Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
பென்னாகரத்தில் போலீஸ் குவிப்பு : இன்று ஓட்டுப்பதிவு
Page 1 of 1
பென்னாகரத்தில் போலீஸ் குவிப்பு : இன்று ஓட்டுப்பதிவு
பென்னாகரம்
: பென்னாகரம் தொகுதியில் இன்று நடக்கும் ஓட்டுப் பதிவை முன்னிட்டு அனைத்து
ஓட்டுச் சாவடிகளுக்கும் தேவையான மின்னணு ஓட்டு இயந்திரங்கள் பலத்த போலீஸ்
பாதுகாப்புடன் நேற்று எடுத்துச் செல்லப்பட்டு, தயார் நிலையில் உள்ளன.
ஓட்டுச் சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார், தீவிர கண்காணிப்பில்
ஈடுபட்டுள்ளனர்.
பென்னாகரம் இடைத்தேர்தலில் தி.மு.க., -
அ.தி.மு.க.,- பா.ம.க.,- தே.மு.தி.க., மற்றும் சுயேச்சைகள் உள்ளிட்ட 31
வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மொத்தம் 250 ஓட்டுச் சாவடிகள்
அமைக்கப்பட்டுள்ளன.பென்னாகரம் தொகுதியின் மாவட்ட தேர்தல் அலுவலரும்,
கலெக்டருமான அமுதா தலைமையில், தேர்தல் நடத்தும் அலுவலர் மகேஸ்வரி, உதவி
தேர்தல் நடத்தும் அலுவலர்களான பென்னாகரம் தாசில்தார் டியூக் பொன்ராஜ்,
தர்மபுரி தாசில்தார் ராம துரைமுருகன் ஆகியோர் மேற்பார்வையில் மின்னணு
ஓட்டுப் பதிவு இயந்திரங்கள், அனைத்து ஓட்டுச் சாவடிகளுக்கும் நேற்று காலை
முதல் எடுத்துச் செல்லப்பட்டன.
எமனூரில் உள்ள ஒரு ஓட்டுச் சாவடிக்கு
படகு மூலமும், ஏரிமலை மற்றும் கோட்டூர் மலை ஆகிய இரு ஓட்டுச் சாவடிகளுக்கு
ஆட்கள் மூலமும் கன்ட்ரோல் யூனிட் மற்றும் பேலட் யூனிட்டுகள் எடுத்துச்
செல்லப்பட்டன.மேலும் வெப் கேமராக்கள் மற்றும் கம்யூட்டர்களை இயக்க ஜெயம்
இன்ஜினியரிங் கல்லூரி மாணவ, மாணவியர் 250 நியமிக்கப்பட்டுள்ளனர்.இன்று
காலை 8 மணிக்கு துவங்கும் ஓட்டுப் பதிவு மாலை 5 மணி வரை நடக்கிறது. காலை 9
மணி முதல் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை ஒட்டுப் பதிவு சதவீதத்தை,
ஓட்டுச்சாவடி அலுவலர்கள் மொபைல் போன் மூலம், மாவட்ட தேர்தல் அலுவலருக்கு
எஸ்.எம்.எஸ்., மூலம் தெரிவிக்கும் வகையில், சிறப்பு ஏற்பாடுகள்
செய்யப்பட்டுள்ளன.தேர்தல் பாதுகாப்பு பணியில் ஆறு கம்பெனி ரிசர்வ்
போலீசார், இரு கம்பெனி மத்திய தொழில் பாதுகாப்பு படை போலீசார் இது தவிர
தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஆயிரத்து
200 போலீசார், உள்ளூர் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தே.மு.தி.க.,வுக்கு டிபாசிட் கிடைக்குமா?
தி.மு.க., சார்பில் வாக்காளர்களுக்கு 1,000 ரூபாயும், அ.தி.மு.க.,வில் 300
முதல் 500 ரூபாய் வரையிலும், பா.ம.க.,வில் 200 ரூபாயும் பண பட்டுவாடா
நடந்தது.இதில், சில வாக்காளர்களுக்கு கிடைக்கவில்லை என்ற அதிருப்தி
ஏற்பட்டது. அதிருப்தியாளர்களை சரி கட்ட அனைத்து அரசியல் கட்சிகளும்
அமைதியான முறையில் விடுபட்டவர்களுக்கு பணம் பட்டுவாடாவில் நேற்று
இறங்கினர்.சில இடங்களில் பா.ம.க.,வுக்கும், தி.மு.க.,வுக்கும் இடையில்
மோதல்கள் ஏற்பட்டன. தே.மு.தி.க.,வில் இது வரையில் பணம் பட்டுவாடா செய்யாத
நிலையில், அனைத்து அரசியல் கட்சியினரும் பணம் பட்டுவாடா செய்துள்ளதால்,
வந்தவாசி, திருச்செந்தூர் இடைத்தேர்தல் போல் டிபாசிட் பறிபோக வாய்ப்பு
இருப்பதாக அக்கட்சியினர், விஜயகாந்திடம் தெரிவித்துள்ளனர்.
பரிசல் மூலம் சென்ற ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் :
பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பரிசல் மூலம் காவிரியாற்றை கடந்து, ஏமனூர்
கிராமத்திற்கு மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் எடுத்துச்
செல்லப்பட்டன.பென்னாகரம் சட்டசபை தொகுதியில் உள்ள ஒட்டனூரில் இருந்து 13
கி.மீ., தூரத்தில், மேட்டூர் அணை நீர்பரப்பு அருகாமையில் அமைந்துள்ளது
ஏமனூர் கிராமம். இந்த கிராமத்தில், 200 குடும்பத்தினர் வசிக்கின்றனர்.
1,500 ஓட்டு உள்ளது. ஏமனூரில் இருந்து ஒட்டனூருக்கு சாலை வசதி
கிடையாது.சேலம் மாவட்டம், செட்டிப்பட்டியில் இருந்து காவிரி ஆற்றை பரிசல்
மூலம் கடந்து ஏமனூருக்கு செல்ல வேண்டும். பென்னாகரம் சட்டசபை இடைத்தேர்தலை
முன்னிட்டு நேற்று பென்னாகரம் தாலுகா அலுவலகத்தில் இருந்து எஸ்.ஐ.,
கமால்பாஷா மற்றும் 20 போலீசார் அடங்கிய குழுவினரும் மண்டல தேர்தல் அலுவலர்
மற்றும் அதிகாரிகள் மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்களை மேச்சேரி,
மேட்டூர், கொளத்தூர் வழியாக நேற்று மாலை 5 மணிக்கு செட்டிபட்டி கொண்டு
வந்தனர்.அங்கிருந்து காவிரியாற்று கரைக்கு வந்து பரிசலில் ஓட்டுப் பதிவு
இயந்திரங்களை ஏற்றி, காவிரியின் மறுகரையில் உள்ள ஏமனூர் கிராமத்திற்கு
சென்றனர். கிழக்கு ஏமனூர், தெற்கு ஏமனூர், ஆத்துமேட்டூர், சிங்காபுரம்
பகுதியைச் சேர்ந்த மக்கள் ஓட்டு போடுவதற்காக ஏமனூர் பள்ளியில் ஓட்டுச்
சாவடி அமைக்கப்பட்டுள்ளது.
ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» தே.மு.தி.க. செயலாளர் அடித்து கொலை! தி.மு.க.பிரமுகர் கைது- போலீஸ் குவிப்பு
» இனிமேல் அணு உலை போராட்டம் வலுப்பெற முடியாது ’ கூடங்குளத்தில் போலீஸ் குவிப்பு : தயாராக இருக்க உத்தரவு
» புதுச்சேரி முதல்வரின் வீடு, அலுவலகம் முற்றுகை: போலீஸ் குவிப்பு
» நாளை விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் : சென்னையில் போலீஸ் குவிப்பு
» மீண்டும் ஒரு காதல் திருமணத்தால் பிரச்சினை: தர்மபுரி இண்டூர் காலனியில் போலீஸ் குவிப்பு.
» இனிமேல் அணு உலை போராட்டம் வலுப்பெற முடியாது ’ கூடங்குளத்தில் போலீஸ் குவிப்பு : தயாராக இருக்க உத்தரவு
» புதுச்சேரி முதல்வரின் வீடு, அலுவலகம் முற்றுகை: போலீஸ் குவிப்பு
» நாளை விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் : சென்னையில் போலீஸ் குவிப்பு
» மீண்டும் ஒரு காதல் திருமணத்தால் பிரச்சினை: தர்மபுரி இண்டூர் காலனியில் போலீஸ் குவிப்பு.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum