Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
ராவணன் – திரை விமர்சனம்
3 posters
Page 1 of 1
ராவணன் – திரை விமர்சனம்
மொத்த இந்தியாவே எதிர்பார்த்த படம். தமிழ், இந்தி, தெலுங்கு என்று மூன்று
மொழிகளில் வெளியாகியிருக்கிற படம். சமீப காலங்களில் சென்னை மற்றும்
செங்கல்பட்டு ஏரியாவின் சிட்டி பார்டர் தியேட்டர்களை சேர்த்து சுமார்
35க்கும் மேற்பட்ட தியேட்டர்கள், வெளியாகியிருக்கும் படம். இப்படி
ரசிகர்கள் மட்டுமில்லாமல், மொத்த திரையுலகமே மிகவும் எதிர்பார்த்த படம்.
ராவணன்.
எல்லோருக்கும்
தெரிந்த இராமாயண கதைதான். மணிக்கு ஏதும் புதிதில்லை, ரோஜா, தளபதி, என்று
ஏற்கனவே அவர் பயணித்த களம் தான். ராவணனை நல்லவனாக காட்டியிருக்கும் படம்.
இதற்கு முன்னர் ஆர்.எஸ்.மனோகர் இலங்கேஸ்வரன் என்ற நாடகத்தில் இராவணனை
நல்லவனாக காட்டியிருப்பார். அது ஒரு காலத்தில் மிகப் பெரிய ஹிட் நாடகம்.
தெரிந்த இராமாயண கதைதான். மணிக்கு ஏதும் புதிதில்லை, ரோஜா, தளபதி, என்று
ஏற்கனவே அவர் பயணித்த களம் தான். ராவணனை நல்லவனாக காட்டியிருக்கும் படம்.
இதற்கு முன்னர் ஆர்.எஸ்.மனோகர் இலங்கேஸ்வரன் என்ற நாடகத்தில் இராவணனை
நல்லவனாக காட்டியிருப்பார். அது ஒரு காலத்தில் மிகப் பெரிய ஹிட் நாடகம்.
வீரா என்கிற வீரய்யா திருநெல்வேலிக்கு பக்கத்தில் ஒரு கிராமத்தில்
மேட்டுக்குடியினரையும், போலீஸாரையும் எதிர்த்தும், போராடுபவன், போலீஸுக்கு
அவன் ஒரு தீவிரவாதி, ஆனால் அங்கிருக்கும் மக்களுக்கோ அவன் காவல் தெய்வம்.
போலீஸ் எஸ்.பியான பிருதிவிராஜின் மனைவி ராகினி என்கிற ஐஸ்வர்யாவை
கடத்துகிறான். ஏற்கனவே வீராவின் மீது வெறுப்பை உமிழும் பிருதிவிராஜுக்கு
மேலும் ஆத்திரம் வந்து, மனைவியை கண்டுபிடிக்க காட்டுக்குள் தன் படையுடன்
இறங்குகிறார். பதினாக்கு நாட்கள் தன் பாதுகாப்பில் கடத்தி வரப்பட்ட
ஐஸ்வர்யாவை சில பல பிரச்சனைகளூக்கு பிறகு திரும்பி அனுப்புகிறான்.
பிருதிவிராஜ், பதினாக்கு நாள் அவனுடன் இருந்தாயே அவனுடன் ஏதாவது என்று
கேட்க, பாலிகிராப் டெஸ்ட் செய்ய சொல்லி வற்புறுத்துகிறான். மனம் ஒடிந்த
ஐஸ்வர்யா வீராவை தேடி போகிறாள். நடந்தது என்ன..? என்பது எல்லோருக்கும்
தெரிந்த விஷயமாய் இருந்தாலும் நிச்சயம் வெள்ளித்திரையில் பார்த்தால்
மட்டுமே ரசிக்க முடியும்.
வீராவாக விக்ரம், அசத்தலான பாடிலேங்குவேஜ், ஐஸை கடத்தி வரும் போது
இருக்கும் பரபரப்பாகட்டும், தன் மீது பயமேயில்லாமல் தன் உயிர் பற்றியும்
பயம் இல்லாத பெண்ணை பார்த்து ஆச்சர்யபடும் நேரமாகட்டும், தனக்கே தெரியாமல்
மயக்கத்தில் இருக்கும் பெண்ணிடம் மயங்கி, கிறங்கி போவதாகட்டும், தன்னுடன்
இருந்துவிடுகிறாயா? என்று கேட்கும் இடமாகட்டும். ஐஸ் மேலிருக்கும் காதலை
கண்களிலும், உடல்மொழியில் மட்டுமே வெளிப்படுத்தி அசத்துக்கிறார்.
முக்கியமாய் க்ளைமாக்ஸில் ஐஸ் திரும்பி வந்ததும் அவர் காட்டும்
எக்ஸ்ப்ரெஷன் இருக்கிறதே.. உலகத்தரம். மனுஷன் பின்னியெடுக்கிறார். ஆனால்
“பக்..பக்’கென கோழி கத்துவது போலும், டண் டண் டண் என்று வாயால் ஆக்ரோஷமாய்
தாளம் போடும் கேரிக்கேச்சர்கள் எடுபடவில்லை. அதெல்லாம் அவரை ஒரு டெரராக
காட்ட நினைத்தது வி.இ.நீராய் தான் முடிந்திருக்கிறது.
ஐஸ் முகத்தில் வயது தெரிகிறது. ஆனால் அம்மணியின் பர்பார்மன்ஸில்
மற்றதெல்லாம் தெரியாமல் போகிறது. படத்துக்கு இவர் தான் ஆணிவேர். அம்மணீ
அதகள படுத்தியிருக்கிறார். வீராவின் இன்னொரு பக்கத்தை பார்த்து கொஞ்சம்,
கொஞ்சமாய் நெகிழும் இடத்தில், சாமியிடம் வேண்டிக் கொள்ளும் இடம்,
நெருக்கத்தில் சஞ்சலப்படும் இடம. க்ளைமாக்ஸில் நான் உன் கூட தங்கிவிட்டால்
என் புருஷனை கொல்லாமல் விடுவாயா?என்று கேட்கும் இடத்தில். என்று படம்
முழுவதும் இவரின் ராஜ்ஜியம் தான்.
எஸ்.பியாக பிருதிவிராஜ். ஆரம்பக் காட்சியிலிருந்தே வீராவின் மேல்
வன்மத்துடன் அலைகிறார். ஒரு சில நெருக்கமான காட்சிகளில் ஐஸ்ஸுடன்
குலாவுகிறார். ஐஸ்ஸை சந்தேகப்படும் காட்சியில் நச். படத்தில் பிரபு,
கார்த்திக், ரஞ்சிதா, ப்ரியாமணி என்று ஏகப்பட்ட நடிகர் பட்டாளம்
இருக்கிறது.
படத்தின் ஒளிப்பதிவாளர்களின் சந்தோஷ்சிவன்/ மணிகண்டனின் கைவண்ணம். படம்
முழுவதும் ஆர்ப்பாட்டமே நடத்தியிருக்கிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில்
ஏற்கனவே பாடல்கள் ஹிட். ‘உசுரே போகுதே” பாடல் எல்லார் மனதையும் உருக்க
வைக்கும். ஆனால் பாடல் போஸ்ட் ஆன இடம் தான் கொஞ்சம் வழுக்கல். பின்னணி இசை
நிச்சயம் பேசப்படும்.
ராமாயணத்தின் இன்ஸ்ப்ரேஷன் என்பதால் கதை பெயர் போடப்படவில்லை என்று
நினைக்கிறேன். வசனம் சுஹாசினி. வழக்கமான மணி படத்தின் அளவுகளை விட அதிகமே.
ஆனால் பெரிய தாக்கம் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். சில இடங்களில்
வசனங்கள் புரியவில்லை.
மணி
ரத்னம். இவர் ஒரு படம் செய்தால் உலகமே திரும்பிப் பார்க்கும் அளவுக்கு
எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தும் மனிதர். என் ஆதர்ச நாயகன். சினிமாவை
வசனங்கள் மூலமாய் வெளிப்படுத்தாமல், மிகக் குறைவாய் பேசி விஷுவல்
மொழியாக்கிய ஜித்தன். இப்படத்திலும் தன் கைவரிசையை காட்ட தவறவில்லை.
ஆரம்ப காட்சியில் மலையிலிருந்து குதிக்கும் காட்சியிலிருந்து இவர் காட்ட
ஆரம்பிக்கும் பிரம்மிப்பு படம் முடியும் வரை இருக்கத்தான் செய்கிறது.
முக்கியமாய் விக்ரம், ஜஸ்ஸுக்குமிடையே சலனங்கள் ஏற்படும் காட்சி..
சிம்ப்ளி சூப்பர். எங்குமே உடலால் தீண்டப்படாமல் அவர்களுக்கு ஏற்படும்
உணர்வுகளை திரையில் இவ்வளவு அழகாய் கொண்டு வர முடியுமா? ஒரு மாதிரியான
எக்ஸ்டஸியில் கண்கள் கலங்கியது எனக்கு. அற்புதமான இதுவரை திரையில்
காட்டவேபடாத லொக்கேஷன்கள். மழை பெய்து கொண்டேயிருக்கும் காடு, மலைவாழ்
ஜனங்கள். என்று படம் நெடுக விஷுவல் அண்ட் டெக்னிக்கல் அட்டகாசங்கள்
மணிக்கே உரித்தானது.
எல்லாமே ப்ளஸாக இருக்கும் படத்தில் மிகப் பெரிய லெட்டவுன் திரைக்கதைதான்.
முதல் பாதியில் கடத்தும் காட்சியை விட்டு விட்டு பார்த்தால் ரொம்ப நேரம்
என்ன செய்வது என்றே தெரியாமல் வெட்டியாய் தான் போகிறது. அதே போல இரண்டாம்
பாதி வந்ததும் கொஞ்சம் ஜெர்க் அடித்து பரபரக்கிறது. க்ளைமாக்ஸ் வரும் போது
நிமிர்ந்து உட்கார வைக்கும் படம் பொத்தென விழுந்துவிடுகிறது என்பதை
வருத்ததுடன் சொல்ல வேண்டித்தானிருக்கிறது.
ராமனின் மனைவியான சீதைக்கு தன்னை கடத்திய இராவணன் மீது ஒரு சிறு சஞ்சலம்
வந்தது. அதுவும் அவனின் அன்பால், அவனின் குணத்தால். தன்னை பத்திரமாக
திரும்பி அனுப்பிய பின் சந்தேகப்படும் ராமனை விட அவன் உயர்ந்தவன் என்று
முடிவு செய்து இராவணனிடம் போனாள். இந்த இடம் தான் அட்டகாசம். ஆனால் அதற்கு
பிறகு நடக்கும் முடிவு சினிமாத்தனம். அல்லது மணியின் தைரியமின்மை
என்றுதான் சொல்ல வேண்டும்.
ரத்னம். இவர் ஒரு படம் செய்தால் உலகமே திரும்பிப் பார்க்கும் அளவுக்கு
எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தும் மனிதர். என் ஆதர்ச நாயகன். சினிமாவை
வசனங்கள் மூலமாய் வெளிப்படுத்தாமல், மிகக் குறைவாய் பேசி விஷுவல்
மொழியாக்கிய ஜித்தன். இப்படத்திலும் தன் கைவரிசையை காட்ட தவறவில்லை.
ஆரம்ப காட்சியில் மலையிலிருந்து குதிக்கும் காட்சியிலிருந்து இவர் காட்ட
ஆரம்பிக்கும் பிரம்மிப்பு படம் முடியும் வரை இருக்கத்தான் செய்கிறது.
முக்கியமாய் விக்ரம், ஜஸ்ஸுக்குமிடையே சலனங்கள் ஏற்படும் காட்சி..
சிம்ப்ளி சூப்பர். எங்குமே உடலால் தீண்டப்படாமல் அவர்களுக்கு ஏற்படும்
உணர்வுகளை திரையில் இவ்வளவு அழகாய் கொண்டு வர முடியுமா? ஒரு மாதிரியான
எக்ஸ்டஸியில் கண்கள் கலங்கியது எனக்கு. அற்புதமான இதுவரை திரையில்
காட்டவேபடாத லொக்கேஷன்கள். மழை பெய்து கொண்டேயிருக்கும் காடு, மலைவாழ்
ஜனங்கள். என்று படம் நெடுக விஷுவல் அண்ட் டெக்னிக்கல் அட்டகாசங்கள்
மணிக்கே உரித்தானது.
எல்லாமே ப்ளஸாக இருக்கும் படத்தில் மிகப் பெரிய லெட்டவுன் திரைக்கதைதான்.
முதல் பாதியில் கடத்தும் காட்சியை விட்டு விட்டு பார்த்தால் ரொம்ப நேரம்
என்ன செய்வது என்றே தெரியாமல் வெட்டியாய் தான் போகிறது. அதே போல இரண்டாம்
பாதி வந்ததும் கொஞ்சம் ஜெர்க் அடித்து பரபரக்கிறது. க்ளைமாக்ஸ் வரும் போது
நிமிர்ந்து உட்கார வைக்கும் படம் பொத்தென விழுந்துவிடுகிறது என்பதை
வருத்ததுடன் சொல்ல வேண்டித்தானிருக்கிறது.
ராமனின் மனைவியான சீதைக்கு தன்னை கடத்திய இராவணன் மீது ஒரு சிறு சஞ்சலம்
வந்தது. அதுவும் அவனின் அன்பால், அவனின் குணத்தால். தன்னை பத்திரமாக
திரும்பி அனுப்பிய பின் சந்தேகப்படும் ராமனை விட அவன் உயர்ந்தவன் என்று
முடிவு செய்து இராவணனிடம் போனாள். இந்த இடம் தான் அட்டகாசம். ஆனால் அதற்கு
பிறகு நடக்கும் முடிவு சினிமாத்தனம். அல்லது மணியின் தைரியமின்மை
என்றுதான் சொல்ல வேண்டும்.
எப்போது சீதையான ஐஸ் கேரக்டர் தன் கணவனிடம் தன்னை பற்றி வீரா தப்பாய்
சொல்லியிருக்க மாட்டான் என்று உறுதியாக சொல்லிவிட்டு வீராவை பார்க்க
போனாளோ.. அப்போதே ராமன் கேரக்டரான பிரிதிவி செத்ததற்கு சமம். இதற்கு பிறகு
ஐஸை தொடர்ந்து பட்டாலியனோடு வந்து கொல்வது எல்லாம்.. ம்ஹும்..
படத்தில் நாம் ஒட்டமுடியாமல் போவதற்கான காரணங்கள் நிறைய. முதலில் வீராவும்
அவன் சார்ந்த இடமாக சொல்லப்படுகிற திருநெல்வேலி மாவட்ட, எப்போதும் மழை
பெய்யும் மலை கிராமம். பின்பு அங்கு சொல்லப்படுகிற தீவிரவாத மேட்டுக்குடி,
பிரச்சனைகள். கதை களமாக காட்டப்படும் இடங்கள், என்று எல்லாமே டப்
செய்யப்பட்ட படம் பார்ப்பது போல் உணர்வை ஏற்படுத்துவதை தவிர்க்க
முடியவில்லை. நிச்சயம் இப்படட்தை ஹிந்தியில் பார்க்கும் போது இம்மாதிரியான
உணர்வு இருக்காது என்று தோன்றுகிறது.
கார்த்திக் கேரக்டர் தான் அனுமன் கேரக்டர் என்று பிரிதிவிக்கு காட்டில்
வழி காட்டும் போதே தெரிந்துவிடுகிறது. பின் எதற்கு ஆரம்ப காட்சியில்
மரத்துக்கு மரம் தாவி காட்ட வேண்டிய நிர்பந்தம். அதை விட காமெடி ஐஸ்
இருக்கும் இடத்தில் அவர் புருஷன் அனுப்பிய ஆள் அடையாள அட்டை வேண்டுமானால்
காட்டுகிறேன் என்று சொல்லுமிடம், அதே போல் ப்ரியாமணியை போலீஸார் தூக்கிக்
கொண்டு போகும் போது சூர்பனைகையை தான் இது என்பதை சொல்லாமல் சொல்வதை போல,
“இப்ப என்ன செய்யட்டும் உன் மூக்கை அறுக்கட்டுமா” என்று போலீஸ் பேசும்
வசனம் எல்லாம் மணி சார்.. உங்களிடமிருந்தா..?
அட்டகாசமான லொக்கேஷன், அருமையான நடிகர்கள், டெக்னிக்கலாய் மிரட்டும்
ஸ்ட்ராங் டீம், என்று எல்லாம் இருந்து ஜிவன் குறைந்தே இருக்கிறான் ராவணன். இருந்தாலும் தியேட்டரில் பார்த்தே ஆக வேண்டிய படம் என்பதை மறுக்க முடியாது.
ராவணன் - A Extrodinary Film Without Life
Re: ராவணன் – திரை விமர்சனம்
பகிர்வுக்கு நன்றி...
kalairaja- கணினி கவிஞன்
- Posts : 500
Join date : 09/04/2010
Re: ராவணன் – திரை விமர்சனம்
kalairaja wrote:பகிர்வுக்கு நன்றி...
அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
Similar topics
» திரை விமர்சனம்: இசை
» வீரம் திரை விமர்சனம்
» திரை விமர்சனம்: ஜில் ஜங் ஜக்
» ரௌத்திரம் - திரை விமர்சனம்
» ‘ஜில்லா’ – திரை விமர்சனம்
» வீரம் திரை விமர்சனம்
» திரை விமர்சனம்: ஜில் ஜங் ஜக்
» ரௌத்திரம் - திரை விமர்சனம்
» ‘ஜில்லா’ – திரை விமர்சனம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum