Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
ஞாபகம் வருதே...முல்லைப் பெரியாறும்,ராஜிவ் கொலை வழக்கும்.
2 posters
Page 1 of 1

சமீபத்தில் வந்த செய்தி.நீங்கள் படித்தது தான்................
+++மதுரை, சமயநல்லூர் பகுதியைச் சேர்ந்த மூன்று இல்லத்தரசிகளசமீபத்தில் தற்கொலைக்கு முயற்சித்திருக்கிறார்கள். அதன் பின்புலத்தை ஆராய்ந்தபோது...ஊருக்கே அதிர்ச்சி. அந்த ஏரியாவில் டீக்கடை நடத்தி வரும் ஒருவனும், எலக்ரீஷியனாக இருக்கும் அவனுடை சகோதரனும் சேர்ந்து, அங்குள்ள வீடுகளில் பிளம்பிங் வேலை, எலக்ட்ரீஷியன் வேலை, கேபிள்போன்றவற்றுக்காக சென்று வருவது வழக்கம்.
இதைப் பயன்படுத்திக் கொண்டு பல வீடுகளின் பாத்ரூம்களில் மினியேச்சர் கேமராக்களை பொருத்தி, குளியல் காட்சிகளை வீடியோ பதிவு செய்து, அதேபகுதியைச் சேர்ந்த பல இளைஞர்களுக்கும் இந்த இருவரும் விற்றிருக்கிறார்கள். இது, சம்பந்தபட்ட பெண்களின் கவனத்துக்கு வந்துவிட, சிலர் தற்கொலை முயற்சியில் குதித்து, காப்பாற்றப்பட்டுள்ளனர். பலர், வீட்டைவிட்டு வெளியில் வராமல் மனஉளைச்சலோடு முடங்கிக் கிடக்கிறார்கள்.
கயவர்கள் இருவர் உட்பட மேலும் சில இளைஞர்களை கைது செய்திருக்கிறது போலீஸ்.கிராமமோ... நகரமோ... கேபிள், தண்ணீர் கேன், கேஸ் சிலிண்டர், எலக்ட்ரீஷியன் என எந்த வேலையாக இருந்தாலும்... சம்பந்தபட்ட நபர்களை வீட்டுக்குள் அனுமதிக்கும்போது வேலை முடியும் வரை அவர்களை கண்காணித்தபடி இருப்பதே பாதுகாப்பது. முக்கியமாக வீட்டில் தனியாக இருக்கும்போது இப்படிப்பட்ட நபர்களை அனுமதிக்காமல்.. . குடும்பத்தினரில் சிலரும் இருக்கும்போது அனுமதிப்பதே சாலச்சிறந்தது.
இதில் தங்கள் சகோதரிகளோ தாயோ தவறுதலாக அல்லது வேறொருவரால் பொருத்தப்பட்ட கமெராக்களில் அகப்பட்டால்,பார்ப்பார்களா? கொதித்து எழுவார்களா?
நன்கு தெரிந்தவர்... அறிமுகமானவர் என்றால்கூட, பலமடங்கு எச்சரிக்கை அவசியமே.
+++உலகின் மிகச் சிறந்த பல்கலைக்கழகங்களின் பட்டியலை The world University Ranking நிறுவனம் வெளியிட்டுள்ளது. நான் படித்த பல்கலைக்கழகம் உட்பட, வெளியிடப்படுள்ள பட்டியலில் இந்தியாவைத் தேடினேன் தேடினேன்......... காணவில்லை.இறுதியில், 301 -350 ற்கும் இடைப்பட்ட பட்டியலில், Indian Institute of Technology Bombay ஒன்று தான் இடம்பெற்றுள்ளது.மற்றவை அதற்கும் மேலே 400 வரை எவையும் சிக்கவில்லை.............. பணத்தை இலக்கு வைக்கும் இவை தரத்தை பார்ப்பதில்லையே...............
அரசு டாஸ்மார்கிற்கு கொடுக்கும் முன்னுரிமையை கல்விக்கு கொடுப்பது,பாடத்திட்டங்களை சிறந்தவர்கள் மூலம் சீரமைப்பது, மதிப்பெண்களை நோக்கியும் பணத்தையும் நோக்கியும் செல்லாது கல்வியின் அவசியத்தை உணர்ந்து செயல்படுத்துவது,ஆசிரியர்,மாணவர் புரிந்துணர்வு,இணையம் சமூகத் தளம்,சினிமா,கைத்தொலைபேசி-கமெராக்கள்,கிரிக்கெட் போன்றவற்றால் திசைமாறிப் போபவர்களை ஆய்வு செய்து முறைப்படுத்துவது, பெற்றோர்களின் கவனத்தை உணர்வு பூர்வமாக மாணவர்கள்,கல்வி விசயத்தில் ஈடுபட செய்வது போன்றவற்றை அரசும்,கல்வி நிறுவனங்களும் ஆய்வு செய்து சீரமைப்பதன் மூலமே மாற்றி நல்லதோர் சமுதாயத்தை ஏற்படுத்த முடியும்.
+++முல்லைப்பெரியாறு விவகாரத்தில் நியமிக்கப்பட்ட உயர் நீதிமன்றின் குழுவில் இருந்தவர்களில்,கேரளாவை சேர்ந்த கே.டி.தாமஸ் என்பவரும் ஒருவர். அவர் கூறிய கருத்தினால்,தமிழகத்திற்கு சார்பாக பேசுவதாக கூறி கேரளத்தினர் அவர் மீது கடுமையான விமர்சனங்களை வைத்தனர் என்பது நீங்கள் அறிந்ததே. இந்த தோமஸ் என்பவர், ராஜீவ் கொலை வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகளில் ஒருவரும், தலைமை நீதிபதியும்கூட. அவருடன் நீதிபதிகள் வாத்வா, முகம்மது குயாத்ரி ஆகிய இருவரும் சேர்ந்து அந்த வழக்கை விசாரித்தனர். இதில் நீதிபதி தாமஸ், மூவருக்கு தூக்கு தண்டனை தருவதை எதிர்த்தவர் என்பதும், நளினிக்கு தூக்குத் தண்டனை வேண்டாம் என்று தீர்ப்பளித்தவரும் இவரே.
அது பற்றி அவர் பின்னர் ஒருமுறை கருத்து சொன்ன போது,ராஜீவ் கொலை வழக்கை விசாரித்த அமர்வில் தலைமை தாங்கும் கெட்ட வாய்ப்பு எனக்குக் கிட்டியது...... என்று துவங்கி,..................
வரலாற்றிலே 2000 ஆண்டுகளுக்கு முன் ஜெருசலம் நகரில் நிகழ்ந்த சம்பவத்தை நினைவுபடுத்துகிறேன். குற்றம்சாட்டப்பட்டவர் நிரபராதி என்று தெரிந்தும், நீதிபதி, அவருக்கு மரண தண்டனை விதித்தார். காரணம், அங்கே கூடியிருந்த கூட்டம், குற்றம்சாட்டப்பட்டவர் மீது பகையும், வெறுப்பும் கொண்டிருந்தது! அந்த நீதிபதியின் பெயரை நான் சொல்லத் தேவையில்லை. உங்களுக்கே தெரியும், அந்த நீதிபதி – பிலாத்தோஸ்! மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதி – ஏசு......என்று முடித்திருந்தார்.
இதன் விளக்கம் என்ன தெரியுமா? மற்ற இருவரினதும் மட்டுமல்ல,வேறு சிலரின் கட்டாயத்தின் பேரால் தான் இந்த தீர்ப்பைக் கொடுக்க வேண்டி வந்தது என்பது தான்.
+++நொய்யல் ஆற்றின் பகுதியில் உள்ள கொடுமணல்,ஈரோடு மாவட்டம், 2500 ஆண்டுகளுக்கு முந்தியதாக கருதப்பட்டாலும்,தொல்பொருள் ஆய்வுப் பகுதியினரால் கவனிப்பரற்றுக் கிடக்கிறது.சங்ககால நகர்களான கொற்கை,பூம்புகார்,கரூர்,உறையூர் நகரங்களை விட அதிக ஆய்வுகளை நடத்தக் கூடிய கொடுமணல் கரப்பா நாகரீகங்களுடன் தொடர்புடையது,( Dr. K Rajan, Department of Ancient History and Archaeology, Tamil University, Thanjuvar. ) தவிர திருநெல்வேலி,விழுப்புறம்,தர்மபுரி மாவட்ட கல்வெட்டுக்களும் இன்னமும் முழு ஆய்வுக்கு உட்படுத்தப்படவில்லை. இந்த நிலையில் கடலுக்கு அடியில் காணப்படும் பூம்புகாரும்,துவாரகையும் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியுமா?
+++7 ம் அறிவு ஆஸ்காருக்கு அனுப்ப முடிவு? போதிதர்மன் தமிழனே இல்லை என்று சொல்கிறது ஒரு சில ஆய்வுகள்.தமிழனின் புகழை உயர்த்த செல்லுகிறது என்கிறார்கள் வரலாறு தெரியாத சிலர். புத்த மதத்தை பரப்ப சென்ற போதி தர்மன் தன் பிறந்த நாட்டை, மக்களை மறந்தது ஏன், என்கிறார்கள் சில இன உணர்வாளர்கள். அன்றைய வரலாறு சொல்கிறது, அன்று,போதி தர்மன் நாட்டை விட்டு சென்ற போது, அவன் வாழ்ந்த நாட்டில் பட்டினி,அம்மை போன்ற நோய்கள் மக்களை துன்புறுத்தியது.ஆனாலும் புத்தமத உணர்வும்,அதைப் பரப்ப வேண்டியும் சீனாவுக்கு செல்கிறான் போதி.அம்மா பிச்சை எடுக்கிறாள், கண்டு கொள்ளாத பிள்ளை அன்னதானம் செய்கிறான்,கடைசியில் அம்மாவிற்கு அன்னையர் தினம் கொண்டாடுகிறான்.தன் மக்களை மறந்து சீனாவில் உள்ள மக்களுக்கு தொண்டாற்ற சென்றவன் ஒருவன் தமிழனா?
+++சென்னை இராஜ்ஜியத்தை தமிழ் நாடு என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என விருது நகரில் சங்கரலிங்கனார் 1957 ல் உண்ணாவிரதம் இருந்தார்.அவரை 1957 அக்டொபர் 13 ல் 78 நாள் உண்ணாவிரதத்திற்குப் பின் காந்தீய வாதிகள்,உண்ணாவிரதத்தை கண்டு கொள்ளாது,சாகடித்து விட்டார்கள். நிறைவேறாமலே அன்று அவர் தன்னை மாய்த்துக் கொண்டார்.செந்தூரன் போன்றவர்களின் அகிம்சைப் போராட்டங்கள் உதாசீனப்படுத்தப்படுவது ஒன்றும் தமிழ் நாட்டில் புதியன அல்ல.
சக்தி.

sakthy- நிர்வாக குழுவினர்
- Posts : 1938
Join date : 26/09/2010
ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» ராஜிவ் காந்தி கொலை – புலிகள் சிக்கியது எப்படி?
» ராஜிவ் கொலை. மறுவிசாரணை குறித்து பதிலளிக்க உத்தரவு!
» பிரபாகரன் மீதான ராஜிவ் கொலை வழக்கு தள்ளுபடி
» எம்.கே.நாராயணன் மீது "திடுக்' ராஜிவ் கொலை வீடியோவை மறைத்தாரா?
» “ராஜிவ் கொலை கேஸ் தடயங்களில், ‘பொட்டு’ வந்தது எப்படி?”

Permissions in this forum:
You cannot reply to topics in this forum