Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
ஆதிபகவன்- திரை விமர்சனம்::: நோகடிக்கும் ‘பாதி பகவன்’..
Page 1 of 1

தமிழ் சினிமாவில் சில இயக்குனர்கள் படங்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு
ஏற்படும்… அந்த ‘எதிர்பார்ப்பு’ வரிசையில் இடம் பிடித்தவர்தான் இயக்குனர்
அமீர். அவரின் முந்தைய படங்களை பார்க்கும்போது அவரது கதைக்கான மெனக்கெடல்…
படப்பிடிப்பில் அர்ப்பணிப்பு… பட்ஜெட்டில் தயாரிப்பாளரை காப்பாற்றும் விதம்
என பல ‘பாசிட்டிவ்’ விஷயங்கள் இருக்கும்…
படப்பிடிப்பு தளங்களில் அதிகம் பேசாமல் வேலையில் மட்டும் கவனம் வைத்து
இருந்த அமீர் எப்போது பெப்சி அமைப்பு, இயக்குனர்கள் சங்கம்,
தயாரிப்பாளர்கள் சங்கம் என சங்க விவகாரங்களில் நுழைந்து பொறுப்புகளுக்கு
வந்தாரோ அப்போதே மேலே சொன்ன விஷயங்கள் கொஞ்சம் கொஞ்சமாக மறையத் தொடங்கியது…
‘ஆதிபகவன்’…. இந்த படத்தை அமீர் ஆரம்பித்தது 27.2.2010…. படத்தை ரிலீஸ்
செய்தது 22.2.2013 ஆக இந்த படத்தை எடுத்து முடித்து ரிலீஸ் செய்வதற்கு 3
ஆண்டுகள் கடந்திருக்கிறது… திமுகவில் முக்கிய இடத்தில் இருப்பவர், சட்டமன்ற
உறுப்பினர், மு.க.ஸ்டாலினின் நம்பிக்கையை பெற்றவர்களில் ஒருவர் இப்படி
சொல்லிக் கொண்டே போகும் அளவுக்கு செல்வாக்கு மிக்க ஜெ.அன்பழகன்தான் இந்த
படத்தின் தயாரிப்பாளர்…
இதெல்லாம் இப்போ எதுக்கு என யோசிக்கிறீர்களா… ‘ஆதிபகவன்’ பட
விமர்சனத்திற்கு போவதற்கு முன்பு அவரைப்பற்றி கொஞ்சம் பார்த்தால்
விமர்சனத்திற்குள் போவதற்கு வசதியாக இருக்கும் என்பதால்தான்…
‘முறைகேடான கிரானைட் தொழில் செய்கிற சகோதரர்களின் வீட்டில் சிபிஐ திடீரென
ரெய்டு நடத்துகிறது… அவர்கள் இருவரும் என்ன ஏது என யோசிப்பதற்குள் வீட்டில்
இருந்த எல்லா பணம், நகை, தங்கம், பத்திரங்கள் என அனைத்தையும்
வாரிச்சுருட்டிக் கொண்டு கிளம்புகிறது… அந்த ரெய்டுக்கு தலைமை ஏற்பது
ஜெயம்ரவி… ஆரம்ப காட்சிலேயே ஸ்மாட்டாக ஜெயம் ரவியை களம் இறக்கி ”அட
படத்தில் டைரக்டர் என்னமோ சொல்லப்போகிறார்… கர்நாடகத்தில் சிக்கிய ரெட்டி
சகேதரர்களின் கதையை களம் இறக்குகிறார்” என பார்த்தால்…
அத்தோடு அது தொங்கலில் நிற்கிறது…
பாங்காக் ஏழ்மை நிலையில் சுதாசந்திரன்… வாசலில் பெரிய காருடன் வந்து
இறங்கும் ஜெயம்ரவி கையில் கொண்டுவரும் பணத்தை சுதாசந்திரனிடம் கொடுக்க… அதை
வாங்காமல் ரோட்டில் வீசுகிறார்… ‘உங்கப்பனும் தப்பா போனதாலதான் உங்களை
இங்கே கூட்டிகிட்டு வந்தேன்… நல்ல வழியில சம்பாதி அப்போ வாங்கிக்கிறேன்னு’
சொல்லிவிட்டு பெண்ணை கூட்டிக்கொண்டு வீட்டில் இருந்து வெளியேறுகிறார்…
அத்தோடு இதுவும் தொங்கலில் நிற்கிறது…
இந்தியாவில் சிபிஐ போலீஸ் அதிகாரியாக பார்த்த ஜெயம்ரவி பாங்காங்கில்
கள்ளக்கடத்தல் ஆசாமியாக ஒருவரோடு பேரம் பேசுகிறான்… கொள்ளை அடித்த பணத்தில்
பங்கு கேட்கிறான்… பங்கு சரிபாதியாக பிரித்து வாங்கிக் போகும் ஜெயம்ரவியை
சீக்கிரம் முடித்துவிடவேண்டும் என எதிர்முனையில் இருப்பவன் பேசுகிறான்…
அங்கே ரெய்டுக்கு வந்தவன் சிபிஐ அதிகாரியே இல்லை என்ற விவரம் தெரிந்து
பணத்தை பறிகொடுத்த சகோதரர்கள் கொந்தளிக்கிறார்கள்… ஜெயம் ரவியை
தேடுகிறார்கள்…
அத்தோடு இதுவும் தொங்கலில் முடிகிறது…
ஒரு பாரில் போய் குடிக்கிறான்… அந்த பாரில் வேலை செய்யும் ஹீரோயின்
நீதுசந்திராவின் நடவடிக்கையில் மனசை பறி கொடுக்கிறான்… அந்த பெண்ணை அந்த
பார் நடத்துபவன் தவறான வழிக்கு அனுப்புகிறான்… அங்கிருந்து ஹீரோயின்
தப்புகிறாள்… பாரில் இருந்து வீட்டுக்கு போகும் வழியில் ஒரு காருக்குள்
அந்த பெண் கட்டி வைக்கப்பட்டிருப்பதை பார்த்து வெகுண்ட ஜெயம்ரவி
அங்கேயிருந்த வில்லனின் ஆட்களோடு பறந்து பறந்து மோதி அடித்து துவைத்து அந்த
பெண்ணை காப்பாற்றி வீட்டுக்கு அழைத்துப்போகிறான்…
கோயிலுக்குள் இருக்கிற அம்மா சுதாசந்திரனிடம் ஹீரோயினை அறிமுகப்படுத்தி
ஆசீர்வாதம் வாங்க வந்து காத்திருக்கிறான்… சுதாசந்திரன் அவனை பார்க்க
பிடிக்காமல் விலகி போகிறார்…
அத்தோடு இதுவும் தொங்கல்…
கடத்தல் தொழிலில் புதிய வேலையை ஒப்புக்கொள்வதற்காக ஜெயம்ரவி போகும் போது
குறுக்கிடும் நீதுவையும் அழைத்து செல்கிறான்… ‘என்ன நடந்தாலும் காரை
விட்டு கீழே இறங்கக் கூடாது’ என ஜெயம் ரவி டயலாக் பேசி போகும்போது அடுத்தது
பறந்து பறந்து அடித்துக் கொள்ளும் சண்டை இருக்கிறது என்பது சொல்லாமல்
புரிகிறது…
அதைப்போலவே, பறந்து பறந்து துப்பாக்கியால் சுட்டபடி சண்டை நடக்கிறது…
ஒரு கட்டத்தில் காரில் இருந்து நீது இறங்கி ஜெயம் ரவியை அழைக்க… அவரோ எதிர்
கோஷ்டியை துப்பாக்கியால் சுட்டபடியே நீதுவை காருக்குள் போகும்படி
சத்தம்போடுகிறார்… ஒரு கட்டத்தில் ஜெயம் ரவியையும் சுட்டு விடுகிறார்கள்…
அங்கிருந்து எப்படியோ அவனை காப்பாற்றி வீட்டுக்கு கொண்டுபோகிறார் நீது…
மார்பில், காலில் என பல இடங்களில் குண்டடிப்பட்டவனை தமிழ் சினிமா
ஃபார்முலாப்படி வீட்டுக்குள்ளேயே வைத்து ஹீரோயின் நீதுவே டாக்டராக(?) மாறி
ஆபரேஷன் செய்து குண்டை எடுத்து கட்டுபோடுகிறார்…
அத்தோடு அதுவும் தொங்கல்…
மும்பையில் போலீஸ் ஸ்டேஷனுக்கு கிரானைட் சகோதரர்கள் வருகிறார்கள்… ஜெயம்
ரவி போட்டோவை காட்டி அவனை பிடித்து தரும்படி கேட்கிறார்கள்… அவர்களை
விரட்டுகிறது போலீஸ்…
அதேநேரம்… திடீரென ஜெயம்ரவியும், நீதுவும் இந்தியாவுக்கு
புறப்படுகிறார்கள்… விமான நிலையத்தில் நீது போனில் யாரிடமோ பேசுகிறாள்…
மறுமுனையில் யார் என பார்த்தால்… மும்பை போலீஸ் அதிகாரி… இதுதெரியாமல்
ஜெயம்ரவி மும்பை வருகிறான்…
மும்பையில் அவனை போலீஸ் பிடித்து காரணமே சொல்லாமல் அடித்து துவைக்கிறது…
காரணத்தை யாரும் சொல்லாமல் இருக்கும்போது கூடவே கைதியாக இருக்கிற ஒருவன்
அதற்கான காரணத்தை சொல்கிறான்…
அப்போது ஜெயம்ரவியின் இன்னொரு ரோல் ‘பகவன்’ பற்றி ஜெயம்ரவிக்கு
தெரியவருகிறது… உருவத்தில் ஒரே மாதிரி இருக்கிற பகவன்தான் ஆதியாக உள்ள
ஜெயம்ரவி என நினைத்துக் கொண்ட போலீஸ் அவனை சுட்டுக் கொல்ல முடிவு
செய்கிறது…
‘பகவன்’ ரோலில் வரும் ஜெயம்ரவி பெண்தன்மை உள்ள ரோலில் வித்தியாசம் காட்ட
முயற்சித்திருக்கிறார்… கொடூர வில்லனாக சிரித்துக் கொண்டே கொலை
செய்கிறார்… பதற பதற ஆளை எரிக்கிறார்… ஒரு கட்டத்தில் மந்திரி தம்பியை
சுட்டுக் கொல்ல… போலீஸ் தேடுகிறது…
ஆதியை போலீஸ் சுட்டுக் கொன்றதா… பகவன் கதி என்ன… நீது எங்கே போனார்… இதற்கெல்லாம் கடைசியில் விடை சொல்கிறது ஆதிபகவான்..!
அப்பாடா… ஒரு வழியா படத்தோட விமர்சனத்தை எழுதிட்டேன்… படிச்சவரைக்கும் உங்களுக்கு ஏதாச்சும் புரிச்சா மறக்காம எனக்கு சொல்லுங்கோ…
படத்துல ரொம்ப புடிச்ச வசனமே… ‘டேய் என்னை ரொம்பவே கஷ்டப்படுத்தீங்களே…’
ஆதியாக உள்ள ஜெயம் ரவி பேசுவார்… படம் பார்க்கிறவர்கள் இந்தவசனத்தை
எப்போதுமே சொல்வார்கள் என தெரிந்தே வைத்திருக்கிறார்கள் போல…
அதைப்போலவே, ‘போதும்… ரொம்ப ஆடிட்டோம்… இத்தோட ஆட்டத்தை
நிறுத்திக்கலாமா…’ இதுவும் ஆதியாக உள்ள ஜெயம் ரவி பேசும் வசனம்தான்… இந்த
வசனம் தியேட்டரில் வந்தபோது…. ”யப்பா ரவி கரெக்ட்டா சொல்லிட்ட… நாங்களும்
போதும் படத்தை நிறுத்திக்கலாம்னு சொல்ல வந்துட்டோம்” என கமெண்ட்…
மொத்தத்தில் ‘ஆதிபகவன்’ படத்தில் தெளிவில்லாத திரைக்கதை… பொறுப்பற்ற
காட்சியமைப்பு… அதீத நம்பிக்கை… இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்… இந்த
படத்தை எடுத்து முடிக்க 3 ஆண்டுகள்… நம் காதுக்கு வந்த வகையில் மொத்த
பட்ஜெட் 20 கோடியை தாண்டியதாம்… பாடல்கள் பெருசாக மனசில் நிற்கவில்லை.
தேவராஜின் ஒளிப்பதிவும் மனசை பாதிக்கவில்லை. யுவன் ஷங்கர் ராஜாவின் பின்னணி
இசை காது ஜவ்வை கிழிப்பதோடு சரி… அழுத்தம் இல்லை…
மொத்தத்தில் ‘ஆதிபகவன்’… முழுமையடையாத- நோகடிக்கும்’பாதி பகவான்’..!

Similar topics
» திரை விமர்சனம்: இசை
» ராவணன் – திரை விமர்சனம்
» 'மதுபானக்கடை' திரை விமர்சனம்
» வீரம் திரை விமர்சனம்
» பூலோகம் – திரை விமர்சனம்
» ராவணன் – திரை விமர்சனம்
» 'மதுபானக்கடை' திரை விமர்சனம்
» வீரம் திரை விமர்சனம்
» பூலோகம் – திரை விமர்சனம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum