TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


சிலம்பம்-- (தமிழர்களின் தற்காப்புக் கலை)

3 posters

Go down

சிலம்பம்-- (தமிழர்களின் தற்காப்புக் கலை) Empty சிலம்பம்-- (தமிழர்களின் தற்காப்புக் கலை)

Post by ஜனனி Sat May 11, 2013 7:14 am

[You must be registered and logged in to see this image.]
மக்கள் தம்மை சிங்கம், புலி போன்ற விலங்குகளிடம் இருந்து காத்துக்கொள்ளக்
கையாண்ட முறையே சிலம்பம் எனப்படும் கலையாக வளர்ந்துள்ளது என்பர். தமது
கைகளில் எப்போதும் இருக்கக் கூடிய சிறிய ஆயுதங்களான கம்பு (தடி), சிறு
கத்தி, கோடரி போன்ற ஆயுதங்களைப் பயன்படுத்தி விலங்குகளிடம் இருந்து
தற்காத்துக்கொள்ள இந்தக் கலையைப் பயன்படுதினர்.
தமிழர்கள் ஆயுதம்
ஏந்திப் போராட ஆரம்பித்த காலத்தில் முதலில் எடுத்தது கம்பு எனப்படும்
ஆயுதமே ஆகும். இதுவே பின்னர் சிலம்புக் கலையாக வளர்ச்சி பெற்றது.
ஆதிகாலத்தில் மனிதர்கள் சண்டை செய்ய ஈட்டி, கத்தி, வேல், வாள், கம்பு போன்ற
பலவிதமான ஆயுதங்களைப் பயன்படுத்தினர். அவற்றுள் மிகவும் பழமை வாய்ந்த
ஆயுதம் கம்பு எனப்படும் 'சிலம்பு' ஆகும். முற்காலத்தில் இக்கலையை வீர
மறவர்கள் பயன்படுத்தினர். தற்போது இது ஒரு சில பள்ளிகளிலும், தனியார்
அமைப்புகளாலும் கற்றுத் தரப்படுகிறது. விளையாட்டுப் போட்டிகளில் வீர
விளையாட்டாகவும் இடம்பெறுகிறது.

சிலம்பச் சுவடிகளில் குறிப்பிடப்
படும் தொன்மையான சிலம்பச் சுவடு மற்றும் அடி வரிசைகள், தமிழக
மூவேந்தர்களின் ஆட்சி முடிவுற்று, தமிழகம் அன்னியர்களுக்கு அடிமைப்பட்ட
பின் கால மாற்றத்தால் அதன் பெயர்களும் ஆடும் முறைகளும் சிறு மாற்றமடைந்தன.
வடக்கன் களரி, தெக்கன் களரி, சுவடு அடி முறை, கர்நாடகச் சுவடு, சிரமம்,
சைலாத், தஞ்சாவூர் குத்து வரிசை, நெடுங்கம்பு என்ற பெயர்களில் இன்றும்
தமிழகம் மற்றும் கேரளா உள்ளிட்ட பகுதிகளில் ஆடப்பட்டு வருகின்றன.

-சிலம்பம் பற்றிய ஆய்வுகள்-

சிலம்பக் கலை பற்றிய அகழ்வாய்வுச் சான்றுகள் மிகத் தொன்மையானவை.
கி.மு.2000க் கும் முற்பட்ட ஆதிச்ச நல்லூர் அகழ்வாய்வில், 32 வகையான சிலம்ப
ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவை சென்னை அருங்காட்சியகத்தில்
வைக்கப்பட்டுள்ளன. பிரிட்டனில் உள்ள அருங்காட்சியகம் ஒன்றில் எகிப்திய போர்
வீரர்கள் பயன்படுத்திய நான்கு அடி நீளமுள்ள கம்பு வைக்கப்பட்டுள்ளது.
அவர்கள் அந்த கம்பினைப் பயன்படுத்திய முறை சிலம்பத்தை ஒத்திருப்பதால் தமிழக
எகிப்திய கலாச்சாரப் பரிமாற்றத்தின் ஒரு பகுதியாக சிலம்பக்கலையும்
பரவியதாக கருதப்படுகிறது.

-பெயர் தோற்றம்-

சிலம்பம் என்ற
பெயர் சிலம்பு என்ற வார்த்தையில் இருந்து உருவானது. சிலம்பு என்பதற்கு
ஒலித்தல் என்று பொருள். சிலம்பம் ஆடும் பொது உருவாகும் ஒலிகளை குறிக்கும்
விதமாக சிலம்பம் என்ற பெயர் சூட்டபட்டதாகச் சொல்லபடுகிறது. "சிலம்பம்' என்ற
சொல் "சிலம்பல்' என்ற வினையின் அடியாகப் பிறந்தது. மலைப் பகுதிகளில் அருவி
விழும் ஓசை, பறவைகளின் கீச்சொலி, மரங்களின் இலைகள் காற்றில் அசையும் ஓசை,
விலங்குகளின் இரைச்சல் போன்ற பல ஓசைகள் ஒலித்துக் கொண்டே இருப்பதால்
மலைக்கு, "சிலம்பம்' என்ற மற்றொரு பெயரும் உண்டு. எனவே, மலை நிலக்
(குறிஞ்சி) கடவுளான முருகனுக்கும், "சிலம்பன்' என்ற பெயருண்டு. கம்பு
சுழலும் போது ஏற்படும் ஓசை மற்றும் ஆயுதங்கள் ஒன்றோடொன்று மோதும் ஓசை
போன்று இருப்பதால், தமிழரின் தற்காப்புக் கலைக்கு "சிலம்பம்' என்ற பெயர்
ஏற்பட்டது. நெல்லை மாவட்டத்தில் கடையநல்லூருக்கு மேற்கே உள்ள மலைப்
பகுதிகளில் வாழும் பழங்குடியினருள் "சிலம்பரம்' என்ற பெயரும் வழக்கில்
உள்ளது.

-சிலம்பத்தடி-

சிலம்பம் ஆட்டத்திற்கான கம்பு
அல்லது தடி, மூங்கில் இனத்தைச் சேர்ந்த சிறுவாரைக் கம்பு, பிரம்பு போன்ற
மரங்களில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இதில் சிறுவாரைக் கம்பு என்பது
நன்கு வளைந்து கொடுக்கக்கூடியது. சிலம்பத்திற்கான தடி, நிலத்தில் இருந்து
ஓர் ஆளின் நெற்றிப் புருவம் வரையான உயரமுடையதாக இருக்க வேண்டும்.

சிலம்பத்தில் பல வகைகள் உண்டு. அவையாவன,

துடுக்காண்டம்
குறவஞ்சி
மறக்காணம்
அலங்காரச் சிலம்பம்
போர்ச் சிலம்பம்
பனையேறி மல்லு
நாகதாளி,
நாகசீறல்,
கள்ளன்கம்பு

ஆகியனவாகும்.

# கீழ்க்காணும் படம் ;- சிலம்பாட்ட அடிமுறைகள்
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

சிலம்பம்-- (தமிழர்களின் தற்காப்புக் கலை) Empty Re: சிலம்பம்-- (தமிழர்களின் தற்காப்புக் கலை)

Post by ஜனனி Sat May 11, 2013 7:15 am



மனிதனின்
உணர்வுகளில் வீரம் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று.
வரலாற்றின் பக்கங்களைப் புரட்டினால், ஒரு வம்சத்தின் வெற்றியையோ புகழையோ
நிர்ணயிக்கும் அளவுகோலாக வீரம் விளங்கியிருப்பது தெரியவரும்.உலகின்
புகழ்வாய்ந்த இனங்கள் அனைத்தும் வீர சாகசங்களால் மட்டுமே அறியப்பட்டன.


ஆதி
மனிதன் கொடுரமான மிருகங்களிடமிருந்து தன்னை பாதுகாத்து கொள்ள அவற்றின்
செயல்பாடுகளை ஒத்தே தனது பாதுகாப்பு முறைகளை உருவாக்கினான் . பிறகு
கற்காலத்திலும் ( stone age ) உலோக காலத்திலும் ( iron age ) வெவ்வேறு
ஆயுதங்களை படைத்தான். தற்காப்பு கலை என்றாலே நமக்கு சீனாவோ , ஜப்பானோ
தான் ஞாபகத்திற்கு வரும். ஆனால் தற்பொழுது நடைமுறையில் உள்ள பழைய
தொன்மையான தற்காப்பு கலைகள் எல்லாம் தமிழ் பேசுபவர்களால் உருவாக்கப்பட்டது
. ஆச்சிரயமாக உள்ளதா ?


பல்லாயிரக்கணக்கான
ஆண்டுகளுக்கு முன்பே தற்காப்பு கலையானது தமிழகத்திலும் , வடகிழக்கு
இலங்கையிலும் , கேரளாவிலும் , ஆந்திராவின் தென் பகுதியிலும் பழக்கத்தில்
இருந்தது . கி பி 3 நூற்றாண்டுக்கு முன்பு வரை இலங்கை முழுவதும் தமிழ்
மொழியே பேசப்பட்டது .பின்பு வங்காளத்தில் இருந்து வந்த வட இந்தியர்களால்
இப்பொழுது பேசப்படுகிற சிங்கள மொழியானது உறுவானது. பின்பு வந்த
சிங்களர்களும் தென் பகுதியிலும், மேற்கு பகுதிகளிலும் தான் குடி
புகுந்தனர் .ஆதலால் இலங்கையில் தமிழ் பேசப்பட்ட இடங்களிலே தற்காப்பு கலை
இருந்தது என்பது தெளிவு.



இரண்டாவதாக கேரளாவில் உள்ள மலையாள மொழியானது கி பி 8 நூற்றாண்டுக்கு பிறகே தமிழிருந்து பிரிந்து சென்றது.
([You must be registered and logged in to see this link.] ) அதற்கு
முன்பு வரை இருவரும் பொதுவான மொழியாகிய தமிழையே பேசினார். ஆனால் மிகவும்
பழமையான கலையாக ( இரோப்பியர்களால் ) கூறப்படும் களரி கி பி 6 இம்
நுற்றாண்டிலே பழக்கத்தில் இருந்ததாக தெரியப்படுகிறது.ஆகையால் இங்கும்
தமிழ் மொழி பேசுபவர்களே உபயோகித்து வந்தனர்.



தெலுங்கு
மொழி உருவாவதற்கு முன்பு வரை ஆந்திர மாநிலத்தின் தென்பகுதி முழுவதும்
தமிழ் மொழியே புழக்கத்தில் இருந்தது வடபகுதி முழுவதும் Prakrit ( ) என்ற
மொழியையே பேசினார்கள் .



பல
கட்டுரைகளிலும், வலைப்பதிவுகளிலும் தற்காப்பு கலையானது சீனாவில் தரும
போதிதர்மா என்பவரால் கற்று கொடுக்கப்பட்டது என்பது தெரிய வருகிறது (
[You must be registered and logged in to see this link.] ). இவர் தமிழ் நாட்டில் உள்ள
காஞ்சிபுரத்தில் இருந்து சீனா சென்றவர் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே
.கட்டுரையின்படி இவர்தான் மூச்சு பயிசியும், யோகாவும் கற்று கொடுத்தார்
என்பதால் சீனர்களுக்கு முன்பே நாம் இக்கலையில் தேர்ந்திருந்தோம் என்பது
உறுதி.



கி
பி 10 நுற்றாண்டில் காஞ்சிபுரத்தை தலைநகரமாக கொண்ட பல்லவர்களின் இளவரசன்
கண்டியன் என்பவன் தான் கம்போடியாவின் முதல் மன்னன் . கி பி 10
நுற்றாண்டில் உச்சத்தில் இருந்த சோழர்கள் தனது அதிகாரத்தை தெற்காசிய
முழுவதும் பரப்பினர். கி பி 12 நுற்றாண்டில் பல்லவர்களும், சோழர்களும்
தெற்கசியர்களுடன் மிகவும் நெருங்கிய கடல் வாணிபத்தில் ஈடுபட்டனர். தமிழர்
ஆட்சிக்கு கீழ் அடிக்கடி பல தெற்காசிய நாடுகள் கொண்டு வரபபட்டன.தமிழர்கள்
ஆட்சியில் கட்டப்பட்ட கோவில்களிருந்து அவர்களின் கலைத்திறமையை கண்டறியலாம்
. இக்கட்டுரையின் மூலம் நான் கூற விரும்புவது என்னவென்றால் தமிழர்கள்
தான் தற்காப்பு கலையை சீனாவுக்கும், தெற்காசியாவுக்கும் பரப்பியவர்கள்.
இதை இந்தோனேசியாவிலும், கம்போடியாவிலும் உள்ள கோவில்களின் மூலமும்
மேற்கூறிய சான்றுகளின் மூலமும் அறியலாம் .







தமிழர் தற்காப்பு கலைகளை பின்வருமாறு பிரிக்கலாம்
ஆயுதமில்லா தற்காப்பு

அடிதடி
குத்து வரிசை
மல்யுத்தம்
வர்மக்கலை


ஆயுதம் கொண்டு தற்காப்பு
சிலம்பம்
வளரி
முச்சாண்
இரட்டை முழங்கோல்
இரட்டை வாள்
வாள்
வாள், கேடயம்
வெட்டரிவாள்
கத்தரி
பீச்சுவா
சுருள் பட்டை
சூலம்
மடுவு
சுருள் கொம்பு


வர்மக்கலை
வர்மக்கலை என்பது
உடலின் முக்கிய நாடிகள், நரம்புகள் அல்லது புள்ளிகளை பற்றிய அறிவை மையமாக
கொண்ட ஒரு தற்காப்புக் கலையாகும். கரமடி, உடல் அசைவுகள், ஆயுதங்களை
உபயோகித்து சண்டை ஆகிய அம்சங்களும் இதில் அடங்கும்.



வர்மக்கலை
என்பது முழுக்க முழுக்க தற்காப்பும் மருத்துவமும் சேர்ந்த கலையே.
பழங்காலத்தில் அது மருத்துவத்திற்கும் தற்காப்பிற்கும்
பயன்படுத்தப்பட்டதால் ஆபத்தான கலையாக கருதப்படுகிறது. அடிப்படையில் மனித
உடலின் மிகமுக்கியமான, ஆபத்தான இடங்கள் வர்மத்தில் குறிக்கப்படுவதால்
வர்மக்கலையைக் கற்ற யாரும் அந்த இடங்களைத் தாக்கி செயலிழக்கச்செய்ய,
பின்விளைவுகளை ஏற்படுத்த முடியும் என்ற உண்மையை உணர்ந்ததால் பழங்காலத்தில்
ஆசான்மார் கட்டுப்பாடுடைய சீடர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்குக்
கற்றுக்கொடுத்தனர். எனவே, இதன் மருத்துவ பகுதியும்கூட முழுமையாக மக்களை
எட்டவில்லை.



இதன்
மற்றொரு பகுதியான தற்காப்புப்பகுதியில் குறிப்பிட்ட இடத்தைத் தாக்கி
மயக்கமுறச் செய்தல், உறுப்புகளைச் செயலிழக்கச் செய்தல், உயிரிழப்பை
ஏற்படுத்தக்கூடிய புள்ளிகளாக 64 இடங்கள் தற்காப்பிற்காக
குறிக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற இடங்களில் தாக்கப்பட்டோரை எழுப்ப அடங்கல்கள்
என்ற முக்கியமான 108 இடங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. தென்தமிழகத்தில் உள்ள
பார்த்திபகேசரம் என்ற இடத்தில் வர்ம மருத்துவத்தையும், தற்காப்புக்
கலையையும் கற்றுத் தருவதற்கு என தனி பல்கலைக்கழகமே செயல்பட்டு வந்துள்ளது.
இங்கு இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் மாணவர்கள் வந்து பயின்றுள்ளனர்.
இங்கு பயின்றோரை மன்னர்கள் மெய்க்காப்பாளர்களாக வைத்துள்ளனர்.
பழங்காலத்தில் மனித வள௱ச்சிப்போக்கில் உருவான இக்கலை பல ஆசான்களால்
செம்மைப்படுத்தப்பட்டு, சித்தர்களால் செவிவழிச்செய்திகளாகப்
பாதுகாக்கப்பட்டு, பிற்காலத்தில் மரம் ஏறுதலைத் தொழிலாகக் கொண்டவர்களால்
பயன்படுத்தப்பட்டது. அவர்களிடமே இதுதொடர்பான சுவடிகள் ஏராளமாக உள்ளன.
இன்றும் இங்கு ஆசான் என்று அழைக்கப்படும் வர்ம வல்லுநர்களால் குரு-சீடர்
முறைப்படி வர்மக்கலை பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது.



இந்த
வர்ம மருத்துவப் பகுதியில் தீர்க்க முடியாத, விபத்துகளால் ஏற்பட்ட பல்வேறு
நோய்கள், பின்விளைவுகளான காக்கைவலிப்பு, மயக்கம், தீராத தலைவலி, காயவாதம்
, பேசமுடியாமை போன்றவை வராமலேயே தடுக்கக்கூடிய எண்ணற்ற மருந்துகள் உள்ளன.


* எலும்பு முறிவினால் பாதிக்கப்பட்டு வரும் பின்விளைவுகள், உறுப்புகள்
செயல்பாடின்மை, மேலும் அறுவை சிகிச்சை செய்தும் பயனளிக்காது என்று
கைவிடப்பட்ட பல நோய்களை வர்ம மருத்துவத்தால் தீர்க்க முடியும். நோய்களால்
ஏற்படும் பல எலும்புமுறிவுகளையும் (Pathological Fracture) சரிசெய்ய
முடியும்.


* வர்ம மருத்துவ அடிப்படையிலான தடவுமுறைகள், பூச்சு முறைகள், ஒத்தட
முறைகள், வேது பிடித்தல், கட்டு போடுதல் போன்றவை மருந்தில்லா மருத்துவமாகப்
பயன்படுத்தப்பட்டுவருவது இதன் சிறப்பம்சமாகும்.


* குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணிகள் போன்றோரை எவ்வாறு தடவ வேண்டும்,
எந்தெந்த இடங்களைத் தூண்டவேண்டும் என்பன போன்ற தௌ¤வான விள௧கங்கள்
இம்மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளன. இதன் தடவுமுறையால் ஏராளமான ஆற்றலை
உடலில் உருவாக்க முடியும் என்பதை எங்களின் அனுபவரீதியிலாகக்
கண்டறிந்துள்ளோம். * விக்கல், வாந்தி, சன்னி, மயக்கம், நாக்கு
புறந்தள்ளல், நாக்கு உள்ளே இழுக்கப்படுதல், பைத்தியம்போல் பேசுதல் போன்ற
பல்வேறு வர்ம விளைவுகளை அவற்றின் அடங்கல்களை தூண்டுவதன் மூலம்
கண்ணிமைக்கும் நேரத்தில் தீர்க்க இம்மருத்துவ முறையால் முடியும்.
பார்ப்போருக்கு இது ஏதோ கண்கட்டு வித்தை போலத் தோன்றும்.




குத்து வரிசை
வரிசையான முறையில் குத்துவது ( 'Kuttu' means punch or hit and 'Varisai' means sequence or order i,e using
the punches in sequential order). இந்த வகை கலையில் எவ்வாறு கைகளையும்
கால்களையும் தகுந்த முறையில் பாதுகாப்புக்காக பயன்படுத்துவது என்பது
சொல்லப்படுகிறது.குத்து வரிசை பயிற்சி ஆரம்பிப்பதற்கு முன்னால் யோகா,
மூச்சு பயிற்சி மற்றும் சில உடற்பயிற்சிகள் கொடுக்கப்படும்.இப்பயிற்சியில்
ஏறக்குறைய உடலின் எல்லா பாகங்களும் கைமுஸ்டி, முழங்கை, முழங்கால், பாதம்
ஈடுபடுத்தப்படுகிறது.



மல்யுத்தம்
மல்யுத்தம் தமிழ் இலக்கியங்களில் 'மல்லாடல்' என வழங்கப்படுகின்றன. மேலும் இவ்வாடல் இதிகாசங்கள், புராணங்களிலும் குறிக்கப்படுகின்றன.



சிலம்பம்


[You must be registered and logged in to see this image.]
சிலம்பம்
என்பது கழி வைத்து ஆடுகிற ஆட்டம். முன்னும் பின்னும் பக்கவாட்டிலும்
சுழற்றி தாக்கவும் , தாக்குதலை தடுக்கவும் மேற்கொள்ளும் பயிற்சி. சிலம்பு
மிகவும் பழமை வாய்ந்த ஆயுதம் (நிலத்தில் இருந்து ஒரு ஆளின் நெற்றி புருவம்
வரையான உயரமுடைய தடி).சிலம்பங்கிறது தற்காப்பு கலை மட்டுமல்ல; நம்முடைய உடலின் ஒட்டுமொத்த பாகங்களுக்கும் பயிற்சி தருகிற உன்னத கலையும்கூட.








வளரி

வளரி என்பது ஓடித் தப்பிப்பவர்களை பிடிப்பதற்கு பண்டைய தமிழரால் பயன்படுத்தப்பட்ட ஒருவகை வளைதடி போன்ற ஆயுதம் ஆகும். இதற்கு ஒத்த ஆயுதங்களை வளைதடி, பாறாவளை, சுழல்படை, படைவட்டம் என்றும் அழைத்தனர்


[You must be registered and logged in to see this image.]
ஓடுபவர்களை
உயிருடன் பிடிக்க, மரத்தால் ஆன வளரியைப் பயன்படுத்துவது உண்டு.
கால்களுக்குக் குறிவைத்து சுழற்றி, விசிறி, வீசி விட வேண்டும். சிலவற்றை
இரும்பிலும்கூட செய்வார்கள். பட்டையான கூரான வளரியை வீசினால் சுழன்று
கொண்டே சென்று, வெட்டுப்படக்கூடிய இலக்காக இருந்தால் சீவித்தள்ளி விடும்.
வளரிகள் குறிவைத்து எறிவதற்குப் பல முறைகள் உண்டு. பொதுவாக சுழற்றப்பட்டே
எறியப்படும். இப்படி எறியப்படும்போது இது செங்குத்தாக அல்லது கிடையாக
சுழலும். அல்லது சுழலாமலே செல்லக்கூடும். அதன் சுழற்சி வேகத்திலும்
தங்கியுள்ளது. உயிராபத்தை விளைவிப்பதற்கு வளரியானது ஒருவனின் கழுத்தைக்
குறிவைத்து எறியப்படும். பொதுவாக கால்களையே தாக்குவதற்கு எறியப்படும்.
வளரி மான் வேட்டையின் போது பயன்படுத்தப்படும் ஒரு ஆயுதமாகும். பண்டைய போர்
வகைகளிலும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் கள்ளர் நாடு,
சிவகெங்கை - தற்போதைய பட்டுக்கோட்டை, மதுரை, இராமநாதபுரம் ஆகிய
மாவட்டங்களின் சில பகுதிகளில் பாவிக்கப்பட்டிருக்கின்றது. வளரி எறிதல்
போட்டிகளும் நடைபெற்றிருக்கின்றன. சிவகெங்கையில் ஆட்சியிலிருந்த மருது
சகோதரர்கள், மற்றும் அவர்களது படைத்தளபதிகளான வைத்திலிங்க தொண்டைமான்
ஆகியோர் வளரியையே ஆயுதமாகப் பாவித்து ஆங்கிலேயர்களுடன் சண்டையிட்டதாகக்
கூறப்படுகிறது.




சுருள் பட்டை
சுருள்
பட்டை எனபது நீண்ட வாள்.இது மிகவும் வளையக்கூடிய மெல்லிய இரும்பால் ஆனது
அதே சமயம் சதையை வெட்ட கூடிய அளவுக்கு கூர்மையானது . இது ஒரு இன்ச்
அகலமும் 5 அடி நீளமும் கொண்டது. சுருள் போல மடித்தும் வைத்து
கொள்ளலாம்.பொதுவாக இதை இடுப்பு பட்டையாக அணிந்து கொள்வர்.



அடிதடி



முச்சாண்


இரட்டை முழங்கோல்


இரட்டை வாள்


வாள்


வாள், கேடயம்


வெட்டரிவாள்


கத்தரி


பீச்சுவா


சூலம்


மடுவு


சுருள் கொம்பு
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

சிலம்பம்-- (தமிழர்களின் தற்காப்புக் கலை) Empty Re: சிலம்பம்-- (தமிழர்களின் தற்காப்புக் கலை)

Post by ஜனனி Tue Apr 01, 2014 3:47 pm

அறிவிப்பு  அறிவிப்பு  அறிவிப்பு
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

சிலம்பம்-- (தமிழர்களின் தற்காப்புக் கலை) Empty Re: சிலம்பம்-- (தமிழர்களின் தற்காப்புக் கலை)

Post by Tamil Fri May 09, 2014 7:04 am

நன்றி ஜனனி
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

சிலம்பம்-- (தமிழர்களின் தற்காப்புக் கலை) Empty Re: சிலம்பம்-- (தமிழர்களின் தற்காப்புக் கலை)

Post by அனுராகவன் Fri May 30, 2014 11:26 pm

எனக்கு கற்க ஆசை..யார் சொல்லி தருவது...
நன்றி பகிற்வுக்கு...
அனுராகவன்
அனுராகவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 342
Join date : 31/07/2012
Location : madurai

Back to top Go down

சிலம்பம்-- (தமிழர்களின் தற்காப்புக் கலை) Empty Re: சிலம்பம்-- (தமிழர்களின் தற்காப்புக் கலை)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum