TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:16 am

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:53 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 25, 2024 10:18 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


இதுவல்லவா உங்களில் ஒருத்தியின் தாயுள்ளம் .. :( அப்பாவியை சுட்டுக்கொன்று ஓர் குடும்பத்தையே அனாதையாக்கிய புண்ணியத்திற்கு காணிக்கை ரூபாய் ஐந்து லட்சமும் ஆழ்ந்த இரங்கலும் ..!

Go down

இதுவல்லவா உங்களில் ஒருத்தியின் தாயுள்ளம் .. :(  அப்பாவியை சுட்டுக்கொன்று ஓர் குடும்பத்தையே அனாதையாக்கிய புண்ணியத்திற்கு காணிக்கை ரூபாய் ஐந்து லட்சமும் ஆழ்ந்த இரங்கலும் ..! Empty இதுவல்லவா உங்களில் ஒருத்தியின் தாயுள்ளம் .. :( அப்பாவியை சுட்டுக்கொன்று ஓர் குடும்பத்தையே அனாதையாக்கிய புண்ணியத்திற்கு காணிக்கை ரூபாய் ஐந்து லட்சமும் ஆழ்ந்த இரங்கலும் ..!

Post by அருள் Mon Sep 10, 2012 9:56 pm

இதுவல்லவா உங்களில் ஒருத்தியின் தாயுள்ளம் .. :(  அப்பாவியை சுட்டுக்கொன்று ஓர் குடும்பத்தையே அனாதையாக்கிய புண்ணியத்திற்கு காணிக்கை ரூபாய் ஐந்து லட்சமும் ஆழ்ந்த இரங்கலும் ..! 578482_185811028220313_1154190766_n
இதுவல்லவா உங்களில் ஒருத்தியின் தாயுள்ளம் .. Sad

அப்பாவியை சுட்டுக்கொன்று ஓர் குடும்பத்தையே அனாதையாக்கிய புண்ணியத்திற்கு காணிக்கை ரூபாய் ஐந்து லட்சமும் ஆழ்ந்த இரங்கலும் ..!

இதுவல்லவா உங்களில் ஒருத்தியின் தாயுள்ளம்
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

இதுவல்லவா உங்களில் ஒருத்தியின் தாயுள்ளம் .. :(  அப்பாவியை சுட்டுக்கொன்று ஓர் குடும்பத்தையே அனாதையாக்கிய புண்ணியத்திற்கு காணிக்கை ரூபாய் ஐந்து லட்சமும் ஆழ்ந்த இரங்கலும் ..! Empty Re: இதுவல்லவா உங்களில் ஒருத்தியின் தாயுள்ளம் .. :( அப்பாவியை சுட்டுக்கொன்று ஓர் குடும்பத்தையே அனாதையாக்கிய புண்ணியத்திற்கு காணிக்கை ரூபாய் ஐந்து லட்சமும் ஆழ்ந்த இரங்கலும் ..!

Post by அருள் Mon Sep 10, 2012 9:58 pm

முதல்வர்
வெளியிட்டு இருக்கும் அறிக்கையை படியுங்கள் தோழர்களே ! இதில் எவ்வளவு
அயோக்கியத் தனங்கள் தெரிகிறது. அதிலும் ஜெயலலிதாவின் உண்மை முகம்
தோலுரிக்கப் பட்டதை மறைக்கும் முயற்சியில் பதட்டத்தில் ஜெயலலிதா இருப்பதை
கவனியுங்கள் !!

திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளத்தில் 1,000
மெகாவாட் மின்திறன் கொண்ட இரு அணுமின் அலகுகள் அமைப்பதற்கான பெரும்பாலான
பணிகள் முடிவுற்றிருந்த சூழ்நிலையில், அணுமின் நிலையத்தின் பாதுகாப்பு
குறித்து அப்பகுதி மக்கள் எழுப்பிய சில ஐயப்பாடுகளையடுத்து, அப்பகுதி
மக்களின் அச்சம் தீர்க்கப்படும் வரை கூடங்குளம் அணுமின் நிலையப் பணிகளை
தொடர வேண்டாம் என்றும், இது தொடர்பான கோரிக்கை மனுவினை நேரில் அளிக்க நேரம்
ஒதுக்கீடு செய்து தருமாறும் 19.9.2011 அன்று பிரதமரை கடிதம் வாயிலாக
கேட்டுக் கொண்டேன்.

இதனைத் தொடர்ந்து, அணுமின் நிலையத்திற்கு
எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்திருந்தவர்கள் 21.9.2011
அன்று என்னை தலைமைச் செயலகத்தில் சந்தித்து, கூடங்குளம் மக்களின் அச்சம்
தீர்க்கப்படும் வரை அணுமின் நிலையப் பணிகள் மேற்கொண்டு தொடரப்படக்கூடாது
என்னும் தீர்மானத்தை தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டத்தில் நிறைவேற்ற வேண்டும்
என்ற கோரிக்கையினை விடுத்தனர்.

இவர்களின் வேண்டுகோளினை
ஏற்றுக்கொண்டு, 22.9.2011 அன்று நடைபெற்ற தமிழ்நாடு அமைச்சரவைக்
கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து, தமிழக நிதி
அமைச்சர் தலைமையிலான குழு 7.10.2011 அன்று பிரதமரை நேரில் சந்தித்து,
உள்ளூர் நிலவரங்களை எடுத்துரைக்கும் கோரிக்கை மனு ஒன்றினை அளித்தது.

இந்த மனுவினைப் பெற்றுக் கொண்ட பிரதமர் மத்திய அரசின் பிரதிநிதிகள், மாநில
அரசின் பிரதிநிதிகள் மற்றும் எதிர்ப்பாளர்களின் பிரதிநிதிகள் அடங்கிய
கூட்டுக் குழு உருவாக்கப்படும் என்று தெரிவித்தார்.

இதன்படி,
மத்திய அரசால் 15 பேர் கொண்ட ஒரு வல்லுநர் குழு அமைக்கப்பட்டது. இந்தக்
குழு அணுமின் நிலைய எதிர்ப்பாளர்களின் சார்பாக நியமிக்கப்பட்ட மூன்று
பேருடனும், மாநில அரசுப் பிரதிநிதிகளுடனும் மூன்று நாட்கள் பேச்சுவார்த்தை
நடத்தியது.

இதனையடுத்து, 31.1.2012 அன்று இறுதிக்கட்ட
பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையில்
அணுமின் நிலைய எதிர்ப்புக் குழுவின் சார்பில் ஒருவர் மட்டுமே கலந்து
கொண்டார்.

இந்தப் பேச்சுவார்த்தைகளின்போது அணுமின் நிலைய
எதிர்ப்புக் குழுவினரால் எழுப்பப்பட்ட பல்வேறு வினாக்களுக்கு பதில்
அளித்ததோடு மட்டுமல்லாமல், அணுமின் நிலையம் பாதுகாப்பானதுதான் என்றும்,
அணுமின் நிலையத்தின் பாதுகாப்பு குறித்து அச்சப்படத் தேவையில்லை என்றும்
தெரிவித்து இரு அறிக்கைகளை மத்திய அரசின் வல்லுநர் குழு அளித்தது.

இதனைத் தொடர்ந்து, அணுமின் நிலையப் பாதுகாப்பு குறித்தும், அப்பகுதி
மக்களிடையே நிலவும் அச்ச உணர்வுகள் குறித்தும் மாநில அரசுக்கு அறிக்கை
சமர்ப்பிக்கும் வண்ணம், மாநில அரசு சார்பில் ஒரு வல்லுநர் குழு
அமைக்கப்பட்டது. இந்தக் குழுவும், அணுமின் நிலையம் பாதுகாப்பானதுதான் என்று
தனது அறிக்கையில் தெளிவுபடக் கூறியுள்ளதோடு மட்டுமல்லாமல், உள்ளூர்
மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் சமூக பொருளாதாரத் திட்டங்களை
இப்பகுதியில் செயல்படுத்திடலாம் என்றும் பரிந்துரைத்துள்ளது.

இதன்
அடிப்படையில், கூடங்குளம் அணுமின் நிலையத்தை உடனடியாக செயல்படுத்துவதற்கான
நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையிலும், அப்பகுதி மக்களின் வளர்ச்சிப்
பணிகளுக்காக 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யும் வகையிலும், 19.3.2012
அன்று நடைபெற்ற தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம்
நிறைவேற்றப்பட்டது.

இதனையடுத்து, அணுமின் நிலையப் பணிகள் வேகமாக
நடைபெற்று வந்தன. இதன் பின்னர், அணுமின் நிலைய எதிர்ப்பாளர்கள் சென்னை
உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

இந்த வழக்கில் அணுமின்
நிலையப் பணிகளை தொடர அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
பிறப்பித்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பினையடுத்து
கூடங்குளம் அணுமின் நிலையத்தின் இயக்கத்தை தடுத்து நிறுத்த முற்படுவது
பொருத்தமானதாக அமையாது.

இந்தச் சூழ்நிலையில், கூடங்குளம் அணுமின்
நிலையத்தில் எரிபொருள் நிரப்பும் பணி தொடங்கப்பட உள்ளதைக் கருத்தில்
கொண்டு, இடிந்தகரை பகுதியைச் சேர்ந்தவர்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட
திட்டமிட்டனர். இதனையறிந்த காவல் துறை, அணுமின் நிலையத்திற்கு செல்லும்
வழிகளான தாமஸ் மண்டபம் மற்றும் வைராவிக் கிணறு ஆகிய இடங்களில் பாதுகாப்பு
ஏற்பாடுகளை மேற்கொண்டது.

ஆனால், போராட்டக்காரர்கள் இந்த இரு
வழிகளையும் தவிர்த்து கடற்கரை வழியாக, அணுமின் நிலையத்திலிருந்து சுமார்
500 மீட்டர் தொலைவில் முற்றுகைப் போராட்டத்தில் 9.9.2012 அன்று ஈடுபட்டனர்.

போராட்டக்காரர்களை அணுமின் நிலையம் நோக்கி முன்னேறவிடாமல் காவல் துறையினர்
தடுத்து நிறுத்தினர். இதனைத் தொடர்ந்து, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர்
மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் 144 தடை உத்தரவு அமலில் உள்ளதால்
அவர்களை கலைந்து செல்லுமாறு கேட்டுக் கொண்டனர்.

ஆனால்
போராட்டக்காரர்கள் கலைந்து செல்வதும், மீண்டும் கூடுவதுமாக இருந்தனர். இந்த
நிலை நேற்று இரவு முழுவதும் தொடர்ந்தது. இன்று காலை இன்னும் அதிக
எண்ணிக்கையில் போராட்டக்காரர்கள் கூடினர். அவர்கள் கூடங்குளம் அணுமின்
நிலையத்தை நோக்கி மேலும் முன்னேற முயற்சித்ததோடு, இன்று காலை 11.30
மணியளவில் காவல் துறையினரை கட்டைகளைக் கொண்டு தாக்கத் தொடங்கினர்.

இந்தத் தாக்குதலில் சில காவல் துறையினர் காயமடைந்தனர். எனவே, தங்களை
காக்கும் பொருட்டும், கூடங்குளம் அணுமின் நிலையத்தை பாதுகாக்கும்
நோக்குடனும், அணுமின் நிலையத்தை போராட்டக்காரர்கள் தாக்கினால்
பொதுமக்களுக்கு ஏற்படும் ஆபத்தினைக் கருத்தில் கொண்டும், வேறு வழியின்றி
காவல் துறையினர் கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசி கூட்டத்தை கலைத்தனர்.

கூடங்குளம் அணுமின் நிலையத்தால் மீனவர் வாழ்வாதாரத்திற்கு எந்தவித
அச்சுறுத்தலும் இல்லை என்பதால், அணு உலை எதிர்ப்பு என்ற பொதுவான
கொள்கையுடைய எதிர்ப்பாளர்களின் மாய வலையில் விழ வேண்டாம் என்று அப்பகுதி
மீனவர்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

மேலும், அணு உலைக்கு
எதிர்ப்பு என்ற பொதுவான கொள்கையுடைய அணு உலை எதிர்ப்பாளர்கள், மிகவும்
பாதுகாப்புடன் விளங்கும் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிரான
போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் என்றும், அணுமின் நிலையம் விரைவில் இயங்க
தேவையான ஒத்துழைப்பினை நல்க அவர்கள் முன்வர வேண்டும் என்றும் கேட்டுக்
கொள்கிறேன்.

இந்தப் பிரச்சனை தொடர்பாக இன்று தூத்துக்குடி
மாவட்டம், மணப்பாடு தற்காலிக சோதனைச்சாவடிக்கு ஒரு கும்பல் தீவைத்து அங்கு
வந்த காவலர்களை தாக்கியது. இதில் தற்காப்புக்காக காவலர் ஒருவர்
துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின்
குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக்
கொள்கிறேன்.

உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது
நிவாரண நிதியிலிருந்து 5 லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.
இந்தப் பிரச்சனை தொடர்பாக, யாரும் எவ்வித வன்முறையிலும் ஈடுபட வேண்டாம்
என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum