TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


எனது இன்றைய 25 வது பதிவில், கர்நாடகஇசை எனப்படும் தமிழிசை பற்றி,என் தமிழுக்கு..

2 posters

Go down

எனது இன்றைய 25 வது பதிவில், கர்நாடகஇசை எனப்படும் தமிழிசை பற்றி,என் தமிழுக்கு.. Empty எனது இன்றைய 25 வது பதிவில், கர்நாடகஇசை எனப்படும் தமிழிசை பற்றி,என் தமிழுக்கு..

Post by sakthy Thu Oct 11, 2012 1:13 am

எனது இன்றைய 25 வது பதிவில், கர்நாடகஇசை எனப்படும் தமிழிசை பற்றி................

எவ்வளவு எழுதினோம் என்பதைவிட என்ன எழுதினோம் என்பது தான் முக்கியம்.அது போல் என்ன பதில் சொன்னோம் என்பதை விட என்ன கேள்வி கேட்டோம் என்பதுதான் முக்கியம்,என்று நான் சொல்லலைங்க, பிரான்ஸ் நாட்டு எழுத்தாளர் வால்டையர்,Voltaire, சொல்கிறார்.இது என் இருபத்தைந்தாம் ஆண்டில் எழுதப்படும் முதல் பதிவாகும்.

ஒருவரின் சாதனை என்பது தனக்காக இல்லாது இனத்திற்காய்,மொழிக்காய்,சமூகத்திற்காய் இருக்க வேண்டும் என்பது என் கருத்தாகும். அந்த வகையில் பார்த்தால்,நான் என் வாழ்வின் 24 ஆண்டுகளை வீணாக்கி விட்டு, இருபத்தந்தாம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறேன். எதையும் சாதிக்கவில்லையே என்ற கவலையுடனும்,அதே சமயம் இந்த இருபத்தைந்தாம் ஆண்டிலிருந்தாவது எதையாவது சாதிக்க வேண்டும் என்ற இலக்கோடு பயணிக்கும் என்னை நானே வாழ்த்தி தொடருகிறேன்.என்னை நானே வாழ்த்திக் கொள்வதில் ஒரு சுகம் உண்டு.

மேலே போவதற்கு முதல்,எல்லோருக்கும் நல்லவனாய் கடவுளாலும் இருக்க முடியாது.நான் எழுத்தாளனோ, புலவனோ,கவிஞனோ,அல்லது அறிஞனோ இல்லை.படித்த உண்மைகளை ஆதாரங்களுடன் எழுதுகிறேன். அவ்வளவு தான்.
என்னைப் பாதித்தவற்றில் முக்கியமானது, பழந்தமிழ் நாட்டின் முத்தமிழும்,அவை சிதைக்கபட்ட பரிதாபமும் தான்.

திரைக்கதை,வசனம்,இயக்கம்,இசை............................என அனைத்தும் நானே என்று சொல்லும் இன்றைய சினிமாத் துறை போல்,ஆரியர்களும் தமிழில் இருந்து திருடி,அனைத்தும் தங்களது என்று சொல்லிக் கொண்ட பலவற்றுள் நம் இசையும் நடனமும் கூட சேருகிறது. ஆரியர் வருகைக்குப் பின் மெல்ல தமிழில் அவர்கள் ஆதிக்கம் செலுத்த முற்பட்ட போது, அதற்கு அவர்களின் வர்ணம், இன்றைய சினிமாக்களில் வர்ணம் ஆதிக்கம் செலுத்துவது போல்,அன்றைய அரசாட்சியிலும் செலுத்த ஆரம்பித்தது. இதன் காரணமாக தமிழனின் கலை, இலக்கியம், மருத்துவம்,அறிவியல் போன்றவை களவாடப்பட்டு, மீள்பெயரிடப்பட்டு ஆரிய பட்டணத்திற்கு சென்றது.இதற்கு அன்றைய அரசினரும் நேரடியாகவோ மறைமுகமாகவோ காரணமாகி விட்டனர்.இன்றைய சினிமா,அரசாட்சி அனைத்திலும் இந்த வர்ணம் ஆட்சி செய்வதைப் பார்க்கும் போது, அன்று நடந்ததும் உண்மை என நம்ப முடிகிறது. இந்த வர்ண பேதத்தினால் நாம் தமிழர்கள் இழந்தது ஏராளம். அதில் ஒன்றான இசை பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

எனது பள்ளி நாட்கள் நினைவிற்கு வருகிறது.கர்நாடக இசையை கற்றுக் கொடுத்த ஆசிரியை, சாஸ்திரிய சங்கீதம் என்றே சொல்லித் தந்திருந்தது நினைவிற்கு வருகிறது.அன்று எனக்கு அதன் அர்த்தம் புரியவில்லை. நான் கற்றுக் கொண்டு பாடிய முதல் இராகம் சகானாவில்.............சித்தம் இரங்காதையா..................; மற்றும் சினிமா பாடல்களில் பார்த்தேன் ரசித்தேன்.........;எங்கோ பிறந்தவராம்.............; அழகே சுகமா..............,;இந்த வீணைக்கு தெரியாது.........; போன்ற சகானா இராகப் பாடல்களை கேட்கக் கேட்க இனிக்கும். கேட்டுப் பாருங்கள் சகானாவின் அமைதி புரியும். இப்படியான பல இராகங்களை எல்லாம் தந்தது தமிழ் என்பதை எண்ணும் போது மெய் சிலிர்க்கிறது.

இன்று பரத நாட்டியம் என சொல்லப்படும் நடனத்தை, அன்று இடைக்கால சோழர் காலத்தில் திருச்சதிர் என்று வழங்கினர். இந்த திரு, மாயமாய் மறைக்கப்பட, சதுர் என்று கொச்சைப் படுத்தப்பட்டு திசை மாறிப் போய் விட்டது. அது போல் நம் இசையும் கர்நாடக இசையாகி, அதற்கும் ஆரிய சாயம் பூசி, இன்றைய ஆரிய பக்தர்கள், சாஸ்திரிய சங்கீதம் என்று கூறி நம் ஒப்பற்ற இசையை, ஆரியர்களுக்கு தாரை வார்த்துக் கொடுத்து விட்டனர். நம் இலக்கியங்கள்,கலை போன்றவற்றை திருடி தமது இசையாக்கியதை, இன்றும் அதற்கு தோள் கொடுக்கப்படும் போது, முடிந்தவரை கிடைக்கும் இடமெல்லாம் குரல் கொடுக்க வேண்டியது தானே. நம் தமிழ் இயல் இசை கலை நிகழ்ச்சிகள் நடைபெறும் போது, நாம் சென்று அதற்கு ஆதரவும் தர வேண்டும்.தமிழ் நாட்டில் உள்ள எத்தனை பேர் வருடம் தோறும் ஆகஸ்ட்டில் நடந்து வரும் ஈரோடு புத்தகக் கண்காட்சிக்கு போய் ஆதரவு கொடுத்தீர்கள்? 0% ?

பழந்தமிழர்கள், இயற்கையில் இருந்து வரும் ஒலிகளை கேட்டு,அந்த இனிய இசைக்கு ஏழிசையை உருவாக்கினர். தொடர்ந்து அதைப் பண்படுத்தி 103 பண்களை(இராகங்களை) வகுத்தனர். அவர்கள் இசைத்த வாத்தியங்களுக்கு ஏற்பவும்,வாய்ப்பாடலுக்கு ஏற்பவும் பாணர்,கூத்தர்,யாழ்ப்பாணர் என பெயர் இட்டனர். இப்படி வளர்ந்த இசை பின்னர் கர்நாடக இசை எனப் பெயர் பெற்றது. ஆனால் நெய்வேலி சந்தானகோபாலன் போன்ற சிலர்,இல்லை அது சாமவேதத்தில் இருந்து வந்த சாஸ்திரிய சங்கீதம் என கூறி வருவது வருத்தத்தை தருகிறது.இதே போல் தான் பரத நாட்டியத்தையும், பரத முனிவரால் அரங்கேற்றம் செய்யப்பட்டது எனக் கூறி வருவது,ஒரு கொள்ளைக்காரன் தான் கொள்ளை அடித்த பணத்தை தன்னுடைய பணம் என்று கூறுவது போன்ற செயலே ஆகும்.

பழந்தமிழர் இசையையும் கூத்தையும் ஒன்று சேர்த்து, இலக்கண நூல்களையும் உருவாக்கி இருந்தனர். கூத்தை நாடகம், நாட்டியம்,ஆடல் என கூறி வந்தனர்.சங்ககால நூல்கள் பல அழிந்தாலும் கூட,இயல் இசை நாடகம் மூன்றிற்கும் இலக்கணம் கொடுத்த பல நூல்கள் வரிசையில் இசைக்கு இலக்கணம் தந்த அகத்தியம்,சிகண்டி முனிவரின் இசை நுணுக்க நூல்,யாமளேந்தரின் இந்திர காவியம், தேவவிருடி, நாரதனின் பஞ்சபாரதீயம், பெருங்குருகு எனப்படும் முதுகுருகு,அறிவனாரின் பஞ்சமரபு,முது நாரை எனப்படும் பெரு நாரை, தாளவகையோத்து என்பவை சில இசை இலக்கண நூல்களாகும்.ஆனால் இவை காலத்தால், சேக்ஸ்பியரின் பல நாடகங்கள் அழிந்தது போல் பல அழிந்து பட்டன.இருந்தும் தொல்காப்பியத்தில் இசை பற்றி குறிபிடப்பட்டுள்ளன.

தெய்வ முணாவே மாமரம் புட்பறை
செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ
அவ்வகை பிறவும் கருவென மொழிப …...................18.

ஐவகைப் பொழுதையும்,ஐவகை நிலங்களையும் உருவாக்கிய தமிழன் அவை ஒவ்வொன்றிற்கும் வேறுபட்ட இசையையும் உருவாக்கினான்.பண்ணிற்கு(இராகம்) உரிய இசை ஏழு,குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் இவற்றை ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள என்னும் உயிர் நெட்டெழுத்து ஒலிகளால் இவற்றை இசைத்தனர்.இந்த ஏழு இசையை சுரம் என்றனர். அவற்றின் பெயர்களும் மாறின. எப்படி? ஸட்ஜம், ரிஷபம், காந்தாரம், மத்தியமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம் முறையே அதன் முதலெழுத்துக்களாலான ,ஸ, ரி, க, ம, ப, த, நி என்றாயிற்று.

ஆரோசை,அமரோசை என்பதை ஆரோகண அவரோகணம் என்றனர்.
பஞ்சமரபு நூலின் ஆசிரியர் அறிவனாரின்,பாடல் வரிகள் இதோ.........

பண்ணோர் பதினேழாம்
பண்ணியல் பத்தேழாம்
எண்ணுந் திறமிரண்டும் பத்தென்ப - நண்ணிய
நாலாந் திறத்திற மோர் நான்கு
முளப்படப்
பாலாய பண் நூற்று மூன்று.

இதைவிட, நற்றிணை,ஐங்குறுநூறு,குறிஞ்சிப்பாட்டு, போன்றவற்றில் இவை பற்றிய குறிப்புக்களை காணலாம்.
வாய்ப்பாட்டில் பாணர்கள் சிறந்தவர்கள்.இவர்களின் துணைவியரும் பாடுவர். அவர்களை பாடினி என அழைத்தனர்.இந்தப் பாடினி பற்றி, இனிய குரல்வளம் கொண்டவள். மென்மையான அழகுள்ளவள். மயில் போன்ற சாயல் கொண்டவள். அறிவுக்கூர்மை மிக்கவள். என முடத்தாமக்கண்ணியார் என்ற புலவர் பொருநராற்றுப்படை யில் குறிப்பிட்டுள்ளார்.படிக்கப் படிக்க இனிக்கும்.கொஞ்சம் படித்துப் பார்க்கலாமே.

இசைபாடுபவர் குரலிசையில் வல்லவராக இருப்பதுடன், யாழ், குழல் ஆகிய பண்ணிசைக் கருவிகளை இசைக்கத் தெரிந்திருக்கவேண்டும். தாளக் கருவிகளின் தாள நுட்பங்கள் தெரிந்திருக்க வேண்டும், என்ற விதிகளையும் அறிவித்திருந்தனர். இவர்களே ஆசிரியன்,முதல்வன் ஆவர்.இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் ஆகிய சொற்களைச் சொல்லும் பொருளும் சிதையாமல் பாடத் தெரியவேண்டும். பாடற் சுவையை உணர்ந்து இனிமையாக இசைக்க வேண்டும்.

தாளக் கருவிகளை இசைப்பவருக்கு,இவை பற்றி சிலப்பதிகாரம் கூறுகிறது.தாள இலக்கணம் கூறும் எல்லா நுட்ப அறிவும் பெற்றிருக்க வேண்டும். இயல், இசை, நாடகம் எனப்படும் முத்தமிழும் தெரிந்திருப்பதுடன், இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் ஆகியவற்றின் சொற் பிரயோகங்கள் தெரிந்திருக்க வேண்டும்.பண்களின் இலக்கணம் தெரியவேண்டும். பண், பண்ணியல், திறம், திறத்திறம் ஆகியவற்றின் இசை இயல்புகளுக்கு ஏற்பத் தாளக் கருவியைக் கையாளத் தெரிய வேண்டும்.பாடல், ஆடல் நிகழ்ச்சிகளின் குறை ஏதும் ஏற்படின், குறை தெரியாமல் தன் கலைத் திறனால் நடத்திச் செல்லும் திறமை வேண்டும்.இந்த தகுதிகள் இருந்தால், தண்ணுமை முதல்வன் என அழைக்கப்படுவர்.

இப்படி இசைக்கு இலக்கணம் வகுத்திருக்கையில், தொலைக்காட்சி இசை நிகழ்ச்சிகளில்(super singer...) வரும் நடுவர்களை எண்ணிப் பார்க்கும் போது, நம் தமிழ் இந்த நிலைக்குப் போய் விட்டதே என்று வேதனையாக இருக்கிறது.
இவ்வளவு இலக்கண முறைகளையும் கொண்டு இயல், இசை,நாட்டியத்தை வளர்த்த தமிழனின் சொத்துக்களை திருடி தங்கள் இசை,தங்கள் நாட்டியம் என்று கூறினால் கோபம் வருமா வராதா? இதுமட்டுமா,போதையனாரின் கணிதம்,இப்படி எத்தனை போயிற்று. ஆனால் எங்களுக்கு தந்தது, திணித்தது எல்லாம் வேதங்களும் இராமாயண இதிகாசங்களும் தான்.

என்ன செய்யப் போகிறீர்கள்? மீண்டும் அடி பணியப் போகிறீர்களா, இல்லை துணிந்து நின்று செயல்படப் போகிறீர்களா? இல்லையேல் மீண்டும் இராமா இராமா என்று கூக்கிரலிடப் போகிறீர்களா? தமிழா இனியும் ஏமாறப் போகிறாயா? நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட தமிழனை நினைந்து விட்டால்.....................
என்ன தவம் செய்தனை தமிழா.....................காப்பி இராகத்தில்..........பாடலாமா?
ஆதாரம்..............நன்றியுடன்............கர்ணாமிர்தசாகரம்,யாழ்நூல்,தென்னிந்திய இசை,தமிழிசை இயல்,பழந்தமிழ் இசை, பேராசிரியர் ஞானாம்பிகை.

சக்தி.
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» அன்னை தெரேசாவை பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. இந்த பதிவில் அவருடைய வாழ்க்கை வரலாற்றை கூறியுள்ளேன்.
» எனது காலத்திலேயே அழிந்து போன எனது படங்கள் By பாலு மகேந்திரா!
» கருணாநிதியும், ஜெயலலிதாவும் தமிழகத்தில் இருப்பதால் நமக்கு இருக்கும் ஒரே நன்மை, இருவரும் மாறி மாறி, ஒருவரை ஒருவர் அம்பலப்படுத்திக் கொள்கிறார்கள் என்பதே.. இன்றைய கருணாநிதியின் கடிதத்தில், ஜெயலலிதாவைப் பற்றி ...
» மோடிஜி-பாஜக-தமிழிசை அக்கா விடம் சில கேள்விகள்.
» தமிழகத்தில் '355' அஸ்திரத்தை கையில் எடுக்கிறதா பாஜக அரசு?- 'மக்களை காக்க எதுவும் நடக்கலாம்' என்கிறார் தமிழிசை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum