Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
காத்திருக்கும் அடுத்த "ஷாக்'!
2 posters
Page 1 of 1
காத்திருக்கும் அடுத்த "ஷாக்'!
பொட்ரோல், டீசல் விலை உயர்ந்துவிட்டது. மானியத்திலான எரிவாயு உருளை
எண்ணிக்கைக் குறைக்கப்பட்டுள்ளது. இனி என்னதான் பாக்கி இருக்கிறது? என்று விமர்சனம்
செய்யும் முன்பாகவே, பேச்சு புறப்பட்டுவிட்டது: மீண்டும் மின் கட்டணம் உயரக்கூடும்!
இரண்டு நாள்களுக்கு முன்புதான் மத்திய அமைச்சரவை கூடி, மின் பகிர்மான
நிறுவனங்கள் நட்டத்தில் இயங்குவதால், அவற்றை மீட்பதற்காக ரூ.1.9 லட்சம் கோடி நிதி
ஒதுக்கீடு செய்ய முடிவெடுத்தது. இந்த நிதியுதவியைப் பெற வேண்டுமென்றால், அதிக
நட்டத்தில் செயல்படும் மாநில மின்பகிர்மான நிறுவனங்கள் தங்களை ஒழுங்குபடுத்திக்
கொண்டு, வருவாயைப் பெருக்க வேண்டும் என்பது நிபந்தனை. அத்தகைய மோசமான 7 மாநில மின்
பகிர்மான நிறுவனங்களில் ஒன்றாக நமது தமிழ்நாடு மின் பகிர்மான நிறுவனம் இருக்கிறது
என்பதுதான் கசப்பான உண்மை.
மின்பகிர்மான நிறுவனங்களின் கடன்சுமையில் 50% தொகையை மத்திய அரசு ஏற்று, நிதி
வழங்கும்போது அவர்கள் சொல்லும் நிபந்தனைகளைச் செயல்படுத்தியாக வேண்டும். ஒவ்வொரு
ஆண்டு மார்ச் மாத இறுதியில், உற்பத்திச் செலவு மற்றும் வெளிமாநிலத்தில் விலைக்கு
வாங்கும் செலவுக்கு ஏற்ப மின்கட்டணத்தை உயர்த்த, மாநில மின் ஒழுங்காற்று ஆணையத்திடம்
ஒப்புதல் பெற வேண்டும். ஆகவே ஆண்டுதோறும் மின்கட்டணத்தை உயர்த்த வேண்டிய கட்டாயம்
மாநில அரசுகளுக்கு ஏற்பட்டிருக்கிறது.
தமிழ்நாடு மின்பகிர்மான நிறுவனத்துக்குக் கடன் மட்டுமே ரூ.19,000 கோடி. இதில்
பாதித் தொகையை மாநில அரசு ஏற்க முன்வந்துள்ளது. அப்படியிருந்தும் ஆண்டுக்கு
ரூ.4,300 கோடி நட்டத்தில் இயங்குகிறது. அந்த நட்டத்திலும்கூட 30% தமிழக அரசு
ஈடுசெய்கிறது. தற்போது கடன்தொகையில் மீதிப் பாதியை மத்திய அரசு ஏற்க முன்வந்தாலும்,
இதற்கான நிபந்தனைகளுக்குத் தமிழக அரசு கட்டுப்பட்டே ஆக வேண்டும்.
தமிழ்நாட்டில் ஒரு விளக்கு திட்டம், விவசாயப் பம்புசெட்டுகளுக்கு இலவச
மின்சாரம் இரண்டுக்கும்தான் முழு மானியம் அளிக்கப்படுகின்றன. ஒரு விளக்கு
திட்டத்தின் கீழ், ஒரு ஏழை தனது வீட்டில் ஒரு விளக்கு மற்றும் ஒரு டி.வி. பெட்டியை
மட்டும் பயன்படுத்தி 70 யூனிட் மின்சாரத்துக்கு மிகைப்படாமல் இலவசமாகப்
பயன்படுத்தலாம். இது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிடாது.
ஆனால், வேளாண்மைக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை. வேளாண்மைப் பயன்பாட்டில்
இலவச மின்சாரம்பெறும் பம்புசெட்டுகளில் மீட்டர் பொருத்தி, கணக்கெடுக்க வேண்டும்
என்று மத்திய மின்சார ஆணையம் தொடர்ந்து வலியுறுத்திவந்தாலும், தமிழ்நாட்டில் விவசாய
அமைப்புகளின் எதிர்ப்புகளால் தமிழக அரசு அதை நடைமுறைப்படுத்தவில்லை. ஆண்டுதோறும்
தோராயமாக ஆண்டுக்கு ரூ.3,000 கோடியை விவசாய மின்சாரத்துக்கென தமிழ்நாடு
மின்பகிர்மான நிறுவனத்துக்கு தமிழக அரசு வழங்குகிறது. இனி, இத்தகைய தோராயமான
மானியத்தை ஏற்க மத்திய மின்சார ஆணையம் ஒப்புக்கொள்ளாது. ஆகவே, மீட்டர் பொருத்தி,
அதற்கேற்ப மானியத் தொகையை வழங்க வேண்டிய நிர்பந்தம் தமிழக அரசுக்கு உருவாகும்.
மின்விநியோகம் இப்போது அரசின் பொறுப்பில் இருக்கிறது. இதனைத் தனியாரிடம்
ஒப்படைத்து நட்டத்தைக் குறைக்க வேண்டும் என்கின்றது மத்திய மின்சார ஆணையம். நாடு
விடுதலை பெறுவதற்கு முன்பும்கூட, மின்விநியோகம் தனியார் மூலம்தான் நடத்தப்பட்டது.
மின்வாரிய வருவாயின் மிகப்பெரும் தொகை சம்பளத்துக்கே செலவாகிறது என்பதும்,
மின்விநியோகத்தில் வழித்தட இழப்பு அதிகபட்சம் 40% வரை இருப்பதும்தான் மத்திய அரசு
இத்தகைய தனியார்மயத்தை ஆதரிக்கக் காரணம்.
வழித்தட இழப்பு என்று சொல்லப்பட்டாலும், உண்மையில், பெரும்பாலான நேர்வுகளில்,
மின்திருட்டுதான் வழித்தட இழப்பாகக் கணக்குக் காட்டப்படுகிறது.
சில தொழிற்கூடங்கள், சில அரசியல் பெரும்புள்ளிகளின் வீடுகள், நிறுவனங்கள்,
ஆளும் கட்சி விழாக்கள் எல்லாமும் "கொக்கி'யில்தான் வெளிச்சம் பெறுகின்றன. இதெல்லாம்
மின்வாரிய அதிகாரிகளுக்குத் தெரிந்தே நடப்பதால்தான் கூடுதல் நட்டம்.
இவையெல்லாம் ஒருபுறம் இருக்க, நடுத்தர மக்களின் நிலைதான் பரிதாபமானது.
மின்கட்டணத்தைக் கூட்டிய தமிழக அரசு, சில அடுக்குகள் வரை மானியம் வழங்கி,
கட்டணத்தைக் குறைத்தது. ஆனால், இதன் பயன் நடுத்தர மக்களுக்குக் கிடைத்ததா என்றால்
இல்லை. ஏனென்றால், இரு மாதங்களுக்கு 500 யூனிட்டுக்குக் குறைவாக இருந்தால் மட்டுமே
பயன் கிடைக்கும். 500 யூனிட்டுக்கு ரூ.1,300 கட்டணம் என்றால், 501 யூனிட்
ஆகிவிட்டால் கட்டணம் ரூ.1,805. ஒரு டிவி, ஒரு பிரிட்ஜ், ஒரு வாஷிங் மெஷின், ஒரு
மிக்ஸி அல்லது மாவுஅரைவை இயந்திரம் இல்லாமல் எந்தவொரு நடுத்தரக் குடும்பமும்
கிடையாது. ஆக நடுத்தரக் குடும்பம் அனைத்தும் இரு மாதத்துக்கு ஒரு முறை குறைந்தது
ரூ.2,000 மின்கட்டணம் செலுத்துகின்றன. மானியத்தின் பலன் அவர்களில் 90
விழுக்காட்டினருக்குக் கிடைக்கவில்லை.
தற்போது மின்மீட்டர் கருவிகளை மின்வாரியம் பொருத்துவதில்லை.
அங்கீகரிக்கப்பட்ட தனியாரிடமிருந்து வாங்கிக்கொள்ளச் சொல்கிறார்கள். இந்த
மின்மீட்டர்கள் ஓடும்போது பிழை அளவு 2 விழுக்காடு அதிகமாகவோ, குறைவாகவோ இருக்கலாம்.
ஆனால், அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களிடம் பிழை அளவு 10 விழுக்காடு அதிகமாகத்தான்
இருக்க வேண்டுமே தவிரக் குறைவாக இருந்துவிடக்கூடாது என்பது மின்வாரியத்தில்
சொல்லப்படாத நிபந்தனை. இதனால், பயன்பாட்டு அளவைவிட அதிகமாக மீட்டர் அளவு
காட்டப்படுமே தவிரக் குறைய வழியே இல்லை. இதனாலும் பாதிக்கப்படப் போவது அப்பாவி
நடுத்தர மக்கள்தான்.
மின்கட்டணத்தை உயர்த்துவதால் மட்டும் நட்டத்தை ஈடுகட்டிவிடலாம் என்று
ஆட்சியாளர்கள் மனப்பால் குடிக்கிறார்கள். மின்வாரியத்தின் நிர்வாகக் குறைபாடுகளைக்
களைவதும், வியாபாரப் போட்டிக்காக மின்சாரத்தை அளவுக்கு அதிகமாக வீணாக்கும் வணிக
வளாகங்களின் ஊதாரித்தனத்தைக் கட்டுப்படுத்துவதும், மின்சாரச் சிக்கனத்தை தேசியக்
கடமை என்று பொதுமக்களுக்கு உணர்த்துவதும்தான் இந்தப் பிரச்னைக்குத் தீர்வாக இருக்க
முடியும். அதைப்பற்றி யாரும் சிந்திப்பதாகவே தெரியவில்லை.
கவனிக்க வேண்டியவர்களைக் "கவனித்து' மின்சாரத்தைத் திருடுபவர்களும்,
மீட்டருக்கு சூடு வைத்து ஓட்டத்தைக் குறைப்பவர்களும், கட்டணச் சுமை இல்லாமல்
மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். நியாயமாகவும் நேர்மையாகவும் வாழும் அப்பாவி மக்கள்தான்
மின்கட்டண உயர்வால் பாதிக்கப்பட்டு ஷாக்கடித்த நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.
வீட்டின் மாத வாடகையைவிட மின்கட்டணம் அதிகமாக இருக்கிறது என்கின்ற புலம்பல்
தமிழ்நாடு முழுவதும் ஏற்கெனவே கேட்கத் தொடங்கிவிட்டது. இன்னமும் மின்கட்டணம் உயரும்
என்றால்... தாங்க முடியாது சாமி!
mmani- பண்பாளர்
- Posts : 8037
Join date : 19/12/2010
Similar topics
» ஷாக் அடுத்த "ஷாக்' தர மின் பகிர்மானக் கழகம் தயார்: மேலும் பல கட்டணங்கள் உயரும் அபாயம்
» இலவசத்தால் வரப்போகுது அடுத்த "ஷாக்'
» அ.தி.மு.க., வில் சேர காத்திருக்கும் தி.மு.க., தொண்டர்கள் : ஜெ.,
» காளைகளுக்கு "ஷாக்'; மனசாட்சியை கொல்லும் மனிதர்கள்!
» தசை சிதைவு நோய்: உதவ காத்திருக்கும் பாதிக்கப்பட்ட சகோதரிகள்!
» இலவசத்தால் வரப்போகுது அடுத்த "ஷாக்'
» அ.தி.மு.க., வில் சேர காத்திருக்கும் தி.மு.க., தொண்டர்கள் : ஜெ.,
» காளைகளுக்கு "ஷாக்'; மனசாட்சியை கொல்லும் மனிதர்கள்!
» தசை சிதைவு நோய்: உதவ காத்திருக்கும் பாதிக்கப்பட்ட சகோதரிகள்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum