Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
சமோசா தயாரிப்பில் சூப்பர் லாபம்
3 posters
Page 1 of 1
சமோசா தயாரிப்பில் சூப்பர் லாபம்
[You must be registered and logged in to see this image.]
எண்ணெய் பலகாரங்களை விட சமோசாவின் ருசி பலருக்கு பிடிக்கும். மேலும்
கடைக்காரர்கள் சமோசா
தயாரிப்பதில்லை. வெளியே வாங்கியே விற்கின்றனர். நல்ல தரம் மற்றும்
சுவையோடு சமோசா தயாரித்து விற்பது லாபகரமான தொழில் என்று கூறுகிறார், கோவை
மாவட்டம், சூலூரை சேர்ந்த ஜேம்ஸ். அவர் கூறியதாவது: தேவகோட்டையை சேர்ந்த
நான் 13 வயதில்
பிழைப்பு தேடி கோவை வந்தேன். ஓட்டல்களில் பல்வேறு வேலைகளை செய்து, பிறகு
சமையல் மாஸ்டர் ஆனேன். பிறகு கோவையில் சமோசா தயாரிப்பவர்களிடம் தினசரி
ஆயிரம் சமோசாக்களை மொத்தமாக வாங்கி சூலூரில் உள்ள கடைகளில் 3 ஆண்டு
விற்றேன். அதில் ஓரளவு வருமானம் கிடைத்தது. பின்னர் சமோசா தயாரிக்கும்
தொழிலை ரூ.10 ஆயிரத்தில் துவக்கினேன். 10 ஆண்டாக சமோசா தயாரித்து
வருகிறேன்.
நானும் எனது
மனைவியும் தினசரி 2 ஆயிரம் சமோசா தயாரிக்கிறோம். ஆயிரம் சமோசாவை நேரில்
கடைகளுக்கு கொண்டுசென்று விற்கிறேன். மீதி ஆயிரத்தை சிறு வியாபாரிகளுக்கு
விற்று விடுகிறேன். எங்களை தவிர சூலூரில் மேலும் ஒருவர் 2 ஆயிரம் சமோசா
தயாரித்து சப்ளை செய்கிறார். அந்தளவுக்கு சமோசா தேவை இருக்கிறது. இதுபோல்
எல்லா ஊரிலும் சமோசாவுக்கு கிராக்கி உள்ளது. சமோசா தொழிலில் தயாரித்து
சப்ளை
செய்வது, அதற்குரிய பணத்தை வசூல் செய்வது என வேலைகள் இருக்கும். தரம்,
சுவை இரு ந்தால் நாம் சப்ளை செய்யும் சமோசாவுக்கு கிராக்கி இருக்கும். டீ
கடை, பேக்கரி உரிமையாளர்கள் தேடி வந்து வாங்குவர். சமோசாவுக்கு முக்கிய
மூலப்பொருளான வெங்காய விலை கிலோ ரூ.10க்குள் இருந்தால் உற்பத்தி செலவு
கட்டுப்படியாகும். இல்லாவிட்டால் வெங்காயத்துக்கு பதில் முட்டைக்கோஸ்,
கேரட்,
உருளைக்கிழங்கு துண்டுகள் பயன்படுத்தலாம். சுவை மாறுபடுவதால்
வாடிக்கையாளர் களுக்கும் அது பிடிக்கும். சமோசா விற்பனை இல்லாத ஊர்களில்
நாமே கொண்டு சென்று விற்றால் நல்ல லாபம் பார்க்கலாம்.
கட்டமைப்பு, முதலீடு
சமையலறை
போதுமானது. கடலைத்தோல் அல்லது மரத்தூள் போட்டு எரிக்கப்படும் அடுப்பு
(ரூ.10 ஆயிரம்). மாவு தேய்க்கும் கடப்பா கல் மேடை,
மற்ற உபயோகத்திற்கு ஒரு டேபிள் (தலா ரூ.1000 வீதம் ரூ.2 ஆயிரம்),
இரும்பிலான வடை சட்டி 1 ( ரூ.1,800), இரும்பிலான வடை கரண்டி 1 (ரூ.150),
எண்ணெய் வடிகட்டி சட்டி 2 (ரூ.400), பாலிதீன் விரிப்பு 1 (ரூ.100), சிறிய
கத்தி 2 (ரூ.60), பெரிய கத்தி 1 (ரூ.250), அட்டை பெட்டிகள் 4 (ரூ.40).
சப்பாத்தி தேய்க்கும் கட்டை 1 ரூ.50, சப்பாத்தி சுடும் தோசை கல் 1 ரூ.550.
மொத்தம் ரூ.15,400 ஆயிரம் தேவை.
ரெடிமேடாக அடுப்பு உள்ளது. அல்லது அதை
கட்டி
கொடுப்பவர்களும் உள்ளனர். மரத்தூள், கடலை தோல் ஆகியவற்றை எல்லா ஊரிலும்
சப்ளை செய்பவர்கள் உள்ளனர். இதர பொருட்களை ஹார்டுவேர்ஸ், மளிகை மற்றும்
காய்கறி கடைகளில் வாங்கி கொள்ளலாம்.
உற்பத்தி செலவு (ஒரு நாளைக்கு):
: 2 ஆயிரம் சமோசா தயாரிக்க 25 கிலோ மைதா மாவு ரூ.540, கல் உப்பு முக்கால்
கிலோ ரூ.3, சமையல் எண்ணெய் 8 லிட்டர் ரூ.480, பெரிய வெங்காயம் 25 கிலோ
ரூ.250,
மிளகாய் பொடி 250 கிராம் ரூ.40, கடலை தோல் அல்லது மரத்தூள் அரை மூட்டை
ரூ.50. மின்கட்டணம் ரூ.5, இட வாடகை ரூ.35, வாகன பெட்ரோல் செலவு ரூ.70, இதர
செலவுகள் ரூ.100, 2 நபர் கூலி தலா ரூ.250 வீதம் ரூ.500 என ஒரு நாளைக்கு
ரூ.2,073.
வருவாய் (ஒரு நாளைக்கு) :
டீ கடை மற்றும் பேக்கரிகளுக்கு ஒரு சமோசா ரூ.1.50க்கு விற்கப்படுகிறது.
உற்பத்தி செய்பவர் நேரில் கடைகளுக்கு விற்பனை செய்தால் 2
ஆயிரம் சமோசா ரூ.1.50 வீதம் வருவாய் ரூ.3 ஆயிரம். ஒரு நாள் உற்பத்தி செலவு
போக லாபம் ரூ.927. சிறு வியாபாரிகளுக்கு விற்றால் ஒரு சமோசா ரூ.1.20க்கு
விற்கப்படுகிறது. இதன் மூலம் உற்பத்தியாளருக்கு வருவாய் ரூ.2,400. லாபம்
ரூ.327. இதில் நேரில் விற்பது கூடுதல் லாபத்தை தரக்கூடியது. கூலியாட்களை
வைத்து சப்ளை செய்து கூடுதல் லாபத்தை சம்பாதிக்கலாம். சமோசாவில் சற்று
பெரிய அளவில் தயாரித்தால்
ரூ.2க்கு விற்கலாம். சமோசா பெரிய அளவாக இருந்தால் உற்பத்தி எண்ணிக்கை
குறையும். லாபம் குறையாது.
சந்தை வாய்ப்பு :
வடை, போண்டா சுடுவது போல் சமோசா தயாரிப்பது எளிதல்ல. அதற்கு முன்
உழைப்பும், நேரமும் அதிகம் தேவை. இதனால் டீ கடை மற்றும் பேக்கரி
கடைக்காரர்கள் சமோசாவை சொந்தமாக தயாரித்து விற்க ஆர்வம் காட்டுவதில்லை.
வெளியே யாராவது தயாரித்து
கொடுத்தால் அதை ரூ.1.50க்கு வாங்கி ரூ.2 முதல் ரூ.2.50 வரை விற்கிறார்கள்.
சமோசாவிற்கு 50 காசு முதல் ரூ.1 வரை அவர்களுக்கு லாபம் கிடைக்கிறது.
இதனால் தரமாக, சுவையாக சப்ளை செய்பவர்களுக்கு வரவேற்பு அதிகம் உள்ளது.
தயாரிப்பது எப்படி?
மைதா
மாவு 25 கிலோவுக்கு 15 லிட்டர் தண்ணீர், அரை கிலோ உப்பு சேர்த்து பிசைய
வேண்டும். மாவை மொத்தமாக திரட்டி எண்ணெய் தடவி,
கால் மணி நேரம் ஊற வைக்க வேண்டும். மாவை 80 சிறு, சிறு உருண்டையாக்க
வேண்டும். அதை சப்பாத்தி கட்டையால் ஒன்றரை அடி அகலத்துக்கு வட்டமாக
மெல்லிதாக தேய்க்க வேண்டும். அவற்றை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்க வேண்டும்.
ஒட்டாமல் இருக்க, ஒவ்வொன்றின் மீதும் எண்ணெய் தடவி அடுக்க வேண்டும்.
இவ்வாறு அடுக்கப்பட்ட 10 வட்டத்தை ஒன்றாக அடுக்கி ஒரு தேய்ப்பு தேய்த்து,
பெரிய கல்லில் சுட
வேண்டும். அடிப்புறம் வெந்ததும் திருப்பி போட வேண்டும். மேல்புறம் வெந்த
பகுதியை தனியாக பிரித்தெடுக்க வேண்டும். அதற்குள் கீழ்புறம் வெந்துவிடும்.
அதை புரட்டி போட்டு, பிரித்து எடுக்க வேண்டும். இப்படியே 10 வட்டத்தையும்
பிரித்தெடுத்த பின், மீண்டும் ஒன்றாக அடுக்கி, ஒரு சமோசாவுக்கு தேவையான
அளவுக்கு (சுமார் 5க்கு2 இஞ்ச் நீள அகலம்) பெரிய கத்தியால் வெட்டிக் கொள்ள
வேண்டும். இவ்வாறு 80 உருண்டையையும் தேய்த்து சுட்டு எடுத்து, அடுக்கி
வெட்டினால் 2 ஆயிரம் துண்டுகள் கிடைக்கும். அதை தனித்தனியாக முக்கோண
வடிவில் சுருட்ட வேண்டும். திறப்பிற்குள் உப்பு, மிளகாய்தூள், நறுக்கிய
வெங்காய கலவையை போட்டு மூடி, கரைத்து வைத்த மைதா மாவை பசை போல தடவி ஒட்ட
வேண்டும். எண்ணெய் சட்டியில் 100 முதல் 150 எண்ணிக்கையிலான சமோசாவை ஒரு
நேரத்தில் போட்டு
பொரித்து எடுத்து, எண்ணெய் வடிகட்டியில் சில நிமிடங்கள் வைத்திருந்து
எடுத்தால் சமோசா தயார்.
தகவல்:தமிழ் முரசு
Re: சமோசா தயாரிப்பில் சூப்பர் லாபம்
பாஸ்ட்புட் தயாரிக்கும் தொழில்
நேரம்,
நேரம் எல்லாவற்றிக்கும் நேரம் என்பது மிக முக்கியமானது. நமது வேலையை கூட
சிறிது நேரம் கழித்து செய்து கொள்ளலாம் அல்லது தள்ளிப்போடலாம். ஆனால்
சாப்பாடு விஷயத்தில் அப்படி தள்ளிப்போட முடியுமா? அல்லது வயிறு தான் சும்மா
இருக்குமா? அப்போது தான் இந்த பாஸ்ட்புட் மிகவும்
தேவை
படுகின்றது.
அதன் விஷேசம் :
இது
ஒரு குறைந்த முதலீட்டில் தொடங்கும் சுய தொழில். வீட்டில் சமைக்க
முடியாத புதிது புதிதான உணவு ஐய்யிட்டங்கள், நொடிப்பொழுதில் தயாரித்தல்,
சுகாதாரத்துடன் குறைந்த விலையில் சிறந்த சேவை வழங்குதல்.
எதனால் விரும்புகின்றனர்?:
வித்தியாசமாக
சாப்பிட
எண்ணுபவர்கள், ஊருவிட்டு ஊரு வந்து வேலை செய்பவர்கள், பெரிய ஹோட்டல்களில்
கிடைக்கும் உணவுவகைகள் , ஏதாவது ஒரு நாள் குடும்ப உறுப்பினர்களுடன்
வெளியில் சாப்பிட நினைப்பவர்கள், சிறிய பார்ட்டி, சமைப்பதற்கு நேரமில்லாமல்
இருப்பவர்கள், தினமும் ஹோட்டலில் சாப்பிடும் நிலையில் இருப்பவர்கள்,
குறைந்த
விலையில் தரம்மான உணவை உண்ண விரும்புபவர்கள் போன்றவர்களை கவருவதற்கு
ருசியான உணவுகளை தயாரித்து கொடுங்கள் பிறகு பாருங்கள் உங்கள் தொழில்
வளர்ச்சியை. நல்ல தொழில் நல்ல லாபம் என்று கூடிய சீக்கிரம் உணருவீர்கள்.
நேரம்,
நேரம் எல்லாவற்றிக்கும் நேரம் என்பது மிக முக்கியமானது. நமது வேலையை கூட
சிறிது நேரம் கழித்து செய்து கொள்ளலாம் அல்லது தள்ளிப்போடலாம். ஆனால்
சாப்பாடு விஷயத்தில் அப்படி தள்ளிப்போட முடியுமா? அல்லது வயிறு தான் சும்மா
இருக்குமா? அப்போது தான் இந்த பாஸ்ட்புட் மிகவும்
தேவை
படுகின்றது.
அதன் விஷேசம் :
இது
ஒரு குறைந்த முதலீட்டில் தொடங்கும் சுய தொழில். வீட்டில் சமைக்க
முடியாத புதிது புதிதான உணவு ஐய்யிட்டங்கள், நொடிப்பொழுதில் தயாரித்தல்,
சுகாதாரத்துடன் குறைந்த விலையில் சிறந்த சேவை வழங்குதல்.
எதனால் விரும்புகின்றனர்?:
வித்தியாசமாக
சாப்பிட
எண்ணுபவர்கள், ஊருவிட்டு ஊரு வந்து வேலை செய்பவர்கள், பெரிய ஹோட்டல்களில்
கிடைக்கும் உணவுவகைகள் , ஏதாவது ஒரு நாள் குடும்ப உறுப்பினர்களுடன்
வெளியில் சாப்பிட நினைப்பவர்கள், சிறிய பார்ட்டி, சமைப்பதற்கு நேரமில்லாமல்
இருப்பவர்கள், தினமும் ஹோட்டலில் சாப்பிடும் நிலையில் இருப்பவர்கள்,
குறைந்த
விலையில் தரம்மான உணவை உண்ண விரும்புபவர்கள் போன்றவர்களை கவருவதற்கு
ருசியான உணவுகளை தயாரித்து கொடுங்கள் பிறகு பாருங்கள் உங்கள் தொழில்
வளர்ச்சியை. நல்ல தொழில் நல்ல லாபம் என்று கூடிய சீக்கிரம் உணருவீர்கள்.
[You must be registered and logged in to see this image.]
இணையத்திலிருந்து...வெஜிடபிள் சமோசா செய்வது எப்படி
- மைதா மாவு - ஒன்றரை கோப்பை
- வெண்ணெய் - இரண்டு மேசைக்கரண்டி
- உப்புத்தூள் - அரைத் தேக்கரண்டி
- சீரகம் - அரைத் தேக்கரண்டி
- உருகைக்கிழங்கு - அரைக் கிலோ
- பச்சைபட்டாணி - முக்கால் கோப்பை
- பொடியாக நறுக்கிய வெங்காயம் - இரண்டு
- பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் - இரண்டு
- துருவிய இஞ்சி - ஒரு தேக்கரண்டி
- மிளகாய்த்தூள் - கால்தேக்கரண்டி
- கரம்மசாலா - அரைத்தேக்கரண்டி
- புதினா தூள் - அரைதேக்கரண்டி
- அல்லது புதினா தழை - ஒரு மேசைக்கரண்டி
- கொத்தமல்லி - ஒரு பிடி
- உப்புத்தூள் - ஒரு தேக்கரண்டி
- எண்ணெய் - இரண்டு கோப்பை
[You must be registered and logged in to see this image.] | இஞ்சியை துருவிக் கொள்ளவும். பச்சை மிளகாய், வெங்காயம் ஆகியவற்றை பொடியாக நறுக்கிக்கொள்ளவும். |
[You must be registered and logged in to see this image.] | உருளைகிழங்கை வேகவைத்து தோலை உரித்து வைக்கவும். பச்சைப்பட்டாணியை வேகவைத்த கிழங்குடன் சேர்த்து ஒன்றும் பாதியுமாக மசித்துக் கொள்ளவும். |
[You must be registered and logged in to see this image.] | ஒரு வாயகன்ற சட்டியில் இரண்டு தேக்கரண்டி எண்ணெயை ஊற்றி காயவைத்து, நறுக்கின வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சியைப் போட்டு வதக்கவும். |
[You must be registered and logged in to see this image.] | அதன் பிறகு எல்லாத் தூளையும் போட்டு கிளறவும். |
[You must be registered and logged in to see this image.] | பின்னர் மசித்த கிழங்கு கலவையை கொட்டி, கொத்தமல்லி, புதினாவை அத்துடன் சேர்க்கவும். |
[You must be registered and logged in to see this image.] | அனைத்தையும் ஒன்றாக கலந்து, வேகவிட்டு இறக்கி நன்கு ஆறவைக்கவும். |
[You must be registered and logged in to see this image.] | பிறகு மைதாமாவில் உப்புத்தூள், சூடுபடுத்திய வெண்ணெய், சீரகம் ஆகியவற்றைச் சேர்த்து கைகளால் நன்கு பிசையவும். பிறகு தண்ணீரை சிறிது சிறிதாக தெளித்து பூரி மாவு போல் பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக 10 - 12 உருண்டைகள் செய்து வைக்கவும். |
[You must be registered and logged in to see this image.] | பிறகு ஒரு உருண்டையை எடுத்து பூரி போல், ஆனால் மெல்லியதாக தேய்த்து, இரண்டாக வெட்டவும். பின்பு ஒரு அரை வட்டத்தில் உருளைகிழங்கு கலவையை வைத்து மூடி ஓரங்களை தண்ணீரால் தடவி அழுத்தி ஒட்டவும். |
[You must be registered and logged in to see this image.] | இதைப் போலவே எல்லா உருண்டைகளையும் சமோசக்களாக செய்து வைக்கவும். பிறகு ஒரு குழிவான சட்டியில் எண்ணெய்யை ஊற்றி, நன்கு காய வைத்து, பிறகு அடுப்பின் அனலை பாதியாக குறைத்து வைத்து சமோசாக்களை இரண்டு அல்லது மூன்றாக போடவும். |
[You must be registered and logged in to see this image.] | அவை பொன்னிறமாக வேகும் வரை வேகவிட்டு, திருப்பிப்போட்டு இருபுறமும் பொன்னிறமானதும் எடுக்கவும். பிறகு மீண்டும் அனலைக் கூட்டி, பின்பு குறைத்து மேற்கூறிய முறையில் எல்லாவற்றையும் பொரித்து எடுக்கவும். |
[You must be registered and logged in to see this image.] | சுவையான சமோசா தயார். குறைந்தது இருபது சமோசாக்களை இந்த அளவில் செய்யலாம். இதனுடன் இனிப்பு, காரம் கலந்த புளி சட்னி அல்லது புதினா கொத்தமல்லி சட்னியை பக்க உணவாக வைத்து சூடாக பரிமாறவும். |
[You must be registered and logged in to see this image.] | அறுசுவையில் நூற்றைம்பதுக்கும் அதிகமான குறிப்புகள் கொடுத்துள்ள, இன்னமும் கொடுத்துக்கொண்டுள்ள திருமதி. மனோகரி ராஜேந்திரன் அவர்கள் சென்னையில் பிறந்து வளர்ந்தவர். தற்போது வசிப்பது கனடாவில். சமையலில் நீண்ட அனுபவம் உள்ள இவர் சைவ, அசைவச் சமையல் இரண்டிலும் அசத்தக்கூடியவர். |
தயாரித்த சமோசாக்களை உடனே செய்ய தேவை இல்லையென்றால்
அதிகுளிர்சாதன பெட்டியில் பதப்படுத்தி வைத்து, பிறகும் செய்யலாம்.
தயாரித்த, பொரிக்காத சமோசாக்களை ஒரு தட்டில் பரப்பி வைத்து ஃப்ரீசரில்
பத்து நிமிடம் வைக்கவும். பிறகு வெளியில் எடுத்தால் ஒன்றுடன் ஒன்று
ஒட்டாமல் இறுகி இருக்கும். அதனை ஒரு பிளாஸ்டிக் கவரில் அல்லது டப்பாவில்
வைத்து எப்பொழுது வேண்டுமானாலும் எடுத்து, பத்து நிமிடம் வெளியில்
வைத்திருந்து பொரிக்கலாம். அல்லது மற்றொரு முறையில், அவனில் 300 டிகிரி Fல்
பத்து நிமிடம் வைத்து அரைவேக்காடாக வேகவைத்து, பின்னர் நன்கு
ஆறவைத்து,ஃபிரீசரில் எடுத்து வைத்தும் பிறகு பொரிக்கலாம்.
Similar topics
» சமோசா தயாரிப்பில் சூப்பர் லாபம்--வீட்டிலிருந்தே சம்பாதிக்க
» சென்னை சூப்பர் கிங்ஸ் டீம் வீரர்களுக்கு சூப்பர் ஸ்டார் சேலஞ்ச் - வீடியோ!
» வெங்காய சமோசா...
» காளான் சமோசா
» அவதாரம் தயாரிப்பில் GOD is DEAD குறும்படம்
» சென்னை சூப்பர் கிங்ஸ் டீம் வீரர்களுக்கு சூப்பர் ஸ்டார் சேலஞ்ச் - வீடியோ!
» வெங்காய சமோசா...
» காளான் சமோசா
» அவதாரம் தயாரிப்பில் GOD is DEAD குறும்படம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum