Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
புஜாரா, விஜய் ஜோர்: சதம் கடந்து அசத்தினர் : இந்தியா முன்னிலை : ஆஸி., பவுலர்கள் திணறல்
Page 1 of 1
புஜாரா, விஜய் ஜோர்: சதம் கடந்து அசத்தினர் : இந்தியா முன்னிலை : ஆஸி., பவுலர்கள் திணறல்
ஐதராபாத்: ஐதராபாத் டெஸ்டில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்துகிறது.
புஜாரா, முரளி விஜய் சதம் கடந்து அசத்த, வலுவான முன்னிலை நோக்கி
முன்னேறுகிறது. நாள் முழுவதும் கை வலிக்க பந்துவீசிய ஆஸ்திரேலிய
பவுலர்களால் சேவக்கின் ஒரு விக்கெட்டை மட்டுமே கைப்பற்ற முடிந்தது.
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட்
தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் இந்தியா வென்றது. இரண்டாவது டெஸ்ட்
ஐதராபாத்தில் நடக்கிறது. ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 9
விக்கெட்டுக்கு 237 ரன்கள் எடுத்து "டிக்ளேர்' செய்தது. முதல் நாள் ஆட்டநேர
முடிவில், இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 5 ரன்கள் எடுத்திருந்து.
சேவக் ஏமாற்றம்:
நேற்று இரண்டாவது நாள் ஆட்டம் நடந்தது. மீண்டும் ஒரு முறை பொறுப்பற்ற
"ஷாட்' அடித்த சேவக் (6), சிடில் பந்தில் வெளியேறினார். இதற்கு பின் முரளி
விஜய், புஜாரா இணைந்து, டெஸ்ட் போட்டிக்கு ஏற்ப ஆமை வேகத்தில் ரன்
சேர்தனர். இந்திய அணி, உணவு இடைவேளை வரை 27 ஓவர்களில் வெறும் 47 ரன்கள்
மட்டுமே சேர்த்தது.
"சூப்பர்' ஜோடி:
உணவு இடைவேளைக்கு பின் புத்துணர்ச்சி அடைந்த, தமிழக வீரர் முரளி விஜய்,
சிடில் வேகத்தில் மூன்று பவுண்டரிகள் விளாசினார். அவ்வப்போது பவுண்டரி
அடித்த புஜாரா, முரளி விஜய்யை விட விரைவாக ரன் சேர்த்தார். இவர், டெஸ்ட்
அரங்கில் தனது 4வது சதத்தை பதிவு செய்தார். எதிர்முனையில் நிதானமாக ஆடிய
விஜய், தனது 245 பந்தில், டெஸ்ட் அரங்கில் 2வது சதம் கடந்தார். தொடர்ந்து
அசத்திய புஜாரா 150 ரன்களை கடந்தார். இருவரும் இணைந்து இரண்டாவது
விக்கெட்டுக்கு 294 ரன்கள் சேர்த்து அவுட்டாகாமல் இருந்தனர். இவர்களை
பிரிக்க முயன்ற ஆஸ்திரேலிய கேப்டன் கிளார்க் மேற்கொண்ட முயற்சி எதுவும்
கைகொடுக்கவில்லை.
வலுவான முன்னிலை:
இரண்டாவது நாள், ஆட்டநேர முடிவில், இந்திய அணி முதல் இன்னிங்சில் ஒரு
விக்கெட்டுக்கு 311 ரன்கள் எடுத்து, 74 ரன்கள் முன்னிலை பெற்றது. விஜய்
(129), புஜாரா (162) அவுட்டாகாமல் இருந்தனர்.
கைவசம் நிறைய விக்கெட்டுகள் இருப்பதால், இந்திய அணி இன்று விரைவாக ரன்
சேர்த்து, ஆஸ்திரேலிய அணிக்கு கடும் நெருக்கடி கொடுக்க முயற்சிக்கும்.
162
அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய வீரர் புஜாரா (162 ரன்கள்), டெஸ்ட்
அரங்கில் 4வது முறையாக சதம் அடித்தார். முன்னதாக இங்கிலாந்து (206, 135
ரன்கள்), நியூசிலாந்து (159) அணிகளுக்கு எதிராக சதம் அடித்தார்.
* ஐதராபாத், ராஜிவ் சர்வதேச மைதானத்தில் இரண்டு சதம் அடித்த முதல் வீரர்
என்ற பெருமை பெற்றார் புஜாரா. முன்னதாக, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இங்கு
நடந்த டெஸ்டில், நியூசிலாந்துக்கு எதிராக 159 ரன்கள் எடுத்தார். தவிர
இங்கு, நியூசிலாந்தின் பிரண்டன் மெக்கலம் (225 ரன்கள்), மெக்கின்டோஸ்
(102), இந்தியாவின் ஹர்பஜன் சிங் (111*), முரளி விஜய் (129*) ஆகியோர் தலா
ஒரு முறை சதம் அடித்துள்ளனர்.
* ஐதராபாத் மைதானத்தில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் வரிசையில்
முதலிடத்துக்கு முன்னேறினார் புஜாரா. இதுவரை புஜாரா இங்கு விளையாடிய 2
டெஸ்டில் 2 சதம் உட்பட 321 ரன்கள் எடுத்துள்ளார். இரண்டாவது இடத்தில்
நியூசிலாந்தின் பிரண்டன் மெக்கலம் (293 ரன்கள்) உள்ளார்.
129
தமிழக வீரர் முரளி விஜய்(129 ரன்*), டெஸ்ட் அரங்கில் 2வது சதம்
அடித்தார். முன்னதாக இவர், 2010ல் பெங்களூருவில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு
எதிரான டெஸ்டில் 139 ரன்கள் எடுத்தார். இதன்மூலம், ஆஸ்திரேலியாவுக்கு
எதிராக முதல் துவக்க வீரராக களமிறங்கி, முதல் இன்னிங்சிலேயே இரண்டு சதம்
அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமை பெற்றார்.
6
இந்திய துவக்க வீரர் சேவக், வெறும் 6 ரன்களுக்கு அவுட்டானார். இதன்மூலம்
டெஸ்ட் போட்டியில் மீண்டும் ஒரு முறை சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி,
ரசிகர்களை ஏமாற்றினார். ஏற்கனவே இவர், சென்னை டெஸ்டில் இரண்டு
இன்னிங்சிலும் சேர்த்து 21 ரன்கள் (2+19) மட்டுமே எடுத்தார். தவிர இவர்,
கடைசியாக விளையாடிய 10 டெஸ்ட் இன்னிங்சில், (117, 25, 30, 9, 23, 49, 0, 2,
19, 6) ஒரே ஒரு முறை மட்டும் சதம் அடித்தார்.
294
இரண்டாவது விக்கெட்டுக்கு இணைந்த முரளி விஜய், புஜாரா ஜோடி, 294 ரன்கள்
எடுத்து விளையாடி வருகிறது. இதன்மூலம் டெஸ்ட் அரங்கில், ஆஸ்திரேலியாவுக்கு
எதிராக 2வது விக்கெட்டுக்கு அதிக ரன்கள் சேர்த்த ஜோடி வரிசையில் முதலிடம்
பிடித்தது. முன்னதாக 1986ல் சிட்னியில் நடந்த டெஸ்டில், 2வது
விக்கெட்டுக்கு இணைந்த இந்தியாவின் சுனில் கவாஸ்கர், அமர்நாத் ஜோடி 224
ரன்கள் சேர்த்தது.
* டெஸ்ட் வரலாற்றில், 2வது விக்கெட்டுக்கு அதிக ரன்கள் சேர்த்த இந்திய
ஜோடி வரிசையில் 3வது இடம் பிடித்தது. முதலிரண்டு இடங்களில் இந்தியாவின்
கவாஸ்கர்-வெங்சர்க்கார் (344 ரன்கள், எதிர்-வெஸ்ட் இண்டீஸ்,
இடம்-கோல்கட்டா, 1978), ராகுல் டிராவிட்-கவுதம் காம்பிர் (314 ரன்கள்,
எதிர்-இங்கிலாந்து, இடம்-மொகாலி, 2008) ஜோடிகள் உள்ளன.
* முரளி விஜய்-புஜாரா ஜோடி, ஐதராபாத் மைதானத்தில், எந்த ஒரு
விக்கெட்டுக்கும், அதிக ரன்கள் சேர்த்த ஜோடி வரிசையில் முதலிடம் பிடித்தது.
முன்னதாக முதல் விக்கெட்டுக்கு இணைந்த சேவக்-காம்பிர் ஜோடி (160 ரன்கள்,
எதிர்-நியூசிலாந்து, 2010) இருந்தது.
* டெஸ்ட் வரலாற்றில், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக எந்த ஒரு
விக்கெட்டுக்கும் அதிக ரன்கள் சேர்த்த இந்திய ஜோடி வரிசையில் 6வது இடம்
பிடித்தது. முதலிடத்தில், 2001ல் கோல்கட்டாவில் நடந்த டெஸ்டில் 5வது
விக்கெட்டுக்கு இணைந்து 376 ரன்கள் சேர்த்த இந்தியாவின் டிராவிட்-லட்சுமண்
ஜோடி உள்ளது.
நெருக்கடி இருந்தது
முரளி விஜய் கூறுகையில், ""சென்னை டெஸ்டில் பேட்டிங்கில் ஏமாற்றியதால்,
மனதளவில் நெருக்கடி இருந்தது. ஆனால் வெளிக்காட்டவில்லை. உண்மையைக் கூற
வேண்டுமானால், சென்னை டெஸ்டில் தவறு செய்தேன். இரண்டாவது இன்னிங்சில்
விக்கெட்டை எளிதாக இழந்திருக்க கூடாது. நேற்று களமிறங்கிய போது, முதல்
டெஸ்டில் செய்த தவறுகளை தொடரக் கூடாது என முடிவு செய்தேன். இதனால் நிதானமாக
ரன் சேர்த்தேன். சதம் அடித்ததன் மூலம், இத்தொடரில் சாதிப்போம் என்ற
நம்பிக்கை அதிகரித்துள்ளது. புஜாரா நல்ல முறையில் ஒத்துழைப்பு தந்தார்.
போட்டியின் போது புஜாராவுக்கு ஏற்பட்ட தசைப்பிடிப்பு பெரிய அளவில் பாதிப்பை
ஏற்படுத்தாது. இன்றும் இவர், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என
நம்புகிறேன்,'' என்றார்.
மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» இந்தியா திணறல் வெற்றி! * காலிறுதிக்குள் நுழைந்தது * நெதர்லாந்து போராட்டம் வீண்
» புஜாரா சதம்: மீண்டது இந்தியா: சுழலில் பனேசர் அசத்தல்
» கோலி சதம்: பாகிஸ்தானை பந்தாடியது இந்தியா
» கத்தியில் விஜய் பேசும் செல் நம்பருக்கு இடைவிடாது டயல் செய்யும் ரசிகர்கள்: அருமனை ஆசிரியர் திணறல்
» இந்தியா திணறல் பந்துவீச்சு! * வெ.இண்டீஸ் "டாப்-ஆர்டர்' அசத்தல்
» புஜாரா சதம்: மீண்டது இந்தியா: சுழலில் பனேசர் அசத்தல்
» கோலி சதம்: பாகிஸ்தானை பந்தாடியது இந்தியா
» கத்தியில் விஜய் பேசும் செல் நம்பருக்கு இடைவிடாது டயல் செய்யும் ரசிகர்கள்: அருமனை ஆசிரியர் திணறல்
» இந்தியா திணறல் பந்துவீச்சு! * வெ.இண்டீஸ் "டாப்-ஆர்டர்' அசத்தல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum