Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Today at 12:07 am
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:26 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
இலங்கைக்கு எதிராக கடுமையான பிரேரணைகள் முன்வைக்கப்படும் சாத்தியம் - அமெரிக்க பிரதிநிதிகளுடன் கூட்டமைப்பு கூடி ஆராய்வு!
Page 1 of 1

ஐ.நா.மனித உரிமைகள் சபையின் கடந்த ஆண்டு கூட்டத்தொடரின் போது இலங்கை மீது
அமெரிக்காவினால் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்ட பிரேரணையை இலங்கை
தொடர்ந்தும் உதாசீனம் செய்து வருகின்றது. இதனால் எதிர்வரும் மார்ச் மாதம்
ஜெனிவாவில் இலங்கை மீது நிறைவேற்றப்படவுள்ள பிரேரணை மிகக் கடுமையானதாக
அமையவுள்ளது. அந்தப் பிரேரணையில் என்ன விடயங்களை உள்ளடக்குவது என்பது
தொடர்பில் இலங்கை வந்துள்ள அமெரிக்க உயர் மட்டக் குழு தமிழ்த் தேசியக்
கூட்டமைப்புடன் ஆராய்ந்துள்ளது. இலங்கை வந்துள்ள அமெரிக்க உயர்மட்டக்
குழுவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான சந்திப்பு நேற்று
பிற்பகல் கொழும்பில் நடைபெற்றது. இந்தச் சந்திப்பில் கலந்துகொண்ட
அமெரிக்கப் பிரதிநிதிகள் மார்ச் மாதம் ஜெனிவாவில் இலங்கை மீது மற்றுமொரு
பிரேரணையைக் கொண்டுவருவது உறுதியென்று கூட்டமைப்பிடம் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் அந்தப் பிரேரணையில் என்ன விடயங்களை உள்ளடக்கலாம் என்பது
தொடர்பில் கூட்டமைப்பின் கருத்துக்களை கேட்டறிந்துள்ளனர். ஆசிய பசுபிக்
பிராந்திய பாதுகாப்பு அலுவலகத்தின் தெற்கு மற்றும் தெற்காசியப் பாதுகாப்பு
விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலாளர் விக்ரம் ஜே சிங்,
அமெரிக்க துணை இராஜாங்கச் செயலாளர்களான ஜேம்ஸ் மூர், ஜேம்ஸிம் பர்மன்
ஆகியோரை உள்ளடக்கிய அமெரிக்க உயர்மட்டக் குழு நேற்று சனிக்கிழமை இலங்கை
வந்தது. நேற்று வருகை தந்த உடனேயே முதலில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினரை
இந்தக் குழுவினர் சந்தித்துக் கலந்துரையாடினர். இந்தச் சந்திப்பு
கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தில் நேற்று பிற்பகல் இடம்பெற்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் தலைவர் இரா.சம்பந்தன்,
நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சி.சிறீதரன் ஆகியோர் பங்கு
கொண்டனர். ஒருமணி நேரத்துக்கும் மேலாக இடம்பெற்ற இந்தச் சந்திப்புத்
தொடர்பில் கருத்து வெளியிட்ட கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்
எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்ததாவது... கடந்த வருடம் மார்ச் மாதம் இடம்பெற்ற
மனித உரிமைகள் சபையின் கூட்டத் தொடரில் இலங்கை அரசுக்கு எதிராக
அமெரிக்காவால் கொண்டுவரப்பட்ட பிரேரணை வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
நிறைவேற்றப்பட்ட மேற்படி பிரேரணையை நடைமுறைப்படுத்துவதில் இலங்கை அரசு
பின்னடிப்பதை ஆதாரங்களுடன் அமெரிக்க அதிகாரிகளுடன்
சுட்டிக்காட்டியிருந்தோம். மேலும் தமிழர் தாயகப் பகுதிகளான வடக்கு,
கிழக்கில் இலங்கை அரசால் திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்டு வருகின்ற
சிங்களக் குடியேற்றங்கள், இராணுவ விஸ்தரிப்பு, இராணுவத்தால்
யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்ட அராஜக நடவடிக்கைகள் என்பன தொடர்பிலும்
விளக்கமாக எடுத்துரைத்தோம். இலங்கை அரசால் நியமிக்கப்பட்ட குழுவினால்
வெளியிடப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளையே நடைமுறைப்
படுத்தப்படுவதில்லை. பொறுப்புக் கூறுதலுக்கான முயற்சியை இலங்கை இன்னமும்
உருவாக்கவில்லை.
இலங்கை அரசால் கடந்த வருடம் தயாரிக்கப்பட்ட
செயற்றிட்டத்தில் இலங்கை இராணுவமும் பங்குவகித்தது. ஆனால் தற்போது தங்களால்
குறித்த செயற்றிட்டத்துக்கு அமைவாக செயற்பட முடியாது என்று அவர்கள்
தெரிவித்துள்ளமை தொடர்பிலும் அமெரிக்க குழுவுக்கு சுட்டிக் காட்டினோம்.
மார்ச் மாதம் ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராகப் பிரேரணை கொண்டுவருவதில்
அமெரிக்கா உறுதியாகவுள்ளது. இருப்பினும் கடந்த ஆண்டு கொண்டுவந்து
நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தையே இலங்கை அரசு உதாசீனம் செய்து வருவதால்,
புதிய தீர்மானம் எப்படிக் கொண்டுவரப்பட வேண்டும் என்பது தொடர்பில் எமது
கருத்துக்களை அமெரிக்கப் பிரதிநிதிகள் உள்வாங்கிக்கொண்டனர் என்றார்.

mmani- பண்பாளர்
- Posts : 8037
Join date : 19/12/2010
Similar topics
» இலங்கைக்கு எதிராக இம்முறை நிறைவேற்றப்படும் தீர்மானம் இலங்கைக்கு கடுமையான செய்தியைச் சொல்வதாக இருக்கவேண்டும்.
» இலங்கைக்கு எதிரான கடுமையான வெளியுறவு கொள்கை தொடருகிறது- ராஜபக்சே
» இலங்கைக்கு எதிராக 63 பக்க அறிக்கை!
» இலங்கைக்கு எதிராக இங்கிலாந்து பொருளாதார தடை கொண்டுவருமா?
» இலங்கைக்கு எதிராக தவறான பிரசாரம்: ராஜபக்ஷே ஆவேசம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum