TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:41 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 5:06 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Thu May 16, 2024 8:45 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


தசாவதாரம்....

+2
அருள்
veelratna
6 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

தசாவதாரம்.... - Page 2 Empty Re: தசாவதாரம்....

Post by veelratna Thu Aug 01, 2013 11:24 pm

பிரபாகரன் wrote:தொடரட்டும் அறிவிப்பு

நன்றி..




கிருஷ்ண அவதாரம்


கம்சன் கிருஷ்ணரைக் கொல்வதற்குரிய ஏற்பாடுகளைத் துவங்கினான். சிவசக்தியான காலபைரவருக்கு மிருகபலி கொடுத்தான். சில யாகங்களையும் செய்தான். கிருஷ்ணர் வளர்ந்து கொண்டிருக்கும் யது வம்சத்தைச் சேர்ந்த அக்ரூரர் என்பவரை அழைத்து, அன்பு நண்பரே ! விருந்தாவனத்தில் வசிக்கும் கிருஷ்ணர், பலராமன், வசுதேவர், நந்கோபர், எனது தங்கை தேவகி, எனது தந்தை உக்கிரசேனன், சித்தப்பா தேவகன் ஆகியோரைக் கொல்லப் போகிறேன். எனது அரசியல் காரியங்களில், என் தந்தை தலையிடுவதால், அவரையும் கொல்ல வேண்டியுள்ளது. எதிரிகளே இல்லாத நிலையில் இவ்வுலகை சிரமமின்றி ஆள்வேன். எனக்கு என் மாமனார் ஜராசந்தன், துவிவிதா என்ற குரங்கு அரசன், சம்பரன், நரகாசுரன், பாணாசுரன் என்ற எனது நண்பர்கள் உதவுவர். நீங்களும் உதவ வேண்டும், என்றான். அக்ரூரர் அவன் சொல்வதைக் கேட்டு, எம்மாதிரியான உதவி என்றார். அக்ரூரரே! கிருஷ்ண பலராமர்களை இங்கே ஒரு மல்யுத்தப் போட்டி நடப்பதாகச் சொல்லி, அழைத்து வாருங்கள். அவர்கள் வரும் வழியில் குவலயாபீடம் என்ற யானையை அவிழ்த்து விடுவேன். அது அவர்களைக் கொல்லும். ஒருவேளை தப்பிவிட்டால், எனது மல்யுத்த வீரர்கள் கொல்வார்கள், என்றான். அக்ரூரர் கிருஷ்ணரின் பக்தர். அவருக்கு கம்சன் சொன்னது பிடிக்கவில்லை. இருப்பினும், கம்சனே ! உன் நண்பன் என்ற முறையில் சொல்கிறேன். திட்டம் தீட்டுவது மனித அறிவு. அதை வெற்றி பெறச் செய்பவன் இறைவனே ! ஒருவேளை இவ்விஷயத்தில் நீ தோற்றுப்போகலாம். நல்லதைச் சொல்லவேண்டியது நண்பனின் கடமை என்பதால் சொன்னேன். இருப்பினும், உனக்காக கிருஷ்ணரிடம் சென்று அவரை அழைத்து வருகிறேன், என்றார். சொன்னபடியே விருந்தாவனம் சென்று, கிருஷ்ணரைச் சந்திக்கும் நாளுக்காக காத்திருந்தார். அவரது பக்தர் என்ற முறையில், கிருஷ்ணரை அருகில் இருந்து தரிசிக்கும் பாக்கியம் கிடைக்கப்போவது பற்றி மகிழ்ந்தார். அதே நேரம், கம்சனின் பிரதிநிதியாக வந்திருப்பதால், கிருஷ்ணர் தன்னை என்ன செய்வாரோ என்ற பயமும் மனதில் எழுந்தது. இருப்பினும், தனது தேரில் சென்று கிருஷ்ணர் இருக்கும் இடத்தை அடைந்தார். விருந்தாவனத்துக்குள் அக்ரூரரின் ரதம் நுழைந்தது. ஓரிடத்தில் மரகத மலையும், வெள்ளிமலையும் சேர்ந்து ஒளி வீசியது போன்ற பிரகாசம் ஏற்படவே ரதத்தை நிறுத்தினர். அங்கே கிருஷ்ணரும், பலராமரும் ஒளிபொங்கும் உடலுடன் நின்று கொண்டிருந்தனர். ஆங்காங்கே நடந்ததால் மணலில் பதிந்த அவர்களது பாதச்சுவடுகளைத் தான் அக்ரூரர் முதன்முதலாகப் பார்த்தார். அவற்றை மனதார தரிசித்தார். அந்த பாதசுவடுகளை பார்த்த பிறகு, கிருஷ்ண, பலராமரின் முகங்களை உற்று நோக்கினார் அக்ரூரர். கண்ணீர் தாரை தாரையாக வழிந்தது. கிருஷ்ண, பலராமர் அவரை எதிர்கொண்டு வரவேற்றனர். எதிரியின் தூதராய் வந்தாலும், தனது பக்தர் அக்ரூரர் என்பது அந்த பரந்தாமனுக்கு தெரியும் ! அவர்கள் விரைந்து வந்து அக்ரூரரை வரவேற்றனர். அவரது கையைப் பிடித்து அழைத்துச் சென்றனர். அவருக்கு ஒரு பசுவைத் தானமாக வழங்கினர். அவரை உணவருந்தச் செய்து, சந்தனம் முதலானவை பூசி உபசரித்தனர். இதன்பிறகு, அக்ரூரர் கம்சனின் திட்டம் பற்றியும், நாரதர் அங்கு வந்து சென்றது பற்றியும் தகவல் தெரிவித்தார். மதுராவில், தனுர் யக்ஞ விழா நடக்க இருப்பது பற்றியும், அதில் கோகுலத்திலுள்ள இளைஞர்கள் அனைவரும் வரவேண்டும் என்ற கம்சனின் உத்தரவு பற்றியும் சொன்னார். கிருஷ்ணர் அதற்குரிய ஏற்பாட்டை உடனடியாக முடித்தார். அவர்கள் மதுராவுக்கு புறப்பட்டனர். தேர் புறப்பட்டது. கோபியர்கள் வந்து மறித்தார்கள்.

கண்ணா ! நீ போகாதே என கண்களாலேயே தடுத்தார்கள். அவர்களில் மனநிலையைப் புரிந்து கொண்ட கிருஷ்ணர் அவர்களிடம், அருமை கோபியரே ! என்னை உங்கள் மனதால் கட்டிப் போடாதீர்கள். என்னை அவிழ்த்து விடுங்கள் உங்களுடன் களித்து விளையாடுவேன், என உறுதியளித்தார். கோபியர் ஒருவழியாய் வழிவிட ரதங்கள் புறப்பட்டன. செல்லும் வழியில் யமுனை நதி வந்தது. அங்கே ஒரு ஐந்துதலை நாகம் ! அது தன் உடலை மடித்திருக்க, அதன் மீது விரிக்கப்பட்ட பஞ்சு மெத்தையில் பரமாத்மா சயனித்திருக்கும் காட்சி அக்ரூரருக்கு தென்பட்டது. ஆம்... மாயக்கண்ணன் தன் பக்தனான அக்ரூரருக்கும் இப்படி காட்சி தந்தார். இந்த தரிசனத்தின் போது, அக்ரூரர் மனம் குளிர்ந்து கிருஷ்ணரைத் துதித்தார். தேர்கள் மதுராபுரிக்கு நுழைந்தன. அக்ரூரர் தனது இல்லத்துக்கு வரும்படி கிருஷ்ணரை அழைத்தார். கிருஷ்ணர் அவரிடம், அக்ரூரரே ! மதுராவிலுள்ள என் குல எதிரிகளை அழித்தபிறகு, உமது இல்லத்துக்கு வருகிறேன், என்றார். அக்ரூரருக்கு மனதுக்கு கஷ்டமாயிருந்தாலும், அந்தக் கடவுளின் வார்த்தையில் நிச்சயம் அர்த்தமிருக்கும் என்பதப் புரிந்து கொண்டு, கம்சனிடம் சென்றார். கிருஷ்ணர் மதுராவுக்கு வந்துவிட்ட செய்தியை அவனுக்கு அறிவித்தார். கிருஷ்ண, பலராமர் தம் திட்டப்படி மதுராவுக்கு வந்துவிட்டாலும், கம்சனுக்கு உள்ளூர பயம். அவர்களை எப்படியும் மடக்கிவிடலாம் என திட்டம் தீட்டியிருந்தான். கிருஷ்ண பலராமர்கள் மதுரா நகரை தங்கள் நண்பர்களுடன் சுற்ற ஆரம்பித்தனர். அந்த நகரம் மிக நேர்த்தியாக இருந்தது. மாளிகை போன்ற வீடுகளில் உள்ள கதவுகள் பத்தரை மாற்று பசும்பொன்னால் செய்யப்பட்டிருந்தன. செல்வச்செழிப்புக்கு இலக்கணமான ஊர் அது. எதிரிகளை மடக்க ஆங்காங்கே அகழிகள் தோண்டப்பட்டிருந்தன. கிருஷ்ணர், வழியில் சென்ற ஒரு சலவைத் தொழிலாளியை அழைத்தார். நீ எனக்கு அரண்மனைவாசிகள் உடுத்தும் விலை உயர்ந்த ஆடைகளைக் கொடு, என்றார். அந்த தொழிலாளி, சிறுவனே ! கம்சமகாராஜாவின் ஆடையைக் கேட்குமளவுக்கு உனக்கு தைரியம் வந்து விட்டதா ? ஓடிப்போய்விடு. மன்னரின் தண்டனைக்கு ஆளாகாதே, என்றார். கிருஷ்ணருக்கு கோபம் வந்துவிட்டது. அவனை ஒரு அடி அடித்தார். அவன் இறந்து விட்டான். இதைப் பார்த்துக் கொண்டிருந்த ஒரு தையல்காரன் ஓடி வந்தான். ஐயா ! இது என் கடையில் ஒருவர் தைக்கக் கொடுத்தார். இதை நீங்கள் அணிந்துகொள்ளுங்கள். பொருத்தமாயிருக்கும், என்றான். அவர் அதை அன்புடன் அணிந்து கொண்டார். அந்த மட்டிலேயே அந்த தையல்காரன் ஸாரூப்ய முக்தி அடைந்து விட்டான். அந்தத்தெரு வழியே ஒரு கூன் விழுந்த பெண் வந்தாள். அவள் கிருஷ்ண சகோதரர்களை கவனித்தாள். அவள் இளமையானவள். ஆனால் ஊனமுற்றவள். கம்சனுக்கு சந்தனம் பூசுவது அவளது பணி. அவள் அவர்களைக் கண்டதும் அழகில் சொக்கி நின்றாள்.

பெண்ணே ! நீ யார் ? இந்த சந்தனக்கிண்ணத்துடன் எங்கே செல்கிறாய் ? என்றதும், அவள் கம்சனின் அரண்மனைக்குச் செல்வதாக தெரிவித்தாள். இந்த சந்தனம் மிக அருமையான மணம் கொண்டதாக உள்ளதே ! எங்களுக்கு இதை பூசமாட்டாயா ? என்றதும், அவள் மகிழ்ச்சியுடன், இது ராஜாவுக்கு உரியதுதான். இருப்பினும், அவரை விட மிக உயர்ந்தவர்களாக உங்களைக் கருதுகிறேன். மனதளவில் உயர்ந்தவர்களுக்கே சந்தனம் பூசும் உரிமையுண்டு. நான் பூசுகிறேன். எனச் சொல்லி, கிருஷ்ணரின் மார்பில் தடவினாளோ இல்லையோ, அந்த உடல் ஸ்பரிசம்பட்டதும், அவளது கூன் நிமிர்ந்தது. அவள் அழகிய வடிவத்தை அடைந்தாள். தன்னையே அவளால் நம்ப முடியவில்லை. முற்பிறவி ஞாபகம் வந்தது. ஆ ராமா ! நீயா ! உனக்கு நான் துரோகம் இழைத்தேன். உன் சிற்றன்னையிடம் சொல்லி காட்டுக்கு அனுப்பி வைத்த கொடுமைக்காரியடா ! இப்பிறவியிலும், நான் அதே ஊனத்துடன் பிறந்தேன். இருப்பினும், நீ எனக்கு செய்த உதவியை என்ன சொல்லி வர்ணிப்பேன் ! எனக்கு பேச்சே வரவில்லை. ராமா ! உன் சிற்றன்னைக்கு நான் செய்த சேவைக்கு பரிசாக இப்படி செய்துவிட்டாயே ! முற்பிறவியில், கொடுமைக்காரியாயினும் கூட, உனது தரிசனம் எனக்கு கிடைத்தது என்பதன் பலனை இப்போது அனுபவித்து விட்டேனோ ! பரந்தாமா ! நான் எவ்வளவு பெரிய பாக்கியவதி. அன்று ராமதரிசனம், இன்று கொடுமைக்காரனான கம்சனுக்கு பணியாளாக இருந்தும் கிருஷ்ண தரிசனம் காட்டினாய். உனக்கு சேவை செய்யும் பாக்கியம் தந்தாய், என மனதில் நினைத்துக் கொண்டிருக்கும் போதே, அந்த நினைவலைகளை மறக்கச் செய்துவிட்டார் கிருஷ்ணர். இப்போது, தன்னிலைக்கு திரும்பிய அந்த இளம்பெண், கிருஷ்ணரின் மீது காதல் கொண்டவளாய், கிருஷ்ணா ! இத்தனை அழகிய உருவத்தை கொடுத்த நீயே என்னை அடையவேண்டும். வா, என் இல்லத்துக்கு என்றாள். பெண்ணே ! நான் உன் இல்லம் வருவேன். கவலைப்படாதே. நான் வந்த காரியத்தை முடித்துவிட்டு வருகிறேன். என சொல்லிவிட்டு கிளம்பி விட்டார். இதற்குள் கம்சன் கிருஷ்ணரைக் கொல்வதற்கான ஏற்பாடுகளை முடித்து விட்டான். மிகப்பெரிய மல்யுத்தத்துக்கு ஏற்பாடு செய்து சிறந்த வீரர்கள் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தான். மல்யுத்தப் போட்டிக்கான களம் தயாராகி விட்டது. மதுராபுரியின் பிரபல மல்யுத்த வீரர்களான சாணுரன், முஷ்டிகன், சாலன், தோசாலன், கூடன் ஆகியோர் தயார் நிலையில் இருந்தனர். எல்லாருமே மிக பலசாலிகள். வயதிலோ, வீரத்திலோ கிருஷ்ண, பலராமருக்கு சற்றும் ஒத்து வராதவர்கள். அவர்கள் களத்தில் காத்திருந்த வேளையில், கம்சன் கிருஷ்ணரைக் கொல்ல மாற்று ஏற்பாடு ஒன்றைச் செய்திருந்தான். அவர் வரும் வழியில், குவாலயாபீட என்ற யானையை கம்சன் நிறுத்தியிருந்தான். அந்த யானையைக் கண்டால், பிற யானைகள் ஓட்டமெடுக்கும். அப்படிப்பட்ட சக்திமிக்க அந்த யானையை கிருஷ்ண பலராமர் வரும் வழியில் வேண்டுமென்றே மறைத்து நிறுத்தியிருந்தான் அதன் பாகன். கிருஷ்ணர் யானையை ஒதுக்கி நிறுத்தும்படி பாகனிடம் சொல்லவே, அவன் கண்டுகொள்ளவில்லை. பாகனின் நோக்கம் கிருஷ்ணருக்கும் புரிந்து விட்டது என்றாலும், முறையாக அவனிடம் சொல்லிப் பார்த்தார். அவன் முடியாது என வம்பு செய்யவே, கோபமடைந்த கிருஷ்ணர் யானையை மிக லாவகமாகத் தாண்டிச் செல்ல, அவர்களை பிடிக்கும்படி யானையை பாகன் ஏவினான். யானை தும்பிக்கையை அவர்களை நோக்கி நீட்ட, கிருஷ்ணர் யானையை ஓங்கிக் குத்தினார். அவரது பலம் தாங்காத யானை சுருண்டது. அதன் வாலை பிடித்து தரதரவென இழுத்தார். பாகன் நிலைதடுமாறி கீழே விழுந்தான். யானை பிளிறித்துடித்தது உயிர்விட்டது. பாகனையும் ஒரே அடியில் வீழ்த்திய மாயக் கிருஷ்ணர், வெற்றி வீரராக மல்யுத்த களத்துக்குள் புகுந்தார். அவர்கள் வருவதற்குள் முன்னால் ஓடிச்சென்ற வீரன் ஒருவன், கம்சனிடம் யானை கொல்லப்பட்ட விபரத்தைச் சொல்லி விட்டான். கூட்டத்தினருக்கும் விஷயம் தெரிந்து விட்டது.

அந்த மாவீரர்கள் அரங்கில் நுழையவும், ஒவ்வொருவரும் கிருஷ்ணரை தரிசிக்கும் பாக்கியம் கிடைத்தது பற்றி மகிழ்ச்சியடைந்தனர். பார்வையாளர்கள் வரிசைக்கு கிருஷ்ணரும் பலராமரும் சென்றனர். அப்போது சாணூரன், கிருஷ்ணா ! பலராமா ! ஏன் ஒதுங்கி நிற்கிறீர்கள் ? போட்டியில் நீங்கள் பங்கேற்கவில்லையா ? என்றான். கிருஷ்ணர் அவனிடம், சாணூரா ! இங்கே பலத்திலும், வீரத்திலும், அனுபவத்திலும் சிறந்த வீரர்கள் இருக்கிறீர்கள். நீங்கள் ஒருவருக்கொருவர் மோதினால் தான் போட்டி சுவாரஸ்யமாக இருக்கும். நாங்கள் சிறுவர்கள். எங்களோடு நீங்கள் மோதினால், பார்ப்பவர்களுக்கு ரசனை இருக்காது. மேலும், அது நியாயமும் அல்ல, என்றார். கிருஷ்ணா ! நீங்கள் குவாலயபீட யானையையே கொன்றவர்கள் என்ற தகவல் எங்களுக்கு நீங்கள் வரும் முன்பே கிடைத்துவிட்டது. அதை விடவா நாங்கள் பலசாலிகள். அதனால், நீங்கள் எங்களோடு மோதலாம், வாருங்கள் என்றான். கிருஷ்ணர் சாணுரனையும், பலராமர் முஷ்டிகனையும் எதிர்த்து யுத்தம் செய்தனர். அவர்களது அடியை அந்த மல்லர்களால் தாங்க முடியாமல் கூக்குரலிட்டு இறந்தனர். அடுத்து மற்ற மல்லர்கள் சிலர் களமிறங்க அவர்களும் கொல்லப்பட்டார்கள். இதைக் கண்ட மற்றமல்லர்கள் களத்தில் இருந்து தப்பி ஓடிவிட்டனர். மக்கள் கைத்தட்டி மகிழ்ந்தனர். கம்சன் அதிர்ந்து போனான். கிருஷ்ண பலராமரை பாரட்ட மனமில்லாதது மட்டுமின்றி, வீரர்களே ! இந்த கிருஷ்ணனையும், பலராமனையும் மதுராபுரியை விட்டு விரட்டி அடியுங்கள். இவர்களது தந்தை நந்தகோபன், தாய் யசோதா, வஞ்சகம் புரிந்த வசுதேவர், இவர்களுக்கு ஆதரவளித்த எனது தந்தை உக்ரசேனன் உட்பட அனைவரும் கொல்லப்பட வேண்டும், என ஆணையிட்டான். கிருஷ்ணருக்கோ மகாகோபம். சற்றும் நியாயமின்றி நடந்த அந்தக் கொடியவன் மீது பாய்ந்தார். அவனது கிரீடத்தை தட்டிவிட்டார். அவனது தலைமுடியை பிடித்து இழுத்தார். ஆசனத்தில் இருந்து சரிந்து விழுந்த அவனை இழுத்து வந்தார். மல்யுத்த களத்தில் அவனைக் கொண்டு வந்து கீழே தள்ளினார். மார்பின் மீது ஏறி அமர்ந்தார். கம்சனுக்கு மூச்சு முட்டியது. ஒரே குத்தில் அவன் உயிரை விட்டான். அவனது உயிர் வைகுண்டத்தை அடைந்தது, கொடுமைக்காரனாயினும், சதாசர்வகாலமும் கிருஷ்ணரையே நினைத்தவன் அவன். அவரால் தனக்கு மரணம் ஏற்படுமோ என பயந்து கொண்டே சிந்தித்தவன். வைகுண்டத்தில் அவனுக்கு ஸாரூப்ய சொரூபம் கிடைத்தது. இந்த சொல்லுக்கு நாராயணனைப் போலவே உருவமெடுத்தல் என்பது பொருள். வைகுண்டத்தில் இருப்பவர்கள் நாராயணனை வணங்கி, நாராயண வடிவத்தைப் பெறுவார்களாம். அந்த வடிவத்தை கருணைக்கடலான நாராயணன், கம்சனுக்கு அளித்தருளினார். கீதையில் தத் பாவ பாவித் என்று சொல்லப்பட்டுள்ளது. ஒருவன் பூமியில் இருக்கும் போது என்ன நினைக்கிறானோ அதற்கேற்ற மறுபிறவியை அடைகிறான். கம்சன் பயத்தின் காரணமாக கிருஷ்ணரை நினைத்தாலும், அவரையே நினைத்துக் கொண்டிருந்தால் இந்த உயர் நிலையை அடைய முடிந்தது. கம்சனுக்கு கங்கர் என்பவர் உள்ளிட்ட எட்டு சகோரர்கள் இருந்தனர். கிருஷ்ணரால், அவன் கொல்லப்பட்டதை அறிந்ததும் ஆத்திரமடைந்தனர். அவர்கள் கிருஷ்ணரை பழி வாங்க விரைந்து புறப்பட்டனர்.

veelratna
பண்பாளர்
பண்பாளர்

Posts : 944
Join date : 28/12/2012

Back to top Go down

தசாவதாரம்.... - Page 2 Empty Re: தசாவதாரம்....

Post by veelratna Sun Aug 18, 2013 2:29 am

கிருஷ்ண அவதாரம்

தாய்மாமனைக் கொல்வதை வேதம் அனுமதிக்கவில்லை. ஆனால், கம்சனைக் கொல்ல வேண்டிய நிர்ப்பந்தம் கிருஷ்ணருக்கு ஏற்பட்டது. ஏனெனில், கம்சனைக் கிருஷ்ணரைத் தவிர வேறு யாராலும் கொல்ல முடியாது என்பது அசரீரி வாக்கு. அதன் காரணமாக, பகவான் இங்கே வேதத்தின் கட்டளையை மீற வேண்டியதாயிற்று. சரி.... இது அனுமதிக்கப்பட்ட ஒன்றானால், இப்போது தன்னைத் தாக்க வரும் மற்ற தாய் மாமன்களை என்ன செய்வது ? எல்லாருமே தேவகியின் சகோதரர்கள். இவர்களை அழிக்க ஒரே வழி தன் அண்ணன் பலராமன் தான். ஏனெனில், அவர் ரோகிணியின் மகன். அவ்வகையில், எதிரே நிற்பவர்கள் தாய்மாமன்மார் ஆக முடியாது. அந்த எட்டு பேரையும் கொல்லும் பணியை பலராமர் ஏற்றுக் கொண்டார். குவலாயபீட யானையைக் கொன்ற போது, கிருஷ்ணரும் அவரும் ஆளுக்கொரு தந்தத்தை ஒடித்து வந்திருந்தனர். அந்த தந்தத்தைக் கொண்டு, கம்சனின் சகோதரர்களைத் தாக்கினார் பலராமர். ஒருவன் பின் ஒருவராக அவர்களை கொன்றார். அப்போது, தேவலோகத்தில் இருந்து மலர் மாரி பொழிந்தது. கிருஷ்ணபலராமரின் வீரமான செயல்களால் யசோதையும், நந்தகோபனும் ஆனந்தமாகி கண்ணீர் வடித்து நின்றனர். கிருஷ்ணர் கடவுள் என்பது நன்றாகத் தெரிந்து விட்டதால், அவரைத் தொட அவர்களுக்கு தைரியம் வரவில்லை. கிருஷ்ணரோ அவர்களின் பாதத்தில் விழுந்து ஆசி வழங்கச் சொன்னார். அவர் கடவுள் என்பதால் அவருக்கு ஆசி வழங்கும் தகுதி தங்களுக்கு இல்லை எனக்கருதி, அவர்கள் ஒதுங்கி நின்றனர். அப்போது கிருஷ்ணர் அவர்களிடம், தாயே ! தேவகி என்னைப் பெற்றவள் என்றாலும் நீயே என்னை வளர்த்தாய். என் பால்ய பருவ விளையாட்டுகளை நீயே ரசித்தாய். அம்மா ! இந்த உடல் தாய் தந்தையின் உறவால் பிறக்கிறது. அதன் காரணமாக பெற்றவர்களுக்கு கடன்படுகிறது. இந்தக் கடனை தீர்க்குமளவுக்கு சமஅளவுள்ள பொருள் எவ்வுலகிலும் இல்லை. ஏனெனில், மனிதனாகப் பிறந்தவனுக்கு மட்டுமே எல்லாவற்றையும் அனுபவிக்கும் பாக்கியம் கிடைக்கிறது. மனிதப்பிறவிக்கு மட்டுமே இந்த உடலை விடுத்து, இறைவனிடம் சேர்வதற்குரிய அறிவு தரப்பட்டிருக்கிறது. பெற்றவர்கள் வேறு, வளர்த்தவர்கள் வேறல்ல ! அவ்வகையில், நீங்கள் என்னை ஆசீர்வாதிக்க தகுதியுள்ளவர்கள் ஆகிறீர்கள். இதைக்கேட்டு மகிழ்ந்த யசோதையை தம்பதியர் தங்கள் அன்பு மகனை வாரியணைத்தனர். பலராமனுக்கு முத்தமழை பொழிந்தனர். அவர்களது கண்களில் கண்ணீர் பெருகியது. இதன் பிறகு தன் தாத்தா உக்ரசேனரை (கம்சனின் தந்தை) சந்தித்த கிருஷ்ணர், யது ராஜ்யத்தின் அதிபதியாக அவரை அறிவித்தார். கம்சனுக்கு பயந்து ஒளிந்திருந்த மன்னர்களெல்லாம் மகிழ்ந்து, உக்ரசேனரை பணிந்து வணங்கினர். மதுரா மக்கள் கிருஷ்ணரை தினமும் வணங்கும் பாக்கியம் பெற்றனர். முகுந்தா எனக் கூறி அழைத்தனர். இதற்கு முக்தியும் பரமானந்தமும் தருபவன் எனப் பொருள். நிச்சயமாக, மதுரா மக்கள் பரமானந்தத்தில் மூழ்கினர் என்றால் மிகையல்ல. சில நாட்களுக்கு பிறகு, விருந்தாவனத்துக்கு யசோதையும், நந்த குமாரரும் புறப்பட்டனர். கிருஷ்ணரை அவர்கள் அழைத்தனர். அம்மா ! எனக்கு இன்னும் சில கடமைகள் இங்குள்ளன. வசுதேவர், தேவகியை சிறையில் இருந்து விடுவித்து, அவர்களுடன் சில நாட்கள் தங்கி வருகிறேன். என்னை வளர்த்த உங்களை என்னால் மறக்க முடியாது. அண்ணாவும் என்னுடன் தான் இருப்பார். நாங்கள், நிச்சயம் விருந்தாவனத்துக்கு வருவோம், என்றார். அவர்கள், மகன்களைப் பிரிந்து கண்ணீருடன் புறப்பட்டனர். இதன் பின்னர் தேவகியையும், வசுதேவரையும் கிருஷ்ணர் சிறையில் இருந்து விடுவித்தார். வசுதேவர் தன் பிள்ளைகளுக்கும், கர்க முனிவர் என்பவர் மூலம் புனிதநூல் சடங்கை செய்து வைத்தார். கிருஷ்ணர் பிறந்த போது, மனதால் செய்த பசுதானத்தை இப்போது அவர், நிஜமாகவே செய்தார். பின்னர், தன் மகன்களை சாந்தீபனி முனிவரிடம் கல்விபயில அனுப்பி வைத்தார். இத்தனை காலமும் மாடு மேய்த்து திரிந்த அந்த இளைஞர்கள் இப்போது அறிவியல், அரசியல், கணிதம், சகுனக்கலை, வைரங்களுக்கு பட்டை தீட்டும் கலை என சகல சாஸ்திரங்களையும் ஆசானிடம் கற்றனர். பயிற்சி முடிந்ததும், ஆசானிடம், குருவே ! தங்களுக்கு தர வேண்டிய குருதட்சணை என்ன ? என்றதும், குரு ஏதும் பேசாமல், அருகில் இருந்த தன் மனைவியை பார்த்தார், அவளது கண்களில் கண்ணீர் பனித்திருந்தது.

தாயே ! தங்கள் கண்கள் பனித்திருக்கின்றன. தாங்கள் ஏதோ எங்களிடம் கேட்க விரும்புகிறீர்கள். தாரளமாகக் கேளுங்கள், என்றனர் கிருஷ்ணரும் பலராமரும்.குறுக்கிட்ட சாந்தீபனி முனிவர், அவர்களிடம் சீடர்களே ! எங்கள் மகனுடன் பிரபாஸ÷க்ஷத்திர (குஜராத்திலுள்ள சோமநாதம் என கருதப்படுகிறது) கடற்கரைக்குச் சென்றிருந்தோம். அவன் அதில் மூழ்கி விட்டான். அவனை மீட்டுத்தர வேண்டும், என்றனர். இறந்து போன ஒருவனை மீட்பதென்றால், அது தெய்வத்தாலேயே முடியும். இங்கே பகவான், இரட்டை அவதாரம் எடுத்து வந்துள்ளார். அவரால் முடியாதது தான் என்ன ? அவரிடம் ஆசிபெற்று உடனே புறப்பட்டு கடற்கரையில் நின்றனர் கிருஷ்ண பலராமர். சமுத்திரராஜன் அவர்களின் திவ்யதரிசனம் கண்டு ஓடோடி வந்து பணிந்தான். ஸ்ரீகிருஷ்ணா! நான் தங்களுக்கு செய்ய வேண்டியது என்ன ? உன்னிடம் மூழ்கியுள்ள எங்கள் குரு சாந்தீபனியின் மகனை திருப்பிக்கொடு, என்றார் கிருஷ்ணர். தேவாதி தேவா ! அவன் எனக்குள் இல்லை. அவனை என்னுள் மூழ்கி அட்டூழியம் செய்து கொண்டிருக்கும் பஞ்சஜனன் என்ற அசுரன் பிடித்துச் சென்றான். ஒருவேளை அச்சிறுவனை அவன் உயிருடன் விழுங்கியிருக்க கூடும். சங்கு வடிவில் என்னுள் மறைந்திருக்கும் அவனைப் பிடித்தால் விபரம் தெரியும், என்றான் பணிவுடன். கிருஷ்ண பலராமர் சற்றும் தாமதிக்காமல், கடலுக்குள் சென்றனர். அங்கே சங்கின் வடிவில் உருண்டுகொண்டிருந்த பஞ்சஜனனைப் பிடித்தனர். அவனது வயிற்றைக் கிழித்தார் கிருஷ்ணர். உள்ளே சிறுவன் இல்லை. சங்கு வடிவ அசுரனைக் கொன்று வெளியே தூக்கி வந்தனர். அவர்கள் நேராக யமலோகம் சென்றனர். எமலோக வாசலில், எமதர்மராஜா அவர்களை தண்டனிட்டு வரவேற்றான். காலனே ! எங்கள் குருவின் மகன் இங்கிருந்தால் உடனே என்னுடன் அனுப்ப வேண்டும், என்றார். தங்கள் கட்டளை என் பாக்கியம், என்றவன் சிறுவனை அழைத்து வந்தான். அவர்கள் சிறுவனை குருவிடம் ஒப்படைத்தனர். சாந்தீபனி முனிவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. சீடர்களே ! நீங்கள் ஆசிர்வாதத்துக்கு அப்பாற்பட்டவர்கள். இருப்பினும், குரு என்ற முறையில் உங்களை ஆசிர்வதிக்கிறேன். நீங்கள் இந்த யுகத்தில் பேசப்படுபவர்களாக இருப்பீர்கள். உங்கள் போதனைகள் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படும், என்றார். பயிற்சி முடித்து மதுராவுக்கு அவர்கள் திரும்பினர். தேவகியும், நந்தகோபரும் தங்கள் மக்களைப் பார்த்து மகிழ்ந்தனர். மாடு மேய்த்த சிறுவர்களுக்கு, கல்வி கற்றுத்தந்ததில், தந்தை வசுதேவருக்கு மிகுந்த திருப்தி. கிருஷ்ணர் மதுராவில் சூழ்நிலை காரணமாக இருந்தாலும், விருந்தாவனத்தில் தந்தை, தாய் மற்றும் கோபியருக்கு கொடுத்த வாக்குறுதி மட்டும் உறுத்திக்கொண்டே இருந்தது. அங்கு வருவதாகச் சொல்லியிருந்த வாக்குறுதியே அது. விருந்தாவனத்தில் யசோதை, நந்தகோபர் மட்டுமின்றி, கோபியர்களும் கிருஷ்ணரின் நினைவிலேயே இருந்தனர். பார்க்கும் இடத்தில் எல்லாம் அந்த பரந்தாமன் தான் தெரிந்தான். அங்கே ராதா என்ற கோபிகை வசித்தாள். அவள் கிருஷ்ணரைத் தவிர வேறு எதையும் நினைப்பவள் இல்லை. உண்ணும் போதும் கிருஷ்ணா, உறங்கும் போதும் கிருஷ்ணா, எந்த செயல் ..... என்ன நடந்தாலும் கிருஷ்ணா... கிருஷ்ணா.... கிருஷ்ணா.... இப்படி கிருஷ்ணனையே நினைத்துக் கிடந்தவள் அவள். இவள் பிறந்த பிறகு கண்விழிக்கவே இல்லையாம். ஒருநாள் யசோதை கண்ணனை இடுப்பில் சுமந்தபடி இவள் வீட்டுக்கு வரவே, விழித்துப் பார்த்தாளாம். அப்படி ஒரு தீராத காதல் அந்த மாயவன் மீது. நெஞ்சுக்குள் அவனது திருவடிகளைப் பற்றி நினைவு மட்டுமே அவளுக்கு. கிருஷ்ணர் விருந்தாவனத்தில் இருந்தபோது, அவளைத் தழுவி இனிய மொழி பேசுவார். அவர் இங்கிருந்து சென்றதில் இருந்து, கலங்கிப்போய் இருந்தாள். கிருஷ்ணரின் நினைவு அவளை வாட்டியது. மதுராவுக்கு கிருஷ்ணரின் பெரியப்பா பிள்ளையான (வசுதேவரின் சகோதரர் மகன்) உத்தவர் என்பவர் வந்தார். இவர் தோற்றத்தில் கிருஷ்ணரை ஒத்திருப்பார். அவர்கள் சகோதரர்கள் என்றாலும், நண்பர்கள் போல் பேசிக்கொள்வார்கள்.
veelratna
veelratna
பண்பாளர்
பண்பாளர்

Posts : 944
Join date : 28/12/2012

Back to top Go down

தசாவதாரம்.... - Page 2 Empty Re: தசாவதாரம்....

Post by mmani Sun Aug 18, 2013 6:59 am

அறிவிப்பு அறிவிப்பு அறிவிப்பு
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

தசாவதாரம்.... - Page 2 Empty Re: தசாவதாரம்....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum