Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட இன அழிப்புகள்..............
TamilYes :: பொதுஅறிவு களம் :: அறிவுக்களஞ்சியம் :: பொதுஅறிவு களம் :: பொதுஅறிவு
Page 1 of 1

உலக வரலாற்றில் தமிழனம் சந்தித்த முதல் இன அழிப்பு ஈழத்தில் நடந்தது. ஆனால்
மனித இனம் தோன்றிய காலம் முதல் பல்வேறு கால கட்டங்களில் இன அழிப்புகள்
நடந்துக்கொண்டு தான் உள்ளன.
வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட இன அழிப்பு என்பது முதன் முதலாக 149-146 கிமு
வில் வட ஆப்பிரிக்காவின் கார்த்தேஜ் என்ற பழங்கால துனிசியா வில்
நடந்தேறியது. ரோமானிய படைகளால் மேற்கொள்ளப்பட்ட இவ்வினழிப்பு மூன்றாம்
புனிக் யுத்தத்தின் போது நடந்தேறியது. போரில் வெற்றிப் பெற்ற ரோமானிய
படைகள் கார்தேஜ் நகரின் ஓவ்வொரு வீடாக சென்று பெண்களை வன்புணர்வு செய்தும்
கண்ணில் கண்டவர்களை கொன்றும் வெற்றியை கொண்டாடினர். பின்னர் நகர்
முழுவதையும் தீயிட்டு கொழுத்தி தரைமட்டமாக்கினர்.
கிபி 1490-1914
வரை இப்போதைய அமெரிக்கா முழுவதும் பரவியிருந்த அமெரிக்க பழங்குடிகளான
செவ்விந்தியர்கள் இனஅழிப்பின் மூலம் படிப்படியாக ஒரு சில அமெரிக்க
மாநிலங்களுக்குள் அடக்கப்பட்டுள்ளனர். ஐரோப்பியர்களின் நாடு பிடிக்கும்
ஆசையில் நடந்த யுத்தங்களில் பல ஆயிரம் அமெரிக்க பழங்குடிகள்
கொல்லப்பட்டனர். பழங்குடிகளை அழித்த பின் அவர்களின் நிலங்கள் ஐரோப்பியாவில்
இருந்து அமெரிக்காவில் குடியேறியவர்களால் கையகப்படுத்தப்பட்டது வரலாறு.
1900-1970 க்கு இடைப்பட்ட காலத்தில் ஆஸ்திரேலியாவில் 2000 முதல் 25000
பழங்குடி குழந்தைகள் அவர்கள் குடும்பங்களிடம் இருந்து பிரிக்கப்பட்டு, ஒரு
மாபெரும் இன அழிப்பிற்கு வழி கோலப்பட்டது. ஒரு கட்டத்தில் 5 முதல் 7
லட்சமாக இருந்த ஆஸ்திரேலிய பழங்குடிகள் மக்கள் தொகை இன அழிப்பிற்குப்பின்
வெறும் 50000 மாக குறைந்தது. பல ஆயிரமாக இருந்த டாஸ்மானிய பழங்குடிகளில்
ஒருவர் கூட இப்போது இல்லை என்பது ஆஸ்திரேலிய இன அழிப்பின் உச்ச கட்ட
கொடூரம்.
1850 -1864 காலகட்டத்தில் தெற்குச் சீனாவில் குயிங் அரச
வம்சத்திற்கு எதிராக ஹாங் சியூக்யான் என்பவர் தலைமையில் நடைபெற்ற உரிமைப்
போராட்டம் உள்நாட்டுக் கலமாக மாற அதில் 2 கோடி மக்கள் அரச படைகளால்
கொல்லப்பட்டனர். 20 ஆம் நூற்றாண்டில் சீனாவில் மிகப் பெரிய அரசியல்
மாற்றத்திற்கான விதையாக இவ்வின அழிப்பு மாறியது. உலகின் மிகப்பெரிய இன
அழிப்பில் ஒன்றாக இது கருதப்படுகிறது.
1975 முதல் 1999 வரையிலான
காலகட்டத்தில் இந்தோனேசியாவின் ஒரு மாகாணமாக இருந்த கிழக்கு தைமூரில்
நடைபெற்ற விடுதலைப்போராட்டத்தின் போது ஏறத்தாழ இரண்டு லட்சம் மக்கள் இன
அழிப்பின் மூலம் கொல்லப்பட்டனர். இந்தோனேசியப் படைகள் நாபாம் என்ற ஆயுதம்
மூலமாகவும் ராசயன ஆயுதங்கள் மூலமாகவும் இவ்வின அழிப்பை மேற்கொண்டனர்
அத்தோடு பெரும் பகுதி மக்களுக்கு உணவும் மறுக்கப்பட்டு அவர்கள்
பட்டினியாலும் மடிந்தனர். கிழக்கு தைமூரை 2002-ல் இந்தோனேசியாவிடம் இருந்து
விடுதலை அடைந்து தனி நாடானது.
சமீப காலத்தில் மிகப்பெரிய
இனப்படுகொலை நடந்தேறியது ஆப்பிரிக்காவில் உள்ள ருவாண்டா நாட்டில். 1994 -ல்
இரு வேறு இனக்குழுக்கிடையே நடைபெற்ற சண்டையில் வெறும் நூறே நாட்களில் 8
லட்சம் டுட்சி இன மக்கள் கொல்லப்பட்டனர். ருவாண்டா இராணுவத்தால் மிக
நேர்த்தியாக திட்டமிட்டு இந்த படுகொலைகள் நிகழ்த்தப்பட்டது. உயிருக்கு
பயந்து பள்ளிகளிலும் தேவாலயங்களிலும் ஒளிந்திருந்த டுட்சி இன மக்களை
ருவாண்டா இராணுவம் கொத்து கொத்தாக கொன்று குவித்தது.
இருபதாம்
நூற்றாண்டின் மிகப்பெரிய இன அழிப்புகளில் ஒன்று, கம்போடியாவில் 1975 முதல்
1979 வரை போல் பாட் என்பவர் தலைமையில் நடைபெற்ற கைமர் ரோக் ஆட்சியின் போது
நடந்தது. கம்போடியாவில் சிறுபான்மையினராக இருந்த வியட்னாமியர்கள்,
சீனர்கள், புத்த துறவிகள், முன்னாள் அரசு ஊழியர்கள் என்று குறி வைத்து
அழிக்கப்பட்டனர். அரசால் உருவாகப்பட்ட பஞ்சாத்தால் ஆயிரக்கணக்கானவர்கள்
பட்டினியால் உயிரிழந்தனர். ஐந்து வருட தேடலின் முடிவாக இருபதாயிரம் புதை
குழிகள் கண்டெடுக்கப்பட்டதில் 13 லட்சம் மக்கள் இன அழிப்பின் போது
கொல்லப்பட்டதாக கணக்கிடப்பட்டுள்ளது.
இவை அனைத்தையும் விட உலகில்
இன அழிப்பு என்றால் அனைவரின் கவனத்திற்கு உடனே வருவது இரண்டாம் உலகப்போரின்
போது யூதர்களுக்கு எதிராக ஹிட்லரால் நடத்தப்பட்ட இன அழிப்பு. ஏறத்தாழ 50
லட்சம் யூதர்களை பலி வாங்கிய "ஹோலோகொஸ்ட்" என்று அழைக்கப்படும் இந்த இன
அழிப்பு கொடூரத்தின் உச்ச கட்டம். யூத மக்களை விஷ வாயூ நிரப்பிய அறைகளில்
அடைத்து வைத்தும். உணவில்லாமல் பட்டினி போட்டும், புதிய மருந்து
கண்டுபிடிப்புகளுக்கு அவர்களை சோதனை எலிகளாக பயன் படுத்தியும், சம்பளம்
இல்லா கூலிகளாக பயன்படுத்தியும் என்று பல்வேறு சித்திரவதைகளை செய்து சிறிது
சிறிதாக லட்சக்கணக்கான யூதர்கள் நாஜி ஜெர்மனியில் கொல்லப்பட்டனர்.
இன அழிப்பிற்கெதிரான விழிப்புணர்வு இரண்டாம் உலகப் போர் காலகட்ட
ஜெர்மனியில் நடந்த யூத இன அழிப்பிற்குப் பின்னரே உலகிற்கு வருகிறது.
பல்வேறு வழக்குகள் தொடுக்கப்பட்டு யூத இன அழிப்பில் ஈடுபட்ட நாஜி படை
அதிகாரிகள் முதல் சிப்பாய்கள் வரை தண்டனைகள் கொடுக்கப்பட்டது வரலாறு.
இரண்டாயிரம் ஆண்டுகளாக பல்வேறு நாடுகளுக்கு விரட்டப்பட்டு
சிதறடிக்கப்பட்ட யூத இனம், பல்வேறு காலகட்டங்களில் அந்தந்த நாடுகளில் இன
அழிப்பிற்கு உள்ளானது. ஆனாலும் அவர்கள் தங்கள் அடையாளங்களையோ
கலாச்சாரத்தையோ சிறிது விட்டுக்கொடுக்கவில்லை இன்று வரை. தங்கள் கவனம்
முழுவதையும் கல்வியிலும் அயராது உழைப்பதிலும் செலுத்தினர். இன்று உலகின்
முன்னோடி விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் பெரும்பாலும் யூத இனத்தவர்களால்
நிகழ்த்தப்பட்டதாகவே உள்ளது. ஆனாலும் அவர்கள் கனவு அவர்களுக்கென்ற ஒரு
தேசம். இடைவிடாத போராட்டத்தின் மூலமும் ராஜ தந்திர முயற்சிகள் மூலம்
அவர்கள் தங்கள் கனவு தேசத்தை அடைந்தனர். அது தான் விவசாயம் முதல் விஞ்ஞானம்
வரை இன்று சிறந்து விளங்கும் இஸ்ரேல். இன அழிப்பில் இருந்து மீண்டெழுந்த
ஒரு இனம் அங்கு இப்போது வாழ்கிறது, காயம் நிறைந்த வடுகளோடு.
மேற்சொன்ன இன அழிப்புகளுக்குப் பின் எஞ்சி இருந்த அவ்வின மக்களுக்கு
நியாயம் கிடைத்தது. அதற்கான முயற்சிகள் அவ்வினத்தின் பிந்திய
தலைமுறைகளாலும் சர்வதேசங்களாலும் எடுக்கப்பட்டன. இன்று இன அழிப்பிற்கு
உட்படுத்தப்பட்டு நிர்கதியாக நிற்கும் தமிழனத்திற்கும் அந்த நியாயம்
கிடைக்கும். இது முந்திய வரலாறுகள் நமக்கு உணர்த்தும் பாடம்.
நாமும் மீண்டு எழுவோம்.

mmani- பண்பாளர்
- Posts : 8037
Join date : 19/12/2010
Similar topics
» விண்வெளியில் பதிவு செய்யப்பட்ட முதல் பாடலுக்கு இணையத்தில் வரவேற்பு
» வரலாற்றில் இன்று
» தினம் ஒரு தகவல் (தொடர்)
» பிப்ரவரி 11 வரலாற்றில் இன்று
» டிசம்பர் 30 வரலாற்றில் இன்று
» வரலாற்றில் இன்று
» தினம் ஒரு தகவல் (தொடர்)
» பிப்ரவரி 11 வரலாற்றில் இன்று
» டிசம்பர் 30 வரலாற்றில் இன்று
TamilYes :: பொதுஅறிவு களம் :: அறிவுக்களஞ்சியம் :: பொதுஅறிவு களம் :: பொதுஅறிவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum