச்சாசனத்தினை முழுமையாக படிக்க முடியவில்லை. எனினும் அதில் �மகாராஜ
அபயஹ�எனும் சொற்கள் காணப்படுகின்றன. இதன்படி இப்பிரதேசத்தின் அரசனான அபயன்
என்பவனால் நடத்தப்பட்ட ஏதோவோர் நிகழ்ச்சி பற்றி இச்சாசனம்
குறிப்பிடுகின்றது. இச்சாசனப்பொறிப்பினை ஓர் தானசானமாகக் கொள்ளலாம்.
இதிலுள்ள இச்சொற்றொடரிற்கும் அதன் சூழலிற்கும் தொடர்பிருப்பதனைக்
காணமுடிகின்றது. சிறியதும் ஆழம் குறைந்ததுமான குளங்;கள் இப்பகுதிகளின் பல
இடங்களில் காணப்படுகின்றன. இவை நீர்வசதி குறைந்த இப்பிரதேசத்தில்
மக்களினுடைய தேவைக்காக அல்லது தனிப்பட்டோருக்காக அமைக்கப்பட்டுத் தானமாக
வழங்கப்பட்டிருக்கலாம் என ய10கிக்க முடிகின்றது. எனினும் அவை உறுதியாக
கூறமுடியாதவை. வரலாற்றாய்வாளர்களின்; பரிசீலனைக்கு உட்படவேண்டியவை.
இதிலுள்ள அபயஹ எனும் சொல்லில் அபய என்பது வடமொழி வழக்கானவை. இலங்கையில்
கிடைக்கின்ற சாசனங்களில் இதுபோன்ற சுமன, தீச, விஸாக, குடும்பிக, சமண முதலான
சொற்பிரயோகங்கள் இடம்பெறுகின்றன. இவ்வகையான சொற்பிரயோகங்கள்
இடம்பெறும்போது அவை “அன்”; விகுதிசேர்த்து படிக்கப்படுகின்றது. இதன்படி அபய
என்பது அபயன்(அபயஹன்) என்றே படிக்கப்படவேண்டும். இது அப்பிரதேசத்தின்
தலைவனாக இருந்த அபயன் எனும் குறுநில மன்னனையே குறிக்கின்றது எனலாம்.
இப்பிரதேசத்தின் மற்றுமொரு தொல்லியலாதாரமாக அங்கு காணப்படும் தூண்கள் அவை
நேர்த்தியாக செதுக்கப்படவில்லை, நிலத்தில் நாட்டப்பட்டும் மண்ணில்
புதைபட்டதுமாகக் காணப்படுகின்ற அவை பல உண்டு. எதற்காக உருவாக்கப்பட்டன
என்பதினை உறுதியாகக் கூறமுடியாதுள்ளது. (படம்-2) தென்னிந்தியாவில்; இறந்த
வீரர்களது நினைவாக வீரக்கற்கள் நிறுவப்பட்டன. பழந்தமிழ் இலக்கியங்களான
அகநானூறு, புறநானூறு, ஐந்திணை ஐம்பது, தொல்காப்பியம் முதலான இலக்கியங்களில்
நடுகல் வழிபாடு பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. பெருங்கற் காலத்தில்
இறந்தோரின் நினைவாக குத்துக்கல் எனப்படும் நினைவுக் கற்கள் எழுப்பப்பட்டன.
இவை முற்றிலும் உருவம் வரையப்படாதவை. கி.மு1000முதல் கி.மு500
வரையானகாலத்தில் இந்நிலையைக் காணலாம். இதனை அடிப்படையாகக் கொண்டு
இப்பகுதிகளில் நடுகல் வழிபாடு பேணப்பட்டுள்ளது என்கின்ற முடிவிற்கு
வரமுடிகின்றது.
இதனோடு மலையில் குளியல் தடாகம் போன்ற அமைப்பும்
உள்ளது. அதன் அருகேமலையில் இருவேறாக்கப்படும் வகையில் சங்கிலிபோன்ற
அமைப்பில் தொடராக ஓர் கோடு நீண்டு செல்கின்றது. அது அலங்கார வேலைப்பாடாகவோ
அல்லது மலையினை இருவேறாக பிரித்த எல்லைக் கோடாகவோ இருக்கலாம். இங்குள்ள
கோயிலிலுள்ள ஒருதட்டையான கல்லில் அலங்கார உருவம்
செதுக்கப்பட்டிருக்கின்றது. அது இரண்டடிநீள, அகலங்களைக் கொண்டது. இரு
பகுதிகளாக பிரிக்கப்பட்ட இக்கல்லின் இரு பகுதிகளிலும் ஒரேவிதமான அலங்காரம்
பொறிக்கப்பட்டுள்ளது. தற்போது வழிபாட்டிற்குரிய கற்களை நீளமான தூண் கல்லில்
வைத்துள்ளனர். கீழ் அமைந்திருக்கக் கூடிய இக்கல்லின் ஒருமுனையில்
வளைவுகளுடன் கூடிய அலங்கார வேலைப்பாடுகள் உண்டு.
இங்கு
கிடைக்கப்பெறும் மற்றுமொரு தொல்லியல் ஆதாரமாக கலவோடுகளைக் கூறலாம்.
அவைசற்றுக் கனமானவை. பூசப்படாத மேற்பரப்பினை உடையவை. இவை ஏராளமாக
காணப்படுகின்றன. அளவில் பெரியசெங்கற்கள் காணப்படுகின்றன. இதனடிப்படையில்
இங்;கு களிமண்ணாலான பொருட்களின் உற்பத்தி நடைபெற்றிருக்க வேண்டும்.
அப்பகுதிகளில் தோண்டப்பட்ட நிலையில் காணப்பட்ட குழிகளை நாம் ஆராய்ந்த போது
அடுக்கப்பட்ட நிலையில் செங்கற்கள் காணப்படுகின்றன. எனவே இங்கு
கட்டடத்தொகுதிகள் இருந்தமைக்கான சான்றுகள் கிடைக்கப்பெறுகின்றன.
ஓரிடத்தில் மலையின் ஒருபகுதி குடைந்துள்ளதினைப் போன்று வெட்டப்பட்ட மலை
உண்டு. அதிலே நீர் வழிந்தோடுவதற்கான கற்பீலிகள் அமைந்துள்ளது. கல்வீடு என
அழைக்கப்படும் இவ்விடம் சமயதுறவிகள் தங்குவதற்காக அமைக்கப்பட்டிருக்கலாம்.
எனினும் இங்குசாசனப் பொறிப்புக்கள் கிடைக்கவில்லை. இதன் அருகில் உள்ள
கல்லில் ஓர் பாத அடையாளமும் உண்டு. பொதுவாக இவை பெருங்கற்கால
பண்பாட்டுமக்கள் இப்பகுதிகளில் வாழ்ந்தமைக்கான உறுதியானசான்றுகளாக நாம்
கொள்ளமுடியும். எனினும் பூரணமான ஆய்வுகள் செய்யப்படாத நிலையில் இது பற்றிய
உறுதியான முடிவினைக் கூறமுடியாதுள்ளது.
குடும்பிமலையிலிருந்து
சற்று 3கிலோமீற்றர் தொலைவில் பத்தாவெடி எனும் ஓர் இடம் உண்டு. அங்கே
ஒருவரியில் சாசனம் ஒன்றுகிடைத்துள்ளது. (படம்-3) அடர்ந்தகாட்டினுள் அமைந்த
இது அங்குவாழும் வேளாண்மைசெய்பவர்களாலும். மாடுவளர்ப்பவர்களாலும்
வணங்கப்படும் அவர்களின் குலதெய்வம் இருக்கும் இடத்;திற்கு அருகில்
அமைந்துள்ளது. 9 எழுத்துக்களினை கொண்ட இது 3 அடிநீளமானது. முன்பு
குறிப்பிட்ட குடும்பிமலை சாசன எழுத்தின் சமகாலத்தவை. இதில் முரண் எனும்
சொல் இடையில் தென்படுவதினைக் காணலாம். இது தமிழிற்குரிய சிறப்புச்
சொல்லாகும். இச்சாசனம் காணப்படும் இடத்திற்கு சற்று அருகாமையில்;
கருங்கற்கள் அடுக்கிய திட்டுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
பெருங்கற்படைக்காலம் என்பதுகி.மு 1000 முதல் ஆரம்பமாகின்றது. பெருங்கற்
பண்பாட்டைஉருவாக்கியமக்கள் இறந்தோரைஅடக்கம் செய்வதற்கு பெருங்கற்களால் ஆன
ஈமச்சின்னங்களை அமைத்தமையினால் இவர்கள் காலப் பண்பாடு �பெருங்கற்காலப்
பண்பாடு� என்ற பெயர் பெறுகின்றது. எனவே இக்கற்திட்டுக்கள்
பெருங்கற்படைக்காலத்தில் வாழ்ந்த இம்மக்களினால் ஈமக்கிரியைகளின் போது
உருவாக்கப்பட்டிருக்கலாம். பெருங்கற்படைக்காலத்தில் இறந்தவர்களை அடக்கம்
செய்யும் போது இறந்தவர்கள்; பயன்படுத்திய பொருட்கள், அவர்களுக்கு
விருப்பமானவைகள், ஏனைய தானியங்கள் போன்றவை அவர்களினுடைய உடலோடு வைத்து
அடக்கம் செய்யப்படும். எனவே இவ்விடத்தினை அகழ்வாய்வு செய்யும்; போது
பெருங்கற்படைக்கால மக்கள் பயன்படுத்திய பொருட்கள், அவர்களினுடைய
வாழ்க்கைமுறை, இதனோடிணைந்த இலங்கையின் ஆதிகால வரலாற்றுமரபின்
உற்பத்திமரபுகள் முதலான பல விடயங்களினைக் பெற்றுக் கொள்ளமுடியும்.
இவற்றுடன் இக்கருங்கல் திட்டுகளுக்கு அண்மையில் மக்கள் வீடுகள் கட்டி
இருந்தமைக்கான தடயங்களும் கிடைக்கின்றன. இதன்படி வீட்டினுடைய அமைப்பு,
அறைபிரிப்புகள் கொண்டதாக அமைந்துள்ளது. சிறுசிறு அறைகளாக குறிப்பாக 6
அடிநீளமும் 3அடி அகலமும் கொண்டதாக அவைபிரிக்கப்பட்டிருப்பதினைக் காணலாம்.
எனவே இது வீடு அமைக்கப்பட்டதற்கான இடமாகக் கொள்ளமுடிகின்றது. இது போன்று
ஓரிரு இடங்களில் உண்டு. இதனை அக்கால சமுதாய அமைப்பின் ஓர் அம்சமாக
கொள்ளமுடியும். இவ்வீடுபோன்ற அமைப்பினைச் சுற்றி கருங்கற்கள் ஓவ்வொரு
அடிநீள இடைவெளியில் வேலிபோன்ற அமைப்பில் நடப்பட்டு இருப்பதினைக் கொண்டு அவை
ஒவ்வொருவீட்டின் நிலப்பரப்பின் எல்லையை சுட்டுவதாக அமைந்தவைஎனலாம். எனவே
அக்காலமக்கள் எல்லைகளை வகுத்து வாழ்ந்தமை தெரிகின்றது.
இங்கும்
செங்கற்கள் கிடைக்கப்பெறுகின்றன. ஆவை அளவில் பெரியவை. ஒன்றன் மேல் ஒன்று
அடுக்கப்பட்ட நிலையில் உள்ளவை. வலிமையானவை. குடும்பிமலை பிரதேசத்தில்
கிடைத்த செங்கற்கள் போன்றவை கருங்கல் திட்டுக்கள் உள்ள இடத்தில் அதிகமாகக்
கிடைக்கின்றன. இப்பிரதேசங்களில் உள்ள தொல்லியல் ஆவணங்கள் முக்கியமானவை,
பாதுகாக்கப்பட வேண்டியவை. இவற்றுடன் இவை கூறும் விடயங்கள் என்னவென்பது
ஆய்விற்குட்படுத்தப்பட வேண்டியவை. ஆதிகாலவரலாற்றம்சங்களை கொண்டுள்ள
இப்பிரதேசங்கள் அகழ்வாய்வுகளுக்கு உட்படுத்தப்படவேண்டியவை. இதற்கு
சட்டரீதியான அனுமதியும், ஆதரவும் கிடைக்கும் பட்சத்தில் எம்மால் எமது
பிரதேசம் பற்றிய வரலாற்றம்சங்களை அடையாளப்படுத்தவும், ஆவணப்படுத்தவும்
முடிகின்ற வேளையில் இப்பிரதேசத்தினுடைய வரலாற்றினோடு இணைந்த வகையில்
மட்டக்களப்பின்; வரலாறும் கட்டியெழுப்பப்படும் என்பதில் எவ்வித
சந்தேகமுமில்லை.

மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» படத்தில் இருப்பது கேராளவில் எடுக்கல் எனுமிடத்தில் கிடைத்த ஒரு தமிழ் கல்வெட்டு
» புலிகள் தலைவரின் புகைப்படத்துடன் மட்டக்களப்பில் மாணவன் கைது!
» பண்டைத் தமிழனின் அரும் சாதனை காலக் கணிதம்.......!
» 300 ஆண்டு பழமையான கல்வெட்டு: பழநி கோவிலில் கண்டுபிடிப்பு
» தினம் ஒரு தகவல் (தொடர்)
» புலிகள் தலைவரின் புகைப்படத்துடன் மட்டக்களப்பில் மாணவன் கைது!
» பண்டைத் தமிழனின் அரும் சாதனை காலக் கணிதம்.......!
» 300 ஆண்டு பழமையான கல்வெட்டு: பழநி கோவிலில் கண்டுபிடிப்பு
» தினம் ஒரு தகவல் (தொடர்)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum