Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)by வாகரைமைந்தன் Today at 12:16 am
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:53 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 25, 2024 10:18 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
உலக அதிசயம் இணையம்
2 posters
Page 1 of 1
உலக அதிசயம் இணையம்
2006 ல் USA Today என்ற அமெரிக்கப் பத்திரிகை உலகின் இன்றைய அதிசயங்கள் வரிசையில் Internet என சொல்லப்படும் இணையத்தை சேர்த்துக் கொண்டது. அது பற்றி சில தகவல்கள்..........................
இணையத்தை உலக கணினிகளின் கூட்டு பரிமாற்ற இணைப்பு என சொல்லலாம். இது யாருக்கும் சொந்தம் இல்லாவிடினும்,இதை ஒருங்கிணைக்க ஒரு நிறுவனம், வேறு சில நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுகிறது.இணையமும் உலகளாவிய வலையும்,WWW, ஒன்றல்ல. தரவுகள்,மின் அஞ்சல்,உரையாடல்,வானொலி,சுட்டிகள்,தரவிறக்கம் போன்ற பலவற்றுக்கு இணையம் மூலம் தொடர்பு ஏற்படுத்தப்படுகிறது.ஜே.சி.ஆர்.லிக்லைடர் (J.C.R. Licklider) இணைய தந்தையாக அறியப்படுகிறார்.
ரேமண்ட் எஸ். டாம்லின்சன் (Raymond S. Tomlinson) தான் முதல் மின்னஞ்சலை அனுப்பியவர். டிம் பெர்னர்ஸ் லீ (Tim Berners-Lee) என்பவரால் ஆகஸ்ட் 6,1990ல் தொடங்கப்பட்ட http://info.cern.ch/தான் முதல் இணையத்தளமாகும்.World Wide Web அறிமுகப்படுத்தியவரும் இவரே.NeXT என்ற கணிணிதான் முதல் இணைய வழங்கியாகும்(web server) மார்ச் 15, 1985 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட www.Symbolics.com தான் இணையத்தில் பதிவு செய்யப்பட்ட முதல் இணையத்தள முகவரியாகும். ஏப்ரல் 22, 1993ல் வெளியடப்பட்ட NCSA Mosaic தான் முதல் இணையத்தள உலாவியாகும்.இதை உருவாக்கியதில் முக்கிய பங்கு வகித்தவர்கள் மார்க் ஆண்டர்சன்(Marc Andreessen) மற்றும் எரிக் பினா(Eric Bina).ஏப்ரல் 20,1994ல் தொடங்கப்பட்ட www.webcrawler.com தான் இணையத்தின் முதல் தேடுபொறியாகும்(search engine).
ஜஸ்டின் ஹால் (Justin Hall) தான் இணையத்தின் முதல் வலைப்பதிவாளராக அறியப்படுகிறார்.சனவரி 1994ல் தொடங்கப்பட்ட இவரின் http://www.links.net/ தான் இணையத்தின் முதல் வலைப்பதிவாகும்.யூடியுப்பின்(You tube) முதல் காணொளி(video) ”Me at the zoo”. வலையேற்றியவர் அதன் நிறுவனர்களின் ஒருவரான ஜாவித் கரீமின் (Jawed Karim) .ஏப்ரல் 23, 2005 அன்று வலையேற்றப்பட்ட இக்காணொளியை இதுவரை 3,912,015 தடவைகள் பார்க்கப்பட்டுள்ளது.
முதலாவது TCP/IP முறையிலமைந்த வலையமைப்பானது ஐக்கிய அமெரிக்காவின் நேஷனல் சயன்ஸ் பவுண்டேசனில் ஜனவரி 1 1983 முதல் இயங்க ஆரம்பித்தது. வழங்கி,வாங்கி(server,client) என்ற வகையில் இணையம் செயல்படுகிறது.இணையம் என்ற பெரிய கடலில் இவை சில சிறிய தகவல்கள் தான்.இவற்றை வைத்துக் கொண்டு அமெரிக்கப் பத்திரிகை உலக அதிசயமாக அறிவித்தது.
இந்த இணையக் கடல் மிகக் குறுலிய வழியில் செல்வதைக் கண்ட, மேற்கு ஆஸ்திரேலிய பல்கலைக்கழகத்தின் உளவியல் பேராசிரியர் ஸ்டீபன் லெவண்டவ்ஸ்கி ஆய்வை மேற்கொண்டார்.
அதாவது அறிவியல்,வரலாற்று ஆய்வுகள்,சாட்சியங்கள் அனைத்தயும் ஏற்றுக் கொள்ளாத ஒரு பிரிவினர் அவற்றை ஏற்றுக் கொண்டு செயல்படுபவர்கள் என இன்னொரு வகையினர் இருந்து வருவதால்,நல்ல முறையில் செல்லும் வாசகர்கள் குறைவாகி வருவது ஏன் என்றறிய பலரிடம் பல கேள்விகளை வைத்து ஆய்வை அவரின் குழு தொடங்கியது.
வாசகர்களின் வேறுபட்ட நிலைக்கும்,வலைபதிவுகளிலும்,வேறு ஊடகங்களிலும் அறிவியலையும் உண்மைகளையும் ஏற்றுக் கொள்ள மறுத்து,தங்கள் தனிப்பட்ட கொள்கைகளை திணிக்கும் வகையினர் பெருகி வருவதை ஆராயும் நோக்குடன், வலைப்பதிவுகளின் வாசகர்களிடமிருந்து சில கேள்விகளை கேட்டு,அதற்கு அவர்கள் கொடுக்கும் பதிலைப் பெற்று ஆய்வை தொடர்ந்தனர்..அவற்றுள்,இளவரசி டயானாவின் மரணம் விபத்தல்ல, அப்போலோ விண்கலம் நிலவில் இறங்கியதே இல்லை(NASA faked the moon landing), AIDS வியாதி HIV-ஆல் ஏற்படுகின்றது, புகைப்பிடிப்பதால் நுரையீரல் புற்றுநோய் ஏற்படும்,மாட்டின் லூதர் கிங்கை சி ஐ ஏ கொலை செய்தது, போன்ற சில கேள்விகளை கேட்டனர்.இதற்கு தடையற்ற வணிகம்,முரண்பாட்டுக் கோட்பாடுகள்,கால நிலை போன்ற சில அடங்கி இருந்தன.இந்த ஆய்வை மேற்கு ஆஸ்திரேலிய பல்கலைக்கழகத்தின் உளவியல் பேராசிரியர் ஸ்டீபன் லெவண்டவ்ஸ்கி தலைமை தாங்கி நடத்தினார்.
ஒரு விடயம் நடந்து, உண்மைகள் வெளியான போதும் கூட, முரண்பாடான கருத்தை வைத்து மறுதலிப்பது,அறிவியல் கோட்பாடுகள் பலவற்றை மறுப்பது ஒதுக்குவது போன்றவை இதற்குள் அடங்கின..இதற்கு நம்பிக்கைகளும்,கருத்து இணக்கமும் காரணமாகி விடுகிறது.தவிர ஆதாரங்களை புறந்தள்ளி தங்கள் கருத்துக்களை திணிப்பது அல்லது சரியென வாதிடுவது.இரட்டை கோபுரம் தீவிரவாதிகளால் தாக்கப்படவில்லை, அவை உள் சதி என்று கூறுவோரும் உள்ளனர். அப்படி கூறப்படுவதே முரண்பாடான கோட்பாடு ஆகும்.
வலைப்பதிவுகள் நம் சமூகத்தில் பெரும் தாக்கத்தை கொண்டுள்ளது. வலைப்பதிவுகளில் நடைபெறும் கருத்தாக்கங்களைக் கொண்டு அவர்களின் சிந்தனைத் திறனை மட்டுமல்லாது அவர்களின் நோக்கம்,எந்த இலக்கை நோக்கி செல்கிறார்கள் எனவும் கண்டறிய முடிகின்றது. வாசகர் வட்டம் எனும் போது ஒருவரை அல்லது ஒரு குறிப்பிட்ட கூட்டத்தினரை,வகுப்பினரை மட்டும் மையப்படுத்தாது இருப்பது அவசியமாகிறது. ஒரு செய்தியின் நோக்கம், முக்கியத்துவம், பயன்பாடு போன்றவற்றை கருத்தில் கொண்டு இயங்குவது அவசியமாகிறது.சினிமா செய்திகளை அதிகமாக கொடுப்பது,பொழுதுபோக்கை மட்டும் அதிகப்படுத்துவது,அதிக மருத்துவக் குறிப்புகளைக் கொடுப்பது போன்றவை வாசகர்களைக் குழப்பத்தில் கொண்டு போய் விடும்.உண்மைக்குப் புறம்பான செய்திகள், ஒரே பொருள் ஆனால் பலவிதமான கருத்துக்கள் இவை வாசகர்களை குழப்பத்தில் ஆழ்த்துவதுடன் ஆர்வமற்ற நிலைக்கு விரைவில் கொண்டு சென்றுவிடும்.எடுத்துக்காட்டாக ஆதாரம் இல்லாமல் ஒரு நோய்க்கு பல மருத்துவ முறைகளை முன் வைத்தால் வாசகர்கள் எதைப் பரீட்சிப்பார்கள்.தெரு வீதியில் பொருட்களை கூவி விற்பார்கள். ஒருவர் பத்து ரூபாய் என்று கூவ மற்றவர் எட்டு ரூபாய் என்று கூவ அப்பாவி மக்கள் தரம் பார்க்காது அங்கும் இங்கும் அலைவதை நாம் காண்கிறோம்.பணத்தைப் பார்த்தால் தரம் இல்லை.தரம் இருந்தால் பணத்திற்கு கட்டுபடியாகவில்லை
சில மாதங்களுக்கு முன்னால் பாரிஸ் தொலைக்காட்சி ஒன்று டெனிம் ஆடைகளின் தரத்தை ஆய்வு செய்தது.பத்திற்கு மேற்பட்ட ஆடைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு துணி,அமைப்பு போன்றவை பற்றி அறிய ஆய்வு செய்பவர்களிடம் கொடுக்கப்பட்டது. முடிவில் முதலாவதாக தரத்தில் உயர்ந்தது என தெரிவு செய்யப்பட்ட ஆடை எது தெரியுமா? கடைத் தெருவில் கூவி விற்கப்பட்ட,பெயரில்லாத 15 ஒயுரோ ஆடைதான்.அதே சமயம் உலகின் முதல்தர தயாரிப்பு நிறுவன ஆடை ஆறாவது இடத்தைப் பிடித்தது பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.இது போல வலைகளின் தரம் என்பது அட்டகாசமான அழகுபடுத்தலில் இல்லை.
கொடுக்கப்படும் செய்திகள்,வலைப்பதிவுகள் எண்ணிக்கையை விட தரம் மிக்கதாகவும்,quality and not quantity, உண்மைத்தன்மை உடையதாகவும் இருப்பது அவசியம்.அப்போதுதான் அந்த ஊடகத்தை நோக்கி நம்பிக்கையுடன் வாசகர்களின் படையெடுப்பு அதிகமாக இருக்கும். இல்லையேல் நக்கீரன் போல் வாசகர்களை இழக்க நேரிடும்.
ஈழத் தமிழர்கள் பற்றி தொடராக எழுதிக் குவித்த கஸ்பர் பாதிரியார்,கனிமொழி கைதுக்குப் பின் அடையாளமே காணப்படவில்லை.சங்கமத்துடன் தொடர்பும் கனிமொழியின் ஊழலில் தொடர்பும்,ஈழத் தமிழர்கள் மேல் வைத்த போலி கருத்து என்பதை காட்டி விட்டது. உண்மைகளை வெளிக் கொணருவேன் என்ற அவரை எங்கும் காணவில்லை.அதைத் தொடர்ந்து நக்கீரன் வாசகர் தொகை குறையத் தொடங்கியது. மீள முடியவில்லை. இவை போன்றவை தனி மனித சுய நல நோக்குடன் செயல்படும் ஊடகங்களாகும்.
தவறான அல்லது கவர்ந்திழுக்கும் வலைப்பதிவுகள் மூலம் வரும் வாசகர்கள் இனிப்பை நோக்கி வரும் எறும்புகள் போல் விரைவில் விலகி விடுவார்கள். சமீபகாலமாக வலைப்பதிவுகளின் உண்மைத்தன்மையை அறிவியல் சார்ந்த கருத்துக்களை ஏற்று அதை நோக்கி செல்லும் வாசகர்கள் கூட்டம் அதிகரித்து வருவதை காண முடியும்..இந்த ஊடகம் என்றால்,இந்த தொலைக்காட்சி என்றால்,இந்தப் பத்திரிகை என்றால்,இந்த இயக்குனர் நடிகர் சினிமா என்றால் எப்படி இருக்கும், என்று அறிந்து அதை நோக்கி செல்லும் வாசகர்கள்,இரசிகர்கள் தொகை அதிகரித்து வரவே செய்கிறது.இது நல்ல ஊடகங்களுக்கு கிடைத்த வெற்றியே ஆகும்.ஆண்களை நோக்கிய பெண்களின் நகர்வு, பணத்தை நோக்கியதாக இருந்து, சமீப காலமாக அறிவு சார்ந்து செல்வதாக சமீபத்தய ஆய்வு கூறுவது போல் இணைய நகர்வும் மாறி வருகிறது என்கின்றனர்.
