Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
மறக்க முடியாத மனிதர்கள் -2 சுதந்திரப் பொராட்ட தியாகி வீரபாண்டி ஆத்தா.
3 posters
Page 1 of 1

என் நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம்,உய்வில்லை செய் நன்றி கொன்ற மகற்கு.
சுந்தர ஆத்தா என்று அழைக்கப்பட்ட, தியாகி அன்னை சுந்தராம்பாள், சுதந்திரப் போராட்ட வீர தமிழிச்சி.
வீரபாண்டி ஆத்தா,என்றும்,சுந்தர ஆத்தா என்றும் திருப்பூர் வாசிகளால் அன்புடன் அழைக்கப்பட்ட சுந்தராம்பாளை இன்று நினைவு கூறி, நன்றி செலுத்துகிறேன்.மூன்று முறை சிறை சென்ற,அவர் தனது 97 வது வயதில், 20.08.2007 ல் மறைந்து விட்டார்.
என்ன நோக்கத்திற்காக நாங்கள் போராடி சுதந்திரம் வாங்கினோமோ, அந்த நோக்கம் இன்னும் நிறைவேறவே இல்லை. வறுமை, ஏழ்மை, வன்முறை, பெண்ணடிமைத்தனம் வேலையில்லா திண்டாட்டம் இன்னும் மாறவேயில்லை. பெண்களின் நிலையிலும் பெரிசாக எந்த முன்னேற்றமும் இல்லை. ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கினாலும் கூட, பெண்களால் இன்னும் தனிப்பட்ட ஒரு முடிவை தன்னிச்சையாக எடுக்க முடிவதில்லை. கணவன் அல்லது தந்தையை சார்ந்துதான் இருக்க வேண்டிய நிலைமை இன்னமும் மாறவில்லை.
சுதந்திரம் கிடைத்த பிறகு அமைந்த புதிய அரசின் அமைச்சரவையில் இடம் பெற வாய்ப்பு வந்தும்,தேர்தலில் நில்லுங்கள், உங்களுக்கு அமைச்சர் பதவி கொடுக்கிறோம் என்ற போதும், சுதந்திரத்திற்குப் பிறகு இருந்த காங்கிரஸ்,அதன் நோக்கத்திலிருந்து நிறைய மாறியதையும், வசதி படைத்தவர்கள் மட்டுமே பெரிய பதவிகளில் இருப்பதையும் சுட்டிக் காட்டி அனைத்தையும் வெறுத்து ஒதுங்கிக் கொண்ட அன்னை சுந்தராம்பாள், கொடி காத்த குமரன் பிறந்த மண்ணில் பிறந்து, சுதந்திரப் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட தியாகி.
கோடீஸ்வரக் குடும்பத்தைச் சேர்ந்தவராயினும்,ஆச்சிரம வாழ்க்கையையும்,கடைசி வரை கதர் ஆடையையும் தனக்காக கொண்டிருந்தார்.தந்தையைப் போலவே சுதந்திரப் போரில் ஈடுபாடு கொண்ட சுந்தராம்பாள்,இறப்பதற்கு முன் பகிர்ந்து கொண்டவை,அவரின் இளமைப் பருவம் எவ்வளவு உய்ர்ந்த வாழ்க்கை என்பதை சுட்டிக் காட்டியது.
காந்தியடிகள், திருப்பூர் நொய்யல் ஆற்றங்கரையில் நடந்த கூட்டத்திற்காக வந்திருந்தார். நானும் என்னுடைய பெரியம்மா பெண் முத்துலட்சுமியும் அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளப் போயிருந்தோம். அப்போது எனக்குப் பதினைந்து வயதிருக்கும். பட்டுப்புடவையும் கழுத்து நிறைய கிலோ கணக்கில் நகைகளையும் அணிந்து கொண்டு போயிருந்தோம்.காந்தியோ எளிமையே உருவாக இருந்தார்.அந்தக் கூட்டத்தில்,ஹரிஜன சேவா இயக்கத்திற்கு நிதி வசூலிக்கப்பட்ட போது,ஈர்க்கப்பட்ட நாங்கள் இருவரும், உடனே அணிந்திருந்த அத்தனை நகைகளையும் கழற்றி ஹரிஜன சேவா இயக்கத்துக்கு கொடுத்து விட்டோம்.
நகைகளைப் பெற்றுக் கொண்ட காந்தியடிகள், இது மட்டும் போதாது... பட்டுப் புடவைகளை விட்டு இனி நீங்கள் கதராடையை அணிய வேண்டும்’ என்று அன்று அவர் சொன்னபடியே இன்று வரை கதராடையை மட்டுமே அணிந்து வருகிறேன்,என்று கூறினார்.
அன்று முதல்,அதாவது 15 வது வயதில் இருந்து போராட்டங்களில் ஈடுபட்டாலும், நம்ப பொண்ணுகளுக்கு வரும் சமூகப் போராட்டம் அவரையும் விடவில்லை. 17 வயதில் திருமணம்,தொடர்ந்து இரண்டு குழந்தைகள், குடும்ப வாழ்க்கை என்று தொடர்ந்த போதும் போராட்டங்களை விட மறுத்த அவருக்கு சோதனை தொடங்கவும் செய்தது. சுதந்திரப் போராட்டங்களை விரும்பாத கணவர்,.............................
நான் காந்தி வழியில் தீவிர மதுவிலக்குப் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தேன். என் கணவரோ அப்போதுதான் ஊரைச் சுற்றியிருந்த அத்தனை கள்ளுக்கடைகளையும் ஏலத்தில் எடுத்திருந்தார்...என்ன நடந்தது? அவரையும் இரண்டு குழந்தைகளையும் அம்போ என விட்டு விட்டு வேறொரு பெண்ணை கைப்பிடித்துக் கொண்டார்.அதனால் வாழ்வில்,விரக்தி என்றாலும்,போராட்டங்களில் பங்கு கொள்ள இருந்த தடை விலகியதை தொடர்ந்து தீவிரமாக ஈடுபடத் தொடங்கினார்.ஒரு முறை சத்தியாக்கிரக போராட்டத்தில் ஏழு மாத சிறை கிடைத்த போது,அவருடைய கைக்குழந்தையுடன் சிறைக்கு செல்ல வேண்டி இருந்தது.சிறைக்குப் போயிருந்த காலத்தில் அவருக்கு துணை இருந்த குடும்பத்தினருக்கு வசதியான வீடு,வசதி இருந்தும் கூட சாதாரண வாழ்க்கையையும்,ஆச்சிரம வாழ்க்கையையும் வாழ்ந்து காட்டினார். வினோபாவே கொடுத்த ஆலோசனைப்படி ஆதரவற்ற பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் ஆதரவு லகொடுக்கும் ஒரு இல்லத்தை ஆரம்பித்து கடைசி வரை அங்கேயே வாழ்ந்து வந்தார்.(கொஞ்சம் நம்ம சாமியார்களுக்கும்,அரசியல்வாதிகளுக்கும் சொல்லுங்கப்பா)
சுதந்திரத்திற்குப் பின்னரும்,கோயம்புத்தூரைச் சுற்றியிருந்த நூற்றாலைகளில் பணிபுரிந்த பெண்களுக்காகவும், விவசாயிகளின் மின் கட்டணத்தை உயர்த்தியபோது நடுரோட்டில் மாடுகளை அவிழ்த்து விட்டு மறியல் போராட்டமும் நடத்தி தன்னை நல்ல போராட்டங்களில் இணைத்துக் கொண்டார்.
இந்திய சுதந்திரப் போராட்டங்களில் தமிழனின் பங்கு அளப்பரியது. ஆயினும் அவன் மறக்கப்பட்டு மறைக்கப்பட்டான்.
சக்தி.

sakthy- நிர்வாக குழுவினர்
- Posts : 1938
Join date : 26/09/2010
Re: மறக்க முடியாத மனிதர்கள் -2 சுதந்திரப் பொராட்ட தியாகி வீரபாண்டி ஆத்தா.
[You must be registered and logged in to see this image.]
மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Re: மறக்க முடியாத மனிதர்கள் -2 சுதந்திரப் பொராட்ட தியாகி வீரபாண்டி ஆத்தா.
[You must be registered and logged in to see this image.]
ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» மறக்க முடியாத “கறுப்பு ஜூலை”-காணொளிகள்
» மறக்க முடியாத கொடுமை,திரும்பிப் பார்க்கிறேன்.
» உலகை உலுக்கிய மறக்க முடியாத புகைப்படங்கள்
» மறக்க முடியாத உறவு வேண்டுமா? இதோ சில டிப்ஸ்...
» மறைக்கப்பட்ட வரலாறு – சுதந்திரப் போராட்டத் தியாகி “அஸ்பாக்குல்லாஹ் கான் பகத் சிங் போலவே தூக்கு மேடை ஏரியா மாவீரன் !!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum