TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:13 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jun 20, 2024 4:05 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Jun 17, 2024 11:51 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Jun 07, 2024 6:45 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


அழகா செய்தால் அள்ளலாம் லாபம்!

2 posters

Go down

அழகா செய்தால் அள்ளலாம் லாபம்!  Empty அழகா செய்தால் அள்ளலாம் லாபம்!

Post by Tamil Sat May 25, 2013 9:35 pm

அழகா செய்தால் அள்ளலாம் லாபம்!

[You must be registered and logged in to see this image.]
குறைந்த முதலீட்டில், குறைந்த இடத்தை வைத்து மாதம் 10 ஆயிரம் ரூபாய் வரை
வருமானம் பார்க்க வாய்ப்புள்ள தொழில்களைப் பற்றி இந்த தொடரில் பார்த்து
வருகிறோம். இந்த வாரம், கழிவிலிருந்து காசு முளைக்கும் காளான் வளர்ப்பு
பற்றி பார்ப்போம். இன்றைக்கு இறக்கை கட்டி பறக்கும் இறைச்சியின் விலை,
காளான் பக்கம் மக்களின் கவனத்தை திசை திருப்பியுள்ளது.
வீட்டில் இருக்கும் பெண்களுக்கு மிகவும் ஏற்ற
தொழில் என்பதால் காளான் வளர்ப்பு வேகமாக பிரபலமடைந்து வருகிறது. அந்த
வகையில் வீட்டுக்கு முன்பாக உள்ள காலியிடத்தில் காளான் வளர்த்துவரும்
திண்டுக்கல் ராமர் காலனியைச் சேர்ந்த கவிதா மோகன்தாஸ், காளான் வளர்ப்பு
பற்றி பேசுகிறார்.
''எங்க வீட்டுக்காரரு ஒரு மில்லுல வேலை
பார்த்துகிட்டு இருந்தாரு. ஒரு தடவை டூவீலர்ல போகும்போது, நடந்த விபத்துல
ஆறு மாசத்துக்கு மேல 'பெட் ரெஸ்ட்’ எடுக்கும்படி ஆகிடுச்சு. குடும்பச்
செலவுகள், பசங்க ஸ்கூல் பீஸ்னு, அந்த நேரத்துல குடும்பத்தை
பாத்துக்கவேண்டிய பொறுப்பு என்கிட்ட வந்துச்சு. ஏற்கெனவே நான் எல்.ஐ.சி.
ஏஜென்டா இருக்கேன். அந்த நேரத்துலதான், காளான் வளர்ப்பை பத்தி
தெரிஞ்சுகிட்டு வீட்டுக்கு முன்ன இருந்த காலி இடத்துலயே பண்ணையை
ஆரம்பிச்சுட்டேன். அது மூலமா வந்த வருமானம் என் கஷ்டத்துக்கு கை
குடுத்துச்சு'' என்றவர், காளான் வளர்ப்பு தொழில்நுட்பங்களை விளக்கமாக
எடுத்துச் சொன்னார்.
குறைந்த செலவில் குடிசை போதும்!
''காளான்ல
சிப்பி காளான், பட்டன் காளான்னு ரெண்டு வகை இருக்கு. இதுல சிப்பி காளான்ல
எந்த ரிஸ்க்கும் இல்ல; எல்லா இடத்துக்கும் ஏற்றது. இதுக்கு அதிக இடவசதி
தேவையில்லை. 10-க்கு 10 அடி இடத்துலகூட வளர்த்துடலாம். இதுக்கான குடிசை
அமைக்கவும் ரொம்ப செலவு செய்யத் தேவையில்லை. தென்னை, பனை, கோரைப்புல்,
நாணல், கரும்புத்தோகை, சோளத்தட்டைன்னு நமக்குப் பக்கத்துல எது குறைஞ்ச
விலையில கிடைக்கிறதோ, அதை வெச்சு குடிசை போட்டுக்கலாம். ஏற்கெனவே
பயன்பாட்டுல இல்லாத குடிசைகள் இருந்தா, அதைக்கூட பயன்படுத்திக்கலாம்.
பொதுவா 20 அடி நீளம், 10 அடி அகலம், 6 அடி உயரத்துல குடிசை அமைச்சுக்கணும்.
தரையில சிமென்ட் தளம் அமைச்சு, அதுக்கு மேல ஒரு அடி உசரத்துக்கு ஆத்து
மணலை பரப்பிவிடணும். அப்பத்தான் குடிலுக்குள்ள ஒரே மாதிரியான ஈரப்பதத்தைப்
பராமரிக்க முடியும். அதே மாதிரி குடிசைக்குள்ள நல்ல காத்தோட்டம்
இருக்கணும். இல்லையின்னா கரியமில வாயுவோட அடர்த்தி அதிகமாகி காளானோட
வளர்ச்சி பாதிக்கும்.
உறியைப் போல தொங்க விடணும்!
பொதுவா,
20-லிருந்து 28 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், காத்தோட ஈரப்பதம் 85
சதவிகிதத்துக்கும் குறையாமப் பார்த்துக்கணும். வெப்பநிலை அதிகரிச்சா, தண்ணி
தெளிச்சு குறைச்சுக்கலாம். குடிசையோட பக்கவாட்டுல சணல் சாக்குகளை கட்டித்
தொங்கவிட்டு, அதை அடிக்கடி நனைச்சுகிட்டே இருந்தால் ஈரப்பதம் ஒரே அளவுல
இருக்கும். காளான் வளர்ப்பு குடில் தயாரானதும், அடுத்ததா காளான் உருளைகளை
தயார் செய்யணும்.
எப்படித் தயார் செய்வது?
வைக்கோலை சின்ன சின்ன
துண்டுகளா வெட்டி வேகவைச்சு உலர வெக்கணும். அதேபோல காளான் வித்துக்களையும்,
பிளாஸ்டிக் பையையும் வாங்கி வெச்சுக்கணும். (காளான் வளர்ப்புக்கென்றே
பிளாஸ்டிக் பைகள் கடைகளில் கிடைக்கின்றன) இந்த பிளாஸ்டிக் பையில் ஒரு
சுற்று வைக்கோல், அதற்கு மேல் பரவலாக விதை, மறுபடியும் வைக்கோல், விதைன்னு
மாத்தி மாத்தி போட்டு உருளையை தயார் செய்யணும். ஒரு உருளை தயார் செய்ய 200
கிராம் விதைப்புட்டி, 3 கிலோ வைக்கோல் தேவைப்படும். உருளைகளை தயார்
செஞ்சதும், நல்லா இறுக்கமா கட்டி, குடிசைக்குள்ள உறியை தொங்கவிடுற மாதிரி
தொங்கவிடணும். ஒரே கயித்துல 4 உருளைகள் வரைக்கும் தொங்கவிடலாம். நான் சொன்ன
அளவுல குடிசை போட்டா, 450 உருளைகள் வரைக்கும் தொங்கவிடலாம். ஆனா, இந்த 450
உருளையும் ஒரே நாள்ல தயார் செஞ்சிடக்கூடாது. தினமும் 10 உருளைகளா தயார்
செய்றதுதான் நல்லது.
25 நாள்ல அறுவடை!
உருளைகளை தயார் செஞ்சு
முடிச்சதும், விதைகள் இருக்கிற இடத்துக்கு நேரா பென்சில் அளவுக்கு ஒரு துளை
போடணும். ஒரு உருளையில அதிகபட்சம் 12 துளைகளுக்கு மேல போடக்கூடாது. இதை
செஞ்சதும் உருளையை கட்டி தொங்கவிடணும். 15 நாள்ல பூஞ்சாண இலைகள்
உருளைக்குள் பரவ ஆரம்பிச்சு, முழுக்க வெள்ளை கலரா மாறிடும். அப்ப
மேல்பக்கம் நனையிற மாதிரி தினமும் தண்ணி தெளிச்சுட்டு வரணும். 18-ல இருந்து
20-ம் நாளுக்குள்ள மொட்டு வரும். அதிலிருந்து 4 நாள்ல காளான் நல்லா
மலர்ந்து முழு வளர்ச்சி அடைஞ்சிடும். அதை பறிச்சு சுத்தம் பண்ணி விக்கலாம்.
முதல் அறுவடைக்குப் பிறகு, படுகையின் மேல்பக்கத்துல சுரண்டி விட்டு தண்ணி
தெளிச்சுட்டு வந்தா, அடுத்த 10 நாள்ல ரெண்டாவது தடவையாக காளானை அறுவடை
செய்யலாம். எல்லா உருளைகள்ல இருந்தும் மொத்தமா ஒரு நாளைக்கு 3 முதல் 5 கிலோ
காளான் கிடைக்கும். மாசத்துக்கு சராசரியா 100 கிலோ கிடைக்கும். ஒரு கிலோ
காளானை 120 ரூபாய்க்கு விக்குறோம். உருளைகள் தயார் செய்யும் செலவெல்லாம்
போக கணக்குப் போட்டுப் பார்த்தா, 450 உருளைகள் மூலம் ஒரு மாசத்துக்கு
குறைஞ்சபட்சம் 10 ஆயிரம் ரூபாய்க்கு குறையாம வருமானம் பார்க்க முடியும்.
ஆரம்பத்துல ஒரு குடிசையைப் போட்டு காளான் வளர்க்க ஆரம்பிச்சோம். அக்கம்
பக்கம் இருக்குறவங்களுக்கு அதைக் கொடுத்து பழக்கினோம். இப்ப மூணு குடிசை
போட்டு வளர்க்கிறோம். அப்படியிருந்தும்கூட சப்ளை செய்ய முடியல. அந்தளவுக்கு
கிராக்கி இருக்கு'' என்றார்.
இடம் இருக்கு; நேரமும் இருக்கு என்று
நினைக்கிற பெண்கள் குறைந்த முதலீட்டில் இதை செய்தால் மாதம் 10 ஆயிரம்
ரூபாய் எளிதாக வருமானம் பார்க்கலாமே!

நன்றி - விகடன்
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

அழகா செய்தால் அள்ளலாம் லாபம்!  Empty Re: அழகா செய்தால் அள்ளலாம் லாபம்!

Post by அருள் Tue Jul 16, 2013 8:39 am

எதையும் அழகா செய்தால் அள்ளலாம் லாபம்
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» அழகா செய்தால் அள்ளலாம் லாபம்!
» குறைந்த பராமரிப்பும் அதிக லாபமும் கிடைப்பதால் அலங்காரக் கோழி வளர்ப்பு, புதிய தொழில் வாய்ப்பாக மாறி வருகிறது அழகா செய்தால் அள்ளலாம் லாபம்!
» 'யாகம் செய்தால் மழையும் வராது... ஜெபம் செய்தால் நோயும் தீராது!'
» இலவசமாக பிட் செய்து பரிசுகளை அள்ளலாம் வாருங்கள்......!
» நம் உள்ளே இத்தனை அழகா..? எண்ணி வியந்து போகும் அற்புத அழகு.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum