Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
தோலைத் தூக்கிப் போடாதீங்க --- உபயோகமான தகவல்கள்,
Page 1 of 1

சத்தான உணவைத் தேர்ந்தெடுத்து உண்பது
மட்டுமா, அதை எந்த விதத்தில் சாப்பிடுகிறோம் என்பதும் மிகவும் முக்கியம்.
பழங்களை வாங்கியவுடன் நாம் முதலில் செய்யும் வேலை பழத்தின் தோல்களை
நீக்குவதுதான். தோல்கள் என்றாலே தேவையற்றவை என்று நம் மனதில் பதிந்துபோனதன்
விளைவு இது. பழத் தோல்களின் பலன்களைச் சொல்கிறார் காரைக்குடியைச் சேர்ந்த
உணவியல் நிபுணர் ஷில்பி பிஸ்த்ரி.
''பொதுவாகவே பழங்களின் உட்பகுதியைவிடத் தோலில்தான் அதிக
அளவு சத்துக்கள் இருக்கும். அதிலும், சப்போட்டா, மாம்பழம், கொய்யா,
திராட்சை, ஆப்பிள் போன்ற பழங்களின் தோல்களில் அதிக அளவு சத்துக்கள் அடங்கி
இருக்கின்றன.
ஆப்பிள் தோலில் கால்சியம் மற்றும் வைட்டமின் ஏ அதிகமாக
உள்ளன. டயட் மேற்கொள்பவர்களுக்கு ஏற்ற அதிகமான நார்ச் சத்தும்,
ஆன்டிஆக்சிடென்ட்களும் இருப்பதால் செல்கள் வலுவடைந்து, இதய நோய் மற்றும்
நீரிழிவு நோய் ஏற்படாமல் பாதுகாக்கிறது. மேலும், தோல் நீக்கப்படாத ஆப்பிள்
பழத்தில் இருந்து எடுக்கப்படும் பழச்சாறு ரத்தத்தை சுத்தம் செய்து,
ரத்தத்தில் கலந்துள்ள அமிலத்தன்மையை நீர்த்துப்போகச் செய்யும்.
[You must be registered and logged in to see this image.]
கொய்யாப் பழத்தைத் தோலுடன் தொடர்ந்து சாப்பிட்டு
வந்தால், சருமத்துக்குப் பொலிவையும் அழகையும் கூட்டுவதுடன் தோல்
வறட்சியையும் போக்கும்.
ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைக்கும் வல்லமை
மாம்பழத் தோலுக்கு உண்டு. நீரழிவு நோயாளிகள் மாம்பழத்தைத் தோலுடன்
சாப்பிடுவது நல்லது.
கிவி பழத் தோலில் வைட்டமின்கள், கனிமச் சத்துகள் மற்றும் ஆன்டிஆக்ஸிடென்ட் அதிகமாக இருப்பதால், இதய நோய் வராமல் பாதுகாக்கும்.
[You must be registered and logged in to see this image.]வாழைப்பழத்
தோலில் அதிக அளவு நார்ச் சத்தும், கால்சியமும் உள்ளன. மூட்டு வலி
உள்ளவர்கள் தோலுடன் சேர்த்து பழத்தைச் சாப்பிட்டுவர, மூட்டுவலி சரிய£கும்.
கொஞ்சம் கசப்புத்தன்மை இருக்கும் என்பதால், தேன் கலந்து சாப்பிடலாம்.
திராட்சையைத் தோலுடன் சாப்பிடும்போது, ரத்த உற்பத்தி அதிகரிக்கும். மலச்சிக்கலும் சரியாகும்.
மாதுளம் பழத் தோலை சூரிய ஒளியில் காயவைத்துப்
பொடியாக்கி, வெண்ணெயுடன் சீரகம், உப்பு சேர்த்துக் கொதிக்கவைத்து உண்டுவர,
நீண்ட நாள் வயிற்றுவலி சரியாகும். மாதுளம் தோல் பொடியினைப் பாலுடன்
சேர்த்துச் சாப்பிட்டால், நீரிழிவு நோய் குணமாகும்.
சப்போட்டாவின் தோலில் உள்ள சில வேதிப்பொருட்கள் உடலில்
உள்ள காயங்களை விரைவில் குணப்படுத்தக்கூடியவை. உடலில் இருக்கும் தீங்கு
செய்யும் பாக்டீரியாவையும் அவை அழிக்கும். சருமப் பிரச்னை, ஆறாத புண்
இருப்பவர்கள் தோலுடன் எடுத்துக்கொள்ளலாம்.'' எனப் பட்டியலிடுகிறார் ஷில்பி
பிஸ்த்ரி.
''பழங்களில் மட்டும் அல்ல... காய்கறிகளின் தோலிலும் அதிக அளவு சத்துக்கள் உண்டு'' என்கிறார் உணவியல் நிபுணர் லலிதா.
''காய்கறிகளில் உள்ள தோலை நேரடியாகச் சாப்பிட முடியாது.
ஆனால், அவற்றை வைத்துத் துவையல் மற்றும் சாம்பார் செய்து சாப்பிடலாம்.
சருமப் பாதுகாப்புக்கும் பயன்படுத்தலாம்.
எலுமிச்சம்பழத் தோலில் வைட்டமின் சி அதிகம் உள்ளது.
தோல் தொடர்பான நோய்களைப் போக்கி, சருமத்துக்குப் பளபளப்பைத் தரக்கூடியது.
எலுமிச்சைத் தோலை அரைத்து, அத்துடன் உருளைக்கிழங்கு, எலுமிச்சை சாறு,
சிகப்பு சந்தனம் ஆகியவற்றைச் சேர்த்து சுடுதண்ணீரில் கலந்து, முகத்தில்
பூசி, மெல்லிய துணியால் மூடி, அரை மணி நேரம் கழித்துக் கழுவ வேண்டும்.
இதுபோன்று தொடர்ந்து செய்துவர முகச் சுருக்கங்கள் மறைந்து இளமைத் தோற்றம்
கிடைக்கும். விரல் நகங்களை எலுமிச்சை தோலால் தேய்க்க, நகம் சுத்தமாகும்.
தக்காளிப் பழத்தைத் தோல் எடுக்காமல், அப்படியே
சாப்பிடுவது ஏராளமான சக்தியைக் கொடுக்கும். தக்காளியின் தோலில் வைட்டமின்
ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி, மற்றும் கால்சியம் இருக்கின்றன.
உருளைக்கிழங்கைப் பெரும்பாலும் தோல் நீக்கித்தான்
பயன்படுத்துகின்றனர். வேகவைத்தவுடன் தோலை நீக்காமல், அப்படியே பொரியல்
செய்து சாப்பிடலாம். இதில் நார்ச்சத்து, பாஸ்பரஸ் அதிகம் உள்ளன. அதேபோல்
முள்ளங்கியைத் தோலுடன் நறுக்கி, ஜூஸ் செய்து குடித்துவர, சிறுநீரகக் கற்கள்
கரையும். சுரைக்காய், புடலங்காயைத் தோல் நீக்காமல் சாப்பிட்டு வர, தொப்பை
குறையும்'' என்கிறார்.
இனிமேல் தோலைத் தூக்கிப் போட மாட்டீங்கதானே?!

Similar topics
» தோலைத் தூக்கிப் போடாதீங்க
» காய்கறி மற்றும் பழங்களின் விதையை தூக்கிப் போடாதீங்க…
» அ முதல் ஃ வரை...டிரைவிங் லைசென்ஸ்---உபயோகமான தகவல்கள்,
» வில்லங்கம் இல்லாத வீட்டுமனை வேண்டுமா? உபயோகமான தகவல்கள்
» திருமணத்தை பதிவு செய்வதுதான் பெஸ்ட்! --உபயோகமான தகவல்கள்,

Permissions in this forum:
You cannot reply to topics in this forum