Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
கோவைக்குழந்தைகள் கொலை வழக்கு ;இன்று தீர்ப்பு : பரபரப்பான எதிர்பார்ப்பு
Page 1 of 1

தமிழக மக்களை உலுக்கிய, கோவை பள்ளிக்குழந்தைகள் இருவர் கொலை வழக்கில்,
கோர்ட்டில் இன்று தீர்ப்பு கூறப்படுகிறது.கோவை, ரங்கேகவுடர் வீதி, சித்தி
விநாயகர் கோவில் வீதி அருகிலுள்ள காத்தான் செட்டி சந்தில் வசிக்கும் ஜவுளி
வியாபாரி ரஞ்சித் ஜெயின் - சங்கீதா தம்பதியின், குழந்தைகள் முஸ்கான்,10,
ரித்திக்,7. இக்குழந்தைகள், "சுகுணா ரிப்ஸ்' பள்ளியில் படித்தனர்.
இக்குழந்தைகளை கால் டாக்சியில் கடத்தி, பெற்றோரிடம் பணம் பறிக்க நினைத்த
டிரைவர் மோகனகிருஷ்ணன், 37, கடந்த 2010, அக்.29ம்தேதி சதித்திட்டத்தை
அரங்கேற்றினான்.
காலையில் பள்ளிக்குச் செல்ல, கால் டாக்சி வேனில்
ஏறிய குழந்தைகளை கடத்தியபின், பொள்ளாச்சி அங்கலக்குறிச்சியை சேர்ந்த நண்பன்
மனோரகனை சதித்திட்டத்திற்கு கூட்டு சேர்த்தான்.அதன்பின், அவர்கள் சிறுமியை
பாலியல் சித்ரவதை செய்தனர். மயக்க நிலையில் துடித்த முஸ்கான், ரித்திக்
இருவரையும், உடுமலை அருகே தீபாலபட்டியில் பி.ஏ.பி., வாய்க்காலில் தள்ளி,
கொலை செய்தனர்.இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மோகனகிருஷ்ணன், மனோகரன்
ஆகியோரை, 2010, நவ, 9ம் தேதி, வழக்கு விசாரணைக்காக "கஸ்டடி' எடுத்த
போலீசார், சம்பவங்களை விவரிப்பதற்காக கொண்டு சென்றனர். போலீஸ் பிடியில்
இருந்து தப்பிக்க முயன்ற, மோகனகிருஷ்ணனை போலீசார், செட்டிபாளையம் ரோட்டில்
"என்கவுன்டர்' மூலம் சுட்டுக்கொன்றனர்.பெரும் பரபரப்பை ஏற்படுத்திய
இவ்வழக்கின் விசாரணை கோவை மகளிர் நீதிமன்றத்தில் நடக்கிறது. வழக்கில்
முக்கிய சாட்சிகள் விசாரணை முடிந்து, தீர்ப்பு வழங்கும் இறுதி கட்டத்தை
எட்டியுள்ளது.இவ்வழக்கில் அரசு தரப்பில் ஆஜரான, சிறப்பு அரசு தரப்பு
வக்கீல் சங்கரநாராயணன், நீதிமன்றத்தில் வாதிட்ட போது, "பணத்திற்காக கடத்திய
குழந்தைகளிடம், காம உணர்வை வெளிப்படுத்தி மிருகத்தனமாக நடந்து கொண்ட,
கொடூரனுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும்.
குழந்தைகளிடம் பாலியல் வன்முறை, கொடூர எண்ணங்களை வெளிப்படுத்துதல்,
கள்ளங்கபடமற்ற பிஞ்சுகளை, ஈவு இரக்கமின்றி கொலை செய்தவர்களுக்கு
உயர்நீதிமன்றங்கள், உச்ச நீதிமன்றம் அதிகபட்ச தண்டனை வழங்கியுள்ளது'
என்றார். மேலும், அதிகபட்ச தண்டனை விதிக்கும் வேண்டுகோளுக்கு
வலுச்சேர்க்கும் விதமாக, பல்வேறு வழக்குகளின் 29 தீர்ப்பு நகல்களை,
நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.கோவை மகளிர் நீதிமன்றத்தில், வழக்கை
விசாரித்த நீதிபதி சுப்பிரமணியம், 29ம் தேதி (இன்று) தீர்ப்பு கூறப்படும்
என்று அறிவித்தார். கடந்த 2010, அக்., 29ம் தேதி, குழந்தைகள் கடத்தல்
சம்பவம் நடந்தது. இன்று 29ம் தேதியோடு இரண்டு ஆண்டுகள் நிறைவு நாளில்,
வழக்கின் தீர்ப்பும் கூறப்படுகிறது. இவ்வழக்கின் தீர்ப்பை கோவை மக்கள்
மட்டுமின்றி, தமிழக மக்களும் எதிர்பார்த்துள் ளனர்.
குலை நடுங்க செய்த கொலை:
பள்ளிக்குழந்தைகள் கொலை வழக்கில், 2010, டிச., 10ல், கோர்ட்டில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதன் விபரம்:
ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரை சேர்ந்த ரஞ்சித் ஜெயின் குடும்பத்தார், 50
ஆண்டுக்கு முன் கோவையில், ரங்கேகவுடர் வீதி, சித்தி விநாயகர் கோவில்
அருகில், காத்தான் செட்டி சந்தில் குடியேறினர். ரஞ்சித் ஜெயின், சங்கீதா
தம்பதியின் குழந்தைகள் முஸ்கான், 10, ரித்திக், 7. கோவை காந்திபுரம் அருகே
"சுகுணா ரிப்ஸ்' பள்ளியில் படித்தனர். பள்ளிக்கு "கால் டாக்சி'யில் செல்வது
வழக்கம்.
வசதியான வீட்டை சேர்ந்த குழந்தைகளை கடத்தி, பணம் பறிக்க, பொள் ளாச்சி
அங்கலக்குறிச்சியை சேர்ந்த, பெரியநாயக்கன்பாளையத்தில் வசித்த
மோகனகிருஷ்ணன், 37, சதித்திட்டம் தீட்டினான். அதற்காக, "சூரியா கேப்ஸ்'
கால்டாக்சி டிரைவர் மேட்டூரை சேர்ந்த அன்புவிடம், குடும்பத்துடன்
கோவிலுக்கு செல்ல வாகனம் வேண்டும் என்று "ஓசி' கேட்டுள்ளார். அதே
கால்டாக்சி நிறுவனத்தில் மோகனகிருஷ்ணன் ஏற்கனவே பணியாற்றியவர் என்பதால்,
ஆம்னி வேனை (டிஎன் 37 பிஎப் 2796) நம்பி கொடுத்தார்.
சம்பவத்தன்று, காலை 7:50 மணிக்கு, சித்திவிநாயகர் கோவில் அருகில்
காத்திருந்த குழந்தைகளை, கடத்த மோகனகிருஷ்ணன் சென்றார். பழைய டிரைவர்
என்பதால், குழந்தைகளும் விபரீதம் தெரியாமல் அந்த வேனில் ஏறினர்.வழக்கமாக
இக்குழந்தைகளை அழைத்துச் செல்லும் பள்ளி டிரிப் கால்டாக்சி டிரைவர்
கார்த்திகேயன், காலை 8:00 மணிக்கு அங்கு சென்றபோது, குழந்தைகள் இல்லாததால்,
ரஞ்சித்ஜெயின் மொபைல்போனுக்கு தொடர்பு கொண்டு விசாரித்தார். பெற்றோர்
பள்ளிக்கு போன் செய்து விசாரித்தபோது, குழந்தைகள் வரவில்லை என்றனர்.
அப்போதுதான் குழந்தைகள் கடத்தப்பட்டது தெரிந்தது.
குழந்தைகளை பழைய வேன் டிரைவர் மோகனகிருஷ்ணன் அழைத்து சென்றதை,
சித்திவிநாயகர் கோவில் பூஜாரி சுந்தர்ராஜ், ஜெயின் கோவிலுக்கு சென்ற
குழந்தைகளின் பாட்டி கமலாபாய் ஆகியோர் பார்த்துள்ளனர். இந்த தகவலால் உஷாரான
போலீசார், மோகனகிருஷ்ணனின் மொபைல்போன் எண்ணை பெற்று, "நெட்ஒர்க்' பகுதிகளை
கண்காணித்தனர். உடுமலை தளி பகுதிகளில் போன் உபயோகத்தில் இருந்தது
தெரிந்தது.இறுதியாக, ஆம்னி வேன் "ஓசி' கொடுத்த டிரைவர் அன்புவின்
உதவியுடன், மோகனகிருஷ்ணன் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரித்தபோது,
நடந்த சம்பவத்தை விவரித்தார்.
குழந்தைகளை கடத்திக்கொண்டு, பொள்ளாச்சி அங்கலக்குறிச்சி சென்று, அவரது
நண்பர் மனோகரனை வேனில் ஏற்றியுள்ளார். அங்குள்ள கோபால்சாமிமலையில்
குழந்தைகளை கட்டி வைத்து பெற்றோரை மிரட்ட அழைத்து சென்றனர். மலையேர
முடியாமல் குழந்தைகள் அழுததால், பணம் பறிக்கும் எண்ணம்
நிறைவேறவில்லை.அங்கிருந்து பூவான்தோட்டம் என்ற பகுதிக்கு சென்றதும்,
மோகனகிருஷ்ணன், காமவெறியுடன் சிறுமியை சீண்டினான். சிறுவனை, மனோகரன்
தோட்டத்தினுள் அழைத்து சென்றதும்,மோகனகிருஷ்ணன் சிறுமியை நாசம் செய்தான்.
அங்கு வந்த மனோகரனும், சிறுமியை விட்டு வைக்கவில்லை.
குழந்தைகள் இருவரையும் தீர்த்துக்கட்ட திட்டமிட்டு, நா.மூ.சுங்கத்தில் உள்ள
வின்னர் பேக்கரில், பால் வாங்கியுள்ளனர். அதில், சாணிப்பவுடரை கலந்து
சிறுமிக்கு கொடுத்தனர். அதை குடிக்க முடியாமல், வேனினுள் வாந்தி
எடுத்தாள்.உடுமலை ரோட்டில் தீபாலபட்டி அருகிலுள்ள பி.ஏ.பி., வாய்கால்
மேட்டில், வேனை நிறுத்தி, குழந்தைகள் கொண்டு வந்திருந்த சப்பாத்தியை
சாப்பிட வைத்தனர். வாய்க்கால் தண்ணீரில் கைகழுவி வருமாறு குழந்தைகளை
அனுப்பி பின்தொடர்ந்தனர்.நடப்பதையும், நடக்கப்போவதையும் அறியாமல்,
வாய்க்காலில் குனிந்து கை கழுவிய குழந்தைகளை தண்ணீருக்குள் தள்ளினர்.
வாய்க்காலில் அடித்து செல்லப்பட்ட குழந்தைகள் மூச்சுச்திணறல் ஏற்பட்டு
இறந்தனர்.பி.ஏ.பி., வாய்க்காலில் பல்லடம் வாவிபாளையம் அருகே முஸ்கானின்
சடலமும், பொள்ளாச்சி - உடுமலை ரோட்டில் கெடிமேடு பாலம் ரித்திக்கின்
சடலமும் மீட்கப்பட்டது.இந்த வழக்கில் பணத்திற்காக குழந்தைகளை கடத்தினர்.
சபலத்தால் சிறுமியை கூட்டு சேர்ந்து நாசம் செய்தனர். சம்பவத்தை
மறைப்பதற்காக குழந்தைகளை வாய்க்காலில் தள்ளி கொன்றனர்.
இவ்வாறு, 45 பக்கமுள்ள குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவையில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கின் குற்றப்பத்திரிக்கை, கடந்த 2010, டிச., 10ல் தாக்கல் செய்யப்பட்டது.
47 சாட்சிகள்: 69 ஆவணங்கள்:
*முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் 2011, ஜூன் 23ல் வழக்கு விசாரணை
துவங்கியது. வழக்கில் ஏழு சாட்சிகள் விசாரிக்கப்பட்ட நிலையில், கோவை மகளிர்
கோர்ட்டிற்கு வழக்கு மாற்றப்பட்டது.
*வழக்கில் 121 பேர் அரசு தரப்பு சாட்சிகளாக சேர்க்கப்பட்டனர். அதில்,
மொத்தம் 47 சாட்சிகள் அரசு தரப்பில் விசாரிக்கப்பட்டு, 69 ஆவணங்களும், 38
சான்று பொருட்களும் ஒப்படைக்கப்பட்டன.
*எதிரி தரப்பில் ஐந்து சாட்சிகள் விசாரிக்கப்பட்டு, இரண்டு ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டன.
*வழக்கின் விசாரணை அதிகாரி, போலீஸ் இன்ஸ்பெக்டர் கனகசபாபதி, தொடர்ந்து 3 நாட்கள் சாட்சியளித்தார்.
* கடந்த செப். 4ம் தேதி, நீதிபதி சுப்பிரமணியம், மனோகரனிடம் வழக்கு தொடர்பாக 155 கேள்விகள் கேட்டு, பதிலை பதிவு செய்தார்.
* கடந்த 15ம் தேதி, சிறப்பு அரசு தரப்பு வக்கீல் சங்கரநாராயணனும், கடந்த 22ம் தேதி, எதிரி தரப்பில் வக்கீல்
ஷர்மிளாவும் வாதம் செய்தனர்.

mmani- பண்பாளர்
- Posts : 8037
Join date : 19/12/2010
mmani- பண்பாளர்
- Posts : 8037
Join date : 19/12/2010
Similar topics
» நீக்கப்பட்ட 11 எம்.எல்.ஏ.,க்கள் வழக்கு: இன்று தீர்ப்பு
» ராமதாசுக்கு எதிரான வழக்கு: கோர்ட் பரபரப்பு தீர்ப்பு
» தமிழக அமைச்சர்கள் பதவி ஏற்பை எதிர்த்து வழக்கு: இன்று மாலை தீர்ப்பு
» அரசு கேபிள் "டிவி' இன்று துவக்கம்: மக்கள் எதிர்பார்ப்பு அதிகரிப்பு
» மைக்கேல் ஜாக்சனின் கொலை செய்தது அவரது குடும்ப டாக்டர்தான். அமெரிக்க கோர்ட் தீர்ப்பு.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum