Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 10:18 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:07 am
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
நீர்ப்பறவை-சினிமா விமர்சனம்
Page 1 of 1
நீர்ப்பறவை-சினிமா விமர்சனம்
நீர்ப்பறவை.. கடலோரத்தில் இருந்தாலும் என்னேரமும் 'தண்ணி'யிலேயே மிதக்கும் அருளப்பசாமி கடைசியில் கடல் தண்ணியில் மிதக்கும் கதை.
அடிப்படையில் இது காதல் கதைதான். குடியே கதியாய் கிடப்பவன் காதலில்
விழுந்து காதலியின் சொல்லால் வாழ்க்கையில் முன்னேறத் துடிக்கும் நமது
வழக்கமான ஹீரோக்கள் பல வருடமாய் வாழும் வாழ்க்கைதான் இந்தக் கதையின்
ஆதியும். ஆனால் அதை எடுத்த விதமும், அதன் பின்புலமும்தான் அழகு.
மீனவ சமூக வாழ்க்கையை மிக அருகில் இருந்து பார்க்கும் உணர்வை கொடுப்பதே
படத்தின் மிகப்பெரிய வெற்றி. எடுத்த கதையில் எந்த குழப்பமும் இல்லாமல் ஒரு
தெளிந்த நீரோடையாகவே செல்கிறது படம்.
விஷ்ணுவுக்கு ஒரு நல்ல நடிகனென்ற புரொமோசனை வாங்கித்தரும் படம் இது.
குடிகாரனாய் வாழ்ந்திருக்கிறார். (டெய்லி சரக்கடிச்சிடுத்தான் செட்டுக்கே
வந்திருப்பாரோ எனத் தோனுகிறது).
சுனைனாவுக்கு அருமையான காதாபாத்திரம் எஸ்தராய். ஏமாளியாய் காசு
குடுக்கும்போதும் சரி, சாத்தானே போ என விளக்குமாற்றால் விரட்டும் போதும்
சரி. நடிக்க நல்ல வாய்ப்பு. நன்றாகவே பொருந்தியிருக்கிறார்.
ரகுநந்தன் இசையும் வைரமுத்துவும் வரிகளும் பின்னிப்பிணைந்து நெஞ்சில்
நிற்கின்றன. கடல்புற அழகை அள்ளித்தருகிறது பாலசுப்ரமணியெம்-மின் கேமரா.
ஷாட்டுகளின் பிரம்மாண்டம் அசத்துகிறது.
படகு கட்டும் சுலைமான் பாயாய் சமுத்திரக்கனி.. கம்பீரமாய் கணகச்சிதமாய்,
மீனவ சமூகத்தின் இயலாமை நிலையை கேள்விகளால் அடிக்கடி
ஞாபகப்படுத்திக்கொண்டு. கட்டிமுடிக்கப்பட்ட படகு கடலுக்குள் முதன்முதயால்
செல்லும் போது இவர் ஃபாத்தியா ஓதி, பாதிரியார் ஜெபம் பண்ணி,
சுற்றியிருப்பவர்கள் தேங்காய் உடைத்து என சமூகத்தில்
பிண்ணிப்பிணைந்திருக்கும் மத பழக்கவழக்கங்களின் கதம்பம்... அழகான காட்சி.
நந்திதா தாஸின் எஸ்தரின் பின்பாதி கதாபாத்திரம் என்னேரமும் சோகமே
உருவாக, நாடகத்தன்மை அதிகமாகவே இருக்கிறது. அத்துடன் அதன் அவசியமும்
கதைக்கு அந்த அளவுக்கு முக்கியத்துவமாய் இல்லாததும், அவரைப் போன்ற ஒரு
பர்பார்மென்ஸுக்கு பெயர்பெற்ற நடிகைக்கு தீனி போடும் அளவுக்கு ஆழம்
இல்லாமல் போனதும் குறைதான்.
விஷ்ணுவின் அம்மாவாய் சரண்யா. கை நடுங்குதும்மா காசு குடு எனக் கேட்கும்
மகனிடம் காசைக் குடுத்து 'கண்டதை குடிக்காம நல்ல சரக்கா வாங்கி குடிடா'
என்கிறார். 'ஆடி போயி ஆணி போயி' அம்மாவை நினைவு படுத்தினாலும் நன்றாகவே
செய்திருக்கிறார் தன் பணியை. தந்தையாய் 'பூ ராம்' அசத்தல். பார்வையாலும்
தன் இறுக்கமான முகத்தாலுமே விளையாடுகிறார். இவரையெல்லாம் இன்னமும் சரியாகவே
உபயோகப்படுத்தவில்லை தமிழ் சினிமா.
கடைசியில் அருளப்பசாமி கடலில் குண்டடிபட்டு கிடப்பதைப் பார்க்கும் போது
நமக்கு அவ்வளவு கோபம் வரவில்லையென்பது படத்தின் குறையென்பதைவிட நம்
உணர்வுகள் அந்த அளவுக்கு சக தமிழ் மீனவனின் சாவுச்செய்திகளைக் கண்டு அதன்
கையாலாகத்தனத்தில் மழுங்கிப்போய்விட்டதையே உறுதிப்படுத்துகிறது. ஆனாலும்
அரசாங்கத்தைப் பார்த்து இத்தனை ஆயிரக்கணக்கான மீனவர்களின் சாவுக்கு என்ன
பண்ணியிருக்கீங்க என்ற கேள்வியை இன்னமும் அழுத்தமான காட்சியமைப்பால்
நெஞ்சில் அறையும் படி அமைக்காமல் விட்டுவிட்டாரே என சீனு ராமசாமி மீது
கொஞ்சம் கோபமும் பாக்கியிருக்கிறது.
கதாநாயகியின் கை தன் தலையில் பட்டவுடன் காதலில் விழுவதும், உடனே பாடலும்
போன்ற அபத்தங்களும் உண்டு. மேலும் படத்தில் பொதுவாய் எல்லா பாத்திரங்களும்
நல்லவர்கள் அல்லது கெட்டவர்களாய் இருந்து நல்லவர்களாய் மாறுபவர்கள் என்ற
எளிமையான பார்முலாவில் அமைக்கப்பட்டிருப்பதால் இன்னமும் ஒரு ஆழமான, ஒரு
க்ளாசிக் படங்கள் தரும், அனுபவத்தை தரத் தவறுகிறது.
ஆனாலும் நீர்பறவை தரும் கடலும் கடல் சார்ந்த காதல் கதை அனுபவம் அவசியம் அனுபவிக்க வேண்டிய ஒன்று தான்.
-ஜெ.
நன்றி :http://soundcameraaction.com/movie-reviews/item/737-neerparavai-tamil-movie-review
ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» ஆள் - சினிமா விமர்சனம்
» மூடர்கூடம் சினிமா விமர்சனம்
» அரண்மனை - சினிமா விமர்சனம்
» dandupalya - சினிமா விமர்சனம் 36 +
» Aurangzeb - சினிமா விமர்சனம்
» மூடர்கூடம் சினிமா விமர்சனம்
» அரண்மனை - சினிமா விமர்சனம்
» dandupalya - சினிமா விமர்சனம் 36 +
» Aurangzeb - சினிமா விமர்சனம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum