Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
ஃபேஸ்புக் உதவியால் சிக்கிய டிஜிபி மகன்:ஜெர்மனி பெண் பலாத்கார வழக்கின் குற்றவாளி!!
Page 1 of 1

ஜெர்மனி நாட்டு பெண் ஒருவரை ஓட்டலில் பலாத்காரம் செய்த வழக்கில்
சிறையில் அடைக்கப்பட்ட போலீஸ் டி.ஜி.பி மகன் பிட்டி மொகந்தி. இவர் 6
ஆண்டுக்கு முன் பரோலில் சென்ற போது தலைமறைவாகி விட்டார்.அப்படி தலைமறைவாக
இருந்த காலத்தில் டூப்ளிகேட்பெயரில் எம்.பி.ஏ படித்து, அரசு வங்கியில்
அதிகாரியாக பணியாற்றி வந்தார்.அவர் இப்போது பேஸ்புக் இணையதளம்
புண்ணியத்தில் போலீசில் சிக்கி உள்ளார்.
ஒடிசா மாநில ஊர்காவல்படை டிஜிபியாக இருந்தவர் பூஷன் மொகந்தி. இவரது
மகன்தான் பிட்டி மொகந்தி . கடந்த 2006ம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலம்
அல்வாருக்கு சுற்றுலா வந்திருந்த ஜெர்மனி நாட்டை சேர்ந்த 26 வயது
இளம்பெண்ணை பிட்டி மொகந்தி ஒரு ஓட்டல் அறையில் பலாத்காரம் செய்தார்.
அந்த ஜெர்மனி பெண்ணின் புகாரின்பேரில் ராஜஸ்தான் போலீசார் பிட்டி
மொகந்தியை கைது செய்தனர். ஒரு மாதத்தில் விரைவு நீதிமன்றத்தில் வழக்கு
விசாரணை முடிந்து அவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இதையடுத்து ராஜஸ்தான் சிறையில் பிட்டி மொகந்தி அடைக்கப்பட்டார்.
8 மாதங்கள் உள்ளே இருந்த பிறகு, 2006 நவம்பரில் ஒடிசாவில் மருத்துவமனையில்
சேர்க்கப்பட்டுள்ள தாயை பார்ப்பதற்காக ஒரு வாரம் பரோலில் பிட்டி மொகந்தி
வெளியே வந்தார். இதன் பிறகு பிட்டி தலைமறைவாகி விட்டார். இதைத் தொடர்ந்து
மகனை தப்ப வைத்ததாக கூறி பூஷன் மொகந்தியை ராஜஸ்தான் போலீசார் கைது
செய்தனர். இதன் பின்னர் அவர் பணியிலிருந்து நீக்கப்பட்டார். ஆனாலும்
தலைமறைவான பிட்டி மொகந்தி கடந்த 6 வருடங்களாக எங்கிருக்கிறார் என்பதே
தெரியாமல் இருந்து வந்தது.
இந்நிலையில் சமீபத்தில் டெல்லி மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம்
இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது இந்தியாவில்
இதற்கு முன் பரபரப்பை ஏற்படுத்திய பலாத்கார வழக்குகளில் தேடப்பட்டு வரும்
குற்றவாளிகள் குறித்து பல பத்திரிகைகளிலும், டிவிக்களிலும் செய்திகள்
வெளியாயின. மேலும் யூ டியூப், பேஸ்புக் உட்பட சமூக இணைய தளங்களிலும்
பலாத்கார வழக்குகளில் தொடர்புடையவர்கள் குறித்து செய்திகள் அதிகம்
வெளியாயின.
இதில் அல்வாரில் ஜெர்மனி பெண் பலாத்கார வழக்கில் தேடப்பட்டு வரும்
பிட்டி மொகந்தி குறிந்த செய்தியும் படமும் பேஸ்புக் இணையதளத்தில் வெளியாகி
இருந்தது. இந்த செய்தியை கண்ணூர் மாவட்டம் பழயங்காடியை சேர்ந்த ஒருவர்
தற்செயலாக பார்த்தார். பிட்டி மொகந்தியின் படத்தை பார்த்த அவருக்கு
பழயங்காடியில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூர் கிளையில் பணியாற்றும்
ஒரு அதிகாரியின் முகச்சாயல் போல் இருந்தது.
இதனால் சந்தேகமடைந்த அந்த நபர் இதை உறுதிப் படுத்த மறுநாள் வங்கிக்கு
சென்று பார்த்த போது பேஸ்புக்கில் பார்த்த படமும், வங்கியில் பணியாற்றிய
அதிகாரியின் உருவமும் ஒரே மாதிரி இருந்தது. இதையடுத்து அவர், வங்கியில்
உள்ள மற்ற ஊழியர்களிடம் அந்த அதிகாரி குறித்து விசாரித்தார்.
அப்போது அவரது பெயர் ராகவ ராஜா, ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியை
சேர்ந்தவர் என்று கூறினர். ஆனாலும் அந்த நபருக்கு சந்தேகம் தீரவில்லை. இது
குறித்து வங்கியின் மேலாளரிடம் அவர் புகார் கொடுத்தார். அந்த புகாரை வங்கி
மேலாளர் வாங்கி பொறுப்பாக போலீசாருக்கு அனுப்பினார்.
இதையடுத்து நேற்று முன்தினம் இரவு அந்த வங்கி அதிகாரியை பிடித்து
போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் தான் பிட்டி மொகந்திதான் என்பதை
அவர் ஒப்புக்கொண்டார்.உடனே அவரை போலீசார் கைது செய்தனர்.
இந்த பிட்டி மொகந்தி, ராகவ ராஜா என்ற பெயரில் போலி ஆவணங்கள் தயாரித்து
கண்ணூர் மாவட்டம் பழயங்காடி ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூர் வங்கி கிளையில்
பயிற்சி அதிகாரியாக சேர்ந்துள்ளார். பரோலில் வெளியே வந்ததும் நேரடியாக
ஆந்திர மாநிலம் புட்டபர்த்திக்கு சென்ற அவர் தனது பெயரை ராகவ ராஜா என
மாற்றி உள்ளார்.
அங்கேயே 3 ஆண்டுகள் தங்கி இருந்துள்ளார். பின்னர் கேரளா வந்துள்ளார்.
ராகவ ராஜா என்ற பெயரில் போலி ஆவணங்கள் தயாரித்து கண்ணூர்
பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பட்டம் பெற்றுள்ளார். பிட்டி மொகந்தி எப்போதுமே
ஒரு இடத்தில் சில மாதங்களுக்கு மேல் தங்க மாட்டார். அடிக்கடி லாட்ஜ்களை
மாற்றிவிடுவார். கண்ணூர் மாவட்டத்தில் பையனூர், பழயங்காடி, தளிபரம்பு ஆகிய
இடங்களில் ஏராளமான லாட்ஜ்களில் மாறி மாறி வசித்து வந்துள்ளார்.
மேலும் இவரது வங்கி கணக்குக்கு அவரது தந்தை பூஷன் மொகந்தி பலமுறை
லட்சக்கணக்கில் பணம் அனுப்பி வைத்தும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. பிட்டி
மொகந்தியிடம் இருந்த 3 சிம்கார்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதற்கிடையே கைதான பிட்டி மொகந்தி பையனூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில்
நேற்று மாலை ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 14 நாள் காவலில் வைக்க நீதிமன்றம்
உத்தரவிட்டது.
பிட்டி மொகந்தியை 10 நாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரி
போலீசார் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். ஆனால், அதற்கு நீதிமன்றம்
அனுமதி மறுத்து விட்டது. 6 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த குற்றவாளி தனது
பெயரை மாற்றிக் கொண்டு வங்கி பணியாற்றியதும், இப்போது, பேஸ்புக் உதவியால்
சிக்கிக் கொண்டதும் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar topics
» முதல் பெண் டிஜிபி லத்திகா சரண் ஓய்வு
» கேரள சிறுமி பலாத்கார வழக்கில் கைதான வாலிபரை மணக்கிறார் பெண்
» இந்தியாவிடம் சிக்கிய சீன பெண் உளவாளி
» அயோத்தி வழக்கின் சிக்கல்களை அவிழ்த்தது எப்படி?
» என் மகன் தான் தனுஷ்! கஸ்தூரிராஜாவின் மகன் அல்ல! – புதிய பெற்றோர் புலம்பல்!uf

Permissions in this forum:
You cannot reply to topics in this forum