அதிகமான செய்திகளைக் கொடுப்பதை விட ஆழமான செய்திகள் வாசகர்களை கவர்ந்திழுக்கும்.தனிப்பட்ட
கொள்கை வாதங்களை உடையவர்கள் பெரும்பாலும் அறிவியல் கண்டுப்பிடிப்புக்களை மறுக்கின்றனர். அதே போல பெரும்பாலான ஆய்வாளர்கள் சொல்லும் முடிவுகளையே பெரும்பாலான மக்கள் ஏற்றுக் கொள்ளவும் செய்கின்றார்கள். அறிவியலை எதிர்க்கும் பலரும் முரண்பாட்டு கோட்பாடுகளையும், போலி அறிவியலையும் எளிதாக நம்புவோராகவும் இருக்கின்றனர்.இதில் பல படித்தவர்கள் கூட சேர்ந்து விடுகின்றனர்.தொலைக்காட்சிகளில் வரும் ஆவிகள்,முன் ஜென்மம்,பெர்முடா முக்கோணம்,சபரிமலை ஜோதி இப்படியானவற்றை இதற்கு எடுத்துக்காட்டாக காட்டலாம்.
அதே சமயம் இணையதளங்கள் இரு வகையாக செயல்படுகின்றன.ஒன்று திறந்த இணையம்,இன்னொன்று மூடிய இணையம் எனச் சொல்லலாம்.ஒரு வாசகர் தன் எண்ணங்களை தடையின்றி சொல்ல அனுமதிப்பது ஒரு வகை. மற்றது,எண்ணங்களை சொல்ல கட்டுப்பாட்டுடன் விதிகள் அமைப்பது.அதாவது எண்ணங்களையோ கருத்துக்களையோ நிர்வாகத்தினருக்கு அனுப்ப அவர்கள் அதைப் பரிசீலித்து தங்கள் கட்டுப்பாடுகளுக்கு ஏற்றவையா,உண்மையானவையா என்பதை ஆய்வு செய்து வெளியிடுவது.இதைவிட இன்னொன்றும் உண்டு,அது யார் சொல்வதையும் ஏற்காது,தங்களுடைய கருத்துக்களை எண்ணங்களை மட்டும் வெளியிடுவது.இந்த இணையம் சிந்தனைக்களம் முதல் வகையை சேர்ந்தது.ஆனாலும் முதல் வகையை சேர்ந்த இணையங்கள் கூட சில கட்டுப்பாடுகளை விதிக்கும்.அதாவது ஒருவர் தன் எண்ணங்களை,கருத்துக்களை வெளியிடு முன் அவர்கள் எழுதுவது தானியங்கி வகையில் எழுதப்படுகிறதா, இல்லை தானாகவே எழுதுகிறாரா என்றறியவும்,தேவையற்றவை வந்து சேராமல் தவிர்க்கவும், captcha-(Completely Automated Public Turing test to tell Computers and Humans Apart). புகுபலகை முறையை அறிமுகப்படுத்துகிறார்கள்.இது ஒரு உரைகல் என்று வேண்டுமானால் சொல்லலாம்.இல்லையேல்spam அஞ்சல்கள் போல் வந்து குவிந்து விடும்.ஆனாலும் இதையும் தொழில்நுட்பம் இன்று முறியடித்து விட்டது.
முக்கியமாக பெரும்பாலான ஆய்வாளர்கள் ஏற்றுக் கொண்ட விடயங்களைக் கூட, ஊடகங்கள் பலவும் அந்த விடயங்களின் ஆய்வாளர்களுக்குள் விவாத நிலையிலேயே இருப்பதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி விடுவதால்,பல செய்திகள் முடிவுகள் கருத்துக்கள் உறுதி செய்யப்பட்ட போதிலும் கூட கேள்வியாகவே தொடருகின்றன.இவை போன்றவை தான் பயணிகளை குழப்பத்தில் ஆழ்த்துவதும்,எந்த வலை என்று தெரியாது ஓட வேண்டிய நிலைக்கும் கொண்டு செல்கிறது.
இவை எல்லாம் மாற்றமடைந்து இணையம்,அதை வைத்து இயங்கும் வலை அமைப்புக்கள் தெளிந்த ஓடையாக நன் நீராக மாறும் என்ற நம்பிக்கையுடன் பயணிப்போம்.
மேற்கு ஆஸ்திரேலிய பல்கலைக்கழகத்தின் உளவியல் பேராசிரியர் ஸ்டீபன் லெவண்டவ்ஸ்கியின் ஆய்வுக் கட்டுரையை மையமாக்கி............................ சிறிய எண்ண சிதறல்.
சக்தி.

sakthy- நிர்வாக குழுவினர்
- Posts : 1938
Join date : 26/09/2010
Similar topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
» மகிந்தரின் இணையம் பறி போனது
» இணையம் - தெரிந்ததும் தெரியாததும்
» இணையதளங்களை கண்காணிக்க உதவும் இணையம்
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
» மகிந்தரின் இணையம் பறி போனது
» இணையம் - தெரிந்ததும் தெரியாததும்
» இணையதளங்களை கண்காணிக்க உதவும் இணையம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum