Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)by வாகரைமைந்தன் Today at 6:21 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
“ராஜிவ் கொலை கேஸ் தடயங்களில், ‘பொட்டு’ வந்தது எப்படி?”
Page 1 of 1
“ராஜிவ் கொலை கேஸ் தடயங்களில், ‘பொட்டு’ வந்தது எப்படி?”
“ராஜிவ் கொலை கேஸ் தடயங்களில், ‘பொட்டு’ வந்தது எப்படி?”
------------------------------------------------------------------------------------------------
விறுவிறுப்பு.கொம், Sunday 28 August 2011, 03:58 ஜிஎம்டி
------------------------------------------------------------------------------------------------
சென்னை, இந்தியா:
“ராஜிவ் காந்தி கொலைவழக்கில், புலனாய்வாளர்கள் செய்த குளறுபடிகள்தான்,
தற்போது மூன்றுபேரை தூக்குத் தண்டனைவரை கொண்டு வந்துள்ளது” என்று மீண்டும்
வலியுறுத்தியுள்ளார் திருச்சி வேலுசாமி. நிஜமான குற்றவாளிகளை விட்டுவிட்டு
இவர்களைத் தண்டிக்கிறார்கள் என்பது இவரது கோணம்.
ராஜிவ் காந்தி கொலை
விவகாரத்தில், நீண்டகாலமாகக் குரல்கொடுத்துவரும் வேலுசாமி, ராஜிவ் கொலை
பற்றிய விசாரணை கமிஷனால் 7 தடவைகள் விசாரிக்கப்பட்டவர். ராஜீவ் கொலை வழக்கை
விசாரித்த ஜெயின் கமிஷன் மேற்கொண்ட சில நடவடிக்கைகளுக்கு, இவரின்
வாக்குமூலமே காரணமாக அமைந்திருந்த அளவுக்கு, இவர் முக்கியமானவர்.
ராஜிவ்
கொலை விசாரணைகளின்போது, இவர் வழங்கிய சில உறுதியான வாக்குமூலங்கள்,
உண்மையில் ராஜிவ் கொலை வழக்கையே திசை திருப்பியிருக்க முடியும். ஆனால் ‘ஏதோ
காரணங்களுக்காக’ அப்படி நடைபெறவில்லை. அதற்குக் காரணம், இவரது
வாக்குமூலங்களில் பல வி.வி.ஐ.பி.களின் பெயர்கள் இருந்தன என்பதாக
இருக்கலாம்.
ராஜிவ் கொலை விசாரணைகளின்போது, புலனாய்வாளர்கள் கேஸை
தாம் விரும்பிய ஒரு திசையின் செலுத்திச் சென்றார்கள் என்று கூறும்,
திருச்சி வேலுசாமி, “பேரறிவாளன், திராவிடர் கழகத்தில் இருந்தவர். ராஜிவ்
காந்தியைக் கொன்ற பெல்ட் பாம் தயாரிக்க பேட்டரி வாங்கிக் கொடுத்ததாக
பேரறிவாளன் கைதுக்குக் காரணம் சொல்கிறார்கள் அதிகாரிகள். பெங்களூரு
ரெங்கநாத் என்பவர் கொடுத்த வாக்குமூலத்தில், “அதே பெல்ட் பாமை யாகத்தில்
வைத்து சந்திரா சாமி ஆசீர்வதித்தார்” என்று கூறியிருக்கிறார்.
ஆனால்,
புலனாய்வாளர்கள் சந்திரா சாமியை இதுபற்றி விசாரித்ததில்லை. ராஜிவ் காந்தி
கொல்லப்பட்ட நேரத்தில் சந்திரா சாமி எங்கே இருந்தார் என்ற கேள்விக்கு,
இன்றுவரை யாரிடமும் பதில் இல்லை.
தற்போது தூக்குத் தண்டனை பெற்றுள்ள
சாந்தன், ஆள்மாறாட்டத்தில் சிக்கிக் கொண்டுள்ளார். ‘திருச்சி சாந்தன்’
என்பவர் மீதான குற்றச்சாட்டுகளை, இந்த சாந்தன்மீது சுமத்தி, இவரைச் சிக்க
வைத்துள்ளார்கள். நளினியின் கணவர் என்ற ஒரே காரணத்தால், முருகன்
அகப்பட்டுக் கொண்டார்” என்கிறார்.
ராஜிவ்
காந்தி கொலைவழக்கில், புலனாய்வாளர்கள் செய்த குளறுபடிகள் பற்றி வேலுசாமி
குறிப்பிடும் மற்றொரு விஷயம், ராஜிவ் காந்தியைக் கொலை செய்ததாக
விசாரணைகளில் குறிப்பிடப்பட்ட மனித வெடிகுண்டு தனு இறந்த நிலையில்
எடுக்கப்பட்ட போட்டோவில், அவரது நெற்றியில் இருந்த பொட்டு பற்றியது.
இதுபற்றி
வேலுசாமி, “ராஜீவ் கொலை வழக்கில் குற்றவாளிகளை அடையாளம் காட்டியதே சில
போட்டோக்கள்தான். இந்த போட்டோக்கள், ராஜிவ் காந்தி கொலை செய்யப்படுவதற்கு
செய்யப்படுவதற்கு 10 நிமிடங்களுக்கு முன், ஹரிபாபு என்ற போட்டோகிராபரால்
எடுக்கப்பட்டவை. ராஜிவ் கொல்லப்பட்ட குண்டு வெடிப்பின்போது இந்த
ஹரிபாபுவும் கொல்லப்பட்டார். (அதுபற்றிப் பார்க்க இங்கே கிளிக் செய்யவும்)
இந்த
போட்டோக்களை வைத்துதான், சிவராசன், தனு, மற்றும் கொலை நடைபெற்ற நேரத்தில்
அங்கிருந்த மற்றையவர்களின் முகங்கள் அடையாளம் காணப்பட்டன. அந்த
போட்டோக்களில், தனுவின் நெற்றியில் பொட்டு கிடையாது. ஆனால், குண்டு
வெடிப்பின்பின் இறந்த நிலையில் காணப்பட்ட தனுவின் நெற்றியில் குங்குமப்
பொட்டு இருந்தது. அது எப்படி?
‘ராஜீவ் காந்தியைக் கொலை செய்தவர் ஒரு
இந்து, தமிழ்ப் பெண்’ என்று வெளியே காட்டுவதற்காகவே நடந்த சதிதான் அது.
இப்படித்தான் புலனாய்வு செய்வதா? பிணத்தின் நெற்றியில் பொட்டு வைத்த
இவர்கள், இன்னும் என்னவெல்லாம் செய்து இருப்பார்களோ?” என்று கூறுகின்றார்.
இந்த
கொலை விவகாரத்தில், அப்போதைய சட்ட அமைச்சர் சுப்பிரமணியன் சுவாமிக்கும்
பங்கு இருப்பதாகக் கூறுகிறார் வேலுசாமி. “மே 21-ம் தேதி இரவு ராஜீவ் கொலை
நடந்தது. அடுத்த நாள் காலை 9 மணிக்குத்தான் விசாரணை தொடங்கியது. ஆனால்,
விசாரணை தொடங்கும் முன்னரே, ‘ராஜீவைக் கொன்றது புலிகள்தான்’ என்று
சுப்பிரமணியன் சுவாமி அறிவித்தது எப்படி?” என்றும் கேட்கிறார் வேலுசாமி.
திருச்சி
வேலுசாமியின் கேள்விகள் ஒருபுறம் இருக்க, உண்மையில் ராஜிவ் காந்தி கொலை
விசாரணை இத்தனை வருடமாகியும், இன்னமும் முடிவடையவில்லை. பல கேள்விகளுக்கு
இன்னமும் தெளிவான பதில் கிடையாது. நாளைக்கே இந்த விசாரணையைத் தொடரும்
முடிவு எடுக்கப்பட்டால், என்னாகும்? தற்போது தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட
மூவரில் ஒருவரது சாட்சியம் அப்போது தேவைப்பட்டால் என்னாகும்?
இந்த
மூவரின் தூக்குத் தண்டனைகளும் செப்டெம்பர் 9ம் தேதி நிறைவேற்றப்பட்டு
விட்டால், பிற்காலத்தில் ஒருவேளை அவர்களது சாட்சியம் தேவைப்பட்டால்,
அவர்களை எப்படிக் கொண்டுவர முடியும்?
•
ராஜிவ் கொலை வழக்கில் மூவருக்கு தூக்கு தண்டனை கொடுப்பது நியாயமற்றது
என்று நீங்கள் கருதினால், இந்தக் கட்டுரையை இயன்றவரை உங்கள் நண்பர்களுக்கு
அனுப்பி வையுங்கள். இது பற்றிய ஒரு தெளிவு, பலரைச் சென்றடைய உதவுங்கள்.
நன்றி: விறுவிறுப்பு.காம்
http://viruvirupu.com/2011/08/28/8094/

(எமது
குறிப்பு: வேலுசாமி குறிப்பிடும் ‘திருச்சி சாந்தன்’ என்பவர், 1980களின்
மத்தியில் விடுதலைப்புலிகள் வட்டாரங்களில் ‘குண்டு சாந்தன்’ என்று
அறியப்பட்டவர். ஸ்ரீலங்காவில் யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்த காலத்தில்,
அரசியல் வேலைகள் செய்வதற்காக தமிழகம் அனுப்பப்பட்டவர். விடுதலைப் புலிகள்
இயக்கத்தின் அரசியல் பிரிவைச் சேர்ந்த நபர்.
ராஜிவ் கொலை
புலனாய்வு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, ஸ்பெஷல் டீம் ஒன்று இவரை தமிழகம்
முழுவதும் வலை வீசித் தேடியது நிஜம். அவர்களது கையில் சிக்குமுன் இவர்
இறந்து போனதும் நிஜம். இந்த சம்பவங்கள் பல பெரிய மர்ம முடிச்சுக்களை
உடையவை. விறுவிறுப்பு.காம் தொடராக வெளியிடும் ‘ராஜிவ் காந்தி கொலையில்,
புலிகள் சிக்கிய கதை’ தொடரில் இனி வரவுள்ள சில அத்தியாயங்களில், திருச்சி
சாந்தன் அல்லது குண்டு சாந்தன் பற்றிய பல விபரங்களைக் காணலாம்)
ராஜிவ்
காந்தி கொலைவழக்கில், புலனாய்வாளர்கள் செய்த குளறுபடிகள் பற்றி வேலுசாமி
குறிப்பிடும் மற்றொரு விஷயம், ராஜிவ் காந்தியைக் கொலை செய்ததாக
விசாரணைகளில் குறிப்பிடப்பட்ட மனித வெடிகுண்டு தனு இறந்த நிலையில்
எடுக்கப்பட்ட போட்டோவில், அவரது நெற்றியில் இருந்த பொட்டு பற்றியது.
இதுபற்றி
வேலுசாமி, “ராஜீவ் கொலை வழக்கில் குற்றவாளிகளை அடையாளம் காட்டியதே சில
போட்டோக்கள்தான். இந்த போட்டோக்கள், ராஜிவ் காந்தி கொலை செய்யப்படுவதற்கு
செய்யப்படுவதற்கு 10 நிமிடங்களுக்கு முன், ஹரிபாபு என்ற போட்டோகிராபரால்
எடுக்கப்பட்டவை. ராஜிவ் கொல்லப்பட்ட குண்டு வெடிப்பின்போது இந்த
ஹரிபாபுவும் கொல்லப்பட்டார். (அதுபற்றிப் பார்க்க இங்கே கிளிக் செய்யவும்)
இந்த
போட்டோக்களை வைத்துதான், சிவராசன், தனு, மற்றும் கொலை நடைபெற்ற நேரத்தில்
அங்கிருந்த மற்றையவர்களின் முகங்கள் அடையாளம் காணப்பட்டன. அந்த
போட்டோக்களில், தனுவின் நெற்றியில் பொட்டு கிடையாது. ஆனால், குண்டு
வெடிப்பின்பின் இறந்த நிலையில் காணப்பட்ட தனுவின் நெற்றியில் குங்குமப்
பொட்டு இருந்தது. அது எப்படி?
‘ராஜீவ் காந்தியைக் கொலை செய்தவர் ஒரு
இந்து, தமிழ்ப் பெண்’ என்று வெளியே காட்டுவதற்காகவே நடந்த சதிதான் அது.
இப்படித்தான் புலனாய்வு செய்வதா? பிணத்தின் நெற்றியில் பொட்டு வைத்த
இவர்கள், இன்னும் என்னவெல்லாம் செய்து இருப்பார்களோ?” என்று கூறுகின்றார்.
(மற்றொரு
குறிப்பு: எமது தொடரில் இடம்பெறுவதாக நாம் குறிப்பிட்ட குண்டு சாந்தன்,
புலிகளின் அரசியல் பிரிவு நபர். ஆனால், ராஜிவ் கொலையில் சம்மந்தப்பட்டது
புலிகளின் உளவுப் பிரிவு என்கிறது கார்த்திகேயன் தலைமையிலான புலனாய்வு
குழுவின் அறிக்கை. பிரதான குற்றவாளிகள் பட்டியலில், புலிகளின் உளவுப்
பிரிவின் தலைவர் பொட்டு அம்மானை புலனாய்வுக் குழு இணைத்ததும் அதை
வைத்துத்தான்.
குண்டு சாந்தனும், ‘ராஜிவ் காந்தி கொலையில்,
புலிகள் சிக்கிய கதை’ அத்தியாயம் 4ல் குறிப்பிடப்பட்ட ஹரிபாபுவும்,
அரசியல் பிரிவோடு சம்மந்தப்பட்ட ஆட்கள்.
ராஜிவ் கொலை திட்டமிடல்
தமிழகத்தில் புலிகளின் உளவுப் பிரிவால் செய்யப்படும் விஷயம், தமிழகத்தில்
அப்போது இயங்கிவந்த புலிகளின் அரசியல் பிரிவுக்குகூட தெரியாது என்பதும்,
கார்த்திகேயனின் புலனாய்வுக் குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இப்படியிருக்கையில், கொலை நடப்பதற்குமுன், திட்டமிடல் பற்றியே தெரியாது
என்று குறிப்பிடப்பட்ட குண்டு சாந்தனுடன் ஆள்மாறாட்டத்தில் கிளாஷ் ஆன
மற்றைய சாந்தனுக்கு தற்போது, தூக்கு தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது!)
இந்த
கொலை விவகாரத்தில், அப்போதைய சட்ட அமைச்சர் சுப்பிரமணியன் சுவாமிக்கும்
பங்கு இருப்பதாகக் கூறுகிறார் வேலுசாமி. “மே 21-ம் தேதி இரவு ராஜீவ் கொலை
நடந்தது. அடுத்த நாள் காலை 9 மணிக்குத்தான் விசாரணை தொடங்கியது. ஆனால்,
விசாரணை தொடங்கும் முன்னரே, ‘ராஜீவைக் கொன்றது புலிகள்தான்’ என்று
சுப்பிரமணியன் சுவாமி அறிவித்தது எப்படி?” என்றும் கேட்கிறார் வேலுசாமி.
திருச்சி
வேலுசாமியின் கேள்விகள் ஒருபுறம் இருக்க, உண்மையில் ராஜிவ் காந்தி கொலை
விசாரணை இத்தனை வருடமாகியும், இன்னமும் முடிவடையவில்லை. பல கேள்விகளுக்கு
இன்னமும் தெளிவான பதில் கிடையாது. நாளைக்கே இந்த விசாரணையைத் தொடரும்
முடிவு எடுக்கப்பட்டால், என்னாகும்? தற்போது தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட
மூவரில் ஒருவரது சாட்சியம் அப்போது தேவைப்பட்டால் என்னாகும்?
இந்த
மூவரின் தூக்குத் தண்டனைகளும் செப்டெம்பர் 9ம் தேதி நிறைவேற்றப்பட்டு
விட்டால், பிற்காலத்தில் ஒருவேளை அவர்களது சாட்சியம் தேவைப்பட்டால்,
அவர்களை எப்படிக் கொண்டுவர முடியும்?
•
ராஜிவ் கொலை வழக்கில் மூவருக்கு தூக்கு தண்டனை கொடுப்பது நியாயமற்றது
என்று நீங்கள் கருதினால், இந்தக் கட்டுரையை இயன்றவரை உங்கள் நண்பர்களுக்கு
அனுப்பி வையுங்கள். இது பற்றிய ஒரு தெளிவு, பலரைச் சென்றடைய உதவுங்கள்.
நன்றி: விறுவிறுப்பு.காம்
http://viruvirupu.com/2011/08/28/8094/
அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
Similar topics
» ராஜிவ் காந்தி கொலை – புலிகள் சிக்கியது எப்படி?
» ஞாபகம் வருதே...முல்லைப் பெரியாறும்,ராஜிவ் கொலை வழக்கும்.
» பொட்டு சுரேஷ் வெட்டிக் கொலை!
» ராஜிவ் கொலை. மறுவிசாரணை குறித்து பதிலளிக்க உத்தரவு!
» பிரபாகரன் மீதான ராஜிவ் கொலை வழக்கு தள்ளுபடி
» ஞாபகம் வருதே...முல்லைப் பெரியாறும்,ராஜிவ் கொலை வழக்கும்.
» பொட்டு சுரேஷ் வெட்டிக் கொலை!
» ராஜிவ் கொலை. மறுவிசாரணை குறித்து பதிலளிக்க உத்தரவு!
» பிரபாகரன் மீதான ராஜிவ் கொலை வழக்கு தள்ளுபடி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum