Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
திருமணத்தை பதிவு செய்வதுதான் பெஸ்ட்! --உபயோகமான தகவல்கள்,
Page 1 of 1

அது ஒரு காலம். பதிவுத் திருமணம் செய்து கொண்டவர்கள் என்றாலே வீட்டுக்குத்
தெரியாமல், அல்லது வீட்டினரின் எதிர்ப்பை மீறி திருமணம்
செய்துகொள்பவர்களுக்கு ஏற்ற திருமணமுறை அது என்ற நிலை. தமிழ் சினிமாக்களைப்
பொறுத்தவரை இப்போதும் அப்படித்தான் என்றாலும் உண்மை நிலை மாறிவிட்டது.
பதிவுத் திருமணத்தைப் பொறுத்தவரை பலவித தவறான நம்பிக்கைகள் உலவுகின்றன.
அவற்றைக் கொஞ்சம் பார்ப்போம்.
தவறான நம்பிக்கை-1
மாப்பிள்ளை மற்றும் அவர்கள் குடும்பத்தாரைப் பற்றி மிகவும் நன்று தெரிந்திருந்தால் அந்த திருமணத்தை பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை.
உண்மை – அப்படியில்லை. நீங்கள் ஒருவரை சட்டப்பூர்வமாக
மணந்திருக்கிறீர்கள் என்பதற்கான சான்றுதான் பதிவு செய்து கொள்வது.
பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும்போது மற்றும் உங்கள் பெயருடன் உங்கள் கணவர்
பெயரையும் சேர்த்துப் பயன்படுத்தப் போகிறீர்கள் எனும்போது திருமணச்
சான்றிதழ் மிகவும் அவசியம்.
தவறான நம்பிக்கை – 2
ஹிந்து திருமண முறைப்படி திருமணம் நிச்சயமாகியிருந்தால் அந்த திருமணம் முடிந்த பிறகுதான் பதிவு செய்து கொள்ள முடியும்.
உண்மை – இது பொதுவான நடைமுறையாக உள்ளது. ஆனால் பதிவுத் திருமணம்
செய்து கொண்டு பிறகு சம்பிரதாயத் திருமணம் செய்து கொள்வதும் அதிகரித்து
வருகிறது. இதற்கு முக்கிய காரணம். வெளிநாட்டில் மணமகன் இருந்து திருமணமான
சில நாட்களிலே மணமகள், அவருடன் வெளிநாடு செல்ல வேண்டும் என்றால்
முன்னதாகவே பதிவு செய்து கொண்டால் பாஸ்போர்ட், விசாவுக்கு விண்ணப்பம்
செய்வதற்கு வசதி.
தவறான நம்பிக்கை – 3
ஓர் ஆணும் ஒரு பெண்ணும் தங்களுக்கு திருமணம் நடத்தித் தரவேண்டும் என்று
பதிவாளர் அலுவலகத்திற்குப் போய் நின்றால் அவர்களுக்கு திருமணம் செய்து
வைக்க வேண்டியது பதிவாளரின் கடமை.
உண்மை – அப்படியில்லை. ஆணுக்கு 21 வயதும், பெண்ணுக்கு 18 வயதும்
நிறைந்திருக்க வேண்டும். அதற்கான சான்றிதழ் தேவை. ஏற்கெனவே திருமணம்
செய்து கொள்ளாதவராக (அல்லது திருமணம் ஆகியிருந்தால் உரிய முறையில்
விவாகரத்து பெற்றவராக) இருக்க வேண்டும். அல்லது ஏற்கெனவே திருமணம்
ஆகியிருந்தால் துணைவர் இறந்திருக்க வேண்டும். மனநிலை சரியாக
உள்ளவர்களுக்குத்தான் (அதாவது புத்திசுவாதீனம் உள்ளவர்கள்) திருமணம் செய்து
வைப்பார்கள். திருமணத்திற்கு விண்ணப்பிக்கும் இருவரும் ஏற்கெனவே ரத்தவழி
உறவுக்காரர்கள் என்றால் அவர்களுக்கு இடையே திருமணம் நடப்பது தடை
செய்யப்பட்டிருக்கக் கூடாது. உதாரணத்திற்கு ஹிந்துக்களில் சகோதரர்களின்
குழந்தைகள், சகோதர சகோதரிகள்தான். பெரியப்பா மகனை சித்தப்பா மகள் திருமணம்
செய்துகொள்ள சம்பிரதாயத்தின்படியும், சட்டப்படியும் அனுமதி கிடையாது.
தவறான நம்பிக்கை – 4
உரிய சான்றிதழ்களை மட்டும் கொடுத்துவிட்டால் காதலர்கள் அடுத்த நாளே
பதிவாளர் அலுவலகத்தில் மாலை மாற்றிக் கொண்டு திருமணத்தைப் பதிவு செய்து
கொண்டு விடலாம்.
உண்மை – ஸ்பெஷல் திருமணச் சட்டத்தின்கீழ் நடக்கும் திருமணத்தைப்
பதிவு செய்து கொள்ள வேண்டும் என்றால் அதற்கான அறிவிப்பை மணமக்களில் ஒருவர்
திருமண அதிகாரிக்குக் கொடுக்க வேண்டும். அந்த அறிவிப்பை பதிவாளர்
அலுவலகத்தில் பளிச் சென்று தெரியக்கூடிய ஓர் இடத்தில் பொது மக்கள்
பார்வைக்கு வைப்பார்கள். இதிலிருந்து முப்பது நாட்கள் முடிந்தவுடன் அந்தத்
திருமணத்திற்கு யாரும் ஆட்சேபணை எழுப்பவில்லை என்றால் திருமணம் நடந்து
அங்கேயே பதிவு செய்யப்படும். அப்படி ஆட்சேபணை கிடைக்கப் பெற்றால் இது
குறித்து விசாரணை நடத்தப்பட்டு, உரிய தீர்மானம் எடுக்கப்படும்.
கூடுதல் செய்தி:
இப்போதெல்லாம் திருமண மண்டபத்துக்கே வந்து கூட திருமணத்தை
பதிவுசெய்கிறார்கள். இதற்கான தனிக்கட்டணம் உண்டு. என்றாலும் கையோடு
சான்றிதழையும் சத்திரத்திலேயே கொடுத்துவிட மாட்டார்கள்.
சம்பந்தப்பட்டவர்கள் பதிவு அலுவலகத்துக்கு நேரில் சென்றுதான் பெற்றுக்
கொள்ளவேண்டும். பதிவுசெய்த அன்றேகூட இந்தச் சான்றிதழைப் பெறமுடியும்.
படிவம் 1ம் மணமக்களோடு, திருமணத்க்கு வந்திருந்த வேறு இரண்டுபேரும் சாட்சி அளிக்கவேண்டும்.
இந்தக் காலத்தில் பெரியவர்களின் ஆசி, மணமக்களின் விருப்பம் இவற்றைப் போலவே
சட்டத்தின் துணையும் மிக அவசியம் என்றாகிவிட்டது. எனவே சட்டம் அளிக்கும்
இந்த வசதியை பயன்படுத்திக் கொள்வதே புத்திசாலித்தனம்.

mmani- பண்பாளர்
- Posts : 8037
Join date : 19/12/2010
Similar topics
» அ முதல் ஃ வரை...டிரைவிங் லைசென்ஸ்---உபயோகமான தகவல்கள்,
» வாரிசுச் சான்றிதழ் என்றால் என்ன?, அதன் முக்கியத்துவம் என்ன? உபயோகமான தகவல்கள்
» வில்லங்கம் இல்லாத வீட்டுமனை வேண்டுமா? உபயோகமான தகவல்கள்

» இணையவழி இலவச சட்ட ஆலோசனை --உபயோகமான தகவல்கள்,

Permissions in this forum:
You cannot reply to topics in this forum