Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)by வாகரைமைந்தன் Today at 12:16 am
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:53 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 25, 2024 10:18 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
தமிழக மாணவர்களின் ஆதரவுக்கு நன்றி – தமிழீழ அனைத்துப் பல்கலைக்கழக மாணவ சமூகம்.
Page 1 of 1

*******************************************
அன்பின் தாய்த்தமிழக் கல்விச் சமூகத்தினர் மற்றும் இளையோரிற்கு,
அடக்குமுறையின் இடையில் இருந்து ஈழத்து அனைத்துப் பல்கலைக்கழக மாணவ
சமூகத்தினர் வரையும் அன்பு மடல். உங்களை கட்டித்தழுவி வாழ்த்தத் துடிக்கும்
எமக்கு அவ்வாறே செய்ய இயலாது, சிங்கள பேரினவாதத்தின் இரும்புக்
கரங்களுக்குள் எங்கள் நாட்கள் கழிகின்றன. நவீன அடிமை யுகம் ஒன்றை
உருவாக்கும் சிங்கள பேரினவாதத்தின் சிந்தனைக்குள் இருந்து இதை கண்ணீரோடு
வரைகின்றோம், ஒரு நாள் விடியும் அன்று உங்களை நேரில் வாழ்த்தி வணங்குவோம்
என்னும் நம்பிக்கையுடன்!
ஈழ விடுதலைக்கும் ஈழத்து மக்களாகிய
எங்களின் உரிமைக்குமாய் தமிழகம் மற்றும் பாரதத்தின் பல பிரதேசங்களிலும்
பல்கிப் பெருகிவரும் வழிப்புணர்வும், ஆதரவும் எமக்கு பெரும் ஆறுதலைத்
தந்துள்ளன. குறிப்பாக இளையோர் உங்கள் வாத்வீக வழியிலான கவன ஈர்ப்புக்களும்,
மற்றும் வழிப்புணர்வு நடவடிக்கைகளும் எங்களை அநாதைகள் இல்லை, குரல்
கொடுக்க கோடிகளாய் நீங்கள் உள்ளீர்கள் எனச் சொல்ல வைத்துள்ளது.
காலணித்துவ விடுதலையின் பின்னர், முனைப்புடன் சிறீலங்கா அடிமையாக்கத்
துடிக்கும் ஆக்கிரமிக்கத் துடிக்கும் ஈழத்தமிழர்கள் எங்கள் விடுதலைப்
போராட்டங்கள் பங்கரவாதம் எனச் சாயம் பூசப்பட்டு பன்னாட்டு அரங்கில் பொய்ப்
பரப்புரைக்குப் பலியாகிப் போனது தொடக்கம், தங்களால் பெருக்கப்பட்டுவரும்
ஈழவிடுதலை முழக்கம் ஊரெல்லாம் ஒலிக்கச் செய்துகொண்டுள்ள உங்களுக்கு எமது ஈழ
மண்ணின் ஒவ்வொரு குடிமகனும் கடமைப்பட்டுள்ளான்.
இனத்தை வேரோடு
கறுவறுக்கக் கங்கணம் கட்டி, பன்னாட்டு உதவிகளோடு திட்டமிடும் சிறீலங்கா
பேரினவாதம் எங்களை அழிக்க முன்னர் எங்களைக் காப்பாற்ற யார் வருவார் என
ஏங்கித் தவித்திருக்கின்றோம். பாரத தேசம் எங்கள் தாய்த் தேசம், தந்தை தேசம்
என்று எம் முன் நின்றோர் சொல்லியே சென்றுள்ளனர். ஏங்களை கைப்பிடித்து
வழிகாட்டி வளர்த்துவிட்ட தேசம் எங்களை கைவிடாது என்று அவர்கள் உறுதிபட
நம்பிச் சென்றுள்ளனர். தங்களின் எழுச்சி அவர்களின் கூற்றினை
மெய்ப்பிக்கின்றது எங்களுக்குள் ஒரு உத் வேகத்தை உருவாக்குகின்றது.
ஆயுத வழியிலான ஈழ தேசிய விடுதலைப் போராட்டம் மௌனிக்கப்பட்டதில் இருந்து
எம்மை அடிமை கொள்ள நினைக்கும் சிறீலங்காவின் செயற்பாடுகளுக்கு நீங்கள்
தொடர்ந்து காட்டிவரும் எதிர்ப்பினால்தான் இன்னும் எம்மீதான முழு அளவு
இனச்சுத்திகரிப்பை சிறீலங்கா மேற்கொள்ள முடியாது நிற்கின்றது. தங்களது
நியாயமான வேண்டுதல்களான இறையாண்மைமிக்க சுயாட்சி, மற்றும் ஏனைய அனைத்து
விடயங்களுக்காக நாங்களும் ஏங்கி நிற்கின்றோம். எதிர்காலப் பாதை என்ன என்று
இடை நடுவில் விடப்பட்ட ஏதிலிகளாய் எங்கள் வாழ்க்கை தொடருகின்றது.
கசாப்புக்கடைக் கடாக்களாக சிங்கள பேரினவாதம் நினைக்கும்போது அறுக்கக்கூடிய,
அழிக்கக்கூடிய ஏதிலிகளாக்கப்பட்டு திறந்தவெளிச் சிறைக்குள் நாட்கள்
கழிகின்றன.
உரிமையைப் பேச முடியாது, எழுத முடியாது, ஒன்றகூடிக்
கேட்க முடியாது, ஏன் கற்றுக்கொள்ளக்கூட முடியாது, தவறை தட்டிக்கேட்க
முடியாது, சிங்களவன் முதல்குடி, தமிழன் கடைக்குடி என்னும் ஒரு நவீன
அடக்குமுறைக்குள் நாம் இருக்கின்றோம். தங்களின் மேலான எழுச்சியும், விரைவான
வழிப்பூட்டலும் ஈழத்தமிழர் பற்றியும், அவர்களின் விடுதலை பற்றியும்
உலகெங்கும் உள்ள தவறான புரிந்துணர்வுகளைக் கழைந்து எங்களை இன அழிவில்
இருந்து மீட்கும். எங்கள் இளையவர்கள் தமிழீழ தேசத்தில் மகிழ்வோடு
சுதந்திரக் காற்றைச் சுவாசிக்க வழி சமைக்கும்.
இன்று இந்த மடலை
கூடிவரையும் நாம் நாளை காணாமல் போகலாம், அல்லது கொல்லப்பட்டு வீதியில்
வீசப்பட்டிருக்கலாம். சகோதரிகள் மானம் சூறையாடப்பட்டு அவர்கள்
சிதைக்கப்படலாம். எம் பெற்றோர் பழிவாங்கப்பட்டு கொல்லப்படலாம். இதுவே
தற்போது ஈழத்தின் நியதி.
மானத்தோடு வாழும் கனவோடு உள்ள நாம்
தங்களின் வேகத்தோடு எம் விடுதலைக்கான போராட்டத்திற்கான ஆதரவோடும், எங்கள்
எதிர்காலம் சிறப்பாக அமைக்கப்படும் என்னும் நம்பிக்கையோடும், இணையும்
நாளொன்றுக்காய் காத்திருக்கின்றோம். அன்று நாம் உயிரோடு இல்லாது போனாலும்,
நீங்கள் இருந்து எங்கள் விடுதலையைக் காண பிரார்த்தித்து முடிக்கின்றோம்.
இணையும் இளைய கல்விக் கரங்களுடன்,
அனைத்துப் பல்கலைக்கழக மாணவ சமூகத்தினர்,
தமிழீழம்.
12-03-13

அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
Re: தமிழக மாணவர்களின் ஆதரவுக்கு நன்றி – தமிழீழ அனைத்துப் பல்கலைக்கழக மாணவ சமூகம்.
"தமிழ்நாட்டு
மாணவர்களின் எழுச்சிப்போராட்டம் தரணியெங்கும் வாழும் தமிழருக்கு புது
நம்பிக்கை தருகின்றது – திசைகள் இளையோர் அமைப்பு டென்மார்க்"
======================
கடல்கள் பல நம்மைப் பிரித்தாலும் சூழ்நிலை எம்மை திக்குத் திக்காக
வைத்தாலும் தமிழர் என்கின்ற தொப்பிள்க்கொடி உறவு எமை, எப்போதும் எந்த
சூழ்நிலையிலும் தழராது கைகோர்த்து இணைந்திருக்கும் என்பதை உங்கள் மூலம்
மறுபடியும் உணர்கின்றோம், ஆனந்தமடைகிறோம். கடந்த காலங்களில் காயங்கள் பலதை
சந்தித்த எம் இதயங்களில், உங்களின் உணர்வுக் குரல்கள் எமக்கு உற்சாகத்தை
தருகின்றது. எத்தடையையும் உடைத்து தமிழனுக்கு விடிவு மலர்ந்துவிடும் என்று
நம்பிக்கை அளிக்கின்றது.
நாம் தமிழ் இளையோர் எதிர்காலத் தமிழ்த்
தலைமுறையின் ஆணிவேர்கள் தமிழ் இனத்தின் எதிர்காலத்தை இவ்வுலகில்
வடிவமைப்பவர்கள். எம்மால் முடியும், நாம் நினைத்தால் சாத்தியமடையும்,
இல்லாவிட்டால் சாத்தியமடைய வைப்போம், மாற்றி அமைப்போம் என்று உறுதியாக
காலவரையின்றி உண்ணாவிரதப்போராட்டத்தை தொடர்கிறீர்கள், இது உங்களின் அசையா
இனப்பற்றை வெளிக்காட்டுகின்றது. காலங்காலமாக தமிழர்கள்
மீது சிங்களம் கோரத்தாண்டவம் நடாத்திக் கொண்டிருக்கின்றது. இது உலகறிய
2009ம் ஆண்டில் முற்றிலும் திட்டமிட்ட தமிழினப் படுகொலையாக மாறியது. உலகமோ
தனது கண்களை மூடியிருந்தது, அப்போதும் உலகில் அனைத்து திசையிலும் தமிழன்
தரையிறங்கிப் போராடினான், அனால் எமக்கு நீதி கிடைக்கவில்லை இன்று
இலட்சக்கணக்கான உயிர்களை நாம் இழந்து உலகமே கண்டறியாத கேவலமான, நெஞ்சைப்
பிழக்கவைக்கும் பல சம்பவங்களை சிறார்களுக்கும், தமிழ்ப் பெண்களுக்கும்
ஏற்படுத்தி, தொடர்ந்தும் சொந்த மண்ணில் அடிமையாய் செத்துப்பிழைக்கும்
நிலையில் எம் இனம் உள்ளது, இதை Channel 4 ஆவணமாக திரையாக்கி உலகிற்கு
வெளிக்காட்டி உள்ளது. இந்த ஆவணப் படத்தில் அடங்காத உண்மைகள் இன்னும் பல.
நாம் இந்த சந்தர்ப்பந்தை நழுவவிடக்கூடாது இன்னுமோர் பேரழிவை எம்மினம்
தாங்காது. இதை நீங்கள் நன்றாக உணர்ந்திருக்கின்றீர்கள் உறுதியுடன்
செயற்படுகின்றீர்கள்!
தாய் வழி வந்த தங்கங்கள் எல்லாம் ஓர் வழி
சென்று நேர் வழி சென்றால் நாளை நமதே இந்த நாளும் நமதே என்று மனம் தளராமல்
அனைத்துலக தமிழர்களும் நீங்கள் முன்வைத்த கோரிக்கைகளை நாம் வாழும்
நாடுகளில் முன்வைப்போம், நீதிக்காகப் போராடுவோம் என்று உறுதி மொழி
எடுப்போம் தமிழர் தாயகம் மலரும். இது காலத்தின் கட்டாயம்.
இங்ஙனம்
திசைகள் இளையோர் அமைப்பு டென்மார்க்

Similar topics
» தமிழக மாணவர்களின் போராட்டத்தை சாதாரணமான விடயமாக கருதிவிட முடியாது! அமெரிக்கா தூதுவர்
» வரும் கல்வி ஆண்டில் மாணவ, மாணவிகளுக்கு இலவச காலணிகள் : தமிழக அரசு
» ஈழத் தமிழர்களுக்கான தமிழக மாணவர்களின் போராட்டம் பற்றி மற்றைய மாநில மாணவர்கள் என்ன சொல்கிறார்கள்?
» தமிழக மாணவர்களின் போராட்டத்தைக் கண்டு எமது மக்கள் பாடம் பற்றுக் கொள்ள வேண்டும் - எஸ்.ஜெயானந்தமூர்த்தி
» தமிழக மீனவர்களை படுகொலை செய்தது தமிழீழ விடுதலைப் புலிகள் தான்-கருணாநிதி: விக்கிலீக்ஸ்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum